Viswamitra and Menaka! | Adi Parva - Section 72 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்ரரை மயக்கிய மேனகை; மேனகை பெற்றெடுத்த மகள்; சகுந்தலையைக் கண்ட கண்வர்; சகுந்தலையின் பெயர்க்காரணம்; துஷ்யந்தனிடம் தன் கதையைச் சொல்லி முடித்த சகுந்தலை...
கண்வர் தொடர்ந்தார், "அவளால் {மேனகையால்} இப்படிச் சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்து இடங்களையும் அணுக வல்லவனிடம் (காற்று தேவன் வாயுவிடம்), முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன் மேனகை இருக்கும் நேரத்தில், அவளோடு இருக்குமாறு ஆணையிட்டான்.(1) பிறகு, மருட்சியுடையவளும், அழகானவளுமான மேனகை, அந்த ஓய்வில்லத்தில் நுழைந்து, தன் தவங்களால் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்தவரான விஷ்வாமித்திரர் இன்னும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அங்கே கண்டாள்.(2) முனிவரை {விஷ்வாமித்திரரை} வணங்கிய அவள் {மேனகை}, அவர் முன்பாக விளையாடத் தொடங்கினாள். சரியாக அதே நேரத்தில் மாருதன் {வாயு தேவன்}, சந்திரனைப் போன்ற வெண்மையுடன் கூடிய அவளது {மேனகையினது} ஆடைகளைக் களவாடிச் சென்றான்.(3) அதன்பேரில் பெரும் நாணத்தில் நிறைந்த அவள் {மேனகை}, ஏதோ தான் மாருதனிடம் {வாயு தேவனிடம்} மிகவும் எரிச்சல் அடைந்ததைப் போலவும் தன் ஆடையைப் பிடிக்க ஓடினாள்.(4)
அவள், நெருப்பைப் போன்ற சக்தி கொண்ட விஷ்வாமித்திரரின் கண்களுக்கு முன்பாகவே இவையாவற்றையும் செய்தாள். விஷ்வாமித்திரரும் அவளை அதே மனோபாவத்துடனேயே கண்டார்.(5) ஆடைகள் விலகிய அவள் {மேனகை} களங்கமற்ற {நிறைவான} அழகு கொண்டவளாக இருப்பதையும் அவர் {விஷ்வாமித்திரர்} கண்டார். அந்த முனிவர்களில் சிறந்தவர் {விஷ்வாமித்திரர்}, மேனியில் வயதின் தடயம் ஏதும் இல்லாமால் மிக அழகானவளாக அவள் {மேனகை} இருப்பதைக் கண்டார்.(6) அவளது அழகையும், வித்தகத் தன்மையையும் கண்ட அந்த முனிவர்களில் காளை {விஷ்வாமித்திரர்}, காமங்கொண்டு, தான் அவளது தோழமையை விரும்புவதாகக் குறிப்பால் உணர்த்தினார்.(7) அதன்படியே அவர் அழைக்கவும் செய்தார், களங்கமில்லா அழகுடைய அவளும் அந்த அழைப்புக்கான ஏற்பை வெளிப்படுத்தினாள். பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர் துணையாக நீண்ட காலத்தை அங்கே கழித்தனர் [1].
மிக நீண்ட காலத்தை ஏதோ அஃது ஒரு நாளை போல எண்ணி, தாங்கள் விரும்பியவாறெல்லாம் ஒருவரோடொருவர் விளையாடியதால், அந்த முனிவர், மேனகையிடம் சகுந்தலை என்ற பெயரில் ஒரு மகளைப் பெற்றார். (8,9) மேனகையும் (தான் கருத்தரித்ததும்) அழகிய இமய மலைகளின் பள்ளத்தாக்கில் ஓடும் மாலினி ஆற்றின் கரைக்குச் சென்றாள். அங்கே அவள் அந்த மகளை ஈன்றெடுத்தாள்[2]. அவள், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தையை அந்த ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்[3].(10) மனிதர்களற்றதும், சிங்கங்களும், புலிகளும் நிறைந்ததுமான அந்தக் காட்டில் கிடக்கும் புதிதாய்ப் பிறந்த பச்சிளங்குழந்தையைக் கண்ட எண்ணற்ற கழுகுகள் தீங்கிலிருந்து அதை {அந்தக் குழந்தையைப்} பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் அமர்ந்தன. எந்த ராட்சசனோ, ஊனுண்ணும் விலங்கோ அதன் உயிரை எடுக்கவில்லை.(11,12) அந்தக் கழுகுகள் மேனகையின் மகளைப் {சகுந்தலையைப்} பாதுகாத்தன. நான் அங்கே என் தூய்மையாகும் சடங்கை {நீராடலைச்} செய்யச் சென்று, கழுகுகள் சூழக் காட்டில் தனியாகக் கிடக்கும் அந்தப் பச்சிளம் குழந்தையைக் கண்டேன்[4]. அவளை {சகுந்தலையை} இங்கே கொண்டு வந்து, எனது மகளாக்கிக் கொண்டேன்.(13,14)
உண்மையில், உடலைப் படைப்பவன், உயிரைக் காப்பவன், உணவு கொடுப்பவன் ஆகிய மூவரும், சாத்திரங்களின் படி தரத்தில் தந்தைளாகின்றனர்.(15) காட்டில் தனியாக அவள் சகுந்தங்களால் {பறவைகளால்} சூழப்பட்டிருந்த காரணத்தால், அவள் சகுந்தலை[5] (பறவைகளால் காக்கப்பட்டவள்} என என்னால் பெயரிடப்பட்டாள்.(16) ஓ பிராமணரே, இப்படியே சகுந்தலை எனது மகளானாள் என்பதை அறிவீராக. அந்தக் களங்கமற்ற சகுந்தலையும் என்னைத் தந்தையாகவே கருதுகிறாள்" என்றார் {கண்வ முனிவர்}.(17)
அந்த முனிவரால் கேட்கப்பட்டதும், எனது தந்தை {கண்வ முனிவர்} அவரிடம் இதையே சொன்னார். ஓ மனிதர்களின் மன்னா {துஷ்யந்தரா}, இப்படியே நான் கண்வரின் மகளாவேன் என்பதை அறிந்து கொள்வீராக.(18) எனது உண்மை தந்தையை {விஷ்வாமித்திரரை} அறியாத நான் கண்வரையே எனது தந்தையாகக் கருதுகிறேன். இப்படியே, ஓ மன்னா {துஷ்யந்தரே}, எனது பிறப்பைக் குறித்து நான் கேள்விப்பட்டது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்" என்றாள் {சகுந்தலை}.(19)

[1] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “எப்போதும் தவத்திலிருந்த ரிஷியானவர் இவ்வாறு காமக் குரோதங்களை அடக்காதவராகி அநேக ஆயிர வருஷங்கள் கடந்து போனதை நினைக்காமற்போனார். அந்த ரிஷி வெகுகாலமாகச் சம்பாதித்த தவத்துக்கு அழிவைச் செய்து கொண்டார். தவமிழந்ததனாலேயும் அம்முனிவர் மோகத்தை அடைந்தார். கோபமே இயல்பாகவுடையவரும், காய் கிழங்குகளைப் புசிப்பவருமாகிய முனிவர் பெண் மயக்கத்தில் அகப்பட்டுக் கொண்டு காலலம்புவதனால் ஜலத்தில் சப்தத்தைச் செய்துவிட்டு நதியின் உள் திட்டிலுள்ள ஆசிரமத்திற்குச் சென்றார். தானும் விட்டு நீங்குவதற்கு விரும்பின மேனகை ஜலத்தின் சப்தத்தைக் கேட்டாள். “தபஸினால் ஜ்வலித்த மகிமையுள்ள இவர் போவதும் வருவதும் ஆகாசமார்க்கத்தாலேதான். இப்போது இவர் தவம் குறைந்து போனதினுடைய அடையாளத்தை நான் அறிகிறேன். இப்போது நாம் போவது சரியன்று” என்று சொல்லி, மேனகை ருதுஸ்நானஞ்செய்து, காமத்தின் விருப்பத்தில் அகப்பட்டவராகிய அம்முனிவரின் அருகிற்சென்றாள்” என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.
மிக நீண்ட காலத்தை ஏதோ அஃது ஒரு நாளை போல எண்ணி, தாங்கள் விரும்பியவாறெல்லாம் ஒருவரோடொருவர் விளையாடியதால், அந்த முனிவர், மேனகையிடம் சகுந்தலை என்ற பெயரில் ஒரு மகளைப் பெற்றார். (8,9) மேனகையும் (தான் கருத்தரித்ததும்) அழகிய இமய மலைகளின் பள்ளத்தாக்கில் ஓடும் மாலினி ஆற்றின் கரைக்குச் சென்றாள். அங்கே அவள் அந்த மகளை ஈன்றெடுத்தாள்[2]. அவள், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தையை அந்த ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்[3].(10) மனிதர்களற்றதும், சிங்கங்களும், புலிகளும் நிறைந்ததுமான அந்தக் காட்டில் கிடக்கும் புதிதாய்ப் பிறந்த பச்சிளங்குழந்தையைக் கண்ட எண்ணற்ற கழுகுகள் தீங்கிலிருந்து அதை {அந்தக் குழந்தையைப்} பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் அமர்ந்தன. எந்த ராட்சசனோ, ஊனுண்ணும் விலங்கோ அதன் உயிரை எடுக்கவில்லை.(11,12) அந்தக் கழுகுகள் மேனகையின் மகளைப் {சகுந்தலையைப்} பாதுகாத்தன. நான் அங்கே என் தூய்மையாகும் சடங்கை {நீராடலைச்} செய்யச் சென்று, கழுகுகள் சூழக் காட்டில் தனியாகக் கிடக்கும் அந்தப் பச்சிளம் குழந்தையைக் கண்டேன்[4]. அவளை {சகுந்தலையை} இங்கே கொண்டு வந்து, எனது மகளாக்கிக் கொண்டேன்.(13,14)
[2] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “தெய்வப் பெண்ணுக்கு ஒப்பானவளும், எல்லா ஆபரணங்களும் அணிந்து கொண்டு அழகிய சயனத்தில் படுத்திருப்பவளுமான அந்தப் பெணைப் பார்த்து, மேனகை, “பெண்ணரசியே! நீ உக்கிரமான தவமுள்ள மஹரிஷியின் வீரியமாக இருக்கிறாய். {அதாவது மானிடப் பெண்ணை ஸ்வர்க்கத்தில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது}. ஆதலால் தேவகாரியத்திற்காக வந்த நான் ஸ்வர்க்கம் செல்வன்” என்று சொன்னாள்” என்று இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.
[3] மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பிலும் இங்கே இதன் பிறகு, “தான் வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்ததும் அவள் விரைவில் இந்திரனிடம் திரும்பினாள்” என்றிருக்கிறது. இவ்வரி கங்குலியில் இல்லை. இது தவறுதலாகவே விடுபட்டிருக்க வேண்டும்.
[4] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “அழகாகக் கூவுகின்ற பக்ஷியெல்லாம் என்னைப் பார்த்துக் கிட்ட வந்து என் கால்களில் விழுந்து, “பிராமணரே, இந்த விசுமாத்திரருடைய பெண்ணை அடைக்கலம் போல் வைத்துக் காப்பாற்றக் கடவீர். உமது சினேகிதர் காமக் குரோதங்களை அடக்காமல் கௌசிகி நதிக்குச் சென்றார். ஆதலால் தயையோடு அவருடைய பெண்ணை வளர்க்கக்கடவீர்” என்று இனிமையாகவும் தெளிவில்லாமலும் சொல்லின. பிராணிகளின் பாஷைகளையெல்லாம் தெரிந்தவனும், எல்லாப் பிராணிகளிடத்தும் தயையுள்ளவனுமாகிய நான் உடனே அவளைக் கொண்டு வந்து பெண்ணாக வைத்துக் கொண்டேன்” என்று இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.
உண்மையில், உடலைப் படைப்பவன், உயிரைக் காப்பவன், உணவு கொடுப்பவன் ஆகிய மூவரும், சாத்திரங்களின் படி தரத்தில் தந்தைளாகின்றனர்.(15) காட்டில் தனியாக அவள் சகுந்தங்களால் {பறவைகளால்} சூழப்பட்டிருந்த காரணத்தால், அவள் சகுந்தலை[5] (பறவைகளால் காக்கப்பட்டவள்} என என்னால் பெயரிடப்பட்டாள்.(16) ஓ பிராமணரே, இப்படியே சகுந்தலை எனது மகளானாள் என்பதை அறிவீராக. அந்தக் களங்கமற்ற சகுந்தலையும் என்னைத் தந்தையாகவே கருதுகிறாள்" என்றார் {கண்வ முனிவர்}.(17)
[5] சகுந்த – பறவைகளினால், லா – கிருஹிக்கப்பட்டவள் என்று கும்பகோணம் பதிப்பில் விளக்கம் இருக்கிறது.
அந்த முனிவரால் கேட்கப்பட்டதும், எனது தந்தை {கண்வ முனிவர்} அவரிடம் இதையே சொன்னார். ஓ மனிதர்களின் மன்னா {துஷ்யந்தரா}, இப்படியே நான் கண்வரின் மகளாவேன் என்பதை அறிந்து கொள்வீராக.(18) எனது உண்மை தந்தையை {விஷ்வாமித்திரரை} அறியாத நான் கண்வரையே எனது தந்தையாகக் கருதுகிறேன். இப்படியே, ஓ மன்னா {துஷ்யந்தரே}, எனது பிறப்பைக் குறித்து நான் கேள்விப்பட்டது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்" என்றாள் {சகுந்தலை}.(19)
ஆங்கிலத்தில் | In English |