The Marriage of Yayati! | Adi Parva - Section 81 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : தேவயானியை மீண்டும் கண்ட யயாதி; அவளும், சர்மிஷ்டையும் யார் என்று கேட்ட யயாதி; தன்னை மணந்து கொள்ள வேண்டும் என யயாதியைக் கேட்ட தேவயானி; அஞ்சிய யயாதி; யயாதிக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; தேவயானியை யயாதிக்கு மனைவியாக அளித்த சுக்கிராச்சாரியார்...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே!, சில காலம் கழித்து, அழகான நிறம் கொண்ட தேவயானி, இன்பமாக இருக்கக் கானகத்திற்குச் சென்றாள்.(1) சர்மிஷ்டையுடனும் மற்ற பணிப்பெண்களுடனும் சென்ற தேவயானி, பழைய இடத்திலேயே திரிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.(2) அத்தனை பணியாட்களின் சேவையையும் ஏற்றுப் பெருமகிழ்வு கொண்டாள். இதயம் இலகுவாகி விளையாடிக்கொண்டு, மலர்களிலிருக்கும் தேனையும், பலதரப்பட்ட கனிகளையும் உண்டு களித்தாள். அந்த நேரத்தில், நகுஷனின் மகன் யயாதி மிகுந்த களைப்புடனும், தாகத்துடனும் மானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தான். அங்கு, தேவலோக ஆபரணங்கள் பூண்டு, நறுமணத்துடன் திகழ்ந்த தேவயானி, சர்மிஷ்டை மற்றும் பல மங்கையரையும் கண்டான்.(3-5) அங்கிருந்தவர்களிலேயே இனிய புன்னகையுடைய தேவயானி, அழகிய நிறத்துடனும், இணையில்லாத அழகுடனும், இயல்பாகச் சாய்ந்திருந்தாள். அவளது கால்களைச் சர்மிஷ்டை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.(6)
இவை யாவையும் கண்ட யயாதி, "ஓ இனிமையானவர்களே!, உங்கள் இருவரின் பெயர்கள் என்ன? உங்கள் பெற்றோர் யார்? இந்த இரண்டாயிரம் மங்கையரும் உங்களுக்குப் பணி செய்யக் காத்திருப்பது போலத் தெரிகிறதே" என்றான்.(7)
அந்த ஏகாதிபதி சொன்னதைக் கேட்ட தேவயானி, "ஓ மனிதர்களில் சிறந்தவரே! நான் சொல்வதைக் கேட்பீராக. அசுரர்களின் ஆன்மீக வழிகாட்டியான சுக்ரனின் மகள் நான் என்பதை அறிந்து கொள்வீராக.(9) இந்த எனது தோழி, எனது பணிப்பெண்ணாவாள். நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் எனக்குப் பணி செய்வாள். இவள் அசுர மன்னன் விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையாவாள்" என்று பதிலளித்தாள்.(10)
அதன்பிறகு யயாதி, "இந்த அழகான புருவங்களும், அழகான நிறமும் கொண்ட உனது தோழி, அசுரர் தலைவனின் மகளாக இருந்தும், ஏன் உனக்குப் பணிப்பெண்ணாக இருக்கிறாள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்" என்று கேட்டான்.(11)
அதற்குத் தேவயானி, "ஓ மன்னர்களில் சிறந்தவரே! எல்லாம் விதியின் பயனாக நிகழ்பவை. இதுவும் அப்படிப்பட்ட விதிப்பயனே, இதற்காக ஆச்சரியப்படாதீர்.(12) உமது குணங்களும், ஆடைகளும் மன்னர்களுக்குரியவை போல் தெரிகிறது. உமது பேச்சும் வேதங்களின்படி அழகாகவும், சரியாகவும் இருக்கிறது. உமது பெயர் என்ன? எங்கே இருந்து வருகிறீர்? நீர் யாருடைய மகன் என்பதை எனக்குச் சொல்லும்" என்று கேட்டாள்.(13)
அதற்கு அந்த ஏகாதிபதி, "எனது பிரம்மச்சரிய காலத்தில் முழு வேதங்களும் எனது காதுகளுக்குள் நுழைந்தன. நான் யயாதி என்று அறியப்படுகிறேன். எனது தந்தை ஒரு மன்னர், நானும் ஒரு மன்னனே" என்று பதிலுரைத்தான்.(14)
தேவயானி, "ஓ மன்னா! நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்? தாமரைகளைச் சேகரிக்கவா? அல்லது மாற்றத்திற்காகவா? அல்லது வேட்டையாடவா?" என்று விசாரித்தாள்.(15)
யயாதி, "ஓ இனிமையானவளே! மானைத் தேடிவந்து தாகமடைந்தேன். இங்கே தண்ணீர் கிடைக்குமா என்றே வந்தேன். நான் மிகவும் களைத்துவிட்டேன். நான் இந்த இடத்தை விட்டகல உனது உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்" என்றான்.(16)
தேவயானி, "எனது இரண்டாயிரம் மங்கைகளுடனும், எனது பணிப்பெண் சர்மிஷ்டையுடனும், நான் உமது கட்டளைகளுக்காகக் காத்திருக்கிறேன். வளமை உமதாகட்டும். நீர் எனது நண்பராகவும், தலைவராகவும் இருப்பீராக" என்று பதிலளித்தாள்.(17)
யயாதி, "இனிமையானவளே! உன்னைப் பெற எனக்குத் தகுதி கிடையாது. என்னைவிடத் தகுதியில் வெகுவாக உயர்ந்த சுக்ரனின் மகள் நீ. உனது தந்தை, உன்னைப் பெரும் மன்னனுக்கே கூட அளிக்க முடியாது (மாட்டார்)" என்று சொன்னான்.(18)
தேவயானி, "இதற்கு முன்பு, பிராமணர்கள் க்ஷத்திரியர்களுடனும், க்ஷத்திரியர்கள் பிராமணர்களுடனும் இணைந்திருக்கிறார்கள். நீர் ஒரு முனிவரின் மைந்தன், ஏன், நீரே ஒரு முனிவர்தான். எனவே, ஓ நகுஷனின் மைந்தரே! என்னைத் திருமணம் செய்து கொள்வீராக" என்று பதிலுரைத்தாள்.(19)
யயாதி, "ஓ அழகான குணங்கள் கொண்டவளே! நான்கு வர்ணங்களும் ஒருவரின் உடலில் இருந்தே உற்பத்தியாயின. ஆனால் அவர்களது கடமைகளும், தூய்மையும் ஒன்றல்ல. ஒரு பிராமணன் எல்லோரினும் மேன்மையானவன்" என்றான்.(20)
தேவயானி, "இந்த எனது கரம், உம்மைத் தவிர இதற்கு முன் எந்த மனிதனாலும் தொடப்பட்டதில்லை. எனவே, நான் உம்மை எனது தலைவனாக ஏற்றுக் கொண்டேன். உம்மைப் போன்ற முனி ஒருவரால் தொடப்பட்ட எனது கரங்களை வேறு எவர்தான் தொடுவார்?" என்று பதிலுரைத்தாள்.(21,22)
யயாதி, "கோபத்துடன் இருக்கும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பையோ, சுடர்விட்டு எரிந்து பரவிவரும் நெருப்பின் தழல்களையோவிட, ஒரு பிராமணனே தவிர்க்கப்பட வேண்டியவன் என்பதை ஞானமுள்ளோர் அறிவர்" என்று சொன்னான்.(23)
தேவயானி அந்த ஏகாதிபதியிடம், "ஓ மனிதர்களில் காளையே! கோபத்துடன் இருக்கும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பையோ, சுடர்விட்டு எரிந்து பரவிவரும் நெருப்பின் தழல்களையோவிட, ஒரு பிராமணனே தவிர்க்கப்பட வேண்டியவன் என்று ஏன் சொல்கிறீர்?" என்று கேட்டாள்.(24)
அதற்கு அந்த ஏகாதிபதி, "பாம்பு ஒருவரைத்தான் கொல்லும், கூர்முனை ஆயுதமும் ஒருவரைத் தான் கொல்லும். ஆனால் ஒரு பிராமணன் கோபமடையும்போது, மொத்த நகரங்களையும், அரசாங்கங்களையும் கொல்கிறான்.(25) ஒ மருட்சியுடையவளே! எனவேதான் நான் மற்றவற்றைக் காட்டிலும் பிராமணன் தவிர்க்கப்பட வேண்டியன் என்று குறிப்பிட்டேன். எனவே ஓ இனிமையானவளே! உனது தந்தை உன்னை எனக்களிக்காமல், என்னால் உன்னைத் திருமணம் செய்ய முடியாது" என்று பதிலுரைத்தான்.(26)
தேவயானி, "நீர் என்னால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர் என்பதே நிச்சயம். நீராக என்னைக் கேட்கவில்லை என்பதும் நிச்சயம். ஓ மன்னா! எனது தந்தை என்னை உமக்கு அளித்தால், நீர் என்னை ஏற்றுக் கொள்வீர் என்று அறிகிறேன். நீர் எளிமையான என்னை ஏற்றுக் கொள்வதில் அஞ்ச வேண்டியதில்லை." என்றாள்."(27)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதன்பிறகு, தேவயானி ஒரு பணிப்பெண்ணைத் தன் தந்தையிடம் அனுப்பினாள். அந்தப் பணிப்பெண் சுக்ரனிடம் நடந்த அனைத்தையும் விவரித்தாள்.(28) அனைத்தையும் கேட்டறிந்து கொண்ட பார்கவர், யயாதியை வந்து சந்தித்தார். பார்கவர் வருவதைக் கண்ட யயாதி அவரை இருகரம் கூப்பி வணங்கி, புகழ் வார்த்தைகள் சொல்லி, அவரது உத்தரவுகளுக்காக எதிர்பார்த்திருந்தான்.(29)
தேவயானி, "ஓ தந்தையே! இவர் நகுஷனின் மைந்தர். நான் {கிணற்றில் வீசப்பட்டுத்} துயரத்தில் இருந்த போது, இவர் எனது கரத்தைப் பற்றினார். நான் உம்மை வணங்குகிறேன். என்னை அவருக்கு அளியுங்கள். இந்த உலகத்தில் வேறு எந்த மனிதரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்றாள்.(30)
சுக்ரன், "ஓ அற்புதமான வீரம் மிக்கவனே! என் அன்பான மகளால் அவளது தலைவனாக நீ நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறாய். நான் அவளை உனக்கு அளிக்கிறேன். எனவே, ஓ நகுஷனின் மைந்தா! இவளை உனது மனைவியாக ஏற்றுக் கொள்வாயாக" என்றார்.(31)
யயாதி, "ஓ பிராமணரே, நான் ஒரு வரத்தைக் கேட்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்வதால், வளராத கருவைப் பெறும் பாவம் என்னை அணுகாதிருக்கட்டும்" என்றான்.(32)
சுக்ரன் அவனிடம், "நான் அந்தப் பாவத்திலிருந்து உன்னைக் காக்கிறேன். நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. இவளை மணந்து கொள்ள அஞ்சாதே. நிரந்தரத்தீர்வை நான் உனக்களிக்கிறேன்.(33) உன் மனைவியான கொடியிடையாள் தேவயானியை அறத்துடன் காப்பாயாக. அவளுடைய துணையோடு நீ செய்யும் பயணங்கள் இனிமையானதாக அமையும்.(34) விருஷபர்வனின் இந்த மகள் சர்மிஷ்டை உன்னால் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். அவளை உனது படுக்கைக்கு நீ அழைக்கக்கூடாது" என்றார்.(35)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சுக்ரனால் இப்படிச் சொல்லப்பட்ட யயாதி, அந்தப் பிராமணரை வலம் வந்தான். அதன்பிறகு அந்த மன்னன் சாத்திரங்களில் சொல்லப்பட்டவாறு சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொண்டான்.(36) சுக்ரனிடமிருந்து வளமான பொக்கிஷங்களான அருமையான தேவயானி, சர்மிஷ்டை மற்றும் இரண்டாயிரம் மங்கையரையும் பெற்றுக்கொண்டு,(37) சுக்ரனாலும், அசுரர்களாலும் மரியாதையாக நடத்தப்பட்ட அந்த ஏகாதிபதி, பார்கவரால் உத்தரவிடப்பட்டுத் தனது தலைநகருக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான்."(38)

ஆங்கிலத்தில் | In English |