Menaka made provisions! | Adi Parva - Section 71 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : சகுந்தலையைக் கண்ட துஷ்யந்தன்; தன் பிறப்பு முதலிய வரலாற்றைச் சொன்ன சகுந்தலை; மேனகைக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
வைசம்பாயனர் சொன்னார், "அதன் பிறகு அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, குறைக்கப்பட்டிருந்த தன் பரிவாரத்தையும் ஆசிரமத்தின் வாசலில் விட்டான். தனியாகவே {ஆசிரமத்தினுள்ளே} நுழைந்த அவன், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவரைக் {கண்வரைக்} காணவில்லை.(1) முனிவரைக் காணாமலும், வசிப்பிடம் வெறுமையாக இருப்பதைக் கண்டும் அவன் {துஷ்யந்தன்}, “ஓ இங்கே யார் இருப்பது?” என்று உரக்கக்கேட்டான். {அந்தக் காட்டில்} அவனது குரல் எதிரொலித்தது.(2) அவனது குரலைக் கேட்டு, ஒரு துறவியின் மகளைப் போல உடுத்தியிருந்தவளும், ஸ்ரீயை (லட்சுமியைப்) போன்ற அழகுடையவளுமான ஒரு கன்னிகை {சகுந்தலை}, அந்த முனிவரின் {கண்வரின்} வசிப்பிடத்தில் இருந்து வெளியே வந்தாள்.(3) கருங்கண்களைக் கொண்ட அந்த அழகி, மன்னன் துஷ்யந்தனைக் கண்டதும், அவனுக்கு நல்வரவு கூறி மரியாதையுடன் வரவேற்றாள்.(4) அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} ஆசனம் கொடுத்து, கால்களைக் கழுவ நீரும், அர்க்கியமும்[1] கொடுத்த அவள் {சகுந்தலை}, அந்த மன்னனின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து விசாரித்தாள்.(5)
இவ்வாறு மன்னனை வழிபட்டு, அவனது உடல்நிலை மற்றும் மனநிலையைக் கேட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை}, “ஓ மன்னா, எது செய்யப்பட வேண்டும்? உமது உத்தரவுகளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று மரியாதையாகக் கேட்டாள்.(6) அவளால் முறையாக வழிபடப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, களங்கமற்ற பண்புகளையும், இனிய பேச்சையும் கொண்ட அந்தக் கன்னிகையிடம்,(7) “பெரும் அருள் கொண்ட முனிவர் கண்வரை நான் வழிபட வந்திருக்கிறேன். ஓ இனிமையானவளே, அழகானவளே, சிறப்புமிக்க முனிவர் கண்வர் எங்கே சென்றிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(8) அதற்குச் சகுந்தலை, "சிறப்புமிக்க என் தந்தை {கண்வர்}, பழங்கள் கொணர்ந்து வர ஆசிரமத்தைவிட்டு வெளியே சென்றார். ஒருகணம் பொறுத்தால், அவர் வருகையில் நீர் அவரைக் காணலாம்" என்று சொன்னாள்.(9)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "முனிவரைக் {கண்வ முனிவரைக்} காணாது, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, அந்தக் கன்னிகை மிகுந்த அழகும், கச்சிதமான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பதைக் கண்டான். அவள் இனிமையான புன்னகையுடன் இருப்பதையும் கண்டான். (10) அவள் {சகுந்தலை}, தனது களங்கமற்ற பண்புகள், தவத்துறவுகள், பணிவு ஆகியவற்றின் அழகால் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள். அவள் {சகுந்தலை} இளமையின் தொடக்கத்தில் {கன்னிப் பருவத்தில்} இருப்பதையும் மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(11)
எனவே அவன் {துஷ்யந்தன்}, அவளிடம் {சகுந்தலையிடம்}, "ஓ அழகியே! நீ யார்? எவருடைய மகள் நீ? மேலும் நீ ஏன் இந்தக் காட்டுக்கு வந்தாய்? ஓ எழில் வாய்ந்தவளே! இப்படிப்பட்ட பண்புகளுடனும், இவ்வளவு அழகுடனும் உள்ள நீ எங்கிருந்து வந்தாய்?(12) ஓ ஆழகானவளே! முதல் பார்வையிலேயே நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்! நான் உன்னைப்பற்றி முழுவதும் அறிய விரும்புகிறேன். எனவே, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(13) அந்த ஏகாதிபதியால் {துஷ்யந்தனால்} இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை} புன்னகையுடன் கூடிய இனிமையான வார்த்தைகளில்,(14) "ஓ துஷ்யந்தரே! நற்குணம், ஞானம், உயர்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்ட சிறப்புமிக்க முனிவர் கண்வரின் மகள் நான் " என்று மறுமொழி கூறினாள் {சகுந்தலை}.(15)
துஷ்யந்தன், "உலகம் முழுவதும் வழிபடப்படுபவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் {கண்வ முனிவர்}, உயிர்வித்தை மேலெழுப்பியவராவார் {காம இச்சைக்களைக் கட்டுப்படுத்தியவர் ஆவார்}. தர்மன் கூடத் தன் பாதையில் தவறலாம், ஆனால் கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு தவசி தவறவே முடியாது.(16) எனவே, ஓ அழகான நிறம் கொண்டவளே! அவரது மகளாக நீ எப்படிப் பிறந்திருக்க முடியும்? எனது இந்தப் பெரும் ஐயப்பாட்டைக் களைவதே உனக்குத் தகும்" என்றான் {துஷ்யந்தன்}.(17) சகுந்தலை, "ஓ மன்னா! {துஷ்யந்தரே} பழங்காலத்தில் எனக்கு என்ன நேர்ந்தது, முனிவரின் மகளாக நான் எப்படி ஆனேன் என்பதை நான் அறிந்த வரை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(18) முன்பொரு காலத்தில், ஒரு முனிவர் இங்கு வந்து எனது பிறப்பைக் குறித்துக் கேட்டார். ஓ மன்னா {துஷ்யந்தரே}, அவரிடம் அந்தச் சிறப்பு மிகுந்தவர் (கண்வர்) சொன்னது அனைத்தையும் என்னிடம் இருந்து இப்போது கேட்பீராக.(19)
முனிவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எனது தந்தை கண்வர், "பழங்காலத்தில் கடுந்தவத்தில் விஷ்வாமித்திரர்[2] ஈடுபட்டதால் தேவர்களின் தலைவனான இந்திரன் அச்சுறுத்தலுக்கு ஆளானான். அவரது தவங்களால் சொர்க்கத்தின் உயர்ந்த ஆசனத்தில் இருந்து தன்னைத் தள்ளிவிடக் கூடும் என்று நினைத்து அஞ்சிய இந்திரன், மேனகையை அழைத்து, அவளிடம்,(20,21) “ஓ மேனகையே! நீயே அப்சரஸ்களில் முதன்மையானவள், எனவே, ஓ இனிமையானவளே {மேனகையே}, எனக்கு ஒரு சேவையைச் செய்வாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) காந்தியில் சூரியனைப் போன்ற இந்தப் பெரும் தவசி விஷ்வாமித்திரர் தவங்களில் கடுமையானவற்றைச் செய்துவருகிறார். என் இதயம் அச்சத்தால் நடுங்குகிறது.(23) உண்மையில், ஓ கொடியிடை மேனகையே, இஃது உன் தொழிலே. ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த ஆன்மா கொண்டவரும், கடும் தவங்களில் ஈடுபடுபவருமான விஷ்வாமித்திரரால் என்னை என் ஆசனத்தில் {பதவியில்} இருந்து தள்ள முடியும் என்பதை நீ {எண்ணிப்} பார்க்க வேண்டும். நீ சென்று அவரை மயக்கி, அவர் தொடர்ந்து வரும் தவங்களைக் கலங்கடித்து என் நன்மையைச் சாதிப்பாயாக.(24,25) ஓ அழகானவளே! உன் அழகு, இளமை, ஏற்புடைமை, கலைகள், புன்னகை மற்றும் பேச்சால் அவரை மயக்கி, அவரது தவங்களில் இருந்து விலக்கி, அவரை வெல்வாயாக” என்றான் {இந்திரன்}.(26)
இவையாவற்றையும் கேட்ட மேனகை, "அந்தச் சிறப்புமிக்க விஷ்வாமித்திரர் பெரும் சக்தியைக் கொண்ட வலிமைமிக்கத் துறவியாவார். நீர் அறிந்தவாறே அவர் மிகவும் முன்கோபம் கொண்டவருமாவார்.(27) அந்த உயர் ஆன்மாவின் சக்தி, தவங்கள், கோபம் ஆகியவை உம்மையே கவலை கொள்ளச் செய்திருக்கின்றன. நானும் ஏன் கவலை கொள்ளலாகாது?(28) சிறப்புமிக்க வசிஷ்டரே கூடத் தன் பிள்ளைகளின் அகால மரணத்தைக் காணும் வேதனையை அடையச் செய்தவரும் அவரே. முதலில் க்ஷத்திரியராகப் பிறந்திருப்பினும், அடுத்து தன் தவத்துறவுகளின் அறத்தால் பிராமணரானவர் ஆவார்.(29) கடக்கக் கடினமானதும், கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் புனித ஓடையுமான ஓர் ஆழமான ஆற்றைத் தன் தூய்மைச் சடங்குகளுக்காக {புனித நீராடலுக்காக} உண்டாக்கியவர் அவரே.(30)
தந்தையின் சாபத்தால் வேடுவனாக வாழ்ந்த வந்த அரசமுனி மதங்கன் (திரிசங்கு), கொடும் காலத்தில் {பஞ்ச காலத்தில்} இருந்த விஷ்வாமித்திரரின் மனைவியை ஆதரித்தான்.(31) பஞ்சம் தீர்ந்ததும், திரும்பிக் கொண்டிருந்த விஷ்வாமித்திரர், தனது ஆசிரமம் எங்கிருந்ததோ அந்த ஓடையின் {நதியின்} பெயரை கௌசிகி என்பதிலிருந்து பாரை என்று மாற்றினார்.(32) மதங்கனின் சேவைகளுக்குப் பதிலாக {நன்றிக்கடனாக}, வேள்விகளில் பின்னவனின் {மதங்கனின்} புரோகிதராக ஆனார். {அந்த வேள்விகளில்} தேவர்களின் தலைவரே அச்சத்தால் சோமச்சாற்றை அருந்த சென்றார் {அச்சத்தால் நீரே சென்றீர்}.(33) சிரவணத்தை {திரவோணம் நட்சத்திரத்தை} முதலாகக் கொண்ட எண்ணற்ற நட்சத்திங்களுடன் கூடிய இரண்டாம் உலகத்தைக் கோபத்தால் உண்டாக்கியவர் விஷ்வாமித்திரரே. மேன்மையானவரின் {ஆசான் வசிஷ்டரின்} சாபத்தில் கெட்டிருந்த திரிசங்குவுக்குப் பாதுகாப்பளித்தவர் அவரே.(34) இத்தகு செயல்களைச் செய்த அவரை அணுக நான் அஞ்சுகிறேன். ஓ இந்திரரே, அவரது கோபத்தால் நான் எரிந்துவிடாதவாறு, என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(35)
தன் காந்தியால் மூவுலகங்களை எரிக்கவும், (தன் பாதத்தின்) ஒரு மிதியால் பூமியை நடுங்கவும் செய்ய இயன்றவர் அவர் {விஷ்வாமித்திரர்}. பெரும் மேருவை {மகாமேருவை} பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வீச இயன்றவர் அவர். ஒருக்கணத்தில் பூமியின் பத்து {திசைப்} புள்ளிகளையும் சுற்றி வர இயன்றவர் அவர்.(36) சுடர்மிக்க நெருப்பைப் போலத் தவ அறங்கள் நிறைந்தவரும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவருமான ஒருவரை என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு தீண்டவும் முடியும்?(37) அவரது வாய் சுடர்மிக்க நெருப்பைப் போன்றது; அவரது கண்களின் கருவிழிகள் சூரியனையும், சந்திரனையும் போன்றன; அவரது நாக்கு யமனையே போன்றது. ஓ தேவர்களின் தலைவரே! {இந்திரரே} என்னைப் போன்ற ஒரு பெண்ணால், எவ்வாறு அவரைத் தீண்டவும் முடியும்?(38) யமன், சோமன், பெரும் முனிவர்கள், சத்யஸ்யர்கள், விஸ்வர்கள், வாஹில்யர்கள் ஆகியோரும் அவரது ஆற்றலை நினைத்தால் அஞ்சுவர். என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு அஞ்சாமல் அவரைக் காணவும் முடியும்? (39)
எனினும், ஓ தேவர்களின் மன்னா {இந்திரரே}, உம்மால் ஆணையிடப்படும் நான் எவ்வாறேனும் அம்முனிவரை அணுக வேண்டும். ஆனால், ஓ தேவர்களின் தலைவரே {இந்திரரே}, உம்மால் பாதுகாக்கப்படும் நான் அந்த முனிவரிடம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏதாவது திட்டத்தைத் தீட்டுவீராக.(40) அந்த முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன்னிலையில் நான் விளையாடத் தொடங்குகையில் மாருதன் (காற்று தேவன் {வாயு}) அங்கு வந்து, என் ஆடைகளைக் களவாடுவது நன்று என்றும், உமது ஆணையின் பேரில் மன்மதனும் (காமதேவன்} எனக்கு உதவுவது நன்று என்றும் நான் நினைக்கிறேன்.(41) அந்தச் சந்தர்ப்பத்தில் மாருதன், காட்டில் இருந்து நறுமணத்தை அங்கே கொண்டு வந்து அம்முனிவரை {விஷ்வாமித்திரரை} மயக்கட்டும்” என்று மறுமொழி கூறினாள் {மேனகை}. இதைச் சொல்லியும், தான் கேட்ட அனைத்தும் முறையாகக் கிடைத்ததைக் கண்டும் மேனகை, அந்தப் பெரும் கௌசிகரின் ஓய்வில்லத்திற்குச் சென்றாள்" {என்றார் கண்வர்}.(42)
[1]விருந்தினரை வரவேற்பதில் பதினாறு வரை உபச்சாரங்கள் உண்டு.
1.ஆசனம் கொடுத்தல், 2. கால்கழுவுதல், 3. கைகளைக் கழுவுதல், 4. அருந்த நீர் தருதல் 5. குளிப்பதற்கான வாசனைப் பொடிகளை பூசுதல் 6. குளிக்க வைத்தல் 7. உடைகள் தருதல் 8 ஆபரணங்கள் தருதல் 9. வாசனை திரவியங்கள் பூசுதல் 10. பூணூல் அளித்தல் 11. தூபங்கள் வாசனைப் புகைகளை பரவவிடல் 12. கவரி வீசுதல் 13.அவர்கள் மனம் குளிர உபசார வார்த்தைகள் பேசுதல் 14. உணவளித்தல் 15. தாம்பூலம் கொடுத்தல் 16. ஆரத்தி எடுத்தல்
1. ஆசனம், 2. பாத்யம் 3. அர்க்கியம் 4. ஆசமனம் 5. ஔஷபோகாராம் 6. ஸ்னானம் 7. வஸ்திரம் 8. ஆபரணம் 9 கந்தம் 10. உபவீதம் 11. தூபம் 12. வியாஜனம் 13. அர்ச்சனை 14. நைவேத்யம் 15. தாம்பூழம் 16. ஆரத்தி இவற்றில் கால்கழுவுதல் பாத்யம் எனப்படும். கைகளைக் கழுவுவது அர்க்கியம் எனப்படும்.
இவ்வாறு மன்னனை வழிபட்டு, அவனது உடல்நிலை மற்றும் மனநிலையைக் கேட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை}, “ஓ மன்னா, எது செய்யப்பட வேண்டும்? உமது உத்தரவுகளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று மரியாதையாகக் கேட்டாள்.(6) அவளால் முறையாக வழிபடப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, களங்கமற்ற பண்புகளையும், இனிய பேச்சையும் கொண்ட அந்தக் கன்னிகையிடம்,(7) “பெரும் அருள் கொண்ட முனிவர் கண்வரை நான் வழிபட வந்திருக்கிறேன். ஓ இனிமையானவளே, அழகானவளே, சிறப்புமிக்க முனிவர் கண்வர் எங்கே சென்றிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(8) அதற்குச் சகுந்தலை, "சிறப்புமிக்க என் தந்தை {கண்வர்}, பழங்கள் கொணர்ந்து வர ஆசிரமத்தைவிட்டு வெளியே சென்றார். ஒருகணம் பொறுத்தால், அவர் வருகையில் நீர் அவரைக் காணலாம்" என்று சொன்னாள்.(9)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "முனிவரைக் {கண்வ முனிவரைக்} காணாது, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, அந்தக் கன்னிகை மிகுந்த அழகும், கச்சிதமான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பதைக் கண்டான். அவள் இனிமையான புன்னகையுடன் இருப்பதையும் கண்டான். (10) அவள் {சகுந்தலை}, தனது களங்கமற்ற பண்புகள், தவத்துறவுகள், பணிவு ஆகியவற்றின் அழகால் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள். அவள் {சகுந்தலை} இளமையின் தொடக்கத்தில் {கன்னிப் பருவத்தில்} இருப்பதையும் மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(11)
எனவே அவன் {துஷ்யந்தன்}, அவளிடம் {சகுந்தலையிடம்}, "ஓ அழகியே! நீ யார்? எவருடைய மகள் நீ? மேலும் நீ ஏன் இந்தக் காட்டுக்கு வந்தாய்? ஓ எழில் வாய்ந்தவளே! இப்படிப்பட்ட பண்புகளுடனும், இவ்வளவு அழகுடனும் உள்ள நீ எங்கிருந்து வந்தாய்?(12) ஓ ஆழகானவளே! முதல் பார்வையிலேயே நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்! நான் உன்னைப்பற்றி முழுவதும் அறிய விரும்புகிறேன். எனவே, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(13) அந்த ஏகாதிபதியால் {துஷ்யந்தனால்} இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை} புன்னகையுடன் கூடிய இனிமையான வார்த்தைகளில்,(14) "ஓ துஷ்யந்தரே! நற்குணம், ஞானம், உயர்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்ட சிறப்புமிக்க முனிவர் கண்வரின் மகள் நான் " என்று மறுமொழி கூறினாள் {சகுந்தலை}.(15)
துஷ்யந்தன், "உலகம் முழுவதும் வழிபடப்படுபவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் {கண்வ முனிவர்}, உயிர்வித்தை மேலெழுப்பியவராவார் {காம இச்சைக்களைக் கட்டுப்படுத்தியவர் ஆவார்}. தர்மன் கூடத் தன் பாதையில் தவறலாம், ஆனால் கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு தவசி தவறவே முடியாது.(16) எனவே, ஓ அழகான நிறம் கொண்டவளே! அவரது மகளாக நீ எப்படிப் பிறந்திருக்க முடியும்? எனது இந்தப் பெரும் ஐயப்பாட்டைக் களைவதே உனக்குத் தகும்" என்றான் {துஷ்யந்தன்}.(17) சகுந்தலை, "ஓ மன்னா! {துஷ்யந்தரே} பழங்காலத்தில் எனக்கு என்ன நேர்ந்தது, முனிவரின் மகளாக நான் எப்படி ஆனேன் என்பதை நான் அறிந்த வரை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(18) முன்பொரு காலத்தில், ஒரு முனிவர் இங்கு வந்து எனது பிறப்பைக் குறித்துக் கேட்டார். ஓ மன்னா {துஷ்யந்தரே}, அவரிடம் அந்தச் சிறப்பு மிகுந்தவர் (கண்வர்) சொன்னது அனைத்தையும் என்னிடம் இருந்து இப்போது கேட்பீராக.(19)
முனிவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எனது தந்தை கண்வர், "பழங்காலத்தில் கடுந்தவத்தில் விஷ்வாமித்திரர்[2] ஈடுபட்டதால் தேவர்களின் தலைவனான இந்திரன் அச்சுறுத்தலுக்கு ஆளானான். அவரது தவங்களால் சொர்க்கத்தின் உயர்ந்த ஆசனத்தில் இருந்து தன்னைத் தள்ளிவிடக் கூடும் என்று நினைத்து அஞ்சிய இந்திரன், மேனகையை அழைத்து, அவளிடம்,(20,21) “ஓ மேனகையே! நீயே அப்சரஸ்களில் முதன்மையானவள், எனவே, ஓ இனிமையானவளே {மேனகையே}, எனக்கு ஒரு சேவையைச் செய்வாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) காந்தியில் சூரியனைப் போன்ற இந்தப் பெரும் தவசி விஷ்வாமித்திரர் தவங்களில் கடுமையானவற்றைச் செய்துவருகிறார். என் இதயம் அச்சத்தால் நடுங்குகிறது.(23) உண்மையில், ஓ கொடியிடை மேனகையே, இஃது உன் தொழிலே. ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த ஆன்மா கொண்டவரும், கடும் தவங்களில் ஈடுபடுபவருமான விஷ்வாமித்திரரால் என்னை என் ஆசனத்தில் {பதவியில்} இருந்து தள்ள முடியும் என்பதை நீ {எண்ணிப்} பார்க்க வேண்டும். நீ சென்று அவரை மயக்கி, அவர் தொடர்ந்து வரும் தவங்களைக் கலங்கடித்து என் நன்மையைச் சாதிப்பாயாக.(24,25) ஓ அழகானவளே! உன் அழகு, இளமை, ஏற்புடைமை, கலைகள், புன்னகை மற்றும் பேச்சால் அவரை மயக்கி, அவரது தவங்களில் இருந்து விலக்கி, அவரை வெல்வாயாக” என்றான் {இந்திரன்}.(26)
இவையாவற்றையும் கேட்ட மேனகை, "அந்தச் சிறப்புமிக்க விஷ்வாமித்திரர் பெரும் சக்தியைக் கொண்ட வலிமைமிக்கத் துறவியாவார். நீர் அறிந்தவாறே அவர் மிகவும் முன்கோபம் கொண்டவருமாவார்.(27) அந்த உயர் ஆன்மாவின் சக்தி, தவங்கள், கோபம் ஆகியவை உம்மையே கவலை கொள்ளச் செய்திருக்கின்றன. நானும் ஏன் கவலை கொள்ளலாகாது?(28) சிறப்புமிக்க வசிஷ்டரே கூடத் தன் பிள்ளைகளின் அகால மரணத்தைக் காணும் வேதனையை அடையச் செய்தவரும் அவரே. முதலில் க்ஷத்திரியராகப் பிறந்திருப்பினும், அடுத்து தன் தவத்துறவுகளின் அறத்தால் பிராமணரானவர் ஆவார்.(29) கடக்கக் கடினமானதும், கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் புனித ஓடையுமான ஓர் ஆழமான ஆற்றைத் தன் தூய்மைச் சடங்குகளுக்காக {புனித நீராடலுக்காக} உண்டாக்கியவர் அவரே.(30)
தந்தையின் சாபத்தால் வேடுவனாக வாழ்ந்த வந்த அரசமுனி மதங்கன் (திரிசங்கு), கொடும் காலத்தில் {பஞ்ச காலத்தில்} இருந்த விஷ்வாமித்திரரின் மனைவியை ஆதரித்தான்.(31) பஞ்சம் தீர்ந்ததும், திரும்பிக் கொண்டிருந்த விஷ்வாமித்திரர், தனது ஆசிரமம் எங்கிருந்ததோ அந்த ஓடையின் {நதியின்} பெயரை கௌசிகி என்பதிலிருந்து பாரை என்று மாற்றினார்.(32) மதங்கனின் சேவைகளுக்குப் பதிலாக {நன்றிக்கடனாக}, வேள்விகளில் பின்னவனின் {மதங்கனின்} புரோகிதராக ஆனார். {அந்த வேள்விகளில்} தேவர்களின் தலைவரே அச்சத்தால் சோமச்சாற்றை அருந்த சென்றார் {அச்சத்தால் நீரே சென்றீர்}.(33) சிரவணத்தை {திரவோணம் நட்சத்திரத்தை} முதலாகக் கொண்ட எண்ணற்ற நட்சத்திங்களுடன் கூடிய இரண்டாம் உலகத்தைக் கோபத்தால் உண்டாக்கியவர் விஷ்வாமித்திரரே. மேன்மையானவரின் {ஆசான் வசிஷ்டரின்} சாபத்தில் கெட்டிருந்த திரிசங்குவுக்குப் பாதுகாப்பளித்தவர் அவரே.(34) இத்தகு செயல்களைச் செய்த அவரை அணுக நான் அஞ்சுகிறேன். ஓ இந்திரரே, அவரது கோபத்தால் நான் எரிந்துவிடாதவாறு, என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(35)
தன் காந்தியால் மூவுலகங்களை எரிக்கவும், (தன் பாதத்தின்) ஒரு மிதியால் பூமியை நடுங்கவும் செய்ய இயன்றவர் அவர் {விஷ்வாமித்திரர்}. பெரும் மேருவை {மகாமேருவை} பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வீச இயன்றவர் அவர். ஒருக்கணத்தில் பூமியின் பத்து {திசைப்} புள்ளிகளையும் சுற்றி வர இயன்றவர் அவர்.(36) சுடர்மிக்க நெருப்பைப் போலத் தவ அறங்கள் நிறைந்தவரும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவருமான ஒருவரை என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு தீண்டவும் முடியும்?(37) அவரது வாய் சுடர்மிக்க நெருப்பைப் போன்றது; அவரது கண்களின் கருவிழிகள் சூரியனையும், சந்திரனையும் போன்றன; அவரது நாக்கு யமனையே போன்றது. ஓ தேவர்களின் தலைவரே! {இந்திரரே} என்னைப் போன்ற ஒரு பெண்ணால், எவ்வாறு அவரைத் தீண்டவும் முடியும்?(38) யமன், சோமன், பெரும் முனிவர்கள், சத்யஸ்யர்கள், விஸ்வர்கள், வாஹில்யர்கள் ஆகியோரும் அவரது ஆற்றலை நினைத்தால் அஞ்சுவர். என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு அஞ்சாமல் அவரைக் காணவும் முடியும்? (39)
எனினும், ஓ தேவர்களின் மன்னா {இந்திரரே}, உம்மால் ஆணையிடப்படும் நான் எவ்வாறேனும் அம்முனிவரை அணுக வேண்டும். ஆனால், ஓ தேவர்களின் தலைவரே {இந்திரரே}, உம்மால் பாதுகாக்கப்படும் நான் அந்த முனிவரிடம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏதாவது திட்டத்தைத் தீட்டுவீராக.(40) அந்த முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன்னிலையில் நான் விளையாடத் தொடங்குகையில் மாருதன் (காற்று தேவன் {வாயு}) அங்கு வந்து, என் ஆடைகளைக் களவாடுவது நன்று என்றும், உமது ஆணையின் பேரில் மன்மதனும் (காமதேவன்} எனக்கு உதவுவது நன்று என்றும் நான் நினைக்கிறேன்.(41) அந்தச் சந்தர்ப்பத்தில் மாருதன், காட்டில் இருந்து நறுமணத்தை அங்கே கொண்டு வந்து அம்முனிவரை {விஷ்வாமித்திரரை} மயக்கட்டும்” என்று மறுமொழி கூறினாள் {மேனகை}. இதைச் சொல்லியும், தான் கேட்ட அனைத்தும் முறையாகக் கிடைத்ததைக் கண்டும் மேனகை, அந்தப் பெரும் கௌசிகரின் ஓய்வில்லத்திற்குச் சென்றாள்" {என்றார் கண்வர்}.(42)
[2] கௌசிகர் {விஷ்வாமித்திரர்}, மன்னன் குசநாபனின் மகனாவார். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் விஷ்வாமித்திரருக்குக் கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்: இடிந்தகரை, கூடன்குளம் ஆகியனவாகும்.
ஆங்கிலத்தில் | In English |