The story told by Pandu! | Adi Parva - Section 120 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 56)
பதிவின் சுருக்கம் : துறவுக்குத் தன்னை அர்ப்பணித்த பாண்டு; பிரம்மனைக் காணப் புறப்பட்ட முனிவர்கள்; பாண்டு தங்களுடன் வரவேண்டாம் என்று மறுத்த முனிவர்கள்; பாண்டுவுக்கு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று சொன்ன முனிவர்கள்; தகுதிவாய்ந்தவர் மூலம் பிள்ளை பெற குந்திக்கு ஆணையிட்ட பாண்டு; பாண்டு சொன்ன சுருதசேனையின் கதை...
வைசம்பாயனர் சொன்னார், "பெரும் சக்தி கொண்ட பாண்டு, தன்னைத் துறவுக்கு அர்ப்பணித்தான். குறைந்த காலத்தில் அங்கு வசித்த சித்தர்கள் மற்றும் சாரணர்களிடத்தில் அவர்களுக்குப் பிடித்தமானவனாக ஆனான்.(1)
ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த ஆன்ம குருக்களுக்கு சேவை செய்து, பயனற்ற செருக்கிலிருந்து விடுபட்டு, மனத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஆசைகளை அடக்கி, சொர்க்கத்திற்குள் நுழையத்தக்க பெரும் (ஆன்ம) ஆற்றலை அடைந்தான்.(2) சில முனிவர்கள் அவனைச் சகோதரா என்று அழைத்தனர், சிலர் நண்பா என்று அழைத்தனர், மற்றவர்கள் அவனைத் தனது சொந்த மகனாகவே நினைத்தனர்.(3) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, பல காலம் கழித்துத் தனித்திருந்து பெரும் ஆன்மத் தகுதியடைந்து (பிறப்பால் க்ஷத்திரியனாக இருப்பினும்) பிரம்மமுனியைப் போன்று ஆனான் பாண்டு.(4)
ஒரு புது நிலவு {அமாவசை} நாளில், கடுந்தவங்கள் இயற்றும் முனிவர்கள் ஒன்றாகக் கூடி, பிரம்மனைக் காணும் ஆவலால் புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தனர்.(5) அவர்கள் புறப்படத் தயாராயிருப்பதைக் கண்ட பாண்டு அந்தத் துறவிகளிடம், "நா நலமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களே, எங்கே செல்கிறீர்கள்?" என்றான்.(6)
அதற்கு முனிவர்கள், " இன்று பிரம்மனின் வசிப்பிடத்தில் தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோரின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அந்தத் தான்தோன்றியை {சுயம்புவான பிரம்மனைக்} காண விரும்பி இன்று நாங்கள் அனைவரும் அங்குச் செல்கிறோம்" என்றனர்.(7)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்ட பாண்டு, முனிவர்களுடன் சொர்க்கத்தைக் காண விருப்பம் கொண்டு உடனே எழுந்தான். தனது இரு மனைவியரையும் {குந்தி மற்றும் மாத்ரியையும்} அழைத்துக் கொண்டு, முனிவர்களைத் தொடர்ந்து அந்த ஆயிரம் சிகரங்கள் கொண்ட மலைக்கு வடக்கு நோக்கி நடக்க முற்படும்போது, அந்தத் துறவிகள்,(8) "இந்த எங்கள் வடநோக்குப் பயணத்தில், மலைகளின் அரசன் மீது மெதுவாக ஏறும்போது, தேவர்கள் செல்வதையும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் செல்வதையும், மரங்கள் அடர்ந்து இன்னிசை நிரம்பிய பெரும் மாளிகைகளையும், சமமும் சமமற்றதுமான தரையும் கொண்ட குபேரனின் நந்தவனத்தையும், பெரும் நதிகளின் கரைகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும், சாதாரண மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளையும் அந்த மலையின் சாரலில் நாங்கள் கண்டிருக்கிறோம்.(9-11) பனியால் மூடப்பட்டுக் காய்கறிகளோ, விலங்குகளோ அற்ற உயர்ந்த இடங்களும் அங்கே இருக்கின்றன. பெரும் மழை பெய்து கொண்டே இருப்பதால், முற்றிலும் அணுகப்பட முடியாதவையும் வசித்திருக்க முடியாதவையுமான சில இடங்கள் அங்கே இருக்கின்றன.(12) மற்ற விலங்குகளைப் பற்றிப் பேச வேண்டாம், இறகுகள் கொண்ட உயிரினங்களாலும் {பறவைகளாலும்} அவற்றைக் கடக்க முடியாது. காற்று மட்டுமே அங்குப் புக முடியும். அதைத் தவிர்த்து சித்தர்களும், பெரும் முனிவர்களும் மட்டுமே அங்கே நுழைய முடியும்.(13) அந்த மலைகளின் மன்னனுடைய உயரங்களில் {உயரமான இடங்களில்} இவ்விளவரசிகளால் எவ்வாறு ஏற முடியும்? வலியை அறியாதவர்களான இவர்கள், துயரத்தால் வீழ்ந்துவிட மாட்டார்களா? எனவே, ஓ பாரதக் குலத்தின் காளையே, எங்களுடன் நீ வராதே" என்றனர்.(14)
பாண்டு, "பேறு பெற்றவர்களே, மகனில்லாதவனுக்குச் சொர்க்கத்தில் அனுமதியில்லை என்று சொல்லப்படுகிறது. நான் மகனற்றவன்! அந்தத் துயரத்தால் நான் உங்களிடம் பேசுகிறேன்.(15) எனது மூதாதையருக்கு நான் கொண்ட கடனை என்னால் செலுத்த முடியவில்லை என்பதால் துயருறுகிறேன். எனது உடலின் அழிவுடன் சேர்த்து எனது மூதாதையர்களின் அழிவும் நிச்சயம்!(16) பூமியில் பிறக்கும் மனிதர்கள் நான்கு கடன்களுடன் பிறக்கின்றனர். மூதாதையர்களுக்கான கடன், தேவர்களுக்கான கடன், முனிவர்களுக்கான கடன் மற்றும் சக மனிதர்களுக்கான கடன் ஆகியவற்றுடனே மனிதர்கள் பிறக்கின்றனர். அறம்வழுவாமல் அக்கடன்களை அவர்கள் செலுத்த வேண்டும்.(17) சரியான நேரத்தில் இக்கடன்களைத் தீர்க்காதவர்கள் நல்லுலகம் பெற மாட்டார்கள் என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர்.(18) தேவர்கள் நாம் செய்யும் வேள்விகளால் கடன் அடைபடுகின்றனர் {நிறைவடைகின்றனர்}. முனிவர்கள் நாம் பெறும் கல்வி, தியானம் மற்றும் ஆன்ம அறிவு ஆகியவற்றால் கடன் அடைபடுகின்றனர். முன்னோர்கள் {பித்ருக்கள்}, நாம் பிள்ளைகள் பெறுவதாலும், ஈமக்கடன்கள் செய்வதாலும் கடன் அடைபடுகின்றனர். மனிதத்தன்மையுடன், யாருக்கும் எக்குற்றமும் செய்யாமல் வாழ்ந்தால் மற்ற மனிதர்களின் கடன் அடைபடுகிறது.(19) நான், அறம்சார்ந்தவனாக தேவர்கள், முனிவர்கள் மற்றும் சக மனிதர்களின் கடனை அடைத்துவிட்டேன். இந்த மூன்றைத் தவிர மற்றதெல்லாம் எனது உடலுடன் அழியப்போகின்றன.(20) துறவிகளே, நான் எனது முன்னோர்களுக்கான கடனில் இருந்து இன்னும் விடுபடவில்லை. பிள்ளைகளைப் பெற்றுக் கடன்களை அடைக்கவே மனிதர்களில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் பிறக்கின்றனர்.(21) உயர்ந்த முனிவரால் {வியாசரால்} எனது தந்தையின் நிலத்தில் நான் பெறப்பட்டதைப் போலவே, எனது நிலத்தில் (என் மனைவியரிடத்தில்) பிள்ளைகள் பெறப்பட வேண்டுமா?" என்று கேட்டான்.(22)
அதற்கு முனிவர்கள், "ஓ அற ஆன்மா கொண்ட மன்னா! பாவமற்றதும், நற்பேறால் அருளப்பட்டதும், தேவர்களைப் போன்றதுமான சந்ததி உனக்கு இருக்கிறது. நாங்கள் எங்கள் ஞானப்பார்வையால் அதைக் காண்கிறோம்.(23) ஓ மனிதர்களில் புலியே {பாண்டுவே}, எனவே, விதி சுட்டிக்காட்டும்படி உன் செயல்களை நிறைவேற்றுவாயாக. நுண்ணிறவு கொண்ட மனிதர்கள், ஆழ்ந்த ஆய்வுடன் செயல்பட்டு, எப்போதும் நற்கனிகளையே {நல்ல பலன்களையே} அடைகின்றனர்;(24) எனவே, முயற்சி செய்வதே உனக்குத் தகுந்தது. நீ அடையப்போகும் கனி தெளிவாகத் தெரிகிறது. திறமைவாய்ந்த, ஏற்றுக் கொள்ளப்படும் சந்ததியை நீ நிச்சயம் அடைவாய்" என்றனர்.(25)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துறவிகளின் வார்த்தைகளைக் கேட்ட பாண்டு, மானின் சாபத்தால், உற்பத்தி சக்தியைத் தான் இழந்ததை நினைத்துப் பார்த்து ஆழ்ந்த வருத்தம் கொண்டான்.(26) தான் மணந்த மனைவியான சிறந்த குந்தியை தன்னிடம் தனிமையில் அழைத்து, "இந்த இக்கட்டான நிலையைக் கருத்தில் கொண்டு வாரிசுகளை உருவாக்க முயற்சி செய்வாயாக.(27) ஓ குந்தி, ஒரு மகனே மூவுலகத்திலும் அறம் சார்ந்த புகழை விளைவிப்பவன் என்று அழிவற்ற அறத்தை {நித்திய தர்மத்தைப்} போதிக்கும் ஞானியர் சொல்கின்றனர்.(28) வேள்விகள், கொடைகள், தவத்துறவுகள் மற்றும் கவனமாக நோற்கப்படும் நோன்புகள் ஆகியவற்றால் மகனற்ற மனிதனுக்கு எந்த அறத்தகுதியையும் ஏற்பட்டுவிடாது என்று சொல்லப்படுகிறது.(29) ஓ இனிமையான புன்னகையுடையவளே {குந்தியே}, இவையனைத்தையும் அறிந்த நான், மகனற்றவனாக இருப்பதால், உண்மையான இன்பநிலைகளைக் கொண்ட உலகங்களை என்னால் அடைய முடியாது என்பது உறுதி.(30) ஓ மருட்சியுடையவளே, பாவச்செயல்களுக்கு அடிமையான இழிந்தவனாக நான் இருந்ததால், மாசுள்ள என் வாழ்வின் விளைவாக, மானின் சாபத்தால் என் உற்பத்திசக்தி {இனப்பெருக்கம் செய்யும் சக்தி} அழிந்தது.(31)
அறத்தின் விதிகள் ஆறு வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஓ பிருதையே {குந்தி}, தற்போதுள்ள வழக்கத்தின்படி அவற்றைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(32) அவை, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் முதல் வகை {1.ஔரஸன்}, அன்பு நிமித்தமாகத் திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை {2.பிரனீதன்}, பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை {3.பரிக்ரிதன்}, கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை {4.பௌனர்ப்பவன் }, திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை {5.கானீனன்}, கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை {6.குந்தன்}, தத்து கொடுக்கப்பட்டு பெறப்படும் மகன் ஏழாவது வகை {7.தத்தன்}, சில காரணத்திற்காகப் பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை {8.க்ரீதன்}, தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை {9.ஸ்வயம்தத்தன்}, கருவுற்ற மணமகளிடம் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை {10.ஷாதன்}, சகோதரன் மகன் பதினோராவது வகை {11.உபக்ரீதன்}, தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை {12.ஹீனயோனித்ரிதன்}[1].(33,34)
முந்தைய பிரிவில் {முதல் ஆறு பிள்ளைகளை} பிள்ளைப் பெறுவதில் தோல்வியுற்றால், ஒரு தாய் அதற்கடுத்த பிரிவில் {இறுதி ஆறு பிள்ளைகளை} பிள்ளைகளைப் பெற விரும்ப வேண்டும். சில இக்கட்டான சூழ்நிலைகளில், மனிதர்கள் திறமைவாய்ந்த தங்கள் தம்பிகள் மூலம் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(35) சுயம்புவான மனு, தன்னால் சுயமாகப் பிள்ளை பெற முடியாவிட்டால், சிறந்த அறத்தைத் தரும் பிள்ளைகளைப் பெறலாம் பிறர் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.(36) எனவே, ஓ குந்தி, நான் எனது உற்பத்தித் திறனை இழந்துவிட்டதால், நீ எனக்குச் சமமான அல்லது என்னைவிட உயர்ந்த வேறு நபர் மூலம் பிள்ளை பெற நான் உனக்கு ஆணையிடுகிறேன்.(37) ஓ குந்தி, தனது தலைவனால் பிள்ளைப்பேறு பெறப் பணிக்கப்பட்டவளான சாரதண்டாயனர் மகளின் {சுருதசேனையின்} வரலாற்றைக் கேட்பாயாக.(38)
அந்த வீரமங்கை, தனது மாதவிடாய் முடிந்ததும், முறையாகக் குளித்து, நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு இரவில் சென்று காத்திருந்தாள். அவள் நீண்ட நேரம் அங்குக் காத்திருக்கவில்லை. அதற்குள் துறவில் வென்ற ஒரு பிராமணர் அங்கே வந்தார். சரதண்டாயனரின் மகள் அவரிடம் பிள்ளை கோரினாள். நெருப்பில் தெளிந்த நெய்யை விட்ட பிறகு[2] (பும்ஸவனம் என்ற வேள்வி செய்து) அந்தப் பிராமணரின் மூலம் அவள் துர்ஜெயனை மூத்தவனாகக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான மூன்று மகன்களைப் பெற்றெடுத்தாள்.(39,40) ஓ நற்பேறு பெற்றவளே {குந்தியே}, நீயும் அந்த வீரமங்கையை உதாரணமாகக் கொண்டு, எனது ஆணையை ஏற்று, உயர்ந்த அறத்தகுதி வாய்ந்த பிராமணரின் வித்தைக் கொண்டு விரைவாகப் பிள்ளைகளைப் பெறுவாயாக" என்றான்[3].(41)

[1] மேலே அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளவை. கும்பகோணம் பதிப்பில், "தர்மசாஸ்திரத்தில் ஆறுபுத்ரர்கள் தாயபாகத்திற்குரிய சுற்றத்தவரென்றும் மற்ற ஆறு புத்ரர்கள் தாயபாகத்திற்குரியவரல்லாற சுற்றத்தவரென்றும் சொல்லப்பட்டனர். குந்தியே! அவர்களைப் பற்றி நான் சொல்லுகிறேன்; கேள். தன் தர்ம்பத்நியிடம் தனக்குப் பிறந்த ஔரஸன்{1}, அவளிடத்திலே தன் அனுமதியினால் உயர்குலத்தோனுக்குப் பிறந்த க்ஷேத்ரஜன்{2}. தாய்தந்தைகளால் விடப்பட்ட அபவித்தன்{3}, ஒரு பெண்ணிடம் இரண்டாவது விவாகம் செய்து கொண்ட புருஷனுக்குப் பிறந்த பௌனர்ப்பவன்{4}. விவாகம் செய்து கொள்ளாமல் கன்னிகையாயிருக்கும்போது பிறந்த கானீனன்{5}, இன்னானுக்கென்று தெரியாமல் பரபுருஷனுக்குப் பிறந்த கடோத்பன்னன்{6}, தத்தபுத்திரன்{7}, தாய்தகப்பனார்களுக்குக் கிரயம் கொடுத்து வாங்கப்பட்ட க்ரீத புத்ரன்{8}, புத்திரன்போல் அபிமானிக்கப்பட்ட க்ரித்ரிமபுத்திரன்{9}, தானே உனக்குப்புத்ரனாக இருக்கிறேனென்று வந்த ஸ்வயம்தத்தனென்பவன்{10}, கர்ப்பிணியாகவே விவாகம் செய்யப்பட்டவளுக்குப் பிறந்த ஸகோடன்{11}, சூத்ர ஸ்த்ரீயினிடம் தனக்குப் பிறந்தவனாகிய பாரசவன்{12} இவர்கள் பனிரெண்டு புத்ரர்கள். இவர்களில் முன்சொன்ன புத்ரர்கள் இல்லாமையைப் பார்த்துப் பின் சொன்ன புத்ரர்களை அடைய விரும்ப வேண்டும்" என்றிருக்கிறது.
முந்தைய பிரிவில் {முதல் ஆறு பிள்ளைகளை} பிள்ளைப் பெறுவதில் தோல்வியுற்றால், ஒரு தாய் அதற்கடுத்த பிரிவில் {இறுதி ஆறு பிள்ளைகளை} பிள்ளைகளைப் பெற விரும்ப வேண்டும். சில இக்கட்டான சூழ்நிலைகளில், மனிதர்கள் திறமைவாய்ந்த தங்கள் தம்பிகள் மூலம் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(35) சுயம்புவான மனு, தன்னால் சுயமாகப் பிள்ளை பெற முடியாவிட்டால், சிறந்த அறத்தைத் தரும் பிள்ளைகளைப் பெறலாம் பிறர் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.(36) எனவே, ஓ குந்தி, நான் எனது உற்பத்தித் திறனை இழந்துவிட்டதால், நீ எனக்குச் சமமான அல்லது என்னைவிட உயர்ந்த வேறு நபர் மூலம் பிள்ளை பெற நான் உனக்கு ஆணையிடுகிறேன்.(37) ஓ குந்தி, தனது தலைவனால் பிள்ளைப்பேறு பெறப் பணிக்கப்பட்டவளான சாரதண்டாயனர் மகளின் {சுருதசேனையின்} வரலாற்றைக் கேட்பாயாக.(38)
அந்த வீரமங்கை, தனது மாதவிடாய் முடிந்ததும், முறையாகக் குளித்து, நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு இரவில் சென்று காத்திருந்தாள். அவள் நீண்ட நேரம் அங்குக் காத்திருக்கவில்லை. அதற்குள் துறவில் வென்ற ஒரு பிராமணர் அங்கே வந்தார். சரதண்டாயனரின் மகள் அவரிடம் பிள்ளை கோரினாள். நெருப்பில் தெளிந்த நெய்யை விட்ட பிறகு[2] (பும்ஸவனம் என்ற வேள்வி செய்து) அந்தப் பிராமணரின் மூலம் அவள் துர்ஜெயனை மூத்தவனாகக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான மூன்று மகன்களைப் பெற்றெடுத்தாள்.(39,40) ஓ நற்பேறு பெற்றவளே {குந்தியே}, நீயும் அந்த வீரமங்கையை உதாரணமாகக் கொண்டு, எனது ஆணையை ஏற்று, உயர்ந்த அறத்தகுதி வாய்ந்த பிராமணரின் வித்தைக் கொண்டு விரைவாகப் பிள்ளைகளைப் பெறுவாயாக" என்றான்[3].(41)
[2] ஆண்பிள்ளை பிறப்பதற்காகச் செய்யப்படும் வேள்வி
[3] மன்மதநாததத்தரின் பதிப்பில் இக்கதை கங்குலியில் உள்ளதைப் போலவே "சாரதண்டாயனரின் மகள்" என்றே இருக்கிறது. ஆனால் கும்பகோணம் பதிப்பிலோ, "கற்புள்ளவளும், புகழுள்ளவளுமான சுருதஸேனையென்னும் பெயருள்ள உன் சகோதரியை உயர்ந்தவனாகிய சாரதண்டாயனியென்னும் கேகயதேசத்தரசன் விவாஹம் செய்து கொண்டான். குந்தியே வீரபத்னியாகிய அவள் தன் குருவினால் (பர்த்தாவினால்) புத்திரோத்பத்தி செய்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டு, ருதுஸ்நானஞ்செய்து நியமத்துடனிருந்து ராத்திரியில் நாலு சந்து கூடுமிடத்திலிருந்த ஒரு தவஸித்தி பெற்ற பிராமணனை வரித்து பும்ஸவனம் என்னும் கிருயையில் அக்நியில் ஹோமஞ்செய்து அந்தக் கிரியை முடிந்தபின் அந்தப் பிராமணருடன் கூடவே சேர்ந்திருந்தாள். அதனால், அவள் துர்ஜயன் முதலான மூன்று மஹாரதர்களைப் பெற்றாள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலோ, "ஓ குந்தி, ஒரு போர்வீரனின் மனைவியான சாரதண்டாயனியின் கதையைக் கேட்பாயாக. அவள் தனக்கு மூத்தவர்களால் ஒரு மகனைப் பெறுமாறு பணிக்கப்பட்டாள். ஓ குந்தி, அவளது பருவகாலம் வந்தபோது, அவள் குளித்தால். இரவில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்குச் சென்று, நல்லசாதனை கொண்ட பிராமணர் ஒருவரை வரவேற்றாள். ஒரு மகனைப் பெறும் நிமித்தமாக அவள் நெருப்பில் ஆகுதியை ஊற்றினாள். இந்தச் சடங்கைச்செய்த பிறகு, அவருடன் வாழ்ந்த அவள், துர்ஜயனை மூத்தவனாகக் கொண்டவர்களும், மஹாரதர்களுமான மூன்று மகன்களைப் பெற்றாள்" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |