Am I a fool?" asked Kunti! | Adi Parva - Section 124 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 60)
பதிவின் சுருக்கம் : பாண்டுவிடம் பேசிய மாத்ரி, மாத்ரிக்காகக் குந்தியிடம் பேசிய நகுலன்; நகுலன் மற்றும் சகாதேவன் பிறப்பு; பொறாமையடைந்த குந்தி; பாண்டவர்களுக்குப் பெயர் சூட்டல்; பாண்டவர்களின் வளர்ச்சி...
வைசம்பாயனர் சொன்னார், "குந்தியின் மகன்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும் பிறந்த பிறகு, மத்ர மன்னனின் மகள் {மாத்ரி} பாண்டுவிடம்,(1) "ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, நீர் எனக்கு நன்மை செய்யவில்லையென்று நான் உம்மைக் குறைசொல்லவில்லை. ஓ பாவங்களற்றவரே, பிறப்பால் நான் குந்தியைவிட உயர்ந்தவளாக இருப்பினும், இருப்பு நிலவரத்தில் நான் தாழ்ந்தவளாகவே இருக்கிறேன் என்று குறைசொல்லவில்லை.(2) ஓ குரு குலத்தவரே, காந்தாரி நூறு மகன்களைப் பெற்றுவிட்டாள் என்றும் நான் கவலை கொள்ளவில்லை.(3) குந்தியும் நானும் இணையானவர்களாகவே இருந்தாலும் உமக்குக் குந்தியின் மூலமாக பிள்ளைகள் இருக்க, நான் பிள்ளையில்லாமல் இருப்பதே என் பெரும் துயராகும்.(4) குந்திபோஜனின் மகள் நான் பிள்ளைப்பேறடைய விட்டாள் என்றால், அவள், எனக்கு நன்மை செய்ததோடு மட்டுமல்லாமல் உமக்கும் நன்மை செய்ததாகவே இருக்கும்.(5) அவள் எனது சக்காளத்தியாக இருப்பதால், அவளிடம் எனது நன்மையைக் கருதச் சொல்ல என்னால் முடியவில்லை. ஓ மன்னரே, நீர் என்னிடம் அன்பாக இருப்பது உண்மையென்றால், அவளிடம் எனது விருப்பத்தை நிறைவேற்றச் சொல்வீராக" என்றாள்.(6)
இதைக் கேட்ட பாண்டு, "ஓ மாத்ரி, இந்த எண்ணம் எனது மனத்திலும் ஓடிக் கொண்டுதான் இருந்தது, ஆனால், நீ அதை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று நினைத்தே, அதை உன்னிடம் சொல்லவில்லை.(7) இப்போது உனது விருப்பதை அறிந்து கொண்டதால், நிச்சயம் முயற்சி செய்வேன். நான் கேட்டு குந்தி மறுக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்" என்றான்".(8)
வைசம்பாயனர் தொடர்ந்தார், அதன்பிறகு பாண்டு குந்தியிடம் தனிமையில், "ஓ குந்தி, என் குல வளர்ச்சிக்காகவும், உலகத்தின் நன்மைக்காகவும் எனக்கும் மேலும் சில பிள்ளைகளைக் கொடுப்பாயாக. ஓ அருளப்பட்டவளே, நானும், என் மூதாதையர்களும், ஏன் நீயும்கூட எப்போதும் ஈமப்பிண்டம் பெற எது வழிவகுக்குமோ அஃதை அளிப்பாயாக. ஓ, எனக்கு நன்மையானதைச் செய்து, உண்மையில் நன்மைகளில் சிறந்ததை எனக்கும் இந்த உலகத்திற்கும் கொடுப்பாயாக.(9,10) ஓ, அழியா புகழை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, உனக்குக் கடுமையானதையும் செய்வாயாக. இந்திரன் தேவர்களின் அரசுரிமையை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே வேள்விகளைச் செய்வதைப் பார்.(11) ஓ அழகியே, பிராமணர்கள் வேதங்களை நன்கறிந்து கொண்டு, உயர்ந்த தவத்தகுதியை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே தங்கள் ஆன்ம ஆசான்களை மரியாதையுடன் அணுகுகின்றனர்.(12) அதே போலவே, அரச முனிகள் அனைவரும், தவத்தை செல்வமாகக் கொண்ட பிராமணர்களும் சாதித்துவிட்டாலும், புகழுக்காகவே மிகக்கடினமான தவத்தை சாதனைகளைச் செய்கின்றனர்.(13) எனவே, ஓ பழியற்றவளே, ஒரு ஓடத்தைக் கொடுத்து (சந்ததியை அடைவதற்கான வழிகளை அருளி) இந்த மாத்ரியைக் காத்து, அவளைப் பிள்ளைகளுக்குத் தாயாகச் செய்து அழிவிலா புகழை அடைவாயாக" என்றான் {பாண்டு}.(14)
தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட குந்தி, அதற்குச் சம்மதித்து மாத்ரியிடம், "நேரத்தையிழக்காமல், தேவர்களில் எவரையாவது நினைப்பாயாக. அவர் மூலமாக, அவரையே போன்ற பிள்ளையை நீ நிச்சயம் பெறுவாய்" என்றாள்.(15) மாத்ரி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அசுவினி இரட்டையர்களை நினைத்தாள். அந்த அசுவினிகள் வேகமாக அவளிடம் வந்து, பூலோகத்தின் ஒப்பற்ற அழகர்களான நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர்களைப் பெற்றனர். அவர்கள் பிறந்த போது ஓர் அசரீரி,(16,17) "சக்தியிலும், அழகிலும் இந்த இரட்டையர்கள், அசுவினி இரட்டையர்களைக் காட்டிலும் மேலானவர்களாக இருப்பார்கள்." என்றது. அக்குழந்தைகள் பெரும் சக்தியும், அழகும் கொண்டு, அந்த மொத்தப் பகுதியையும் பிரகாசிக்கச் செய்தனர்.(18)
ஓ மன்னா! அந்தப் பிள்ளைகள் பிறந்த பிறகு, அந்த நூறு சிகரம் கொண்ட மலையில் வசித்த முனிவர்கள் அவர்களை வாழ்த்தி, அவர்களது பிறப்பிற்கான முதல் சடங்கைச் செய்து, அவர்களுக்கான பெயர்களைச் சூட்டினர்.(19) குந்தியின் மக்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் என்றும், இரண்டாமவன் பீமசேனன் என்றும், மூன்றாமவன் அர்ஜுனன் என்றும்,(20) மாத்ரியின் மக்களில் முதலில் பிறந்தவன் நகுலன் என்றும் அடுத்தவன் சகாதேவன் என்றும் அழைக்கப்பட்டனர்[1]. {அந்தப் பிராமணர்கள் இவ்வாறே மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்}.(21)
மைந்தர்களின் முதன்மையான அவர்கள், ஒருவருக்கொருவர் ஒரு வருட இடைவெளியில் பிறந்து ஐந்து வருடங்களின் முழு உருவமாகத் திகழ்ந்தனர்[2].(22) தேவர்களைப் போன்ற அழகும், அபரிமிதமான சக்தியும், பெரும் பலமும் வீரமும் கொண்டு ஆன்மாவில் பெரியவர்களாகவும் இருந்த தன் பிள்ளைகளைக் கண்டு மன்னன் பாண்டு மிகவும் மகிழ்ந்தான். நூறு சிகரம் கொண்ட அந்த மலையில் வசித்த முனிவர்களுக்கு அந்தப் பிள்ளைகள் பிடித்தமானவர்களாகினர்.(23,24)
சில காலம் கழித்துப் பாண்டு மறுபடியும் குந்தியிடம் மாத்ரிக்காகப் பேசினான். ஓ மன்னா! தனிமையில் தனது தலைவனால் கேட்கப்பட்ட குந்தி,(25) "ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா?(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மேலும் கட்டளையிடாதீர். இதுவே நீர் எனக்குத் தரும் வரமாக இருக்கட்டும்" என்றாள்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே பாண்டுவுக்குப் பெரும் பலமுடைய ஐந்து பிள்ளைகள் தேவர்கள் மூலமாகப் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பெரும் புகழை அடையவும், குரு பரம்பரையை விரிவாக்கவும் செய்தனர். அனைவரும் தங்கள் மேனியில் அதிர்ஷ்டக்குறிகளைக் கொண்டு, சோமனைப் (சந்திரனைப்) போன்ற அழகுடனும்,(28,29) சிங்கத்தைப் போன்ற செருக்குடனும், சிங்கத்தைப் போன்ற நடை, மார்பு, கண்கள், கழுத்து மற்றும் வீரமும் பெற்று, வில்லைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று[3], மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்து, பலத்தில் தேவர்களைப் பிரதிபலித்து வளர்ந்தனர்.(30) பனி மூடியிருந்த அந்தப் புனிதமான மலையில் வசிக்கும் பெரும் முனிவர்கள், அக்குழந்தைகள் வளர்வது போலவே, அவர்களது அறங்களும் வளர்வதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(31) குரு பரம்பரையை விரிவாக்கப்பிறந்த ஐந்து பாண்டவர்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், ஏரியில் வளரும் தாமரைக்கூட்டங்களைப் போல வேகமாக வளர்ந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(32)

[1] யுதிஷ்டிரன் என்றால் "போரில் புறமுதுகிடாமல் உறுதியாக நிற்பவன்" என்றும், பீமசேனன் என்றால், "அனைவரும் அஞ்சத்தக்க படையை {சேனையைக்} கொண்டவன்" என்றும், அர்ஜுனன் என்றால், "குற்றமில்லாதவன்" என்றும், நகுலன் என்றால்,, "பாம்புகளுக்குக் கீரியைப் போலப் பகைவர்களுக்குப் பயங்கரமானவன்" என்றும், சகாதேவன் என்றால், "அன்னையிடம் வேற்றுமையின்றி பிற சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பவன்" என்றும் பொருளாம்.
மைந்தர்களின் முதன்மையான அவர்கள், ஒருவருக்கொருவர் ஒரு வருட இடைவெளியில் பிறந்து ஐந்து வருடங்களின் முழு உருவமாகத் திகழ்ந்தனர்[2].(22) தேவர்களைப் போன்ற அழகும், அபரிமிதமான சக்தியும், பெரும் பலமும் வீரமும் கொண்டு ஆன்மாவில் பெரியவர்களாகவும் இருந்த தன் பிள்ளைகளைக் கண்டு மன்னன் பாண்டு மிகவும் மகிழ்ந்தான். நூறு சிகரம் கொண்ட அந்த மலையில் வசித்த முனிவர்களுக்கு அந்தப் பிள்ளைகள் பிடித்தமானவர்களாகினர்.(23,24)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில், "குருக்களில் சிறந்தவர்களான அந்தப் பாண்டு மகன்கள் ஒவ்வொருவரும், ஒரு வயதாக இருக்கும்போதே ஐந்து வயது சிறுவர்களைப் போலத் தெரிந்தனர்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "கௌரவ சிரேஷ்டர்களாகிய பாண்டுபுத்திரர்கள் ஒவ்வொரு வருஷத்திற்குப் பின் பிறந்தவராயினும் எல்லாரும் சிறந்த சுபாவமுள்ளவர்களும், மிகுந்த சக்தியுள்ளவர்களும், சிறந்த பலமும், பராக்ரமமுமுடையவர்களுமாக ஐந்து வருஷங்களானவர்கள் போல் விளங்கினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.
சில காலம் கழித்துப் பாண்டு மறுபடியும் குந்தியிடம் மாத்ரிக்காகப் பேசினான். ஓ மன்னா! தனிமையில் தனது தலைவனால் கேட்கப்பட்ட குந்தி,(25) "ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா?(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மேலும் கட்டளையிடாதீர். இதுவே நீர் எனக்குத் தரும் வரமாக இருக்கட்டும்" என்றாள்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே பாண்டுவுக்குப் பெரும் பலமுடைய ஐந்து பிள்ளைகள் தேவர்கள் மூலமாகப் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பெரும் புகழை அடையவும், குரு பரம்பரையை விரிவாக்கவும் செய்தனர். அனைவரும் தங்கள் மேனியில் அதிர்ஷ்டக்குறிகளைக் கொண்டு, சோமனைப் (சந்திரனைப்) போன்ற அழகுடனும்,(28,29) சிங்கத்தைப் போன்ற செருக்குடனும், சிங்கத்தைப் போன்ற நடை, மார்பு, கண்கள், கழுத்து மற்றும் வீரமும் பெற்று, வில்லைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று[3], மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்து, பலத்தில் தேவர்களைப் பிரதிபலித்து வளர்ந்தனர்.(30) பனி மூடியிருந்த அந்தப் புனிதமான மலையில் வசிக்கும் பெரும் முனிவர்கள், அக்குழந்தைகள் வளர்வது போலவே, அவர்களது அறங்களும் வளர்வதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(31) குரு பரம்பரையை விரிவாக்கப்பிறந்த ஐந்து பாண்டவர்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், ஏரியில் வளரும் தாமரைக்கூட்டங்களைப் போல வேகமாக வளர்ந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(32)
[3] கும்பகோணம் பதிப்பில், பாண்டுவுக்கு மகன்கள் பிறந்ததைக் கேள்விப்பட்டு வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, தம் புரோகிதரை அனுப்பி, சௌளம், உபநயனம், உபாகர்மம் ஆகியவற்றைச் செய்தார் என்றும், சர்யாதியின் மூத்த மகனான சுகன் என்ற மன்னன் சதசிருங்கத்தில் அப்போது இருந்ததாகவும், அவன் மூலமாகப் பாண்டவர்கள் பெரும் வில்வீரர்களானார்கள் என்றும், அவர்களுக்கு அவன் அனைத்து ஆயுதங்களையும் கொடுத்தான் என்றும், பீமன் கதாயுத்தத்திலும், யுதிஷ்டிரன் ஈட்டிப்போரிலும், நகுலன் சகாதேவர்கள் கத்தி கேடயங்களில் தேர்ந்தார்கள் என்றும், அதில் அர்ஜுனனை மட்டும் அந்தச் சுகன் தனக்கு நிகரானவனாகக் கருதினான் என்றும் இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |