Sakuntala went to Dushmanta! | Adi Parva - Section 74a | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : ஆண்மகவைப் பெற்றெடுத்த சகுந்தலை; குழந்தையின் அழகு மற்றும் ஆற்றல்; கண்வர் ஆசிரம முனிவர்கள் அவனுக்குச் சர்வதமனன் என்ற பெயர்ச்சூட்டல்; துஷ்யந்தனிடம் சகுந்தலையை அனுப்பி வைத்த கண்வர்...
வைசம்பாயனர், "துஷ்யந்தன் சகுந்தலைக்குச் சத்தியங்களைச் செய்து கொடுத்து ஆசிரமத்தை விட்டு அகன்ற பின், {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்ட அவள் {சகுந்தலை} அளவிடமுடியா சக்தி கொண்ட ஓர் ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(1) அந்தக் குழந்தை மூன்று வயதை அடைந்ததும், எரியும் நெருப்பைப் போன்ற காந்தியைப் பெற்றான். ஓ ஜனமேஜயா! அவன் அழகையும், பெருந்தன்மையையும், நிபுணத்துவத்தையும் கொண்டவனாக இருந்தான்.(2) அறம் சார்ந்த மனிதர்களின் முதன்மையான கண்வர், தர்மத்தின்படியான சடங்குகளையெல்லாம் நாளுக்கு நாள் புத்திசாலியாகும் அந்தக் குழந்தைக்குச் செய்வித்தார்.(3) அந்த ஆண்பிள்ளை முத்துக்களைப் போன்ற பளபளப்பான பற்களைப் பெற்றிருந்தான். உள்ளங்கையில் அனைத்து அதிர்ஷ்ட ரேகைகளையும் பெற்று, சிங்கத்தை வீழ்த்தும் பலம் பெற்றிருந்தான். அகலமான நெற்றியுடன், அழகு வாய்ந்தவனாகவும், பலம் வாய்ந்தவனாகவும் வளர்ந்தான். அவன் தேவலோகக் குழந்தையைப் போன்ற காந்தியுடன் விளங்கி வேகமாக வளர்ந்தான்.(4) அவனுக்கு ஆறு வயதானபோது, பெரும் பலம் கொண்டு, சிங்கங்கள், புலிகள், கரடிகள், எருமைகள், யானைகள் ஆகியவற்றை அடக்கிக் கவர்ந்து, அந்த ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கட்டி வைத்தான்.(5)
சில விலங்குகளின் மேல் அமர்ந்து சவாரி செய்து, சில விலங்குகளுடன் சண்டையிட்டு விளையாடி மகிழ்ந்தான். கண்வரின் ஆசிரமத்தில் வசிப்பவர்கள் அவனுக்கு ஒரு பெயரைச் சூட்டினர். {அவர்கள்} "இவன் எந்தப் பலம் மிகுந்த விலங்கையும் கட்டிப்போட்டு அடக்கி வைப்பதால் சர்வதமனன் (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படுவான்" என்று சொன்னார்கள்.(6) இவ்வாறே வீரமும் சக்தியும் பலமும் கொண்டதால் அந்தப் பிள்ளைக்குச் சர்வதமனன் என்ற பெயர் சூட்டப்பட்டது.(7) முனிவர் {கண்வர்} அந்தப் பிள்ளையின் இயல்புக்கு அதீதமானச் செயல்களைக் கண்டு, சகுந்தலையிடம், "இவனை அனைவரும் அறிய, மரபுரிமை சார்ந்த வாரிசாக {இளவரசனாக} நிறுவப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று சொன்னார்.(8)
அந்தப் பிள்ளையின் பெரும்பலத்தைக் கண்டு, கண்வர் தனது சீடர்களிடம், "சகுந்தலையையும், அவள் மகனையும், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் கொண்ட அவளது கணவனிடம் {துஷ்யந்தனிடம்} தாமதிக்காமல் கொண்டு செல்வீராக.(9) பெண்கள் தன் தந்தைவழி அல்லது தாய்வழி உறவினர்களிடம் வெகுகாலம் வாழக்கூடாது. அப்படித் தங்குவது, அவர்களது நற்பெயருக்கும், நன்னடத்தைக்கும், அறத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். அதனால் தாமதிக்காமல் உடனே அவளை {சகுந்தலையை} தாங்கிச் செல்லுங்கள்'', என்றார்.(10)
அந்தச் சீடர்களும் முனிவரிடம் {கண்வரிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, யானையின் பெயரைக் கொண்ட (ஹஸ்தினாபுரம்) நகரத்திற்குச் சகுந்தலையையும், அவளது மகனையும் {சர்வதமனனையும்} அழைத்துச் சென்றார்கள்.(11) அந்த அழகான புருவங்களைக் கொண்டவள் {சகுந்தலை}, தேவலோக அழகுடன் கூடியவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனுமான அந்தப் பிள்ளையை {சர்வதமனனை} அழைத்துக் கொண்டு, தான் துஷ்யந்தனை முதலில் சந்தித்த அந்த வனத்தைவிட்டு அகன்றாள்.(12)
மன்னனிடம் {துஷ்யந்தனிடம்} சென்ற பிறகு, அவளும் {சகுந்தலையும்}, உதயசூரியனின் காந்தியைக் கொண்ட அவளது பிள்ளையும் {சர்வதமனனும்}, அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அறிமுகப்படுத்தப்பட்டார்கள்(13). முனிவரின் {கண்வ முனிவரின்} சீடர்கள் அவளை {சகுந்தலையை} மன்னனிடம் அறிமுகப்படுத்திவிட்டு, ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
சகுந்தலை, மன்னனை {துஷ்யந்தனை} சரியான முறையில் துதித்து,(14) "இவன் உமது மகனாவான். ஓ மன்னா {துஷ்யந்தரே}, இவன் உமது வாரிசாக நியமிக்கப்படட்டும். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, தேவர்களைப் போன்ற இந்தப் பிள்ளையை {சர்வதமனனை}, நீர் என்னிடம் பெற்றீர். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே! {துஷ்யந்தரே}, நீர் எனக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீராக.(15) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே! {துஷ்யந்தரே}, என்னுடன் கூடுவதற்கு முன்பு கண்வரின் ஆசிரமத்தில் ஏற்பட்ட நமது ஒப்பந்தத்தை நினைத்துப் பார்ப்பீராக" என்றாள் {சகுந்தலை}.(16)
மன்னன் {துஷ்யந்தன்}, அவளது {சகுந்தலையின்} வார்த்தைகளைக் கேட்டு, அனைத்தையும் நினைத்துப் பார்த்து, "எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஓ துறவுக் கோலத்தில் இருக்கும் தீய பெண்ணே! நீ யார்?(17) தர்மம் {அறம்}, காமம் {இன்பம்}, அர்த்தம் {பொருள்} ஆகிய செய்கைகளில் எதிலும் உன்னுடனான தொடர்பு எனக்கு இருப்பதாக நினைவில்லையே. செல், அல்லது இரு, அல்லது நீ என்ன விருப்பப்படுகிறாயோ அதைச் செய்வாயாக" என்றான்.(18)
அவனால் {துஷ்யந்தனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அந்த அழகான நிறம் கொண்ட அப்பாவி {சகுந்தலை} அதிர்ச்சியடைந்தாள். துன்பம் அவளின் {சகுந்தலையின்} நினைவை இழக்க வைத்தது. சிறிது நேரம் அவள் ஒரு மரக்கட்டை போல் நின்றாள்.(19) இருப்பினும், விரைவாக அவளின் {சகுந்தலையின்} கண்கள் தாமிரத்தைப் போன்று சிவந்தன, உதடுகள் துடிக்கத் தொடங்கின. அவ்வப்போது மன்னனின் {துஷ்யந்தனின்} மேல் படும் அவளின் {சகுந்தலையின்} பார்வை, அவனை {துஷ்யந்தனை} எரிப்பதாகத் தெரிந்தது.(20) தன்னுள் எழும் கோபத்தையும், துறவின் நெருப்பையும், இயல்புக்ககுமீறிய முயற்சியால் தனக்குள்ளேயே கட்டுப்படுத்தினாள்.(21) சிறிது நேரம் தனது நினைவுகளைக் கூர்மைப் படுத்தினாள்.

ஆங்கிலத்தில் | In English |