The command of Satyavati to Bhisma! | Adi Parva - Section 103 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 39)
பதிவின் சுருக்கம் :
பீஷ்மரிடம் பேசிய சத்தியவதி; தன் பிரம்மச்சர்ய விரதத்தை சத்தியவதிக்கு நினைவூட்டிய பீஷ்மர்...
வைசம்பாயனர் சொன்னார், "பேறற்றவளும், அவல நிலையில் இருந்தவளுமான சத்தியவதி தனது மகனை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்தாள். தனது மருமகள்களுடன் சேர்ந்து, இறந்து போன தனது மகனின் ஈமக்கடன்களை முடித்து, அழுது கொண்டிருக்கும் மருமகள்களையும், ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையான பீஷ்மரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றினாள். தனது பார்வையை அறத்தின் கண் திருப்பி, தனது தந்தை வழி மற்றும் தாய்வழிகளையும் ஆராய்ந்து பீஷ்மரிடம்,(1,2) "பிண்டதானம், சாதனைகள் மற்றும் குரு வழி வந்த சந்தனுவின் பரம்பரைத் தொடர்ச்சி ஆகியன இப்போது உன் கைகளிலேயே இருக்கின்றன.(3) நற்செயல்களும் மோட்சமும் எப்படிப் பிரியாதனவோ, அப்படி இந்த நெடும் வாழ்க்கையில் உண்மையும் நம்பிக்கையும் பிரியாதன, அறம் உன்னிடம் இருந்து பிரியாததாக இருக்கிறது.(4) ஓ அறம் சார்ந்தவனே, அறத்தின் விதிகளை அதன் சுருதிகளுடனும், வேதங்களின் கிளைகளுடனும் நன்கறிந்தவன் நீ.(5) நீ அறத்தாலும், குடும்பச் சடங்குகளின் ஞானத்தாலும் சுக்கிரனுக்கும் அங்கீரசுக்கு நிகரானவன். உன்னால் கடுமையான சூழ்நிலைகளில் புதிய விதிகளைக் கண்டெடுக்க முடியும்.(6) எனவே, ஓ அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, உன்னையே நான் பெரிதும் நம்பியிருக்கிறேன். நான் உன்னிடம் ஒரு காரியத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அதன்படி நடப்பதா? வேண்டாமா? என்று நீ முடிவெடுத்துக் கொள்வாயாக.(7)
ஓ மனிதர்களில் காளையே, எனது மகனும், உன் அன்புக்குரிய தம்பியாக இருந்தவனுமான அந்த பெரும் சக்திகொண்டவன் {விசித்திரவீரியன்}, இளம் வயதிலேயே பிள்ளையில்லாதவனாக சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். காசி மன்னனின் இனிமையான மகள்களான உனது தம்பியின் மனைவிமார், அழகும் இளமையும் கொண்டு பிள்ளைப் பேறில் விருப்பம் கொண்டுள்ளனர்.(8,9) எனவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, எனது கட்டளையின் பேரிலும், நமது குலத்தின் விருத்திக்காகவும் அவர்களிடம் நமது சந்ததியை நீ உண்டாக்குவாயாக. அறமிழக்காமல், அதைக் காப்பதே உனக்குத் தகும்.(10) நீ அரியணையில் அமர்ந்து, பாரதர்களின் அரசாங்கத்தை ஆட்சி செய்வாயாக. ஒரு மனைவியை முறையாகத் திருமணம் செய்து கொள்வாயாக. உனது மூதாதையர்களை நரகத்திற்குள் அழுத்திவிடாதே" என்றாள்.(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படித் தனது தாயாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்கும் அறம் சார்ந்த பீஷ்மர், அறத்தின் விதிகளுக்குட்பட்டே பதிலுரைத்தார்,(12) "ஓ தாயே, நீ சொல்வது அறத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. ஆனால், புத்திரப்பேறு குறித்த எனது சபதத்தையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும்.(13) உன் திருமணக் காலத்தில் நடந்த அத்தனையும் உனக்குத் தெரியும். ஓ சத்தியவதி, நான் ஏற்ற உறுதிமொழியை மறுபடியும் சொல்கிறேன்.(14) நான் மூன்று உலகத்தையும், சொர்க்கத்தின் அரசாங்கத்தையும், அல்லது அதையும் விட மேன்மையானது என்று எது இருந்தாலும் அத்தனையும் துறப்பேன். ஆனால், உண்மையை {சத்தியத்தைத்} துறக்க மாட்டேன்.(15) பூமி தனது மணத்தைத் துறக்கலாம், நீர் அதன் நீர்மையைத் துறக்கலாம், ஒளி அதன் ஒளிரும் தன்மையைத் துறக்கலாம், காற்று அதன் தொடு உணர்வைத் துறக்கலாம்,(16) சூரியன் அதன் நெருப்பையும் வெப்பத்தையும் துறக்கலாம், சந்திரன் குளிர்ந்த கதிர்களைத் துறக்கலாம், வெளி {வானம்} அதன் ஒலி எழுப்பும் தன்மையைத் துறக்கலாம்,(17) இந்திரன் தனது ஆற்றலைத் துறக்கலாம், தர்மன் தர்மத்தைத் துறக்கலாம், ஆனால் என்னால் உண்மையைத் துறக்க முடியாது" என்றார்.(18)
சக்தியைச் செல்வமாகக் கொண்ட தனது மகன் இப்படிச் சொல்லவும், சத்தியவதி பீஷ்மரிடம்,(19) "ஓ உண்மையை உன் பலமாகக் கொண்டவனே, சத்தியத்தில் உனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நான் அறிவேன். நீ நினைத்தால், உனது சக்திகொண்டு, புதிதாக இன்னும் மூன்று உலகங்களை உருவாக்க முடியும்.(20) எனது காரியத்தில் உனது ஆணை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த அவசர காலத்தைக் கருத்தில் கொண்டு, உனது முன்னோர்களுக்குச் செய்யும் கடமையாக நினைத்து இந்தச் சுமையை நீ சுமக்க வேண்டும்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நண்பர்களும் உறவினர்களும் துயரடையாதிருக்க, நமது குலத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக" என்றாள்.(22)
பிள்ளையை இழந்ததால் அறத்திற்கு இணக்கமாகப் பேசமுடியாமல் இப்படி அழுது கொண்டு பரிதாபகரமாக இருக்கும் சத்தியவதியால் தூண்டப்பட்ட பீஷ்மர், அவளிடம்,(23) "ஓ அரசியே, அறத்திலிருந்து உனது பார்வையை விலக்காதே. ஓ! இப்படிச் சொல்லி எங்களை நீ அழித்துவிடாதே. ஒரு க்ஷத்திரியனால் உண்மை மீறப்படுவதை அறத்தின் விதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.(24) ஓ அரசியே, குலம் அழிந்துவிடாமல் இருக்க க்ஷத்திரியர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம் என்று உனக்குக் கூடிய விரைவில் சொல்கிறேன். சந்தனுவின் குலம் பூமியில் அழிந்துவிடாமல் காக்கத் தக்க நடவடிக்கையைச் சொல்கிறேன்.(25) நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, கற்ற புரோகிதர்களிடமும், சாதாரண நேரங்களில் கைக்கொள்ளக்கூடாத சமூக நடத்தையை மீறி, ஆபத்துக் காலத்தில் மட்டும் செய்யப்படும் செயல்களில் நன்கு பரிச்சயமுள்ளவர்களிடமும் ஆலோசனை செய்து, மேற்படி நடக்க வேண்டியதைக் குறித்து முடிவெடுத்துக் கொள்" என்றார் {பீஷ்மர்}.(26)

ஆங்கிலத்தில் | In English |