Sarmishtha became the slave of Devayani! | Adi Parva - Section 80 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : விருஷபர்வனை விட்டு விலகிக் கொள்வதாக சுக்கிராச்சாரியர் சொல்வது; சுக்கிராச்சாரியாரை வேண்டிய விருஷபர்வன்; தேவயானியை வேண்டிய விருஷபர்வன்; சர்மிஷ்டையை அடிமையாகக் கொண்ட தேவயானி...
வைசம்பாயனர் சொன்னார், "பிருகு குலத்தில் வந்த காவியர் மிகுந்த கோபம் கொண்டு, அவனது மண்டபத்தில் அமர்ந்திருந்த விருஷபர்வனை அணுகிக் கடினமான வார்த்தைகளால் பேசினார்.(1) அவர், "இந்தப் பூமியைப் போலவே, பாவகரக் காரியங்கள் உடனே பலனளிக்காது! ஆனால் படிப்படியாகவும், இரகசியமாகவும் அதைச் செய்தவனை அஃது அழிக்கும்.(2) அந்தக் கனி {பலன்} தன்னையோ அல்லது தனது மகனையோ அல்லது தனது பேரனையோ கண்டிப்பாக அணுகும். பாவங்கள் அதன் கனியைக் கொடுத்தே தீரும். ஆடம்பர உணவுகளைப் போல, அது செரிக்கவே செரிக்காது.(3) தனது கடமைகளில் அக்கறையோடும், அறம் சார்ந்த தனது ஆன்மிகக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டும், எனது இல்லத்தில் தங்கியிருந்த அங்கீரஸின் பேரனைக் கொன்றீர்கள்.(4) பிராமணனான அந்தக் கசனைக் கொன்ற பாவத்தின் காரணமாகவும், எனது மகளை நீங்கள் நடத்திய விதத்தின் காரணமாகவும், என்னால் உங்களுடன் இனியும் இருக்க முடியாது.(5) ஓ அசுரர் தலைவனே! {விருஷபர்வா}, பிதற்றல் பேச்சு பேசும் பொய்யனாக என்னை நினைக்காதே? உங்களுடைய குற்றங்களையெல்லாம் திருத்திக் கொள்ளாமல் அதை நீங்கள் எளிதாகக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.(6)
அதற்கு விருஷபர்வன், "ஓ பிருகுவின் மைந்தரே! நீர் ஒழுக்கத்தில் குறைந்தவர் என்றோ, பொய்யர் என்றோ நான் ஒருபோதும் கருதியதில்லை. நிச்சயமாக அறமும், உண்மையும் உம்முள்ளேயே வசிக்கின்றன. ஓ பார்கவரே! என்னிடம் கருணையோடு இருப்பீராக.(7) எங்களைத் துறந்து நீர் செல்வதாயிருந்தால், நாங்கள் மறுபடியும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டியதுதான். நிச்சயமாக நாங்கள் வேறு எதுவும் செய்ய முடியாது" என்றான்.(8)
சுக்ரன், "அசுரர்களே, நீங்கள் பெருங்கடலின் ஆழத்திற்குச் செல்வீர்களோ, திசைகளெங்கும் தப்பி ஓடுவீர்களோ, அது குறித்து நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. என் மகளின் துயரை தாங்கிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்.(9) என் மகளே எனக்கு எப்போதும் அன்புக்குரியவள். என் வாழ்வு அவளைச் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் அவளிடம் வேண்டி கேட்பீர்களாக" என்றார்.(10)
அதற்கு விருஷபர்வன், "ஓ பார்கவரே! இவ்வுலகில் அசுரர் தலைவர்கள் கொண்டிருக்கும் யானைகள், பசுக்கள், குதிரைகள் ஆகியவற்றுக்கும், ஏன் எனக்கே கூட தாங்களே முற்றான தலைவராவீர்" என்றான்.(11)
சுக்ரன், "ஓ பெரும் அசுரனே! நானே அசுரர்களின் செல்வத்திற்குத் தலைவன் என்பது உண்மையாக இருப்பின், எனது மகள் தேவயானியிடம் சென்று அவளை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக" என்றார்."(12)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "காவியர் {சுக்கிராச்சாரியார்}, விருஷபர்வனிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தேவயானியிடம் சென்று, நடந்தது அனைத்தையும் சொன்னார். அதற்குத் தேவயானி விரைவாகப் பதிலளித்தாள்,(13)
அவள், "ஓ பார்கவரே! நீரே அசுர மன்னனின் தலைவராகவும், அவனது செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் இருப்பின், மன்னனே இங்கு வந்து என்னிடம் அப்படிச் சொல்லட்டுமே" என்றாள்.(14)
அதன்பிறகு விருஷபர்வன் தேவயானியிடம் வந்து, "ஓ இனிமையான புன்னகையுடைய தேவயானி! நீ எதை விரும்பினாலும், அஃது எவ்வளவு கடினமாக இருப்பினும், அதை உனக்குக் கொடுப்பேன்" என்றான்.(15)
தேவயானி, "சர்மிஷ்டையுடன் கூடிய ஆயிரம் மங்கையர் எனக்குப் பணியாட்களாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! எனது தந்தை என்னை எங்கு அளிக்கிறாரோ (திருமணம் செய்து கொடுக்கிறாரோ) அங்கும் அவள் என்னைப் பின் தொடர வேண்டும்" என்று பதிலுரைத்தாள்.(16)
விருஷபர்வன் தனது பணிப்பெண் ஒருத்தியிடம், "நீ சென்று, உடனே சர்மிஷ்டையை இங்கு அழைத்து வா. அவள் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றட்டும்" என்று கட்டளையிட்டான்."(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெண் பணியாள் சர்மிஷ்டையிடம் சென்று, "ஓ இனிமையான சர்மிஷ்டா! உனது உறவினர்களுக்கு நன்மையைச் செய்ய, உடனே எழுந்து என்னைத் தொடர்ந்து வருவாயாக.(18) தேவயானியின் தூண்டுதலால், அந்த பிராமணர் (சுக்ரன்) தனது சீடர்களை (அசுரர்கள்) விட்டு அகலப் போகிறார். ஓ பாவமற்றவளே! நீ தேவயானி விரும்பியதைச் செய்ய வேண்டும்" என்றாள்.(19)
சர்மிஷ்டை, "தேவயானி விரும்பியதை நான் மகிழ்வுடன் செய்வேன். தேவயானியின் தூண்டுதலாலேயே சுக்ரன் என்னை அழைக்கிறார். எனது தவறால், சுக்ரன், தேவயானி ஆகிய இருவரும் அசுரர்களை விட்டு அகலக்கூடாது" என்றாள்."(20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தனது தந்தையால் கட்டளையிடப்பட்ட சர்மிஷ்டை, தனது தந்தையின் மண்டபத்தை விட்டு, ஆயிரம் மங்கையருடன் விரைவாக ஒரு பல்லக்கில் வந்தாள்.(21)
அவள் தேவயானியை அணுகி, "ஆயிரம் மங்கையருடன், நான் உனது பணியாளாக இருக்கிறேன். உன்னை உனது தந்தை எங்கு அளிக்கிறாரோ அங்கும் உன்னைப் பின்தொடர்வேன்" என்றாள்.(22)
தேவயானி, "நான், உனது தந்தையின் புகழைப் பாடிக் கொண்டு, பிச்சையெடுத்து, இரந்துண்டு வாழும் ஒருவரின் மகள் ஆயிற்றே. நீயோ புகழப்படுபவள். நீ எவ்வாறு எனக்குப் பணிப்பெண்ணாக முடியும்?" என்றாள்.(23)
சர்மிஷ்டை, "துன்பத்தில் உழலும் உறவினர்களுக்கு ஒருவன் அவனாலான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். எனவே, நான் உனது தந்தை உன்னை எங்குக் கொடுக்கிறாரோ அங்கும் தொடர்வேன்" என்றாள்."(24)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா, சர்மிஷ்டை இப்படித் தேவயானியிடம் பணியாளாக இருப்பதாக உறுதியளித்ததும், தேவயானி தனது தந்தையிடம்,(25) "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! நான் மனநிறைவடைந்தேன். இனி நான் அசுரர் தலைநகருக்குள் நுழைவேன்! உமது அறிவியலும், ஞானத்தின் சக்தியும் பலனற்றவையல்ல என்பதை நான் இப்போது உணர்ந்தேன்!" என்றாள்."(26)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெரும் நற்பெயர் பெற்ற பிராமணர்களில் சிறந்தவர், தனது மகளால் இப்படிச் சொல்லப்பட்டதும், அசுரர் தலைநகருக்குள் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நுழைந்தார். அவரைத் தானவர்கள் பெருமதிப்புடன் வழிபட்டனர்."(27)

ஆங்கிலத்தில் | In English |