Decrepitude befell Yayati! | Adi Parva - Section 83 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : சர்மிஷ்டையின் மகனைக் கண்ட தேவயானி அது குறித்து அவளிடம் கேட்டது; சர்மிஷ்டைக்குப் பிறந்த மூன்று பிள்ளைகள்; தங்கள் தந்தையை அடையாளம் காட்டிய பிள்ளைகள்; சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்ட தேவயானி; யயாதியைச் சபித்த சுக்கிராச்சாரியார்; சாபவிமோசனம் கேட்ட யயாதி...
வைசம்பாயனர் சொன்னார், "இனிய புன்னகையுடைய தேவயானி அந்தக் குழந்தையின் பிறப்பை கேள்விப்பட்டுப் பொறாமையடைந்தாள். ஓ பாரதா, சர்மிஷ்டை தேவயானியின் சோகச்சிந்தனைகளுக்குக் காரணமானாள். தேவயானி அவளிடம் சென்று,(1) "ஓ அழகான புருவங்கள் கொண்டவளே! காமத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு, என்ன பாவத்தை இழைத்திருக்கிறாய்?" என்றாள்.(2)
சர்மிஷ்டை, "வேதங்களை அறிந்த அறம் சார்ந்த முனிவர் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் வரங்களை அருளக்கூடியவர். எனது தகுதிகளை {புண்ணியங்களைக்} கருத்தில் கொண்டு, நான் விரும்பிய வரத்தை அவர் எனக்குக் கொடுத்தார்.(3) ஓ இனிய புன்னகையுடைவளே! பாவகர வழிகளில் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நான் ஒரு போதும் முயலமாட்டேன். அந்த முனிவராலேயே நான் எனது பிள்ளையைப் பெற்றேன் என்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்று பதிலுரைத்தாள்.(4)
தேவயானி, "அப்படி நடந்திருந்தால் சரிதான், ஓ மருட்சியுடையவளே! அந்த பிராமணரின் குலம், பெயர், குடும்பம் பற்றிய செய்திகளை நீ அறிந்திருப்பாயே. நான் அதைக் கேட்க விரும்புகிறேன்" என்றாள்.(5)
சர்மிஷ்டை, "ஓ இனிய புன்னகையுடையவளே! துறவாலும், சக்தியாலும் அந்த முனிவர் சூரியனைப் போன்றிருந்தார். அப்படி அவரைப் பார்த்ததும், இது குறித்து நான் அவரிடம் கேட்கவில்லை" என்று பதிலுரைத்தாள்.(6)
தேவயானி, "இஃது உண்மையானால், அப்படிப்பட்ட பெரும் பிராமணரால் இந்தக் குழந்தை கிடைத்தது நிச்சயமென்றால், ஓ சர்மிஷ்டா! நான் கோபமடைய எக்காரணமும் இல்லை" என்றாள்.(7)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி அவர்கள் ஒருவருரோடொருவர் பேசிச் சிரித்து, பிரிந்து சென்றனர். சர்மிஷ்டையால் சொல்லப்பட்ட செய்தியை அறிந்து தேவயானி தனது அரண்மனைக்குச் சென்றாள்.(8) ஓ மன்னா! இந்திரனையும் விஷ்ணுவையும் போன்ற யது, துர்வசு என்று இரு மகன்களை யயாதி, தேவயானியிடம் பெற்றான்[1].(9) விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை அந்த அரச முனியால் {யயாதியால்}, திருஹ்யூ, அனு மற்றும் பூரு என்ற மூன்று மகன்களுக்குத் தாயானாள்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் அதிக தகவல் இருக்கிறது. அது பின்வருமாறு, "அந்தக் காலத்தில் ராஜரிஷியாகிய யயாதிராஜன் தேன்சுவையுடன் சேர்க்கப்பட்டதும், மதத்தை விருத்தி செய்வதும், சிவப்பும் மஞ்சளும் கலந்த வர்ணமுள்ளதுமான மதுவைச் சுக்கிரர் பெண்ணான தேவயானியைக் குடிக்கும்படி செய்தான். அந்த மதுவைக் குடித்துக்குடித்து அந்தத் தேவயானி மயக்கங்கொண்டாள். அடிக்கடி அழுது கொண்டும், பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மிகுதியாகப் பிதற்றிக் கொண்டுமிருந்த அந்தத் தேவயானி, ராஜாவை நோக்கி, "ஓ! பிராமணஸ்ரேஷ்டனே! உன் உருவமும், அலங்காரமும் ராஜாவுக்கிருப்பது போலிருக்கின்றன. எதற்காக நீ இங்கே வந்தாய்? ஜனங்களில்லாத கடினமான காட்டுக்கு என்ன காரியத்திற்காக வந்தாய்? யயாதியென்னும் ராஜஸ்ரேஷ்டன் கொடிய பார்வையுள்ளவன். ஆதலால், பிராமணா! நன்மையை விரும்பினாயானால் இவ்விடம்விட்டு ஓடிப்போ" என்று இவ்வாறு பிதற்றிக் கொண்டிருந்த தகாதவளும், பாபத்தை விருத்தி செய்கிறவளுமான அந்தத் தேவயானியை யயாதி வசனங்களினாற் பயமுற்றினான். பிறகு, அலிகளையும், ஊமையரையும், அங்கப்பிழையுள்ளவர்களையும், கிழவர்களையும், முடவர்களையும் தேவயானியைப் பாதுகாக்கவும், போஷிக்கவும் கட்டளையிட்டான்" என்றிருக்கிறது. அதன் பிறகு கங்குலியில் பின்வருவதைப் போலவே தொடர்கிறாது.
ஓ மன்னா! ஒரு நாள் இனிய புன்னகையுடைய தேவயானி யயாதியுடன் தனிமையில் கானகத்தில் (மன்னனின் விரிவாக்கப்பட்ட நந்தவனம்) உலவிக் கொண்டிருந்த போது,(11) தெய்வீக அழகுடன் மூன்று குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கையுடன் விளையாடிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். இதனால் ஆச்சரியமடைந்த தேவயானி,(12) "ஓ மன்னா! தேவலோகக் குழந்தைகளைப் போல அழகாக இருக்கும் இவர்கள் யாருடைய பிள்ளைகள்? காந்தியாலும், அழகாலும் இவர்கள் தங்களைப் போல் இருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்" என்று கேட்டாள்.(13)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தேவயானி மன்னனின் மறுமொழிக்காகக் காத்திராமல் அந்தக் குழந்தைகளிடமே,(14) "குழந்தைகளே, உங்கள் குலம் என்ன? உங்கள் தந்தை யார்? உண்மையான பதிலைச் சொல்லுங்கள். அனைத்தையும் அறிய நான் விரும்புகிறேன்" என்றாள்.(15)
அந்தக் குழந்தைகள் (தங்கள் சுட்டு விரலால்) மன்னனை காட்டினர். சர்மிஷ்டையைத் தங்கள் தாய் என்றனர்.(16) அப்படிச் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைகள் மன்னனின் கால் முட்டுகளைக் கட்டிக் கொண்டனர். ஆனால் மன்னன் தேவயானியின் முன்னிலையில் அக்குழந்தைகளைக் கண்டு கொள்ளவில்லை. (17) அந்தப் பிள்ளைகள் அந்த இடத்தை விட்டு அகன்று, தங்கள் தாயிடம் அழுது கொண்டே சென்றனர். மன்னன், அக்குழந்தைகளின் செயலால் மிகவும் வெட்கமடைந்தான்.(18) ஆனால் தேவயானி, மன்னனிடம் குழந்தைகள் கொண்ட பாசத்தைக் கண்டுகொண்டு இரகசியத்தை அறிந்து சர்மிஷ்டையிடம்,(19) "நீ என்னை நம்பி இருக்கும்போது, என்னையே காயப்படுத்தும் தைரியம் உனக்கு எப்படி வந்தது? உனது அசுரவழக்கத்தால் மற்றுமொரு தீங்கைச் செய்ய நீ அஞ்சவில்லையா?" என்றாள்.(20)
சர்மிஷ்டை, "ஓ இனிய புன்னகையுடையவளே! நான் முனிவரைப் பற்றிச் சொன்னது முற்றிலும் உண்மையே. நான் சரியாகவே நடந்து கொண்டேன். அறம் சார்ந்தே நடந்து கொண்டேன்.(21) எனவே நான் உனக்கு அஞ்சவில்லை. நீ மன்னனை உனது கணவராகத் தேர்ந்தெடுத்தது போல, நானும் அவரையே எனக்குத் தேர்ந்தெடுத்தேன். ஓ அழகானவளே! நடைமுறையில் தோழியின் கணவர், தனது கணவரும் கூட.(22) நீ ஒரு பிராமணரின் மகள் எனவே, நீ எனது வழிபாட்டிற்கும், மரியாதைக்கும் தகுதிவாய்ந்தவள். ஆனால், நான் இந்த அரசமுனியின் மேல் இன்னும் எவ்வளவு மதிப்பை வைத்திருக்கிறேன் என்பதை நீ அறியமாட்டாய்" என்றாள்.(23)
வைசம்பாயனர், "ஓ மன்னா, அவளது வார்த்தைகளைக் கேட்டத் தேவயானி பெரிதும் சத்தம் போட்டு, "ஓ ஏகாதிபதியே, நீர் எனக்குத் தீங்கிழைத்துவிட்டீர். நான் இனி இங்கு வாழ மாட்டேன்" என்றாள்.(24) இப்படிச் சொல்லிவிட்டு, வேகமாகக் கண்ணீர் நிறைந்த கண்களோடு எழுந்து, தனது தந்தையிடம் சென்றாள். மன்னன் அவளை அந்தக் கோலத்தில் கண்டு, மிகவும் துயரடைந்து, பெரிதும் அச்சமடைந்து, அவளது காலடிகளைத் தொடர்ந்து சென்று, அவளது கோபத்தைத் தணிக்க முயற்சி செய்தான். ஆனால் தேவயானி, கோபத்தால் கண்கள் சிவந்து,(25,26) மன்னனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், கண்ணீரில் குளித்த கண்களோடு, விரைவாகக் கவியின் மைந்தனான தனது தந்தை உசனஸிடம் சென்றடைந்தாள்.(27) அவள் தனது தந்தையைக் கண்டு, வணங்கி, அவர் முன்பு நின்றாள். யயாதியும் விரைவாக வந்து தனது வணக்கங்களைத் தெரிவித்துப் பார்கவரை வழிபட்டான்.(28)
தேவயானி, "ஓ தந்தையே! எனது துணைவரால் நல்லொழுக்கம் கைவிடப்பட்டது. கீழ்மையானது உயர்ந்து, உயர்வானது தாழ்ந்தது. விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையால் நான் மீண்டும் உள்ளம் புண்பட்டேன்.(29) இந்த மன்னன் யயாதி அவளிடம் மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார். ஆனால், ஓ தந்தையே, அதிர்ஷ்டமற்றவளான நான் இரண்டு மைந்தர்களையே பெற்றிருக்கிறேன்.(30) ஓ பிருகுவின் மைந்தரே! அறக்கட்டளைகளை நன்கு அறிந்தவர் இந்த மன்னன் என்பது எல்லோராலும் அறியப்பட்டது. ஓ காவியரே, ஆனால் இவர் நேர்மையான பாதையில் இருந்து வழுவி விட்டார் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்" என்றாள்.(31)
இதையெல்லாம் கேட்ட சுக்ரன், "அன்பாக உன்னைப் பின் தொடர்ந்தவளை அறம் சார்ந்த கட்டளைகளை அறிந்தும், நீ களங்கப்படுத்தியதால், ஓ ஏகாதிபதியே, வெல்லப்படமுடியாத பலவீன நிலை (முதுமை) உடனே உன்னை நிலைகுலையச் செய்யட்டும்" என்றார்.(32)
யயாதி, "வணக்கத்திற்குரியவரே! தனது காலத்தைக் கனியுடையதாக்க, அந்த தானவ மன்னனின் மகளால் {சர்மிஷ்டையால்} தனிமையில் நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அறம் சார்ந்தே நான் அதைச் செய்தேன். வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது.(33) ஓ பிராமணரே! ஒரு பெண்ணால் அவளுக்குரிய காலத்தில், தனிமையில் கேட்கப்பட்டு, அதை நிறைவேற்றாத ஆண், ஒரு கருவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவான் என்று வேதம் அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது.(34) விருப்பம் நிறைந்த மங்கையை, அவளது காலத்தில் தனிமையில் கமுக்கமாக அவளால் கேட்கப்பட்டும், அந்த ஆண் அவளுடன் செல்ல வில்லையென்றால், அவன் எல்லா அறத்தையும் இழந்து, கருவைக் கொன்றவன் என்று கற்றவர்களால் பழிக்கப்படுவான்.(35) ஓ பிருகுவின் மைந்தரே! இந்தக் காரணங்களுக்காகவே, பாவத்தை விலக்க, நான் சர்மிஷ்டையிடம் சென்றேன்" என்றான்.(36)
அதற்குச் சுக்ரன், "நீ என்னைச் சார்ந்தே இருக்கிறாய். நீ எனது கட்டளைக்காகக் காத்திருந்திருக்க வேண்டும். உனது கடமைகளில் பொய்மையைக் கடைப்பிடித்திருக்கிறாய். ஓ நகுஷ மைந்தா! நீ திருட்டுப் பாவத்திற்குச் சொந்தக்காரன்" என்றார். (37)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "நகுஷ மைந்தன் யயாதி, கோபமடைந்த உசனஸால் {சுக்ரனால்} சபிக்கப்பட்டு, உடனே தனது இளமை நீக்கப்பட்டுப் பலவீனத்தால் {வயோதிகத்தால்} ஆட்கொள்ளப்பட்டான்.(38)
யயாதி, "ஓ பிருகு மைந்தரே! எனது இளமையாலும், தேவயானியாலும் நான் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. எனவே, ஓ பிராமணரே! என்னிடம் கருணை கொண்டு, இந்தப் பலவீனம் என்னைத் தொடாமல் இருக்கச் செய்யும்" என்றான்.(39)
சுக்ரன், "நான் பொய்மையைப் பேசுவதே இல்லை. ஓ மன்னா! இப்பொழுது, நீ பலவீனத்தால் தாக்கப்பட்டாய். ஆனால் நீ விருப்பப்பட்டால், உனது இந்தப் பலவீனத்தை இன்னொருவருக்கு மாற்ற முடியும்" என்று பதிலுரைத்தார்.(40)
யயாதி, "ஓ பிராமணரே! நான் அறத்தையும், புகழையும் பெற தனது இளமையைத் தரும் எனது மகன் யாரோ, அவனே எனது அரசாங்கத்தை அனுபவிக்கட்டும் என்று கட்டளையிடுவீராக" என்றான்.(41)
சுக்ரன், "ஓ நகுஷ மைந்தா! என்னை நினைத்துக் கொண்டு, நீ உனது பலவீனத்தை யாரொருவருக்கும் மாற்ற முடியும்.(42) எந்த மகன் உனக்கு இளமையைக் கொடுக்கிறானோ, அவனே உனது வாரிசாகட்டும். அவன் நீண்ட ஆயுள் பெற்றுப் பெரும் புகழடைந்து, எண்ணற்ற மக்களைப் பெறுவான்" என்றார்."(43)

ஆங்கிலத்தில் | In English |