Chaste Gandhari! | Adi Parva - Section 110 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 46)
பதிவின் சுருக்கம் : விதுரனிடம் கலந்தாலோசித்த பீஷ்மர்; சிவனிடம் வரம்பெற்ற காந்தாரி; காந்தார மன்னன் சுபலனிடம் தூதர்களை அனுப்பிய பீஷ்மர்; ஆடம்பரமாக நடந்த திருதராஷ்டிரன் காந்தாரி திருமணம்; கற்புக்கரசியான காந்தாரி...
பீஷ்மர் விதுரனிடம், "இந்த நமது கொண்டாடப்படும் குலம் {குரு குலம்}, பெரும் சாதனைகளையும் அனைத்து அறங்களையும் உள்ளடக்கி இந்தப் பூமியின் அனைத்து ஏகாதிபதிகள் மீதும் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தது.(1) பல அறம் சார்ந்த, சிறப்புமிகுந்த ஏகாதிபதிகள் இந்த {குரு} குலத்தில் தோன்றியதால் அதன் புகழ் நிலைத்திருக்கிறது. நமது {குரு}குலம் அருகிப் போவதிலிருந்து காக்கச் சிறப்பு மிகுந்த கிருஷ்ணரும் (துவைபாயனரும் {வியாசரும்}), சத்தியவதியும், நானும் உங்கள் மூவரையும் {திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன்} வளர்த்தோம்.(2,3) இந்தக் {குரு} குலத்தை மறுபடியும் கடலென விரிவடையச் செய்வது உனக்கும் எனக்கும் கடமையாகும்.(4) நமது குலத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய தகுதியுடன் மூன்று மங்கையர் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஒருத்தி யாதவக் குல மகள் (சூரசேனன் மகள்- {குந்தி}, இன்னொருத்தி சுபலன் மகள் {காந்தாரி}, மற்றொருத்தி மத்ர இளவரசி {மாத்ரி}.(5) ஓ மகனே {விதுரா}, இந்த மங்கையர் அனைவரும் நிச்சயமாக அரச இரத்தம் உடையவர்களே. அவர்கள் அழகும் சுத்தமான இரத்தமும் கொண்டு நமது குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் தகுதியுடன் உள்ளனர்.(6) ஓ புத்திசாலி மனிதர்களின் முதன்மையானவனே {விதுரனே}, நமது {குரு}குல வளர்ச்சிக்காக அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல்" என்றார் {பீஷ்மர்}.(7)
இப்படிக் கேட்கப்பட்ட விதுரன், "நீர் எங்கள் தந்தையும் தாயும் ஆவீர். நீரே எங்கள் ஆன்ம ஆசானுமாவீர். எனவே, உங்கள் பார்வையில் எங்களுக்கு எது சிறந்தது என்று படுகிறதோ. அதைச் செய்யும்" என்றான்.(8)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "விரைவில் பீஷ்மர், சுபலனின் இனிய மகள் காந்தாரி ஹரனிடம் {சிவனிடம்} இருந்து நூறு மகன்களைப் பெறுவதற்கான வரத்தைப் பெற்றாள் என்பதைப் பிராமணர்கள் மூலம் அறிந்தார். குருக்களின் பாட்டனானான பீஷ்மர் இதைக் கேட்டு, காந்தார மன்னனிடம் தனது தூதுவர்களை அனுப்பினார். முதலில் மன்னன் சுபலன் குருட்டு மாப்பிள்ளைக்குத் {திருதராஷ்டிரனுக்குத்} தன் மகளைக் {காந்தாரியைக்} கொடுக்கத் தயங்கினான். பின்பு, குருக்களின் புகழையும், நடத்தைகளையும், அவர்களது இரத்தத்தையும் உணர்ந்து, தனது அறம் சார்ந்த மகளைத் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்க முடிவு செய்தான்.(9-12)
அந்தக் கற்புக்கரசியான காந்தாரி, திருதராஷ்டிரன் குருடன் என்பதைக் கேள்விப்பட்டாள். தனக்கு அவனை {திருதராஷ்டிரனை} மணமுடிக்கத் தனது பெற்றோர் முடிவு செய்துள்ளனர் என்பதையறிந்து, தனது எதிர்காலக் கணவன் மீதிருந்த அன்பு மற்றும் மரியாதையால் தனது கண்களைக் கட்டிக் கொண்டாள். சுபலனின் மகன் சகுனி, இளமையுடனும் அழகுடனும் இருந்த தனது தங்கையைக் {காந்தாரியை} குருக்களிடம் அழைத்து வந்து, முறைப்படித் திருதராஷ்டிரனுக்குக் கொடுத்தான்.(13-16)
காந்தாரி பெரும் மதிப்புடன் வரவேற்கப்பட்டாள். அவர்களது திருமணம் பீஷ்மரின் வழிகாட்டுதல்படி பெரும் ஆடம்பரத்தோடு நடத்தப்பட்டது. வீரனான அந்தச் சகுனி, பல மதிப்புமிக்கப் பொருட்களுடன் தனது தங்கையை {காந்தாரியை} அளித்துப் பீஷ்மரின் வாழ்த்துகளைப் பெற்றுத் தனது நகருக்குத் திரும்பிச் சென்றான்.(17) ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, அந்த அழகான காந்தாரி தனது நடத்தையாலும், அன்பான கவனிப்பாலும் எல்லாக் குருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(18) காந்தாரி, தனது கணவனுக்குத் {திருதராஷ்டிரனுக்குத்} தன்னை முழுமையாக அர்ப்பணித்து அவனைக் கவனித்துக் கொண்டு, அவளது நன்னடத்தையால் பெரியவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தாள். அவள் {காந்தாரி} கற்புக்கரசியாதலால், தனது கணவனைத் {திருதராஷ்டிரனைத்} தவிர யாதொரு ஆடவனையோ, பெரியவரையோ குறிப்பிட்டு ஒரு வார்த்தையும் பேசாதிருந்தாள்" {என்றார் வைசம்பாயனர்}[1].(19)

[1] கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பின்னும் அதிக செய்தி சொல்லப்படுகிறது. அது பின்வருமாறு: "பீஷமரால் அப்போதே வரிக்கப்பட்டு, காந்தாரராஜனாகிய ஸுபலன், அந்தக் காந்தாரியின் ஸஹோதரிகளாகிய பத்துக் கன்னிகைகளைப் பின்னும் திருதராஷ்டிரனுக்குக் கொடுத்தான்; ஸத்யவ்ரதை, ஸத்யஸேனை, ஸுதேஷ்ணை, ஸம்ஹிதை, தேஜஸ்ரவை, ஸுஷ்ரவை, நிக்ருதி, சுபை, சம்படை, தசார்ணை என்று பெயர்பெற்ற காந்தார ராஜாவின் பெண்கள் பதின்மரையும் ஒரே தினத்தில் திருதராஷ்டிரன் பாணிக்ரகணஞ் செய்து கொண்டான். அதன்பின், சிறந்த வில்லாளியும், சந்தனுபுத்திரருமான பீஷ்மர் ஆங்காங்கிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ராஜபுத்திரிகளைத் தருவித்துத் திருதராஷ்டிரனுக்குக் கொடுப்பித்தார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இந்த் தகவல் சொல்லப்படவில்லை.
ஆங்கிலத்தில் | In English |