The birth of Anga, Vanga and Kalinga Nations! | Adi Parva - Section 104 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 40)
பதிவின் சுருக்கம் :
அரசபரம்பரையின் தொடர்ச்சிக்கு பீஷ்மர் சொன்ன வழிமுறைகள்; உதத்யர், பிருஹஸ்பதி மற்றும் மமதை குறித்த கதையைச் சொன்ன பீஷ்மர்;
குருடராகப் பிறந்த தீர்க்கதமஸ்; ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்ற விதியைக் கொண்டு வந்த தீர்க்கதமஸ்; மன்னன் பலியும்,
தீர்க்கதமஸும்...
பிருஹஸ்பதி |
இப்படிப் பெறப்பட்ட மகன்கள், அந்தத் தாய் இதற்கு முன் மணந்திருந்தவருக்குச் {அந்தத் தாயின் கணவருக்குச்} சொந்தம் என வேதங்கள் சொல்கின்றன. அந்த க்ஷத்திரியப் பெண்டிர் பிராமணர்களிடம் காமத்தாலன்றி அறம்சார்ந்த நோக்கத்திற்காக மட்டுமே சென்றனர்.(6) உண்மையில் இப்படியே க்ஷத்திரிய குலத்திற்குப் புத்துயிரூட்டப்பட்டது. பழைய வரலாற்றில் இது தொடர்பாக மற்றொரு கதை இருக்கிறது. அதையும் உனக்குச் சொல்கிறேன்.(7)
பழங்காலத்தில் உதத்யர் {உசத்யர்} என்ற பெயரில் ஞானமுள்ள ஒரு முனிவர் இருந்தார். அவரது மனைவியின் பெயர் மமதை. அவளை அவர் உயிருக்குயிராக நேசித்தார்.(8) ஒரு நாள் உதத்யரின் இளைய சகோதரனான, பெரும் சக்தி வாய்ந்த தேவ குரு பிருஹஸ்பதி, மமதையை அணுகினார்.(9) பேச்சுத் திறன் கொண்டவர்களில் முதன்மையானவரும், தனது கணவரின் இளைய சகோதரனுமான அவரிடம் {பிருஹஸ்பதியிடம்}, தான் அவரது மூத்த சகோதரன் மூலமாகக் கருவுற்றிருப்பதாகவும், அதனால், அவரது விருப்பத்தை ஈடேற்றிக் கொள்ளத் துணியக் கூடாதென்றும் அவள் தெரிவித்தாள்.(10) அவள், "ஓ சிறப்புமிக்க பிருஹஸ்பதியே, எனது கருவில் இருக்கும் குழந்தை, கருவறையில் இருந்தபடியே வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் படித்திருக்கிறான்.(11) உமது வித்தை நீர் வீணாக்கக் கூடாது. எனது கருவறை எப்படி ஒரே நேரத்தில் இரு பிள்ளைகளைத் தாங்கும்? எனவே, இந்நேரத்தில் நீர் உமது விருப்பத்தை ஈடேற்றிக் கொள்ளத் துணியக்கூடாது" என்றாள்.(12) அவளால் இப்படிச் சொல்லப்பட்ட பிருஹஸ்பதி, என்னதான் ஞானவானாக இருந்தும், தனது ஆசையை அடக்க முடியாமல் அவளை இப்போதே அடைந்துவிடுவது என்று எண்ணி, அவளை அணுகினார்.(13)
அப்போது கருவில் இருந்த குழந்தை, "ஓ தந்தையே, உமது செயலை நிறுத்தும். இங்கே இருவருக்கு இடமில்லை. ஓ சிறப்பு வாய்ந்தவரே, இந்த அறை சிறியதாக இருக்கிறது. நானே இதை முதலில் அடைந்தவனாவேன். உமது வித்து வீணாகக்கூடாது. என்னைத் துன்புறுத்தாதீர்" என்றது. ஆனால், பிருஹஸ்பதியோ கருவில் இருந்த குழந்தையின் சொல்லைக் கேட்காமல் அந்த அழகிய விழிகளுக்குச் சொந்தக்காரியான மமதையை அடைந்தார். அவரது வித்து நீர்மையுடன் அவளது கருவறைக்குள் புகுவதற்குள், குழந்தை அதன் கால்களால் அந்த வித்தைத் தடுத்தது. எனவே, பெரும்பான்மையான வித்துகள் தரையில் விழுந்து அதன்காரியத்தை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. இதைக் கண்ட அந்தச் சிறப்புமிக்கப் பிருஹஸ்பதி, மிகுந்த அவமானத்திற்குள்ளாகி, உதத்யாவின் பிள்ளையை அவமதித்துச் சபித்தார், "எவ்வுயிரும் இன்புறுவது போல் நான் இன்புறும்போது அதைத் தடை செய்யும் விதமாக என்னிடம் நீ பேசியதால் நித்திய இருள் உன்னை ஆக்கிரமிக்கட்டும்" என்று சபித்தார்[1].(14-20)
[1] இந்த 14-20 சுலோகங்களுக்குள் உள்ள பகுதியில் தடித்த எழுத்துகளில் உள்ளவற்றை கங்குலி ஆங்கிலத்தில் கொடுக்காமல் லத்தீனில் கொடுத்திருக்கிறார். இது மன்மதநாததத்தரின் ஆங்கிலப் பதிப்பையும், கும்பகோணம் தமிழ் பதிப்பையும் ஒப்பிட்டு கங்குலியின் நடைமாறாமல் இங்கே கொடுக்கப்படுகிறது.
அந்தச் சிறப்புவாய்ந்த பிருஹஸ்பதியின் சக்திக்கு சமமான சக்தியுடைய உதத்யரின் மகன் {மகனான அந்தக் குழந்தை}, பிருஹஸ்பதியின் சாபத்தால் குருடராகப் பிறந்து, தீர்க்கதமஸ் (நித்திய இருளால் சூழப்பட்டவன்) என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(21) அந்த ஞானமுள்ள தீர்க்கதமஸ் குருடாக இருப்பினும் வேத ஞானம் பெற்றுக் கல்வி அறத்தில் தேர்ந்தான். பிரத்வேஷி என்ற அழகான இளம் பிராமண மங்கையை மனைவியாக அடைந்தான்.(22) அந்த மங்கையை மணந்த சிறப்புமிக்கத் தீர்க்கதமஸ், உதத்யரின் குலத்தை விருத்தியடையச் செய்து, கௌதமரை மூத்தவனாகக் கொண்டு பல பிள்ளைகளைப் பெற்றார். இருப்பினும் அந்தப் பிள்ளைகளெல்லாம் பேராசைக்காரர்களாகவும் உண்மைக்குப் புறம்பானவர்களாகவும் ஆனார்கள்.(23)
வேதங்களை முழுமையாக அறிந்து, அதில் நிபுணத்துவம் பெற்ற அறம்சார்ந்த சிறப்புமிக்கத் தீர்க்கதமஸ், சுரபியின் மகனிடமிருந்து அவர்கள் குலப்படியான பயிற்சிகளைக் கற்றுப் பயத்தைத் துறந்து, அவற்றை மிகவும் மதித்து அந்தப் பயிற்சிகளிலேயே லயித்தார் (வெட்கமே பாவத்தை உருவாக்குகிறது. புனிதமான நோக்கம் இருக்குமிடத்தில் அஃது இருக்கவே முடியாது என்ற பயிற்சி {ஒரு வேளை நிர்வாணமாக இருக்கலாம்}).(24) அதே ஆசிரமத்தில் வசித்த முனிவர்களில் சிறந்தவர்கள், அவர் தகுதிக்கு மீறிய செயல்கள் செய்வதைக் கண்ணுற்றுப் பாவமில்லாதிருக்கும்போதே அதில் பாவத்தைக் கண்டு,(25) "ஓ, இந்த மனிதர் வரம்புக்கு மீறிய செயல்களைச் செய்கிறார். இவருக்கு நம்முடன் இருக்கத் தகுதி இல்லை. எனவே, இந்தப் பாவியை இங்கிருந்து விரட்டி விடுவோம்" என்று சொல்லி,(26) மேலும் தீர்க்கதமசைக் குறித்துப் பல செய்திகளைச் சொன்னார்கள். அவரது மனைவியும், பிள்ளைகளைப் பெற்றுவிட்டதால், அவரது செயல்களால் கோபமடைந்தாள். அந்தக் கணவர் தனது மனைவியான பிரத்வேஷியிடம், "நீ ஏன் என்னிடம் இப்படி மனநிறைவற்றவளாக இருக்கிறாய்?" என்று கேட்டார்.(27) அதற்கு அவரது மனைவி, "ஒரு கணவன் தனது மனைவியைத் தாங்குவதால் பர்த்திரி {பர்த்தா} என்று அழைக்கப்படுகிறான். அவளைக் காப்பதால் பதி என்றும் அழைக்கப்படுகிறான். நீர் எனக்கு இதில் எதையும் செய்யவில்லை! மறுபுறம் ஓ பெரும் தவத் தகுதி வாய்ந்தவரே, நீர் குருடராகவும் இருக்கிறீர். நானே உம்மையும் உமது குழந்தைகளையும் தாங்குகிறேன். இனிமேலும் என்னால் அவ்வாறு செய்ய முடியாது" என்றாள்.(28)
தனது மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர் அவமானமடைந்து கோபத்தில் அவளிடமும், அவளது பிள்ளைகளிடமும், "என்னை க்ஷத்திரயர்களிடம் அழைத்துச் செல்லுங்கள், நீங்கள் செல்வமும் வளமுமடையலாம்" என்றார்.(29) அதற்கு அவரது மனைவி {பிரத்வேஷி}, "நான் உம்மால் கிடைக்கும் செல்வத்தை விரும்பவில்லை. அதனால் எந்த மகிழ்வும் எனக்கு ஏற்படப்போவதில்லை. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நீர் விருப்பப்படுவது போல ஏதேனும் செய்து கொள்ளும். இனியும் என்னால் உம்மை முன்பு போலப் பார்த்துக் கொள்ள முடியாது" என்றாள்.(30) தனது மனைவியின் இவ்வார்த்தைகளால் துயரடைந்த தீர்க்கதமஸ், "எந்தப்பெண்ணும், தன் வாழ்வில் ஒரே கணைவனையே பின்பற்ற வேண்டும் என்ற விதியை இன்று முதல் நான் விதிக்கிறேன்.(31) அந்தக் கணவன் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு பெண் இன்னொரு ஆடவனுடன் தொடர்பு கொள்ளுதல் நீதியாகாது. எவளொருத்தி அப்படி ஒரு தொடர்பை வைத்திருக்கிறாளோ அவள் அறத்தின்கண் வீழ்ந்தவளாகக் கருதப்படுவாள். கணவரில்லாத பெண் எப்போதும் பாவம் செய்யக்கூடியவளாகவே இருப்பாள். அவள் செல்வந்தராக இருந்தாலும், தனது செல்வத்தை அவளால் உண்மையாக அனுபவிக்க முடியாது.(32) வசைமொழிகளும் தீய அறிக்கைகளும் அவளைப் பின் தொடர்ந்தே வரும்" என்று சொன்னார். தனது கணவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரத்வேஷி மிகவும் கோபமடைந்து, தனது மகன்களிடம், "கங்கை நீரில் இவரைத் தூக்கி எறியுங்கள்" என்று கட்டளையிட்டாள்.(33)
தங்கள் தாயின் கட்டளையின் பேரில், பேராசைக்கும் பொய்ம்மைக்கும் அடிமைகளான தீய கௌதமரும் அவரது சகோதரர்களும், "நிச்சயமாகச் செய்கிறோம். நாம் ஏன் இந்த முதிர்ந்த மனிதரைத் தாங்க வேண்டும்?" என்று சொல்லி அந்த முனிவரை ஒரு கட்டையில் கட்டி, அவரிடம் கருணை காட்டாமல் {கங்கையின்} நீரோட்டத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பினர்.(34,35) அந்தக் குருட்டு முதியவர் அந்த நீரோட்டத்திலேயே மிதந்து பல மன்னர்களின் நாடுகளைக் கடந்தார்.(36) ஒரு நாள் கடமைகளில் தெளிந்த மன்னன் பலி, கங்கையில் தனது சுத்திகரிப்புச் சடங்கைச் செய்து கொண்டிருந்தான். அந்த ஏகாதிபதி சடங்கில் மும்முரமாக இருக்கும் போது, அவன் அருகில் கட்டையில் கட்டப்பட்டு முனிவர் மிதந்து வந்தார்.(37) உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த அறம்சார்ந்த பலி, அந்த மனிதர் யார் என்பதை அறிந்து அவரைக் காப்பாற்றி, வாரிசை உருவாக்க அவரைத் தேர்ந்தெடுத்தான். அவரிடம் பலி,(38) "ஓ சிறப்பு மிக்கவரே, எனது மனைவியிடம் நீர் சில அறம் சார்ந்த ஞானமுள்ள பிள்ளைகளை உருவாக்க வேண்டும்" என்றான்.(39)
இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட பெரும் சக்திவாய்ந்த முனிவர், அதற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தார். அதன்காரணமாக மன்னன் பலி தனது மனைவி சுதேஷ்ணையை அவரிடம் அனுப்பி வைத்தான்.(40) ஆனால் அந்த அரசி அவர் குருடர் என்பதை அறிந்து அவரிடம் செல்லாமல் ஒரு தாதியை அனுப்பி வைத்தாள்.(41) தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்த அந்த அறம்சார்ந்த முனிவர் அந்தச் சூத்திரப் பெண்ணிடம் கக்ஷீவத்தை {கக்ஷீவானை} மூத்தவனாகக் கொண்டு பதினோரு பிள்ளைகளைப் பெற்றார். கக்ஷீவத்தை மூத்தவனாகக் கொண்டு பதினோரு பிள்ளைகள் பிரம்மனின் பெயரை உச்சரித்துக் கொண்டு வேதம் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மன்னன் பலி ஒருநாள் அந்த முனிவரிடம், "அந்தப் பிள்ளைகள் என்னுடையவர்களா?" என்று கேட்டான்.(42,43) அதற்கு அந்த முனிவர், "இல்லை. அவர்கள் என்னுடையவர்கள். கக்ஷீவத்தும் மற்றவர்களும் என்னால் ஒரு சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவர்கள்.(44) பேறற்றவளான உன் அரசி சுதேஷ்ணை என்னைக் குருடனாகக் கண்டு என்னிடம் வராமல் என்னை அவமதித்து அவளது தாதியை அனுப்பி வைத்தாள்" என்றார்.(45)
அந்த மன்னன் முனிவரைச் சமாதானப்படுத்தித் தனது அரசி சுதேஷ்ணையை அனுப்பினான்.(46) அந்த முனிவர் வெறுமனே அவளது மேனியைத் தீண்டி[2], "உனக்கு அங்கன், வங்கன், கலிங்கன், புண்ட்ரன், சும்ஹன் என்ற ஐந்து பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சூரியனைப் போல இருப்பார்கள். அவர்களின் பெயரைக் கொண்டு பல நாடுகள் இந்தப் பூமியில் உண்டாகும்" என்றார்.(47,48)
அதன் பிறகு, அந்தப் பிள்ளைகள் ஆண்ட நாடுகளுக்கு அங்கம், வங்கம், கலிங்கம், புண்ட்ரம், சும்ஹம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. இப்படியே பழங்காலத்தில் பலியின் குலம் அந்த முனிவரால் தழைத்தது.(49,50) இப்படியே பல பெரும் வில்லாளிகளும், பெரும் தேர்வீரர்களும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்து க்ஷத்திரிய குலத்தில் பிராமணர்களின் விதையால் வந்தனர். ஓ தாயே, இதைக் கேட்டு, நீ விருப்பப்பட்டதைச் செய்வாயாக. இந்தக் காரியம் இனி உன் கையில் உள்ளது" என்றார் பீஷ்மர்.(51)

[2] கும்பகோணம் பதிப்பில், "அந்த தீர்க்கதமஸ் என்னும் ரிஷி அந்த அரசியை அங்கங்களில் தொட்டார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அவர் அவளது உடலைத் தொட்டு" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தீர்க்கதமஸ் அந்த அரசியின் அங்கங்களை உணர்ந்து" என்றிருக்கிறது.
அதன் பிறகு, அந்தப் பிள்ளைகள் ஆண்ட நாடுகளுக்கு அங்கம், வங்கம், கலிங்கம், புண்ட்ரம், சும்ஹம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. இப்படியே பழங்காலத்தில் பலியின் குலம் அந்த முனிவரால் தழைத்தது.(49,50) இப்படியே பல பெரும் வில்லாளிகளும், பெரும் தேர்வீரர்களும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்து க்ஷத்திரிய குலத்தில் பிராமணர்களின் விதையால் வந்தனர். ஓ தாயே, இதைக் கேட்டு, நீ விருப்பப்பட்டதைச் செய்வாயாக. இந்தக் காரியம் இனி உன் கையில் உள்ளது" என்றார் பீஷ்மர்.(51)
ஆங்கிலத்தில் | In English |