Pandu cursed by Kindama! | Adi Parva - Section 118 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 54)
பதிவின் சுருக்கம் : காட்டில் மான் வேட்டையாடிய பாண்டு; மானின் வடிவில் இருந்த கிந்தம முனிவர் பாண்டுவைச் சபித்தது விட்டு மாண்டது...
ஜனமேஜயன், "ஓ பிரம்மத்தை உச்சரிப்பவரே, முனிவரின் அருளால் மனிதர்களில் இயல்பற்ற முறையில் பிறந்த திருதராஷ்டிரன் மகன்களைப் பற்றி வரிசையாகச் சொல்லிவிட்டீர்.(1) பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்களையும் சொல்லிவிட்டீர். ஓ பிராமணரே! இவை அனைத்தையும் நான் உம்மிடம் இருந்து அறிந்து கொண்டேன். இப்போது பாண்டவர்களைக் குறித்துச் சொல்வீராக.(2) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மற்றவகையினரின் அவதாரங்களைச் சொல்லும்போது, பாண்டவர்கள் அனைவரும் தேவர்களின் ஆற்றலுடன் அவர்களது அவதாரமாகவே பிறந்தனர் என்று சொன்னீர்.(3) எனவே, இயல்புக்குமிக்க அவர்களது சாதனைகளை அவர்களது பிறப்பு முதல் கேட்க விரும்புகிறேன். ஓ வைசம்பாயனரே, அவர்களது சாதனைகளை உரைப்பீராக" என்று கேட்டான்.(4)
வைசம்பாயனர், "ஓ மன்னா! ஒரு நாள் மான்களும், காட்டு விலங்குகளும் நிறைந்த கானகத்தில் பாண்டு உலவிக் கொண்டிருக்கும்போது (இமயத்தின் தெற்குச் சாரலில்) ஒரு மான் கூட்டத்திற்குத் தலைமையான பெரிய மான் ஒன்று தனது துணையுடன் இணைந்திருப்பதை {புணர்ந்து கொண்டிருப்பதைக்} கண்டான்.(5) அந்த விலங்குங்களைக் கண்ட அந்த ஏகாதிபதி {பாண்டு}, கூர்மையானவையும், வேகமானவையும் தங்க இறகுகளைக் கொண்டவையுமான ஐந்து கணைகளால் அவ்விரு மான்களையும் துளைத்தான்.(6) ஓ ஏகாதிபதியே, அவன் அடித்தது மானையல்ல, அஃது ஒரு முனிவரின் மகன். மானின் வடிவத்தில் தனது துணையுடன் உல்லாசமாக இருக்கும்போது,(7) பாண்டுவால் துளைக்கப்பட்டுத் தரையில் விழுந்து, மனித குரலில் கதறி அழுதார் அந்த முனிவரின் மகன்.(8)
அந்த மான் பாண்டுவிடம், "ஓ மன்னா! காமத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாகி, காரணங்களை ஆராயாமல், எப்போதும் பாவம் செய்யும் மனிதர்கள்கூட இது போன்ற ஒரு கொடும் செயலைச் செய்ய மாட்டார்கள்.(9) தனிப்பட்ட நீதியால் விதியை விஞ்ச முடியாது. ஆனால் விதியாலேயே தனிப்பட்ட நீதியை விஞ்சி நிற்க முடியும். விதியுடன் முரண்பட்டு நிற்கும் எதையும் ஞானியர் ஏற்றுக் கொள்வதில்லை.(10) ஓ பாரதா, நீ அறம் சார்ந்த குலத்தில் பிறந்தவன். இருப்பினும், ஆசை மற்றும் கோபத்தால் வெல்லப்பட்டு நீ எவ்வாறு உனது மதியை இழந்தாய்?" என்று கேட்டது.(11)
பாண்டு, "ஓ மானே, மன்னர்கள் எப்போதும் உன்னைப் போன்ற விலங்குகளை எதிரிகளைக் கொல்வதைப் போலவே கொன்று வருகின்றனர். எனவே, அறியாமையால் நீ என்னை வசைபாடலாகாது.(12) உனது வகை விலங்குகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொல்லப்பட்டே வருகின்றன. இது மன்னர்களின் வழக்கமே. இருப்பினும் நீ ஏன் என்னை வசைபாடுகிறாய்?(13) முன்பொரு காலத்தில் அகத்திய முனிவர், பெரும் வேள்வியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மான்களைத் துரத்தி, அந்தக் கானகத்தில் இருந்த அனைத்து மான்களையும் தேவர்களுக்கு அர்ப்பணித்தார். அதைப் போன்ற முன்னோடிக் கதைகளின் ஒப்புதல்படியே நீயும் கொல்லப்பட்டாய். அப்படியிருந்தும் நீ என்னை வசைபாடுவாயா? அகத்தியர், அந்தக் குறிப்பிட்ட வேள்வியில், மான்களின் கொழுப்பை வைத்தே ஹோமத்தை நடத்தினார்" என்றான்.(14,15)
அதற்கு அந்த மான், "ஓ மன்னா! தங்கள் எதிரிகள் ஆயத்தமாக இல்லாதபோது மனிதர்கள் கணைகளைப் பறக்க விட மாட்டார்கள். அதைச் செய்ய ஒரு நேரம் இருக்கிறது (பகை முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு). இந்த மாதிரி நேரத்தில் கொல்லுவது தகாது" என்றது.(16)
பாண்டு, "ஒரு மானைக் கொல்வதற்கு முன், மனிதர்கள் அது கவனமாக இருக்கிறதா? இல்லையா என்று கருதாமல் பலதரப்பட்ட வகைகளில் அவற்றைக் கொல்வது நன்கறியப்பட்டது. எனவே, ஓ மானே, என்னை ஏன் நீ வசைபாடுகிறாய்?" என்றான்.(17)
அதற்கு அந்த மான், "ஓ மன்னா! ஒரு மானைக் கொன்று விட்டாயே என்றோ, எனக்குக் காயமேற்படுத்திவிட்டாய் என்றோ நான் உன்னைப் பழிகூறவில்லை. ஆனால், இப்படிக் கொடும் செயல் செய்வதற்குப் பதில், எனது கலவி முடியும் வரை நீ காத்திருந்திருக்க வேண்டும்.(18) ஒரு மான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது எந்த ஞானமுள்ள அறம்சார்ந்த மனிதன்தான் அதைக் கொல்வான்? கலவியின் காலம் எல்லா உயிரனங்களுக்கும் ஏற்புடையதும், அனைவருக்கும் நன்மை செய்வதுமே ஆகும்.(19) ஓ மன்னா! இந்த எனது துணையுடன், நான் எனது காம வேட்கையைத் தணித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனது முயற்சி உன்னால் பலனற்றதாகிவிட்டது.(20) ஓ குருக்களின் மன்னா! அறம் சார்ந்த செயல்களுக்காக அறியப்பட்ட பௌரவர்களின் (பூருவின் வம்சம்) குலத்தில் பிறந்தும் நீ இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறாய்.(21) ஓ பாரதா, உலகளாவிய முழு வெறுப்புக்குகந்ததும், புகழைக்கெடுக்கக்கூடியதும் பெரும்பாவகரமானதுமான இச்செயல் மிகக் கொடூரமானதாகக் கருதப்பட வேண்டும். இது நிச்சயம் நரகத்திற்கு இட்டுச் செல்லும் தன்மை கொண்டது.(22) கலவியின் இன்பத்தை நீ அறிந்திருக்கிறாய். அறப்படிப்பினைகள் மற்றும் கடமைகளின் விதிகளையும் நீ அறிந்திருக்கிறாய். தேவர்களைப் போன்ற நீ, இப்படி நரகத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய செயலைச் செய்திருக்கக்கூடாது.(23)
ஓ மன்னர்களில் சிறந்தவனே, கொடூரச் செயல்கள் புரிபவர்களையும், பாவகரச் செயல்கள் புரிபவர்களையும், சாத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம் ஆகிவற்றைக் காற்றில் தூக்கி வீசுபவர்களையும் தண்டிப்பதே உனது கடமையாகும்.(24) ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஆனால் உனக்கு ஒரு குற்றமும் செய்யாத என்னைக் கொன்று, நீ என்ன செயலைச் செய்திருக்கிறாய்? ஓ மன்னா! மானுருவில் இருந்தாலும், நான் பழங்களும் கிழங்குகளும் உண்டு வாழும் முனிவன் ஆவேன்.(25) நான் இந்தக் கானகத்தில் எல்லோருடனும் சமாதானமாக அமைதியுடன் வாழ்ந்து வந்தேன்.இருப்பினும் நீ என்னைக் கொன்றுவிட்டாய். ஓ மன்னா! இதற்காக உன்னை நான் நிச்சயம் சபிப்பேன்.(26) ஆண், பெண் ஜோடியான எங்களிடம் கொடுமையாக நீ நடந்து கொண்டதால், உனக்குக் காமவேட்கையின் பாதிப்பு ஏற்படும்போது மரணம் உன்னை வந்தடையும்.(27) நான் கிந்தமன் என்ற பெயர் கொண்ட தவத் தகுதியுடைய முனிவனாவேன். மனித சமூகத்தில் எனது இப்படிப் பட்ட செயலைச் செய்ய நாணியதால், நான் இந்த மானுடன் காமக்கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.(28) மானின் வடிவில் நான் பிற மான்களின் துணையுடன் ஆழ்ந்த கானகங்களில் திரிந்து கொண்டிருந்தேன். நான் பிராமணன் என்பதை அறியாமல், நீ என்னைக் கொன்றதால், உனக்கு பிராமணனைக் கொன்ற பாவம் சேராது.(29)
ஆனால் நீ உணர்விழந்த மனிதனாக, மானுருவில் இருந்த என்னை, இப்படிப்பட்ட நேரத்தில் கொன்றதால், உனது விதி நிச்சயமாக என்னைப் போலே இருக்கும்.(30) உனது மனைவியைக் காமத்துடன் நீ அணுகும்போது, நான் எனது துணையுடன் கலந்திருந்தது போலவே, நீயும் உனது மனைவியுடன் கலப்பாய். அந்த நிலையிலேயே நீ ஆவிகளின் {பித்ருக்களின்} உலகத்தை அடைவாய்.(31) உன்னுடன் கலவியில் இருந்த அந்த உனது மனைவியும், உனது இறப்பைத் தொடர்ந்து அன்பாலும், மரியாதையாலும், மரணதேவனின் இடத்திற்கு உன்னைத் தொடர்ந்து வருவாள்.(32) நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீ எனக்குத் துயரைக் கொண்டு வந்தாய். அதே போல, நீ மகிழும்போது துயர் உன்னை வந்தடையும்" என்று சபித்தது {அந்த மான் வடிவில் இருந்த கிந்தமர் சபித்தார்}."(33)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொல்லிவிட்டு, அந்த மான், துயரத்துடன் தனது ஆவியை விட்டது. அந்தக் காட்சியைக் கண்ட பாண்டு சோகத்தில் மூழ்கினான்."(34)

ஆங்கிலத்தில் | In English |