Ganga Mahabhisha lust! | Adi Parva - Section 96 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 32)
பதிவின் சுருக்கம் :
பிரம்மனால் சபிக்கப்பட்ட மஹாபிஷன்; வசுக்களுக்கு வரமளித்த கங்கை...
வைசம்பாயனர் சொன்னார், "இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் முழு உலகத்திற்கும் தலைவனாக இருந்தான். அவன் உண்மையான ஆற்றலும், உண்மை நிறைந்த பேச்சும உடையவனாக இருந்தான்.(1) அவன் ஆயிரம் குதிரை வேள்விகளையும் (அஸ்வமேத யாகங்களையும்), நூறு ராஜசூய வேள்விகளையும் செய்து தேவர்கள் தலைவனை மனநிறைவு கொள்ளச் செய்து சொர்க்கத்தை அடைந்தான்.(2)
"ஒரு நாள் தேவர்கள் ஒன்றாகக் கூடிப் பிரம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். பல அரச முனிகளும் மன்னன் மஹாபிஷனும் அந்த இடத்தில் இருந்தனர்.(3) ஆறுகளின் அரசியான கங்கையும் அங்கே பெரும்பாட்டனை வழிபட வந்திருந்தாள். சந்திரனின் கதிர்களைப் போன்ற அவளது வெண்ணிற ஆடை காற்றினால் சிறிது அகன்றது.(4)
அவளது மேனி வெளிப்பட்ட போது, தேவர்கள் தங்கள் தலையைக் கவிழ்த்துக் கொண்டனர். ஆனால் அரசமுனி மஹாபிஷன் முரட்டுத்தனமாக அந்த ஆறுகளின் அரசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.(5) இதன் காரணமாக மன்னன் மஹாபிஷன் பிரம்மனால் சபிக்கப்பட்டான். அவன் {பிரம்மன்}, "பாவியே, கங்கையைப் பார்த்தவுடன் நீ தன்னிலை மறந்து போனதால், நீ மீண்டும் உலகத்தில் பிறப்பாய். ஆனால், நீ மீண்டும் மீண்டும் இந்த இடங்களுக்கு வந்து போவாயாக. அவளும் {கங்கையும்}, மனிதர்களின் உலகத்தில் பிறந்து, உனக்குத் தீங்கிழைப்பாள். ஆனால் உனக்குக் கோபம் மூண்டதும், நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்" என்று சபித்தான்.(6)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் மஹாபிஷன் பூமியிலுள்ள அனைத்து ஏகாதிபதிகளையும், துறவிகளையும் மனத்தில் நினைத்துப் பார்த்துப் பெரும் ஆற்றலைக் கொண்ட பிரதீபனுக்கு மகனாகப் பிறக்க விரும்பினான்.(7) ஆறுகளின் அரசியும் {கங்கையும்}, மன்னன் மஹாபிஷன் உறுதி இழப்பதைப் பார்த்து, அவனை விருப்பத்துடன் நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.(8) அப்படி அவள் போகும் வழியில், சொர்க்கத்தில் வசிப்பவர்களான வசுக்களும் அதே பாதையில் வருவதைக் கண்டாள். அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதைக் கண்ட அந்த ஆறுகளின் அரசி {கங்கை}, அவர்களிடம், "சொர்க்கவாசிகளே, ஏன் நீங்கள் மனத்தளர்வுற்றவர்களாகக் காணப்படுகிறீர்கள்? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டாள்.(9,10)
தேவர்களான அந்த வசுக்கள், "ஓ ஆறுகளின் அரசியே, மன்னிக்கத்தகுந்த எங்களது குற்றத்திற்காகச் சிறப்புவாய்ந்த வசிஷ்டர் கோபங்கொண்டு எங்களைச் சபித்துவிட்டார்.(11) சிறப்புவாய்ந்த முனிவர்களில் முதன்மையான வசிஷ்டர் மாலை வழிபாட்டில் {சந்தியாவந்தனம் செய்தபடி} அமர்ந்திருந்தார். அவரை எங்களால் காண முடியவில்லை. இதை அறியாமல் நாங்கள் அவரைக் கடந்து சென்றோம். எனவே, கோபத்தால் அவர் எங்களை "மனிதர்களின் மத்தியில் பிறக்கக் கடவீர்கள்" என்று சபித்துவிட்டார்.(12) பிரம்மத்தை உச்சரிப்பவரால் சொல்லப்பட்டதைத் தகர்ப்பது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். எனவே, ஓ நதியே, நீயே மனிதப் பெண்ணாகி வசுக்களான எங்களை உனது பிள்ளைகளாக்கிக் கொள்வாயாக.(13) ஓ இனிமையானவளே, மானிடப் பெண் எவளின் கருவுக்குள்ளும் நுழைய நாங்கள் விரும்பவில்லை" என்றனர்.(14)
வசுக்களால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த ஆறுகளின் அரசி {கங்கை}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி "பூமியிலுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களில் யாரை நீங்கள் தந்தையாகக் கொள்வீர்கள்?" என்று கேட்டாள்.(15)
வசுக்கள், "பூமியில், பிரதீபனுக்கு மகனாகச் சந்தனு என்பவன் பிறப்பான், அவன் பார் புகழும் மன்னனாக இருப்பான்" என்றனர்.(16)
கங்கை, "தேவர்களே, பாவங்களற்ற நீங்கள் தெரிவிப்பதைத் தான் நானும் விரும்பினேன். நான் நிச்சயமாக சந்தனுவிடம் செல்வேன். நீங்கள் இப்போது தெரிவிப்பது போல, இஃது உங்களின் விருப்பமுமாக இருக்கிறது" என்றாள்.(17)
வசுக்கள், "ஓ மூன்று வழிகளில் (ஆகாயம், பூமி (தரை), பாதாளம்) பயணிப்பவளே! நாங்கள் பிறந்தவுடன், எங்களை நீரில் எறிந்துவிடு, அப்படி நீ செய்தால், நாங்கள் பூமியில் வெகு காலம் வாழ வேண்டியதில்லை. எனவே வெகு விரைவாக நாங்கள் மீண்டு விடுவோம்" என்றனர்.(18)
அதற்கு கங்கை, "நீங்கள் விரும்புவதையே நான் செய்வேன். ஆனால் என்னுடனான அவரது தொடர்பு முழுவதுமாகக் கனியற்றுப் போகக்கூடாது. எனவே, ஒரு மகனாவது வாழும்படி அவருக்கு வழங்குவீராக" என்றாள்.(19)
வசுக்கள், "நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சக்திகளில் எட்டில் ஒரு பாகத்தைக் கொடுக்கிறோம். அந்த சக்தித் தொகப்பைக் கொண்டு, உனது மற்றும் அவனது விருப்பங்களுக்கு ஏற்றவாறு ஒரு மகனைப் பெறுவாயாக.(20) ஆனால், அந்த மகன், பூமியில் பிள்ளைகளைப் பெற மாட்டான். எனவே, பெரும் சக்தியைக் கொண்ட உனது மகன் பிள்ளைகளற்றவனாகவே இருப்பான் " என்றனர்.(21)
இவ்வாறு கங்கையிடம் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட வசுக்கள், மேலும் காத்திராமல் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(22)

ஆங்கிலத்தில் | In English |