Pandu joined his palms over his head to Kunti! | Adi Parva - Section 122 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 58)
பதிவின் சுருக்கம் : உத்தாலகர் மற்றும் அவரது மகன் ஸ்வேதகேதுவின் வரலாற்றைக் குந்திக்குச் சொன்ன பாண்டு; ஒருத்திக்கு ஒருவன் என்ற நடைமுறையை ஏற்படுத்திய ஸ்வேதகேது; குந்தி தன்னிடம் இருக்கும் மந்திரங்களைப் பற்றி பாண்டுவிடம் சொன்னது; குந்தியிடம் தர்மராஜனை அழைக்கச் சொன்ன பாண்டு...
வைசம்பாயனர் சொன்னார், "தனது அன்பான மனைவியால் {குந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் பாண்டு, ஒழுக்கவிதிகளை நன்கறிந்து, அறம் சார்ந்த வார்த்தைகளில்,(1) "ஓ குந்தி, நீ சொன்னது உண்மைதான். பழங்காலத்தின் வியுஷிதாஸ்வன் நீ சொன்னதைப் போலத்தான் செய்தான். அவன் நிச்சயமாகத் தேவர்களுக்குச் சமமானவனாக இருந்தான்.(2) ஆனால், நான் இப்போது ஒழுக்கம் சார்ந்த அனைத்து விதிகளையும் அறிந்த சிறப்பு மிகுந்த முனிவர்களால் சொல்லப்பட்ட சில நடைமுறைகளைச் சொல்கிறேன்.(3) ஓ அழகான முகமும், இனிய புன்னகையும் கொண்டவளே, முன்பெல்லாம் பெண்கள் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் கணவர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ நம்பி இருக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து, தாங்கள் விரும்பியவாறெல்லாம் இன்புற்றிருந்தனர்.(4) ஓ சிறந்த குணங்களைக் கொண்டவளே, அவர்கள் தங்கள் கணவர்களைப் பின்பற்றாமல் இருந்து, அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் இல்லாதிருந்தனர். இருப்பினும், ஓ அழகானவளே, அது பாவம் என்று அப்போது கருதப்படவில்லை. அஃது அந்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையாகும்.(5)
இன்றும் அந்த நடைமுறையானது எந்தப் பொறாமையுமின்றிப் பறவைகளாலும், விலங்குகளாலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.(6) அந்நடத்தையே மேற்கோளாக அங்கீகரிக்கப்பட்டுப் பெரும் முனிவர்களால் மெச்சப்படுகிறது. ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, அந்நடத்தை இன்னும் வடக்கு குருக்களுக்குள் {உத்தர குருக்களுக்குள்} நடைமுறையில் இருக்கிறது.(7) பெண்களின் மீது கடுமையில்லாத அந்நடத்தை, நிச்சயமாகப் பழங்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இன்று வழக்கிலிருக்கும் நடைமுறை, பல காலம் கடந்தே நிறுவப்பட்டது. இப்போதிருக்கும் நடத்தையை யார் நிறுவியது என்றும், அஃது எதற்காக நிறுவப்பட்டது என்பதையும் உனக்குச் சொல்கிறேன்.(8)
உத்தாலகர் என்ற பெயரில் ஒரு பெரு முனிவர் இருந்தார் என்றும், அவருக்குச் சுவேதகேது என்ற ஆன்மத் தகுதிவாய்ந்த மகன் ஒருவர் இருந்தார் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.(9) ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவளே {குந்தியே}, இன்றைய அறம் சார்ந்த நடத்தை அந்த ஸ்வேதகேதுவின் கோபத்தாலேயே நிறுவப்பட்டது. அதன் காரணத்தைக் கேட்பாயாக.(10)
ஒரு நாள், ஸ்வேதகேதுவின் முன்னிலையிலேயே ஒரு பிராமணர், ஸ்வேதகேதுவின் தாயின் கரங்களைப் பற்றி, "நாம் செல்லலாம்" என்றார்[1].(11) தனது தாயின் கரம்பற்றி, அவளை வெளிப்படையாக அழைத்துச் செல்வதைக் கண்டு பெரும் கோபத்தால் தூண்டப்பட்டார் ஸ்வேதகேது.(12) கோபத்திலிருக்கும் தனது மகனைக் கண்ட உத்தாலகர், அவனிடம் {ஸ்வேதகேதுவிடம்}, "ஓ மகனே! கோபமடையாதே. இந்த நடைமுறை பழங்காலத்தில் இருந்தே வழக்கில் உள்ளது.(13) அனைத்து வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த பெண்களும் இந்த உலகத்தில் சுதந்திரமானவர்களே. ஓ மகனே, இக்காரியத்தில், தங்கள் வகைகளைப் பொறுத்தவரை மனிதர்கள் பசுக்களை {விலங்குகளைப்} போலவே செயல்படுகின்றனர்" என்றார்.(14)

[1] கும்பகோணம் பதிப்பில், இந்தப் பிராமணர் வயது முதிர்ந்தவர் என்றும், கண் பார்வை குறைந்தவர் என்றும், பித்ரு கடன் கழிக்க பிள்ளை வேண்டும் என்று உத்தாலகரிடம் அனுமதிபெற்று அவரது மனைவியை அழைத்துச் சென்றார் என்றும் இருக்கிறது. வேறு எந்தப் பதிப்பிலும் இரண்டு பக்கங்கள் நீளும் இந்தக் குறிப்பு இல்லை.
இருப்பினும் அந்த முனிவரின் {உத்தாலகரின்} மகன் ஸ்வேதகேது, இவ்வகை நடத்தையை அங்கீகரிக்க மறுத்து, இன்று நடைமுறையில் இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்குமான நடத்தை விதியை இந்த உலகத்தில் நிறுவினார்.(15) ஓ பேரறமுடையவளே, அக்காலத்திலிருந்தே தற்போது வழக்கில் உள்ள நடைமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனால், இந்நடைமுறை மற்ற உயிர்வகைகளில் இல்லை.(16) தற்போதைய நடைமுறை நிறுவப்பட்ட பின்பு, பெண்கள் தங்கள் கணவர்களைப் பின்பற்றாதிருப்பது பாவம் என்றானது. அதன்படி, முனிவர் {ஸ்வேதகேது} கொண்டு வந்த வரைமுறையை மீறும் பெண்டிர், கருவைக் கொன்ற குற்றவாளியாகின்றனர்.(17) கன்னிப் பருவத்திலிருந்தே புனிதமாக இருக்கும் அன்பான கற்புடைய மனைவியைக் களங்கப்படுத்துவதால் ஆண்களும் அதே குற்றவாளியாகின்றனர்.(18) ஒரு பெண், தன் கணவனால் பிள்ளை பெறப் பணிக்கப்பட்டு, அஃதை அவள் மறுத்தால், அவளும் அதே போன்ற குற்றவாளியாகிறாள்.(19)
எனவே, ஓ மருட்சியுடையவளே, பழங்காலத்தில், அதற்குப் பழங்கால நடத்தையை மீறி, உத்தாலகரின் மகன் ஸ்வேதகேதுவால் நிறுவப்பட்டதுதான் இந்த நடைமுறை.(20) ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, சௌதாசனின் மனைவி மதயந்தி, தனது கணவனால் பிள்ளை பெறப் பணிக்கப்பட்டு விசஷ்ட முனிவரிடம் சென்றாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(21) அவரிடம் சென்ற அந்த அழகான மதயந்தி அஸ்மகன் என்ற மகனைப் பெற்றாள். அவள் {மதயந்தி} தனது கணவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலேயே அப்படிச் செய்தாள்.(22) ஓ தாமரைக் கண்களுடையவளே {குந்தியே}, ஓ மருண்ட மங்கையே, குரு பரம்பரையின் நீட்சிக்காகக் கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} நாங்கள் எப்படிப் பெறப்பட்டோம் என்பதை நீ அறிவாய்.(23) ஓ குற்றமில்லாதவளே, இந்த மேற்கோள்களைக் கண்டு, அறத்துடன் முரண்படாத எனது ஆணையை நீ நிறைவேற்ற வேண்டும்.(24)
ஓ கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் இளவரசியே, ஒரு மனைவி, மற்ற நேரங்களில் அவளுக்குச் சுதந்திரம் தேவைப்பட்டாலும், தனது மாதவிடாய் முடிந்ததும், எப்போதும் தனது கணவனை நாட வேண்டும் என்று ஒழுக்க விதிகளை அறிந்தவர்களால் சொல்லப்பட்டுள்ளது. இக்காரியத்தை ஞானமுள்ளோர் தொன்மையான நடைமுறை என்கின்றனர்.(25,26) ஆனால், ஒரு காரியம் பாவமானதோ, பாவமற்றதோ, கணவன் பணிப்பதை மனைவியர் செய்வது அவர்களது கடமை என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன.(27) குறிப்பாக, ஓ களங்கமில்லாதவளே, உற்பத்தி திறனை இழந்த நான், பிள்ளைப்பேற்றைக் காண விரும்புவதால், நீ மேலும் அதிகமாக எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(28) ஓ இனிமையானவளே, உன்னை இக்காரியத்தை ஏற்க வைக்கச் சிவந்த விரல்களுடைய எனது கரங்களைத் தாமரையாலான குவளையாய்க் குவித்து, அவற்றை எனது தலைக்கு மேல் வைத்துக் கேட்கிறேன்.(29) ஓ ஆழ்ந்த பார்வை கொண்டவளே {குந்தியே}, எனது கட்டளையின் பேரில் நீ, உயர்ந்த ஆன்மத் தகுதியுடைய பிராமணர் மூலம் பிள்ளை பெற வேண்டும். ஓ அழகிய இடையுடையவளே, நீ செய்யும் அந்தக் காரியத்தால், நான், பிள்ளைகளால் அருளப்பட்டவர்கள் செல்லும் இடத்திற்குச் செல்வேன்" என்றான்.(30)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "எதிரி நகரங்களை அடக்கியவனான அந்தப் பாண்டு இப்படிச் சொன்னதும், தன் தலைவனால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், தனது கணவனுக்கு நன்மை பயக்கக்கூடியதுமான எந்தச் செயலையும் கவனத்துடன் செய்யும் அவ்வழகிய குந்தி,(31) "ஓ தலைவா, எனது கன்னிப்பருவத்தில், எனது தந்தையின் {வளர்ப்புத் தந்தை குந்திபோஜனின்} வசிப்பிடத்தில் விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கடும் விரதமிருக்கும் பெரும் ஆன்மத் தகுதியுடைய பிராமணர்களையும் மரியாதையுடன் கவனித்து வந்தேன்.(32) ஒருநாள், மனத்தைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவரும், அறத்தின் புதிர்களில் ஞானம் கொண்டவரும், துர்வாசர் என்று மக்களால் அழைக்கப்படுபவருமான ஒரு பிராமணரைப் பணிவுடன் கவனித்து அவரது அருளைப் பெற்றேன்.(33) எனது சேவையால் மனநிறைவுற்ற அந்தப் பிராமணர் {துர்வாசர்}, தேவர்களில் எவரையும் எனது இருப்புக்கு அழைக்கும் ஒரு மந்திரத்தை எனக்கு வரமாகத் தந்தார்.(34)
அந்த முனிவர், "இந்த மந்திரத்தைக் கொண்டு தேவர்களில் எவனை நீ அழைக்கிறாயோ, அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன்னை அணுகி, உனது விருப்பத்திற்குக் கீழ்ப்படிவான்.(35) ஓ இளவரசி, நீ அவனது அருளால் பிள்ளை பெறுவாய்" என்றார்.
ஓ பாரதரே, நான் எனது தந்தையின் இல்லத்தில் வாழ்ந்த போது, அந்த பிராமணர் என்னிடம் இப்படிச் சொன்னார்.(36) அந்தப் பிராமணரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் பொய்யாக முடியாது. அந்த வரத்தின் கனியை அடையத் தகுந்த காலமும் வந்துவிட்டது. ஓ அரச முனிவரே {பாண்டுவே}, நன்மக்களைப் பெற உம்மால் பணிக்கப்பட்டவளான என்னால் தேவர்களில் எவரையும் அழைக்க முடியும்.(37) ஓ உண்மை பேசும் மனிதர்களில் முதன்மையானவரே, நான் தேவர்களில் யாரை அழைப்பது என்று எனக்குச் சொல்வீராக. இக்காரியத்தில், நான் உமது ஆணைக்காகக் காத்திருக்கிறேன் என்பதையும் அறிந்து கொள்வீராக" என்றாள்.(38)
இதைக் கேட்ட பாண்டு, "ஓ அழகானவளே {குந்தியே}, நற்பேறுபெற்றவளே, நமது விருப்பத்தை இன்றே ஈடேற்றிக் கொள்ள, நீதி தேவனை {யமதர்மராஜனை} அழைப்பாயாக. அவனே தேவர்களில் அறம் மிக்கவன்.(39) தர்மதேவனாலும், அறத்தாலும் நம்மைப் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுத்த முடியாது ஓ அழகிய இளவரசியே, அதனால், புனிதமற்ற எந்தக் காரியத்தையும் நாம் செய்யவில்லை என்று உலகமும் நினைக்கும்.(40) அவன் {தர்மதேவன்} மூலமாக நாம் பெறும் மகன், அறம்சார்ந்து குருக்களில் முதன்மையானவனாக இருப்பான் என்பது நிச்சயம். நீதி மற்றும் ஒழுக்கத்திற்கு அதிபதியான {தர்ம} தேவனால் பெறப்படுபவன், தனது இதயத்தைப் பாவகாரியத்திலும், புனிதமற்ற காரியத்திலும் ஈடுபடுத்த மாட்டான்.(41) எனவே, ஓ இனிய புன்னகையுடையவளே, அறத்தை உன் கண்முன் நிலையாக வைத்து, புனிதமான நோன்புகளைக் கடைப்பிடித்து, நீதிக்கும், அறத்திற்குமான தேவனை உனது மந்திரங்களின் உதவியைக் கொண்டு அழைப்பாயாக" என்றான் {பாண்டு}.(42)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, பெண்களில் சிறந்த குந்தி, தனது தலைவனால் இப்படிச் சொல்லப்பட்டு, "அப்படியே ஆகட்டும்" என்றாள். அவனுக்குத் தலைவணங்கி, மரியாதையுடன் அவனை {பாண்டுவை} வலம் வந்து, அவன் குறித்த காரியத்தை ஏற்றுக் கொண்டாள்" {என்றார் வைசம்பாயனர்}.(43)
ஆங்கிலத்தில் | In English |