The wrath of Devayani! | Adi Parva - Section 78 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : பெண்களின் ஆடைகளைக் கலைத்த இந்திரன்; சர்மிஷ்டைக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; கிணற்றில் இருந்து தேவயானியைக் காத்த யயாதி; மகளுக்கு ஆறுதல் சொன்ன சுக்ராச்சாரியார்...
வைசம்பாயனர் சொன்னார், "தேவலோகத்தில் வசிப்பவர்கள், அற்புதமான அறிவியலைப் பயின்று வந்த கசனை வரவேற்பதில் மிகுந்த மகிழ்வு கொண்டனர். ஓ பாரதக் குலத்தின் காளையே! கசனிடமிருந்து தேவர்கள் அந்த அறிவியலை அறிந்து கொண்டு தங்கள் குறிக்கோள் நிறைவேறியதாகக் கருதினர்.(1) எல்லோரும் ஒன்றாகக் கூடி, ஆயிரம் வேள்விகள் செய்தவனிடம் {இந்திரனிடம்}, "ஓ புரந்தரா! உனது வீரத்தைக் காட்ட நேரம் வந்துவிட்டது. உனது எதிரிகளைக் கொல்வாயாக" என்றனர்.(2) அப்போது தேவர்களுடன் இருந்த மகவத் {இந்திரன்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். ஆனால் அப்படிப் போகும் வழியில் நிறைய மங்கையரைக் கண்டான்.(3) அந்த மங்கையர் கந்தர்வ மன்னன் சித்ரரதனின் நந்தவனத்திற்கு அருகில் இருந்த தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் தன்னைக் காற்றாக மாற்றிக் கொண்டு, கரையில் இருந்த அவர்களது ஆடைகளைக் கலைத்துப் போட்டான்.(4) சிறிது நேரம் கழித்து, அந்த மங்கையர் நீரிலிருந்து எழுந்து, தங்கள் ஆடைகளை எடுக்க முற்பட்டு, அந்த ஆடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து கலைந்திருந்ததைக் கண்டனர்.(5) அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தேவயானியின் ஆடைகளை விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை எடுத்துக் கொண்டாள்.(6) ஓ மன்னா! அதன் பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சச்சரவு ஏற்பட்டது. (7)
தேவயானி, "ஓ அசுரனின் மகளே! {சர்மிஷ்டையே}, ஏன் எனது ஆடையை எடுத்தாய்? நீ எனது சிஷ்யை அல்லவா? நீ நற்குணங்களற்று இருப்பதால், எந்த நன்மையும் உனக்கு ஏற்படாது" என்றாள்.(8)
அதற்குச் சர்மிஷ்டை, "உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் எனது தந்தையின் கீழ் நோக்கிய பார்வையில் படும் தாழ்ந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, காசு வாங்கிக் கொண்டு புகழ்பவர்களில் ஒருவராக, புகழ்ந்து கொண்டே இருப்பவர்தானே உனது தந்தை.(9) மற்றவர்களைப் புகழ்ந்து, இரந்து வாழ்பவர் மகள்தானே நீ. இரப்பவர்களுக்குப் பிச்சையிட்டு, தான் பிச்சையெடுக்காமல் எல்லோராலும் புகழப்படுபவரின் மகள் நான்.(10) நீயோ பிச்சைக்காரி, உனது மார்பில் அடித்துக் கொண்டு தீய வார்த்தைகள் பேசுவதும், என்னிடம் பகை கொள்வதும், கோபப்படுவதும் உன்போன்றோருக்கு வழக்கம்தான். பிச்சையை ஏற்பவளே, கோபத்தில் அழுவதால் சிந்தும் உனது கண்ணீரெல்லாம் வீண்தான். நான் நினைத்தால், உனக்குத் துன்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அப்படிச் செய்யமாட்டேன். நீதான் சண்டையிட விரும்புகிறாய். ஆனால், நான் உன்னை எனக்குச் சமமாகக் கருதவில்லை என்பதை அறிந்து கொள்" என்று வேகமாக மறுமொழி கூறினாள்.(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவயானி மிகுந்த கோபம் கொண்டு அவளிடம் இருக்கும் தனது ஆடைகளைப் பிடுங்கினாள். அதனால், சர்மிஷ்டை, அவளை அங்கிருந்த ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, வீடு திரும்பினாள்.(12) அந்தத் தீய சர்மிஷ்டை, நிச்சயமாகத் தேவயானி இறந்து போனாள் என்று கருதி கோபத்துடன் தனது வீடு நோக்கி நடையைக் கட்டினாள்.(13)
சர்மிஷ்டை அந்த இடத்தைவிட்டு அகன்றவுடன், அந்த இடத்திற்கு நகுஷனின் மகன் யயாதி வந்தான். அந்த மன்னன் அந்த இடத்திற்கு வேட்டையாடுவதற்காக வந்திருந்தான். அவனது தேருடன் கட்டப்பட்டிருந்த இரு குதிரைகளும், அவனுடன் தனியாக இருந்த ஒரு குதிரையும் மிகவும் களைத்திருந்தன. அந்த மன்னன், மிகுந்த தாகத்துடன் இருந்தான்.(14) அப்போது அந்த நகுஷனின் மகன் அங்கிருந்த கிணற்றைக் கண்டான். அது வற்றிப் போய்க் கிடந்ததைக் கண்டான். ஆனால், அதற்குள் ஆழமாகப் பார்வையைச் செலுத்துகையில், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் மங்கை ஒருத்தி அதனுள் இருப்பதைக் கண்டான்.(15)
அந்த அருளப்பட்ட மன்னன், தேவர்களைப் போன்ற நிறத்தைக் கொண்ட அவளைக் கண்டு, இனிமையான வார்த்தைகளால் அவளிடம்,(16) "ஓ அழகானவளே! பளபளப்பாக்கப்பட்ட தாமிரத்தைப் போன்ற நகங்களையும், தேவலோக ரத்தினங்கள் பொருத்திய கம்மல்களையும் கொண்டிருக்கும் நீ யார்? உன்னைக் கண்டால் மிகுந்த துன்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. நீ ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்?(17) நீண்ட புற்களும், கொடிகளும் உடைய இந்தக் கிணற்றுக்குள் நீ எப்படி விழுந்தாய்? ஓ கொடியிடை மங்கையே, உண்மையாகச் சொல், நீ யாருடைய மகள்?" என்றான்.(18)
அதற்குத் தேவயானி, "தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களின் உயிரை மீட்டெடுக்கும் சுக்ரரின் மகள் நான். எனக்கு நேர்ந்த இந்தத் துயர் அவருக்குத் தெரியாது.(19) ஓ மன்னா, பளபளப்பாக்கப்பட்ட தாமிரத்தைப் போன்ற நகங்களை உடைய இஃது எனது வலக்கரமாகும். நீர் நல்ல பிறப்புப் பிறந்தவர்; எனது கரத்தைப் பற்றி, என்னை மேலேற்றிவிடும்படிக் கேட்கிறேன்.(20) நீர் நன்னடத்தையும், பெரும் வீரமும், பரந்த புகழையும் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும். எனவே என்னை இந்தக் கிணற்றில் இருந்து மேலேற்றிவிடுவீராக" என்றாள்."(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அவள் ஒரு பிராமணரின் மகள் என்பதை அறிந்த மன்னன் யயாதி, அவளது வலக்கரத்தைப் பற்றிப் பிடித்து, அந்தக் கிணற்றைவிட்டு வெளியேற்றினான்.(22) அப்படி அந்த ஏகாதிபதி அவளைக் கிணற்றுக்குள் இருந்து வெளியேற்றி, அவளது வழவழப்பான தொடைகளை வைத்தக்கண் வாங்காமல் இனிமையுடன் கண்டுகளித்து, தனது தலைநகர் திரும்பினான்.(23) அந்த நகுஷனின் மகன் சென்றுவிட்ட பிறகு, அங்கு வந்த தனது பணிப்பெண் குர்ணிகையிடம்,(24) "ஓ குர்ணிகா, வேகமாக எனது தந்தையிடம் சென்று இங்கு நடந்ததையெல்லாம் சொல்வாயாக. விருஷபர்வனின் நகரத்திற்குள் நான் இப்போது நுழைய மாட்டேன்" என்றாள்."(25)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிக் கட்டளையிடப்பட்ட குர்ணிகை, அசுரர் தலைவன் இருக்கும் அறைக்கு வேகமாகச் சென்று, அங்குக் காவியரைக் கண்டு கோபப் பார்வையுடன்,(26) "ஓ பெரும் பிராமணரே, ஓ நற்பேறு பெற்றவரே, கானகத்தில், விருஷபர்வனின் மகளான சர்மிஷ்டையால் தேவயானி தீங்கிழைக்கப்பட்டாள் என்பதை உமக்குத் தெரிவிக்கிறேன்" என்றாள்.(27) சர்மிஷ்டையால் தேவயானி தீங்கிழைக்கப்பட்டாள் என்பதை அறிந்த காவியர் {சுக்கிராச்சாரியார்} கனத்த இதயத்துடன் வெளியே சென்று, கானகத்தில் அவளைத் தேடினார்.(28) கானகத்தில் அவளைக் கண்டவுடன், பாசத்துடன் அவளைக் கட்டியணைத்துத் துயரால் தழுதழுத்த குரலுடன்,(29) "ஓ மகளே! ஒருவரைத் தாக்கும் துயரம், பெரும்பாலும் அவரது தவறுகளாலேயே ஏற்படும். எனவே உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது, அதுவே இந்நேரத்தில் இப்படித் தண்டித்திருக்கிறது" என்றார்.(30)
இதைக்கேட்ட தேவயானி, "இது தண்டனையாக இருக்கட்டும், அல்லாமலிருக்கட்டும். கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பீராக. விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை என்னிடம் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(31) அசுர மன்னனால், வாடகைக்கு அமர்த்தப்பட்ட புகழ்பாடியே நீர் என்று அவள் கண்கள் சிவக்கத் தீய வார்த்தைகளைச் சொன்னாள். அவள் "கூலிக்காக எப்போதும் மற்றவர்களைப் புகழ்பாடிக் கொண்டு, இரந்து பிச்சையெடுத்து வாழ்பவரின் மகள்தானே நீ; நானோ, புகழை ஏற்றுக் கொண்டு, பிச்சையிட்டு, எந்தப் பரிசையும் ஏற்றுக் கொள்ளாதவரின் மகள்" என்றாள். விருஷபர்வனின் மகளான அந்தப் பெருமை கொண்ட சர்மிஷ்டை இப்படியே பேசினாள்.(32-34) ஓ தந்தையே, உண்மையில் நான் வாடகைக்கு அமர்த்தப்பட்டுப் புகழ்பாடிப் பரிசுகளை ஏற்பவரது மகளென்பது உண்மையென்றால், நான் அவளது கருணையைப் பெற அவளைப் புகழ் பாட வேண்டும். இதை நான் அவளிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்" என்றாள்.(35)
அதற்குச் சுக்ரன், "ஓ தேவயானி, நீ வாடகைக்கமர்த்தப்பட்ட பிச்சைக்காரப் புகழ்பாடியின் மகளல்ல. யாரையும் புகழ்பாடாத, எல்லோராலும் புகழப்படுபவனின் மகளே நீ.(36) அதை விருஷபர்வனே அறிவான். இந்திரன் அறிவான். மன்னன் யயாதியும் அறிவான். தெய்வீகத்தன்மையுடன், கற்பனைக்கெட்டாத பிராமணனாக இருப்பதே எனது பலம்.(37) ஒரு முறை என்னால் வழிபடப்பட்ட சுயம்புவே {பிரம்மனே கூட}, நான் இந்தப் பூமிக்கும், தேவலோகத்துக்கும் தலைமையானவன் என்று சொல்லியிருக்கிறார்.(38) நானே நல்லுயிர்களுக்காக மழையைத் தருபவன், நானே எல்லா உயிரினங்களையும் காப்பவன்" என்றார்."(30)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துயரத்தாலும், கோபத்தாலும் பொருமிக்கொண்டிருந்த தனது மகளிடம், இனிமையான வார்த்தைகளை அருமையாகச் சொல்லி இவ்வாறு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் சுக்ரன்."(40)

ஆங்கிலத்தில் | In English |