Pandu entered vanaprastha mode of life! | Adi Parva - Section 119 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 55)
பதிவின் சுருக்கம் : தனக்குக் கிடைத்த சாபத்தைத் தன் மனைவியரிடம் சொன்ன பாண்டு; தன் மனைவியரை நகருக்குத் திரும்புமாறு சொன்ன பாண்டு; மறுத்த அவனது மனைவியர்; வானப்பிரஸ்த வாழ்வு முறையை ஏற்றது; தன் பணியாட்களை ஹஸ்தினாபுரத்திற்குத் திருப்பியனுப்பியது; கவலையடைந்த திருதராஷ்டிரன்; சதசிருங்க மலையை அடைந்த பாண்டு...
வைசம்பாயனர் சொன்னார், "மானின் இறப்புக்குப் பிறகு, மன்னன் பாண்டு தனது மனைவியரிடம் {குந்தி மற்றும் மாத்ரியிடம்} மிகவும் துயரப்பட்டுப் பெரிதும் அழுதான்.(1)
அவன் {பாண்டு}, "தீயவர்கள், அறம்சார்ந்த குடும்பங்களில் பிறந்தாலும், ஆசையினால் உந்தப்பட்டு, அவர்களின் செயல்களின் கனியாக பேரிடரை வரவழைத்துக் கொள்கின்றனர்.(2) அறம் சார்ந்த சந்தனுவுக்குப் பிறந்திருந்தாலும், எனது தந்தை {விசித்திரவீரியன்}, காமத்திற்கு அடிமையானதாலேயே இளமையிலேயே இறந்து போனதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அந்தக் காமாந்தக மன்னனின் நிலத்தில் {அம்பிகை, அம்பாலிகை என்ற அவரது மனைவியரிடம்}, உண்மையையே பேச்சாகக் கொண்ட சிறப்புவாய்ந்த முனிவர் கிருஷ்ண துவைபாணர் {வியாசர்} என்னைப் பெற்றார்.(4) அப்படிப்பட்ட ஒருவரின் மகனான நான், இதயத்தில் தீய எண்ணம் கொண்டு, கானகத்தில் மான்களைத் துரத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். ஓ! தேவர்கள் என்னைக் கைவிட்டனரே!(5)
நான் இனி முக்திக்கு வழி தேட வேண்டும். பிள்ளைகள் பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றும் உலகம் சம்பந்தமான பொருட்களுமே முக்திக்கான பெரும் இடையூறு. எனது தந்தையின் அழிவற்ற உதாரணத்தால் இனி நான் பிரம்மசரிய வாழ்க்கைமுறையை ஏற்று வாழப்போகிறேன்.(6) நான் நிச்சயமாக எனது உணர்ச்சிகளை எனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கடுமையான தவங்கள் செய்யப் போகிறேன். எனது மனைவிகள் {குந்தியையும் மாத்ரியும்} மற்றும் மற்ற உறவினர்களைக் கைவிட்டு, எனது சிரத்தை மழித்து, என்னைத் தாங்கிக் கொள்ள இங்கே நின்று கொண்டிருக்கும் மரங்களிடம் இரந்து, தனியாக உலகம் முழுவதும் சுற்றப் போகிறேன்.(7) அன்பு, வெறுப்பு ஆகியவற்றைக் கைவிட்டு, புழுதியால் எனது உடலை மறைத்து, மரத்தின் கீழோ, கைவிடப்பட்ட வீடுகளையோ எனது வசிப்பிடமாக்கிக் கொண்டு வாழப் போகிறேன்.(8) இன்பம், துன்பம் ஆகியவற்றின் விளைவுகளைப்பற்றிக் கருதாமல், அவதூறையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுவேன். நான் வாழ்த்து கூறவோ பெறவோ மாட்டேன். நான் எல்லோருடனும் அமைதியாக இருந்து, பரிசுகளை ஏற்காமல் இருப்பேன்.(9) நான் எவரையும் ஏமாற்றாமல், ஒருவரிடமும் புருவம் சுருக்காமல் இருப்பேன். ஆனால், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்து, எல்லா உயிரினத்தின் நன்மைக்கும் என்னை அர்ப்பணிப்பேன்.(10)
நான் நான்கு வகைப்பட்ட உயிரனங்களுக்கு (முட்டையிடும் இனம், முட்டையிடாமல் குஞ்சு ஈனும் இனம், புழுக்கள் மற்றும் தாவரங்கள்) எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன். மாறாக அனைத்து உயிர்களையும் எனது பிள்ளைகளைப் போல எண்ணி அவற்றைச் சமமாக நடந்து கொள்வேன்.(11) ஒரு நாளைக்கு ஒரு முறை ஐந்திலிருந்து பத்துக் குடும்பங்களிடம் பிச்சை கேட்பேன். அவற்றில் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அன்று முழுதும் உணவில்லாமல் இருப்பேன். ஒருமுறைக்கு மேல் ஒருவரிடமும் பிச்சை கேட்க மாட்டேன்.(12) நான் ஏழு அல்லது பத்து வீடுகள் வலம் வந்தும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், பேராசையினால் உந்தப்பட்டு எனது வலத்தை {பிச்சைக்கேட்டுத் திரிவதை} நீட்ட மாட்டேன். எனக்குப் பிச்சை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், சலனப்படாமல் பெருந்துறவியைப் போல இருப்பேன்.(13) ஒருவன் எனது கரத்தில் ஒன்றைக் கோடரியால் வெட்டினாலும், மற்றொருவன் எனது மற்றொரு கரத்தில் சந்தனக்குழம்பைப் பூசினாலும், நான் அவ்விருவரையும் சமமாகவே மதிப்பேன். ஒருவருக்கு வளமையையும் மற்றவருக்குப் பெருந்துன்பத்தையும் விரும்பமாட்டேன்.(14) வாழ்வில் மகிழ்வோ, மரணத்தில் துயரோ அடைய மாட்டேன். வாழ்வோ, சாவோ எதையும் நான் விரும்ப மாட்டேன்.(15)
எனது இதயத்திலிருக்கும் எனது பாவங்களைக் கழுவி, மகிழ்ச்சியைத் தரவல்ல புனிதமான கடமைகளை நல்ல நேரத்தில், நாளில், காலத்தில் அளவு கடந்து செய்வேன். மேலும் அறம், பொருள், மற்றும் புலனுணர்வுகள் ஆகியவற்றைத் தரும் அனைத்துச் செயல்களையும் துறந்திருப்பேன். உலகின் அனைத்துப் பாவங்கள் மற்றும் பழிகளிலிருந்து விடுபட்டு, காற்றைப் போல யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பேன்.(16-18) இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு அச்சமற்ற பாதையில் பயணித்து, இறுதியாக எனது வாழ்வை முடித்துக் கொள்வேன்.(19) பிள்ளைகளைப் பெறும் சக்தியை இழந்த நான், துன்பம் நிறைந்த இவ்வுலகின் தீய பாதையில் செல்வதற்காக என் கடமையில் இருந்து நிச்சயம் பிறழ மாட்டேன்.(20) உலகத்தால் மதிக்கப்பட்டாலும், மதிக்கப்படாவிட்டாலும், எந்த மனிதன் பேராசையால் பிறரிடம் பிச்சையெடுப்பதைப் போலப் பார்க்கிறானோ, அவன் நிச்சயம் ஒரு நாயைப் போலவே நடந்து கொள்வான். (படைப்புசக்தியற்ற நான், பிள்ளை பெறும் விருப்பத்தால், எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கும்படி பிறரிடம் நிச்சயம் வேண்டக்கூடாது)" என்றான் {பாண்டு}."(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த மன்னன் {பாண்டு} தனது மனைவியரான குந்தி மற்றும் மாத்ரி ஆகிய இருவரிடம் துயரத்துடன் அழுதபடியே,(22) "நம்மை நம்பி இருக்கும் கோசல இளவரசிகள் {பாண்டுவின் தாய்மாரான அம்பிகை மற்றும் அம்பாலிகை}, விதுரன், நமது நண்பர்களுடன் கூடிய மன்னர் {திருதராஷ்டிரன்}, பெரிதும் மதிக்கப்படும் சத்யவதி, பீஷ்மர், நமது குடும்பப் புரோகிதர்கள், சோம பானம் குடித்துக் கடும் தவம் இருக்கும் சிறப்புமிகு பிராமணர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்குப் பாண்டு துறவு வாழ்வு வாழக் கானகத்திற்குள் புகுந்தான் என்று தெரிவிப்பீர்களாக" என்றான்.(23,24)
துறவு வாழ்க்கை வாழ எண்ணும் தங்கள் தலைவனின் {பாண்டுவின்} வார்த்தைகளைக் கேட்ட குந்தியும், மாத்ரியும் சரியான வார்த்தைகளால் அவனை {பாண்டுவை} அணுகி,(25) "ஓ பாரதக் குலத்தின் காளையே, நீர் துறவு வாழ்க்கை வாழ, உங்களால் மணந்து கொள்ளப்பட்ட மனைவியருடன் கைக்கொள்ளக்கூடிய பல வாழ்க்கை முறைகள் இருக்கின்றன.(26) அவற்றால் உமது உடல் வீடுபேற்றை அடைந்து, நீரும் வெகுமதியாக சொர்க்கத்தை அடைவீர். (உமது செயலின்) பெருங்கனியாக நீர் நிச்சயம் சொர்க்கத்தின் தலைவராவீர்.(27) நாங்களும், எங்கள் தலைவனின் {பாண்டுவின்} துணையோடு, உணர்ச்சிகளை அடக்கி, ஆடம்பரத்தை விட்டு, கடும் நோன்புகள் இருந்து, அந்த நன்மையைப் பெறுவோம்.(28) ஓ மன்னா {பாண்டு}, ஓ பெரும் ஞானம் கொண்டவரே! நீர் எங்களைக் கைவிட்டால், நாங்கள் இந்த நாளிலேயே இந்த உலகத்தை விட்டகல்வோம்" என்றனர்.(29)
பாண்டு, "இந்த முடிவு உங்கள் அறத்தின் தன்மையால் ஏற்பட்டது. எனவே, நான் உங்கள் இருவருடனும் என் தந்தையின் அழிவற்ற பாதையில் பயணிப்பேன்.(30) நாடு நகரங்களின் ஆடம்பரங்களைக் கைவிட்டு, மரப்பட்டைகளை ஆடைகளாக {மரவுரிகளை} அணிந்து, பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, ஆழ்ந்த கானகத்திற்குள் தீவிரத் தவங்கள் இயற்றுவேன்.(31) காலையும் மாலையும் குளித்து ஹோமம் செய்வேன். குறைவாக உண்டு எனது உடலைக் குறைத்து, மரப்பட்டைகளையும், தோலாடைகளையும் அணிந்து, எனது தலையில் சடாமுடி தரிப்பேன்.(32) வெப்பத்திற்கும், குளிர்ச்சிக்கும் என் உடலை வெளிப்படுத்தி, பசியையும், தாகத்தையும் அலட்சியம் செய்து, எனது உடலைக் குறைத்துக் கடும் தவம் இயற்றுவேன்.(33) தனிமையில் வாழ்ந்து, தியானத்திற்கு என்னை அர்ப்பணித்துக் கனிந்த கனிகளை மட்டும் உண்டு, பித்ருகளுக்கும், தேவர்களுக்கும் வாக்காலும், நீராலும், பழங்களாலும் படையல் செய்வேன் {அவர்களை வழிபடுவேன்}.(34) எனது உடல் வீழும் வரை, நான் எனது உறவினர்களையோ அல்லது கானகத்தின் மனிதர்களையும், நகரங்களில் வசிப்பவர்களையோ சந்திக்க மாட்டேன்.(35) வானப்பிரஸ்த வாழ்வு முறையில் என்னவெல்லாம் விதிகள் உள்ளனவோ, அவை கடுமையாக இருப்பினும் அனைத்தையும் நான் கடைப்பிடிப்பேன்" என்றான் {பாண்டு}".(36)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தக் குரு மன்னன் {பாண்டு}, தனது இரு மனைவியரிடமும் {குந்தி மற்றும் மாத்ரியிடம்} அப்படிச் சொல்லிவிட்டுத் தனது தலையில் இருந்த பெரிய ஆபரணத்தையும், விலைமதிப்பில்லா தங்கத்திலான தனது ஆரத்தையும், கைக்காப்புகளையும், காது குண்டலங்களையும், தனது மனைவிகளின் விலைமதிப்பற்ற ஆடைகளையும் ஆபரணங்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டான்.(37,38)
பிறகு அவர்களைக் கவனித்துக் கொண்டவர்களிடம் {பணியாட்களிடம்}, "நீங்கள் ஹஸ்தினாபுரம் திரும்பிப் பாண்டுவும் அவனது மனைவியரும் செல்வம், ஆசை, மகிழ்ச்சி மற்றும் காம இச்சை ஆகியவற்றைத் துறந்து கானகத்திற்குள் சென்றுவிட்டனர் என்று தெரிவியுங்கள்" என்றான் {பாண்டு}. அப்போது அந்தப் பணியாட்கள் இதையும் மற்றும் அந்த மன்னன் பேசிய அன்பான வார்த்தைகளையும் கேட்டு,(39,40) "ஓ! நாங்கள் தொலைந்தோம்!" என்று சொல்லி,(41) வெப்பக்கண்ணீருடன் தங்கள் ஏகாதிபதியை {பாண்டுவை} அங்கேயே விட்டுப் பாண்டு கொடுத்த செல்வங்களுடன் (அனைவருக்கும் தானத்தில் பிரித்துக் கொடுக்க) வேகமாக ஹஸ்தினாபுரம் சென்றனர்.(42)
{நகரத்திற்குச் சென்ற அவர்கள் அந்தச் சிறப்புமிக்க மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்}, நடந்ததனைத்தையும் சொல்லி, அவனிடம் செல்வமனைத்தையும் கொடுத்தனர்.}[1](43) மனிதர்களில் முதன்மையான திருதராஷ்டிரன், கானகத்தில் நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டுத் தனது தம்பிக்காக {பாண்டுவுக்காக) அழுதான்.(44) தனது தம்பியிடம் உள்ள அன்பால், படுக்கையின் சுகத்தையும், நல்ல ஆசனத்தையும், நல்ல உணவையும் சில நாள் தவிர்த்தான். தன் தம்பியின் இழப்பால் பீடிக்கப்பட்ட அவன் தொடர்ந்து அவனையே நினைத்துக் கொண்டிருந்தான்.(45)
அதே நேரத்தில், குரு இளவரசன் பாண்டு தனது இரு மனைவியருடன் {குந்தி, மாத்ரியுடன்}, பழங்களும் கிழங்குகளும் உண்டு, நாகசதம் என்ற மலைக்குச் சென்றான்.(46) பின்னர்ச் சித்ரரதம் சென்று, அங்கிருந்து காலகூடம் சென்று, அங்கிருந்து இமயத்தில் இருக்கும் கந்தமாதன மலைக்குச் சென்றான்.(47) ஓ மன்னா! பாண்டு, மஹாபூதங்களாலும், சித்தர்களாலும், பெரும் முனிவர்களாலும் காக்கப்பட்டுச் சில காலங்கள் சமவெளியிலும், சில காலங்களில் மலைச்சாரல்களிலும் வசித்தான்.(48) அதன்பிறகு இந்திரத்தியும்னம் என்ற ஏரிக்குப் பயணப்பட்டான். அதன்பிறகு, ஹம்ஸகூடம் என்ற மலையைக் கடந்து, நூறு சிகரங்களுடைய சதசிருங்கம் என்ற மலைக்குச் சென்று அங்கே கடும் தவப்பயிற்சி செய்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(49)

[1] இந்தச் சுலோகம் கங்குலியின் பதிப்பில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் இருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.
அதே நேரத்தில், குரு இளவரசன் பாண்டு தனது இரு மனைவியருடன் {குந்தி, மாத்ரியுடன்}, பழங்களும் கிழங்குகளும் உண்டு, நாகசதம் என்ற மலைக்குச் சென்றான்.(46) பின்னர்ச் சித்ரரதம் சென்று, அங்கிருந்து காலகூடம் சென்று, அங்கிருந்து இமயத்தில் இருக்கும் கந்தமாதன மலைக்குச் சென்றான்.(47) ஓ மன்னா! பாண்டு, மஹாபூதங்களாலும், சித்தர்களாலும், பெரும் முனிவர்களாலும் காக்கப்பட்டுச் சில காலங்கள் சமவெளியிலும், சில காலங்களில் மலைச்சாரல்களிலும் வசித்தான்.(48) அதன்பிறகு இந்திரத்தியும்னம் என்ற ஏரிக்குப் பயணப்பட்டான். அதன்பிறகு, ஹம்ஸகூடம் என்ற மலையைக் கடந்து, நூறு சிகரங்களுடைய சதசிருங்கம் என்ற மலைக்குச் சென்று அங்கே கடும் தவப்பயிற்சி செய்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(49)
ஆங்கிலத்தில் | In English |