The speech between Sukra and Devayani! | Adi Parva - Section 79 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : பொறுமையின் சிறப்பு குறித்து தேவயானிக்கு எடுத்துரைத்த சுக்கிராச்சாரியார்; தவறு செய்யும் சீடனைக் குரு தண்டிக்க வேண்டும் என்று தன் தந்தையிடம் சொன்ன தேவயானி...
சுக்ரன் தொடர்ந்தார், "ஓ தேவயானி! மற்றவர்களின் தீய பேச்சுகளைப் பொருட்படுத்தாதவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(1) குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றாமல் தளர்ந்தவாறு பற்றுபவனே உண்மையான சாரதி என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். எனவே, தனது வளரும் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே உண்மையான மனிதன்.(2) ஓ தேவயானி! தனது வளரும் கோபத்தை அமைதியாகக் கட்டுப்படுத்தி இருப்பவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னிப்புக்கு அடைக்கலம் கொடுத்து தனது வளரும் கோபத்தைச் சதுப்பு நிலத்தைவிட்டு அகலும் பாம்பைப் போல அசைத்து, உண்மையான மனிதனாகிறான்.(4) தனது கோபத்தைக் கட்டுப்படுத்துபவன், மற்றவர்களின் தீய பேச்சைப் பற்றி அக்கறைகொள்ள மாட்டான். காரணமிருந்தும் கோபமடையாதவன், நாம் வாழ்வதற்கு அவசியமான நான்கு நிலைகளையும் அடைவான் (அறம், பொருள், இன்பம், வீடு).(5) சோர்வடையாமல் நூறு வருடங்களுக்கு மாதாமாதம் வேள்விகள் செய்பவனுக்கும், இவனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. எப்போதுமே கோபமடையாதவன் உயர்ந்தவனாவான்.(6) நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் தெரியாத ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வர். ஞானமுள்ளோர் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள்" என்றார்.
தனது தந்தையிடமிருந்து இவற்றைக் கேட்ட தேவயானி, "ஓ தந்தையே! கோபத்துக்கும், மன்னிப்புக்கும் உள்ள வித்தியாசத்தையும், அதனதன் சக்திகளையும் நான் அறிவேன்.(8) ஆனால், ஒரு குரு தனது சீடனுக்கு நன்மையைச் செய்ய விரும்பினால், அந்தச் சீடன் மரியாதைக் குறைவாக நடக்கும்போது அவனை மன்னிக்கக்கூடாது. எனவே, தீய நடத்தையுள்ளோர் இருக்கும் இந்த நாட்டில் இனியும் நான் வாழ ஆசைப்படவில்லை.(9) நன்னடத்தையுள்ள நல்லவர்களைப் பழித்துப் பேசி, பாவகரக் காரியங்கள் செய்யும் மனிதர்களுடன், நன்மை செய்வதில் விருப்பம் கொண்ட ஞானமுள்ளோர் வசிக்கக்கூடாது.(10) நல்ல நடத்தையுள்ள பிறப்பால் உயர்ந்தவர்கள், மரியாதைக்குரியவர்கள் ஆகியோர் வசிக்கும் இடமே ஒருவன் வாழத்தகுந்த இடம்.(11) விருஷபர்வனின் மகள் உச்சரித்த தீய வார்த்தைகள் காய்ந்த விறகை எரிக்கத் தூண்டிவிடப்பட்ட நெருப்பைப் போல எனது இதயத்தை எரித்துக் கொண்டிருக்கின்றன.(12) நற்பேறு பெற்ற ஓர் எதிரியைப் புகழ்பாடுவதைவிட ஒரு தீய காலம், நற்பேறற்ற ஒரு மனிதனுக்கு மூன்று உலகங்களிலும் வேறு இல்லை. அப்படிப்பட்ட மனிதனுக்கு மரணம் கூடச் சிறந்ததுதான் என்று கற்றவர்களால் சொல்லப்படுகிறது" என்றாள் {தேவயானி}."(13)

ஆங்கிலத்தில் | In English |