Santanu met Ganga! | Adi Parva - Section 97 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 33)
பதிவின் சுருக்கம் :
கங்கைக்கும் பிரதீபனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சந்தனுவின் பிறப்பு, சந்தனுவிடம் பழைய கதையைச் சொன்ன பிரதீபன்; தன் மனைவியாகும்படி கங்கையை வேண்டிய சந்தனு...
வைசம்பாயனர் சொன்னார், "அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டுபவனாகப் பிரதீபன் என்றொரு மன்னன் இருந்தான். அவன், பல வருடங்களாகத் தனது தவத்துறவுகளைக் கங்கையின் பிறப்பிடத்தில் செய்து வந்தான்.(1) ஒரு நாள், அழகும், திறமையும் நிறைந்த கங்கை, சொக்கவைக்கும் வடிவில் பெண்ணுருக் கொண்டு, நீரிலிருந்து எழுந்து அந்த மன்னனை {பிரதீபனை} அணுகினாள்.(2) கவர்ச்சிமிக்க அழகைக் கொண்ட அந்தத் தெய்வீக மங்கை, தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனான அந்த அரசமுனியை {பிரதீபனை} அணுகி, அண்மையிலும், பலத்திலும் முழுமையான சால மரத்தைப் போன்ற அவனது வலது தொடையில் அமர்ந்தாள்.(3) அழகிய முகம் கொண்ட அந்த மங்கை தன் தொடையில் அமர்ந்ததும், அந்த ஏகாதிபதி அவளிடம், "ஓ இனிமையானவளே! நீ என்ன விரும்புகிறாய்? நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(4) அதற்கு அந்தக் காரிகை, "ஓ மன்னா! நீர் என் கணவராக வேண்டும் என விரும்புகிறேன். ஓ குருக்களில் முதன்மையானவரே! நீ என்னவராவீராக. தன்விருப்பத்துடன் வரும் ஒரு பெண்ணை மறுப்பதை ஞானியர் ஒருபோதும் மெச்சுவதில்லை" என்று சொன்னாள்[1].(5)
பிரதீபன், "ஓ அழகிய நிறம் கொண்டவளே, காமவசப்பட்டு அடுத்தவரின் மனைவியரிடமோ, என்வகையைச் சாராத பெண்களிடமோ ஒரு போதும் நான் செல்வதில்லை. உண்மையில் இதுவே என் அறநோன்பாகும்" என்று பதிலுரைத்தான்.(6)
அதற்கு அந்தக் கன்னிகை, "நான் மங்கலமற்றவளோ, அழகற்றவளோ அல்ல. அனைத்து வழிகளிலும் நான் அனுபவிக்கத் தகுந்தவளே. அரிய அழகுடைய தெய்வீகக் கன்னிகையான {தேவகன்னியான} நான் உம்மைக் கணவராக அடைய விரும்புகிறேன். ஓ மன்னா, என்னை மறுக்காதீர்"என்றாள்.(7)
பிரதீபன், "ஓ காரிகையே, நீ தூண்டும் வழியில் நான் செல்வதைத் தவிர்க்கிறேன். நான் எனது நோன்பை முறித்தால், பாவத்தில் மூழ்கி நான் கொல்லப்படுவேன்.(8) ஓ அழகான நிறமுடையவளே, எனது வலது தொடையில் அமர்ந்தே நீ என்னைத் தழுவினாய். ஆனால், ஓ மருட்சியுடையவளே, அஃது எனது மகள்களும், மருமகள்களும் அமரும் தொடையாகும் என்பதை அறிந்து கொள்வாயாக.(9) இடது தொடையே மனைவிக்குரியது. ஆனால் நீ அதை ஏற்கவில்லை. எனவே, ஓ மங்கையரில் சிறந்தவளே, ஆசைக்குகந்த ஒரு பொருளாக நான் உன்னை அனுபவிக்க முடியாது. நீ என் மருமகளாவாயாக. நான் உன்னை என் மகனுக்காக ஏற்கிறேன்" என்றான்.(10,11)
அதற்கு அந்த மங்கை, "ஓ அறம் சார்ந்தவரே, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நான் உமது மகனோடு சேர்ந்திருக்கச் செய்வீராக. உம்மீது நான் கொண்டிருக்கும் மரியாதையால், கொண்டாடப்படும் பரதக் குலத்தில் ஒரு மனைவியாக இருப்பேன்.(12) (பாரதக் குலத்தைச் சேர்ந்த) நீரே பூமியில் உள்ள ஏகாதிபதிகள் அனைவருக்கும் புகலிடமாக இருக்கிறீர். நூறு வருடங்களுக்குள் இந்தக் குலம் செய்திருக்கும் அறங்களைக் கூட எண்ண முடியாதவளாக நான் இருக்கிறேன்.(13) இந்தக் குலத்தில் உதித்த கொண்டாடப்பட்ட ஏகாதிபதிகளின் பலரின் மேன்மையும், நற்பண்புகளும் அளவில்லாதவையாகும். ஓ அனைவரின் தலைவரே {பிரதீபரே}, நான் உமது மருமகளாகும்போது, என் செயல்களின் முறைமையை உமது மகனால் புரிந்து கொள்ள இயலாது.(14) இவ்வாறு உமது மகனுடன் வாழும் நான், அவரது நன்மையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்வேன். இறுதியாக அவர், நான் அவருக்கு ஈன்று கொடுக்கும் மகன்களின் விளைவாலும், அவரது அறங்கள் மற்றும் நற்பண்புகளாலும் சொர்க்கத்தை அடைவார்" என்றாள்.(15)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா! அப்படிச் சொன்ன அந்தத் தெய்வீகக் காரிகை, அங்கேயே, அப்போதே மறைந்தாள். மன்னனும், தன் உறுதிமொழி நிறைவேறுவதற்காக தன் மகனின் பிறப்புக்காகக் காத்திருந்தான்.(16) குருக்கள் குலத்தின் ஒளியும், க்ஷத்திரியக் காளையுமான அந்தப் பிரதீபன் புத்திரப் பேறுக்கான விருப்பத்தால் தனது மனைவியுடன் சேர்ந்து தவத்தில் ஈடுபட்டான்.(17) அப்படியே காலம் கடந்து வயதான பிறகு, அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் மஹாபிஷனைத் தவிர வேறு எவனும் இல்லை. தந்தை தவத்துறவுகள் மூலம் தமது ஆசைகளைக் கட்டுப்படுத்தி இருந்த போது பிறந்ததால், அந்தக் குழந்தை சந்தனு என்று அழைக்கப்பட்டான்.(18)
குருக்களில் சிறந்தவனான அந்தச் சந்தனு, அழியாத அருளுலகை ஒருவன் தனது செயல்களால் மட்டுமே அடைய முடியும் என்பதை அறிந்து, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தான்.(19) சந்தனு வளர்ந்து இளமையை அடைந்தவுடன், பிரதீபன் அவனிடம், "ஓ சந்தனு, சில காலத்திற்கு முன்பு, ஒரு தெய்வீகக் காரிகை {தேவ கன்னி}, உனது நன்மைக்காக என்னிடம் வந்தாள்.(20) அந்த அழகிய நிறம் கொண்டவள் ரகசியமாக உன்னைச் சந்தித்து, பிள்ளைகளை வேண்டிக் கேட்டால், அவளை உன் மனைவியாக ஏற்றுக் கொள்வாயாக.(21) ஓ பாவமற்றவனே, அவளது செயல்பாடுகளின் முறைமையையும், முறையின்மையையும் தீர்மானிக்காதே. மேலும், யாரவள், அல்லது எவருடையவள், அல்லது எங்கிருப்பவள் என்பனவற்றைக் கேட்காமல், என் ஆணையின் பேரால் அவளை உன் மனைவியாக ஏற்பாயாக" என்றான் {பிரதீபன்}.(22)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரதீபன், தனது மகன் சந்தனுவுக்கு இவ்வாறு ஆணையிட்டு, அவனை அரியணையில் அமர்த்தியும்விட்டுக் கானகமேகினான்.(23) மன்னன் சந்தனு பெரும் நுண்ணறிவையும், இந்திரனுக்கு நிகரான பிரகாசத்தையும் கொண்டிருந்தான். வேட்டைக்கு அடிமையாகிக் கானகத்திலேயே தனது பெரும்பங்குப் பொழுதைக் கழித்தான் சந்தனு.(24) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் எப்போதும் மான்களையும், எருமைகளையும் கொன்று கொண்டு இருந்தான். ஒரு நாள், அவன் கங்கைக் கரையோரமாக அலைந்து கொண்டிருக்கையில், சித்தர்களும், சாரணர்களும் நிறைந்து இருக்கும் ஒரு பகுதிக்கு வந்தான்.(25) அங்கே, ஸ்ரீயைப் போன்ற ஜொலிக்கும் அழகுடனும், வனப்புடனும் கூடிய ஒரு பெண்ணைக் கண்டான்.(26)
அவள் களங்கமற்றவளாக, முத்துப் பல் வரிசையுடன், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, மிருதுவான ஆடையை அணிந்து, தாமரை இதழ்களின் இழைகளைப் போலப் பிரகாசத்துடன் இருந்தாள்.(27) அந்த ஏகாதிபதி! அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆனந்தத்தால் அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. அவனது உறுதியான பார்வை, அவளது அழகைக் குடித்துக் கொண்டிருந்தது. ஆனால் திரும்பத் திரும்பக் குடித்தும் அவனுக்குத் தாகம் அடங்கவில்லை.(28) அவளும் அந்தப் பிரகாசமிக்க ஏகாதிபதியைக் கண்டு பெரும் கிளர்ச்சியடைந்து, அவன் மீது பரிவு ஏற்பட்டு, அவன் மீது ஏற்படும் பாசத்தை உணர்ந்தாள். அவள் பார்த்தாள், பார்த்தாள் பார்த்துக் கொண்டேயிருந்து இன்னும் அதிகமாகப் பார்த்தாள்.(29)
அந்த ஏகாதிபதி அவளிடம் மெலிதான வார்த்தைகளால், "ஓ கொடியிடையாளே, நீ தேவியாக இருந்தாலும், தானவனின் மகளாக இருந்தாலும், கந்தர்வ குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், அப்ஸரசாக இருந்தாலும், யக்ஷப் பெண்ணாக இருந்தாலும், நாகப்பெண்ணாக இருந்தாலும், அல்லது மனிதப்பெண்ணாகவே இருந்தாலும், ஓ தெய்வீக அழகுடையவளே, நீ எனது மனைவியாகும்படி உன்னிடம் வேண்டுகிறேன்" என்றான்.(30,31)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஓ மன்னா, நான் உம்மை அடைய விரும்புகிறேன். {உம்மிடம்} என்னையே அளிக்கிறேன். என்னை ஏற்பீராக. ஆசையில் நிறைந்திருக்கும் ஒரு பெண்ணை மறுப்பதை நல்லது என ஞானியர் ஒருபோதும் கருதுவதில்லை" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ராஜாவே! நான் உன் மீது காதல் கொண்டிருக்கிறேன். உன்னையடைகின்ற என்னை நீயும் அடையக்கடவாய்; காதல் வைத்த பெண்களை விட்டுவிடுவதை ஸாதுக்கள் நிந்திக்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ மன்னா, ஓ குருக்களில் சிறந்தவரே! நாம் உம்மை விரும்புகிறேன். என்னை நான் அளிக்கிறேன். பதிலுக்கு என்னை ஏற்று அன்பு செலுத்துவீராக. ஆசையில் நிறைந்திருக்கும் ஒரு பெண்ணை மறுக்கும் செயலை தீமையானது என்றே எப்போதும் ஞானியர் கருதுகின்றனர்" என்றிருக்கிறது.
பிரதீபன், "ஓ அழகிய நிறம் கொண்டவளே, காமவசப்பட்டு அடுத்தவரின் மனைவியரிடமோ, என்வகையைச் சாராத பெண்களிடமோ ஒரு போதும் நான் செல்வதில்லை. உண்மையில் இதுவே என் அறநோன்பாகும்" என்று பதிலுரைத்தான்.(6)
அதற்கு அந்தக் கன்னிகை, "நான் மங்கலமற்றவளோ, அழகற்றவளோ அல்ல. அனைத்து வழிகளிலும் நான் அனுபவிக்கத் தகுந்தவளே. அரிய அழகுடைய தெய்வீகக் கன்னிகையான {தேவகன்னியான} நான் உம்மைக் கணவராக அடைய விரும்புகிறேன். ஓ மன்னா, என்னை மறுக்காதீர்"என்றாள்.(7)
பிரதீபன், "ஓ காரிகையே, நீ தூண்டும் வழியில் நான் செல்வதைத் தவிர்க்கிறேன். நான் எனது நோன்பை முறித்தால், பாவத்தில் மூழ்கி நான் கொல்லப்படுவேன்.(8) ஓ அழகான நிறமுடையவளே, எனது வலது தொடையில் அமர்ந்தே நீ என்னைத் தழுவினாய். ஆனால், ஓ மருட்சியுடையவளே, அஃது எனது மகள்களும், மருமகள்களும் அமரும் தொடையாகும் என்பதை அறிந்து கொள்வாயாக.(9) இடது தொடையே மனைவிக்குரியது. ஆனால் நீ அதை ஏற்கவில்லை. எனவே, ஓ மங்கையரில் சிறந்தவளே, ஆசைக்குகந்த ஒரு பொருளாக நான் உன்னை அனுபவிக்க முடியாது. நீ என் மருமகளாவாயாக. நான் உன்னை என் மகனுக்காக ஏற்கிறேன்" என்றான்.(10,11)
அதற்கு அந்த மங்கை, "ஓ அறம் சார்ந்தவரே, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நான் உமது மகனோடு சேர்ந்திருக்கச் செய்வீராக. உம்மீது நான் கொண்டிருக்கும் மரியாதையால், கொண்டாடப்படும் பரதக் குலத்தில் ஒரு மனைவியாக இருப்பேன்.(12) (பாரதக் குலத்தைச் சேர்ந்த) நீரே பூமியில் உள்ள ஏகாதிபதிகள் அனைவருக்கும் புகலிடமாக இருக்கிறீர். நூறு வருடங்களுக்குள் இந்தக் குலம் செய்திருக்கும் அறங்களைக் கூட எண்ண முடியாதவளாக நான் இருக்கிறேன்.(13) இந்தக் குலத்தில் உதித்த கொண்டாடப்பட்ட ஏகாதிபதிகளின் பலரின் மேன்மையும், நற்பண்புகளும் அளவில்லாதவையாகும். ஓ அனைவரின் தலைவரே {பிரதீபரே}, நான் உமது மருமகளாகும்போது, என் செயல்களின் முறைமையை உமது மகனால் புரிந்து கொள்ள இயலாது.(14) இவ்வாறு உமது மகனுடன் வாழும் நான், அவரது நன்மையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்வேன். இறுதியாக அவர், நான் அவருக்கு ஈன்று கொடுக்கும் மகன்களின் விளைவாலும், அவரது அறங்கள் மற்றும் நற்பண்புகளாலும் சொர்க்கத்தை அடைவார்" என்றாள்.(15)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா! அப்படிச் சொன்ன அந்தத் தெய்வீகக் காரிகை, அங்கேயே, அப்போதே மறைந்தாள். மன்னனும், தன் உறுதிமொழி நிறைவேறுவதற்காக தன் மகனின் பிறப்புக்காகக் காத்திருந்தான்.(16) குருக்கள் குலத்தின் ஒளியும், க்ஷத்திரியக் காளையுமான அந்தப் பிரதீபன் புத்திரப் பேறுக்கான விருப்பத்தால் தனது மனைவியுடன் சேர்ந்து தவத்தில் ஈடுபட்டான்.(17) அப்படியே காலம் கடந்து வயதான பிறகு, அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் மஹாபிஷனைத் தவிர வேறு எவனும் இல்லை. தந்தை தவத்துறவுகள் மூலம் தமது ஆசைகளைக் கட்டுப்படுத்தி இருந்த போது பிறந்ததால், அந்தக் குழந்தை சந்தனு என்று அழைக்கப்பட்டான்.(18)
குருக்களில் சிறந்தவனான அந்தச் சந்தனு, அழியாத அருளுலகை ஒருவன் தனது செயல்களால் மட்டுமே அடைய முடியும் என்பதை அறிந்து, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தான்.(19) சந்தனு வளர்ந்து இளமையை அடைந்தவுடன், பிரதீபன் அவனிடம், "ஓ சந்தனு, சில காலத்திற்கு முன்பு, ஒரு தெய்வீகக் காரிகை {தேவ கன்னி}, உனது நன்மைக்காக என்னிடம் வந்தாள்.(20) அந்த அழகிய நிறம் கொண்டவள் ரகசியமாக உன்னைச் சந்தித்து, பிள்ளைகளை வேண்டிக் கேட்டால், அவளை உன் மனைவியாக ஏற்றுக் கொள்வாயாக.(21) ஓ பாவமற்றவனே, அவளது செயல்பாடுகளின் முறைமையையும், முறையின்மையையும் தீர்மானிக்காதே. மேலும், யாரவள், அல்லது எவருடையவள், அல்லது எங்கிருப்பவள் என்பனவற்றைக் கேட்காமல், என் ஆணையின் பேரால் அவளை உன் மனைவியாக ஏற்பாயாக" என்றான் {பிரதீபன்}.(22)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரதீபன், தனது மகன் சந்தனுவுக்கு இவ்வாறு ஆணையிட்டு, அவனை அரியணையில் அமர்த்தியும்விட்டுக் கானகமேகினான்.(23) மன்னன் சந்தனு பெரும் நுண்ணறிவையும், இந்திரனுக்கு நிகரான பிரகாசத்தையும் கொண்டிருந்தான். வேட்டைக்கு அடிமையாகிக் கானகத்திலேயே தனது பெரும்பங்குப் பொழுதைக் கழித்தான் சந்தனு.(24) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் எப்போதும் மான்களையும், எருமைகளையும் கொன்று கொண்டு இருந்தான். ஒரு நாள், அவன் கங்கைக் கரையோரமாக அலைந்து கொண்டிருக்கையில், சித்தர்களும், சாரணர்களும் நிறைந்து இருக்கும் ஒரு பகுதிக்கு வந்தான்.(25) அங்கே, ஸ்ரீயைப் போன்ற ஜொலிக்கும் அழகுடனும், வனப்புடனும் கூடிய ஒரு பெண்ணைக் கண்டான்.(26)
அவள் களங்கமற்றவளாக, முத்துப் பல் வரிசையுடன், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, மிருதுவான ஆடையை அணிந்து, தாமரை இதழ்களின் இழைகளைப் போலப் பிரகாசத்துடன் இருந்தாள்.(27) அந்த ஏகாதிபதி! அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆனந்தத்தால் அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. அவனது உறுதியான பார்வை, அவளது அழகைக் குடித்துக் கொண்டிருந்தது. ஆனால் திரும்பத் திரும்பக் குடித்தும் அவனுக்குத் தாகம் அடங்கவில்லை.(28) அவளும் அந்தப் பிரகாசமிக்க ஏகாதிபதியைக் கண்டு பெரும் கிளர்ச்சியடைந்து, அவன் மீது பரிவு ஏற்பட்டு, அவன் மீது ஏற்படும் பாசத்தை உணர்ந்தாள். அவள் பார்த்தாள், பார்த்தாள் பார்த்துக் கொண்டேயிருந்து இன்னும் அதிகமாகப் பார்த்தாள்.(29)
அந்த ஏகாதிபதி அவளிடம் மெலிதான வார்த்தைகளால், "ஓ கொடியிடையாளே, நீ தேவியாக இருந்தாலும், தானவனின் மகளாக இருந்தாலும், கந்தர்வ குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், அப்ஸரசாக இருந்தாலும், யக்ஷப் பெண்ணாக இருந்தாலும், நாகப்பெண்ணாக இருந்தாலும், அல்லது மனிதப்பெண்ணாகவே இருந்தாலும், ஓ தெய்வீக அழகுடையவளே, நீ எனது மனைவியாகும்படி உன்னிடம் வேண்டுகிறேன்" என்றான்.(30,31)
ஆங்கிலத்தில் | In English |