Sarmishtha made Yayati to accept! | Adi Parva - Section 82 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : சர்மிஷ்டை யயாதி சந்திப்பு; யயாதியை வேண்டிய சர்மிஷ்டை; சுக்கிராச்சாரியார் தனக்கிட்ட கட்டளையை சர்மிஷ்டையிடம் நினைவுகூர்ந்த யயாதி; சர்மிஷ்டைக்கும், யயாதிக்கும் இடையில் நடந்த உரையாடல்; சர்மிஷ்டையை ஏற்றுக் கொண்ட யயாதி; கருத்தரித்த சர்மிஷ்டை...
வைசம்பாயனர் சொன்னார், "அதன் பிறகு யயாதி, இந்திரனின் நகரத்தைப் போன்ற தனது நகரத்திற்குத் திரும்பி, தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்து, தனது மனைவி தேவயானியை அங்கு அமர்த்தினான்.(1) பிறகு அந்த ஏகாதிபதி, தேவயானியின் வழிகாட்டுதலின்படி செயற்கை வனமான அசோக மரங்களைக் கொண்ட நந்தவனத்திற்கு அருகில் ஒரு மாளிகையைக் கட்டி விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையை அமர்த்தினான்.(2) ஆயிரக்கணக்கான மங்கையர்சூழ இருந்த சர்மிஷ்டைக்குத் தகுந்த மரியாதைகளைச் செய்து, அவளுக்கான உணவுக்கும், ஆபரணங்களுக்கும் ஏற்பாடு செய்தான்.(3)
அந்த நகுஷனின் மைந்தன் பல ஆண்டுகள் அருள்நிறைந்த சூழ்நிலையில் தேவயானியுடனே தேவனைப்போல இன்பமாகக் கழித்தான்.(4) அவளது கனிதரும் காலம் வந்தபோது, அந்த அழகான தேவயானி கருவுற்றாள். அவள் தனது முதல் பிள்ளையாக ஒரு அழகான ஆண்பிள்ளையை ஈன்றெடுத்தாள்.(5) அதன்பிறகு ஆயிரம் வருடம் கழிந்த பிறகு, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை பூப்பெய்தி, தனது கனி தரும் காலம் வந்ததை அறிந்து ஆவல்கொண்டு தனக்குள்ளேயே,(6) "எனது பருவகாலம் வந்துவிட்டது. ஆனால் நான் இன்னும் எனது மணாளனைத் தேர்ந்தெடுக்கவில்லை. என்ன நடந்துவிட்டது? நான் என்ன செய்ய வேண்டும்? எனது ஆசையின் கனிகளை நான் பெறுவது எப்படி?(7) தேவயானி தாயாகிவிட்டாள். எனது இளமை இப்படியே வீணாகக் கழியப்போகிறது. தேவயானி தேர்ந்தெடுத்தவரையே நானும் கணவராகத் தேர்ந்தெடுக்கலாமா?(8) நிச்சயமாக அதுதான் எனது தீர்மானம். அந்த ஏகாதிபதியே எனக்கு மகனைத் தர வேண்டும். அந்த அறம் சார்ந்தவர் என்னைத் தனிமையில் சந்திக்க மாட்டாரா?" என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.(9)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சர்மிஷ்டை இப்படித் தனது சிந்தனையில் மூழ்கியிருந்தபோது, எதிர்பாராமல் அசோகவனத்திற்கு வந்த மன்னன், சர்மிஷ்டையைக் கண்டு அமைதியாக நின்றான்.(10) எந்தச் சாட்சியும் இல்லாத இடத்தில் அந்த ஏகாதிபதியைக் கண்டவளும், இனிய புன்னகை கொண்டவளுமான சர்மிஷ்டை, அவனை அணுகித் தனது கரங்களைக் கூப்பி,(11) "ஓ நகுஷ மைந்தரே! சோமன், இந்திரன், விஷ்ணு, யமன், வருணன் மற்றும் உமது அந்தப்புரங்களில் உள்ள மகளிரை யாராலும் காண முடியாது.(12) ஓ மன்னா! நான் அழகானவள் என்பதையும், நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதையும் நீர் அறிவீர். ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். கனிதரும் {பருவ} காலம் எனக்கு வந்துவிட்டது. அது வீணாகாமல் பார்த்துக் கொள்வீராக" என்றாள்.(13)
அதற்கு யயாதி, "நீ நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதை நான் நன்கறிவேன். நீ பெருமை மிக்கத் தானவர்களின் குலத்தில் பிறந்தவளாவாய். நீ அழகைக் கொடையாகக் கொண்டிருக்கிறாய். நிச்சயமாக, நான் உனது குணத்தில் எந்தக் களங்கத்தையும் காணவில்லை.(14) நான் தேவயானியுடன் இணைந்த போது, உசானஸ் {சுக்ரன்}, விருஷபர்வனின் மகளை நீ உனது படுக்கைக்கு அழைக்கக்கூடாது என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" என்று பதிலுரைத்தான்.(15)
சர்மிஷ்டை, "ஓ மன்னா! கேலிக்காவும், மாதரிடம் கலவிக்காகவும், திருமணத்திற்காகவும், தன் சொல்லால் ஒருவருக்கு மரணமேற்படக்ககூடிய நிலையிலும், தன் செல்வத்தையெல்லாம் இழக்கும்போதும் ஒருவன் பொய்யுரைப்பது பாவமன்று என்று சொல்லப்படுகிறது. பொய்யுரைப்பது இந்த ஐந்து சமயங்களில் மன்னிக்கப்படுகிறது.(16) ஓ மன்னா! கேட்கப்படும் போது, ஒருவன் உண்மையை உரைக்கவில்லை என்பதால் அவன் பாவமிழைக்கிறான் என்பது உண்மையாகாது. ஒரே காரியத்திற்குச் சேவை செய்யவே தேவயானியும், நானும் இங்குத் தோழிகளாக அனுப்பப்பட்டோம். எனவே, நீர் எங்களுள் ஒருவரின் எல்லைக்குள் மட்டும் சுருங்கி இருப்பேன் என்று சொல்வது பொய்மையே ஆகும்" என்றாள்.(17)
யயாதி, "ஒரு மன்னன் என்பவன் தனது குடிமக்களின் கண்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். பொய்மை பேசும் ஏகாதிபதி நிச்சயமாக அழிவையே சந்திப்பான். என்னைப் பொறுத்தவரை, பேரிழப்பு என்னை அச்சுறுத்தினாலும் கூட நான் பொய்யுரைக்கத் துணிய மாட்டேன்" என்றான்.(18)
சர்மிஷ்டை, "ஓ ஏகாதிபதி! ஒருத்தி தனது தோழியின் கணவரைத் தனது கணவராகவே பார்க்கலாம். ஒருத்தியுடைய தோழியின் திருமணம் என்பது தன்னுடைய திருமணமே ஆகும். நீர் எனது தோழியால் கணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர். எனவே, அதேபோல நீர் எனக்கும் கணவரே ஆவீர்" என்றாள்.(19)
யயாதி, "கேட்பவருக்குக் கேட்பதைக் கொடுப்பது நிச்சயமாக நான் நோற்கும் நோன்பாகும். நீ கேட்பது போலவே, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக" என்றான்.(20)
சர்மிஷ்டை, "ஓ மன்னா! பாவத்திலிருந்து என்னைக் காப்பீராக. எனது அறத்தைக் காப்பீராக. உம்மால் தாயாகி, என்னை உலகத்தின் சிறந்த அறத்தைப் பயிலச் செய்வீராக.(21) ஓ மன்னா! மனைவி, அடிமை, மகன் ஆகியோர் சுயமாகச் செல்வம் ஈட்டக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஈட்டுவது அனைத்தும் கொண்டவனுக்கே (தலைவனுக்கே) சொந்தம்.(22) உண்மையில் நான் தேவயானியின் அடிமை. நீர் தேவயானிக்கு தலைவனாகவும், குருவாகவும் இருக்கிறீர். எனவே, தேவயானிக்குப் போலவே, நீரே எனது தலைவனும், குருவும் ஆவீர். எனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.(23)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சர்மிஷ்டையால் சொல்லப்பட்ட யயாதி அவளது பேச்சில் இருந்த உண்மையை எண்ணிப் பார்த்தான். எனவே அவன் சர்மிஷ்டையின் அறத்தைக் காப்பாற்றி அவளைக் கௌரவப்படுத்தினான்.(24) அவர்கள் சிறிது காலத்தைச் சேர்ந்தே கழித்தனர். அதன்பிறகு ஒருவருக்கு ஒருவர் பிரியாவிடை பெற்று எங்கிருந்து வந்தனரோ அங்கேயே தனித்தனியாகப் பிரிந்து சென்றனர்.(25) சில காலம் கழிந்ததும், அந்த இனிய புன்னகைக்கும், அழகான புருவங்களுக்கும் சொந்தக்காரியான சர்மிஷ்டை, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுடன் ஏற்பட்ட தொடர்பால் கருவுற்றாள்.(26) ஓ மன்னா! {ஜனமேஜயா}! அந்தத் தாமரைக்கண் மங்கை உரிய காலத்தில் தேவர்களைப் போன்ற காந்தியுடனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடனும் அழகான மகனைப் பெற்றெடுத்தாள்."(27)

ஆங்கிலத்தில் | In English |