One above the Hundred! How? | Adi Parva - Section 116 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 52)
பதிவின் சுருக்கம் : காந்தாரிக்குப் பிறந்த பிண்டத்தைப் பிரித்து குடங்களிட்ட வியாசர்; ஒரு மகளைப் பெற விரும்பிய காந்தாரி; காந்தாரியின் விருப்பத்தையறிந்த வியாசர் பிண்டத்தில் மிகுந்த துண்டை நூற்றியோராவது குடத்திலிட்டது; துச்சலையின் பிறப்பு...
ஜனமேஜயன், "ஓ பாவங்களற்றவரே, முனிவரின் வரத்தால் திருதராஷ்டிரரின் நூறு மகன்கள் பிறந்ததைப் பற்றி முதலில் இருந்து சொன்னீர்கள். ஆனால், அவருக்குப் பிறந்த மகளைப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்லவில்லையே.(1) வெறுமனே காந்தாரியிடம் நூறு மகன்களும், வைசியப் பெண்மணியிடம் ஒரு மகனும், பிறகு நூற்றொன்றாக ஒரு மகளும், என்று மட்டுமே சொல்லியிருக்கிறீர். அளவற்ற சக்தி கொண்ட வியாச முனிவர், காந்தார மன்னனின் மகளிடம் (காந்தாரி) நூறு மகன்களுக்குத் தாயாவாய் என்றுதானே சொல்லியிருந்தார்?(2) அப்படியிருக்கும்போது, ஓ சிறப்பு வாய்ந்தவரே, எப்படிக் காந்தாரி அந்த நூறு மகன்களுக்கு மேல் ஒரு மகளையும் பெற்றாள் என்று சொல்கிறீர்?(3) அந்தச் சதைப்பிண்டம் நூறு பங்காகப் பிரிக்கப்பட்டது எனும்போது, காந்தாரி மறுபடி கருவுறவில்லை எனும்போது,(4) எப்படித் துச்சலை பிறந்தாள்? ஓ முனிவரே, இதை எனக்குச் சொல்லுங்கள். எனக்கு ஆவல் மேலிடுகிறது" என்று கேட்டான்".(5)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ பாண்டவர்களின் வழித்தோன்றலே, உனது கேள்வி நியாயமானதே, என்ன நடந்தது என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அந்தச் சிறப்புவாய்ந்த பெருமுனிவர், அந்தச் சதைப்பிண்டத்தில் நீர் தெளித்து, அதைப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருந்தார். அப்படிப் பிரிக்கப்படும்போது, செவிலி தெளிந்த நெய் நிரப்பப்பட்ட ஒவ்வொரு பானையிலும் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டே வந்தாள்.(6,7) இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கடும் நோன்புகள் நோற்றவளும், அழகு நிரம்பியவளும், கற்புடையவளுமான காந்தாரி, மகளால் கிடைக்கப்பெறும் அன்பை உணர்ந்து,(8) தனக்குள், 'முனிவரே சொன்ன பிறகு, நான் நூறு மகன்களைப் பெறுவேன் என்பதில் ஐயமில்லை. அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.(9) ஆனால், அந்த நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகள், அந்த மகன்களுக்கெல்லாம் இளையவளாகப் பிறந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.(10) அதனால், எனது கணவருக்கு, மகளின் பிள்ளைகளால் கிடைக்கும் நல்லுலகங்கள் கிடைக்கும். தனது மருமகனின் (மகளின் கணவன்) மீது ஒரு பெண் கொண்டிருக்கும் அன்பும்பெருமைக்குரியது.(11) எனவே, நான் எனது நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகளைப் பெறுவேனேயானால், மகன்களாலும், மகளின் மகன்களாலும் சூழப்பட்டுப் பெரிதும் அருளப்பட்டவளாக இருப்பேன்.(12) நான் கடும் விரதங்கள் இருப்பது உண்மையானால், நான் இரந்தோர்க்கு ஈவது உண்மையானால், (பிராமணர்களின் மூலம்) ஹோமம் செய்வது உண்மையானால், பெரியோர்களை மரியாதையாகக் கவனித்து வணங்கி வருவது உண்மையானால், (அச்செயல்களின் கனியாக) எனக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும்.' என்று நினைத்துக் கொண்டாள்.(13)
இவ்வளவு நேரமும் அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் கிருஷ்ண துவைபாயனர் அந்தச் சதைப் பிண்டங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். நாறு பகுதிகளையும் எண்ணி முடித்த அவர், சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்),(14) "இதோ இருக்கிறார்கள் உனது நூறு மகன்களும். நான் உன்னிடம் பொய்யுரைக்கவில்லை. இருப்பினும், இங்கு நூறுக்கு மேல் ஒரு பகுதி மிகுந்து இருக்கிறது. இஃது உனக்கு மகளின் மூலமான மகனைக் கொடுக்கும்.(15) உனது ஆசைக்கிணங்க, இந்தப் பகுதி நற்பேறு பெற்ற இனிமையான மகளாக உருவாகும்" என்று சொன்ன அந்தத் துறவி, இன்னொரு பானையில் தெளிந்த நெய்யை நிரப்பி வர வைத்து, அந்தப் பகுதியை ஒரு மகளுக்காக இட்டு வைத்தார்.(16) ஓ பாரதா, துச்சலையின் பிறப்பு குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ பாவங்களற்றவனே, நான் இன்னும் என்ன உரைக்க வேண்டும் என்பதைக் கேட்பாயாக" {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஆங்கிலத்தில் | In English |