The Lust of Pandu over Madri! | Adi Parva - Section 125 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 61)
பதிவின் சுருக்கம் : மாத்ரியிடம் மோகம் கொண்ட பாண்டு கலவியின் போதே இறந்தது; மாத்ரியும் அவனுடன் சிதையேறியது...
வைசம்பாயனர் சொன்னார்,[1] "மலைச்சரிவில் இருந்த கானகத்தில் தன் முன் வளர்ந்து வரும் தன் மகன்களைக் கண்ட பாண்டு, தனது பலம் மீட்டெடுக்கப்பட்டது போல உணர்ந்தான்.(1)
ஒரு நாள், அனைத்து உயிர்களையும் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு வசந்த காலத்தில், ஒவ்வொரு மரமும் புதிய இலைகளால் மலர்ந்திருக்கும் அந்த வனத்தில், அந்த மன்னன் தனது மனைவியுடன் (மாத்ரியுடன்) உலவிக் கொண்டிருந்தான்.(2) அந்தக் கானகத்தில் பலாசம், திலகம், மா, சம்பகம், பரிஹத்திரகம், கர்ணிகரம், அசோகம், கேசரம், அதிமுகம், கருவாகம் ஆகிய மரங்களில் பித்தம்பிடித்த வண்டுகளின் கூட்டம் ரீங்காரமிட்டபடி இருந்தன. மலர்ந்திருந்த பாரிஜாதம், கோகிலம் ஆகிய மலர்களில் வண்டுகள் அமர்ந்து இனிமையாக ரீங்காரம் இசைத்தன. பல்வேறு மரங்கள், தங்கள் பூக்கள் மற்றும் கனிகளின் கனத்தால் தாழ்ந்து இருந்ததைக் கண்டான்.(3-5) அங்கே, நூற்றுக்கணக்கான தாமரைகளுடன் பல குளங்களும் இருந்தன. இதையெல்லாம் கண்ட பாண்டு, காமத்தின் சிறு ஆதிக்கத்தை அவனுள் உணர்ந்தான்.(6)
அந்த அற்புதக் காட்சிகளின் மத்தியில், தேவர்களில் ஒருவனைப் போலப் பாரமற்ற இதயத்துடன் உலவிக்கொண்டிருந்த பாண்டு, அரை வெளிப்படையான மெல்லிய ஆடையை அணிந்திருந்த தனது மனைவி மாத்ரியுடன் தனிமையில் இருந்தான்.(7) இளமையான மாத்ரியின் உடுப்பைக் கண்ட மன்னனின் ஆசை காட்டுத்தீயைப் போலப் பற்றிக் கொண்டது.(8) அந்தத் தனிமையான கானகத்தில் தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய தனது மனைவியைக் கண்டு ஆசையை அடக்க இயலாமல், அவன் காமத்தால் வெற்றிகொள்ளப்பட்டான்.(9) அந்த மன்னன் அவளது விருப்பத்திற்கு எதிராக அவளைப் பற்றி இழுத்தான். ஆனால், மாத்ரி பயத்தால் நடுங்கி, அவளால் முடிந்த வரை பலத்துடன் தடுத்துப் பார்த்தாள்.(10)
காமத்தால் உண்ணப்பட்ட பாண்டு, தனது துரதிர்ஷ்டத்தால் அனைத்தையும் மறந்தான். ஓ குரு பரம்பரையில் வந்தவனே, அந்த ஏகாதிபதி! விதிவசத்தால் முனிவரின் சாபத்தில் பயமற்று, ஆசையால் வெல்லப்பட்டுத் தானே தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தவன் போல, வலுக்கட்டாயமாக மாத்ரியின் அணைப்பைப் பெற முற்பட்டான். புலன்களின் உணர்வில் மயங்கி, உணர்வை இழந்து, மரண தேவனிடம் {காலனிடம்} தானே அகப்பட்டுக் கொண்டான்.(11-13)
அற ஆன்மா கொண்டவனான அந்தக் குருக்களின் மன்னன் பாண்டு, தனது மனைவியுடன் உறவு கொண்டவாறே, தவிர்க்க முடியாத காலத்தின் செல்வாக்கால் மாண்டு போனான்.(14) பிறகு மாத்ரி தனது தலைவனின் சடலத்தை அணைத்தவாறே ஓலமிட்டுக் கதறி அழுதாள்.(15) துயரமான அந்தக் கதறலைக் கேட்ட குந்தி, தனது மகன்களுடனும், மாத்ரியின் மகன்களுடனும், மன்னன் அப்படிக் கிடந்த பகுதிக்கு வந்தாள்.(16)
பிறகு ஓ மன்னா! மாத்ரி குந்தியிடம் பரிதாபகரமான குரலில், "ஓ குந்தி, இங்கே தனியாக வா, பிள்ளைகள் அங்கேயே இருக்கட்டும்" என்றாள்.(17) இதைக் கேட்ட குந்தி, பிள்ளைகளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு "எனக்குக் கேடு வந்தது" என்று சொல்லி, அழுதுகொண்ட வேகமாக ஓடினாள்.(18) பாண்டுவும் மாத்ரியும் தரையில் கிடந்த கோலத்தைக் கண்ட அவள், துயரத்தாலும் வருத்தத்தாலும்,(19) "ஓ மாத்ரி, ஆசையை முழுமையாக அடக்கி, இந்த வீரரைப் பாதுகாப்பாகக் காத்து வந்தேனே. முனிவரின் சாபத்தை மறந்து, காமத்துடன் உன்னை அவர் எப்படி அணுகினார்?(20) ஓ மாத்ரி, இந்த மனிதர்களின் முதன்மையானவர் உன்னால் காக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனிமையில் நீ ஏன் அவரை மயக்கினாய்?(21) முனிவரின் சாபத்தால் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு உன்னிடம் தனிமையில் மகிழ்வாக இருக்க எவ்வாறு முடிந்தது?(22) ஓ பாஹ்லீக இளவரசியே {மாத்ரியே}, நமது தலைவனின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்ததை நீ கண்டாய், நீ என்னைவிட நற்பேறு பெற்றவள். இதற்காகவே நீ என்னால் எதிரியாகக் கருதப்பட வேண்டியவள்" என்றாள்.(23)
மாத்ரி, "மரியாதைக்குரிய சகோதரி, எனது கண்கள் கண்ணீரால் நிரம்ப, நான் மன்னரைத் தடுத்துப் பார்த்தேன். ஆனால் அவரால் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. முனிவரின் சாபத்தை மெய்யாக்க முற்படுவது போலவே அவரது செயல்பாடு இருந்தது" என்றாள்.(24)
குந்தி, "அவர் மணந்த மனைவியருள் நானே மூத்தவள், தலைமைத் தகுதி என்னுடையதே. எனவே, ஓ மாத்ரி, நான் அடைய வேண்டியதை அடைய விடாமல் தடுக்காதே. நான் நமது தலைவரை மரணத் தேவன் வசிக்கும் பகுதிக்கும் தொடர்ந்து செல்ல வேண்டும். ஓ மாத்ரி, எழுந்து, அவரது உடலை எனக்குக் கொடுப்பாயாக. இந்தக் குழந்தைகளை நீயே வளர்ப்பாயாக" என்றாள்.(25,26)
அதற்கு மாத்ரி, "நான் இன்னும் நமது தலைவனின் கட்டுக்குள் இருந்தும், அவரிடம் இருந்தும் பிரியாமல் இணைந்திருக்கிறேன். எனவே, நானே அவரைத் தொடர்வேன். எனது பசி {ஆசை} இன்னும் தணிவடையவில்லை. நீ எனக்கு மூத்த சகோதரி, எனவே, உனது ஏற்பை எனக்குக் கொடுப்பாயாக.(27) இந்தப் பாரதக் குல இளவரசர்களின் முதன்மையானவர் உறவுக்காக என்னை அணுகினார். அவரது பசியும் தணிவையடையவில்லை. நான் யமனின் உலகத்திற்குச் சென்றாவது அவரது பசியைத் தீர்க்க வேண்டாமா?(28) ஓ மரியாதைக்குரியவளே, உனக்குப் பதில் நான் பிழைத்து இருந்தால், நிச்சயமாக உனது பிள்ளைகளை எனது பிள்ளைகள் போல் கருதி வளர்க்க முடியாது. அதனால் எனக்குப் பாவம் சம்பவிக்காதா?(29) ஆனால் நீயோ, ஓ குந்தி, எனது பிள்ளைகளையும் உனது பிள்ளைகள் போல் வளர்ப்பாய். மன்னர், என்னை விரும்பியே பிதிர்களின் உலகத்தை அடைந்தார்.(30) எனவே, எனது உடலும் அவருடன் எரிக்கப்பட வேண்டும். ஓ மரியாதைக்குரிய சகோதரி, எனக்கு ஏற்புடைய இந்த விஷயத்தை மறுக்காதே.(31) நீ இந்தப் பிள்ளைகளை நிச்சயமாகக் கவனத்துடன் வளர்ப்பாய். அதுவே நீ எனக்குச் செய்யும் பெரும் நன்மையாகும். உனக்கு வேறேதும் சொல்ல எனக்குத் தெரியவில்லை" என்றாள்.( 32)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மத்ர மன்னனின் மகளான அந்தப் பாண்டுவின் மனைவி இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மனிதர்களில் காளையான தனது தலைவனின் ஈமச்சிதையில் ஏறினாள்" {என்றார் வைசம்பாயனர்}[2].(33)
[1] கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பே சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன, அவை பின்வருமாறு: "பாண்டவர்களின் ஆயுளைச் சொல்கிறேன்; கேளும். அஸ்தினாபுரம் போனபோது யுதிஷ்டிரருக்குப் பிராயம் பதினாறு; பீமசேனனுக்குப் பதினைந்து; அர்ஜுனனுக்குப் பதினான்கு; நகுலஸஹதேவர்களுக்குப் பதின்மூன்று. அந்த அஸ்தினாபுரத்தில் பதின்மூன்றுவருஷகாலம் த்ருதராஷ்டிர புத்ரர்களோடு வஸித்தனர். அரக்கு மாளிகையிலிருந்து விடப்பட்டு ஆறு மாஸமிருந்தனர். அப்போது கடோத்கசன் பிறந்தான். ஏகசக்ராநகரியில் ஆறு மாஸமிருந்தனர். பாஞ்சாலராஜன் கிருஹத்தில் ஒரு வருஷம் வஸித்தனர். பாரதரே! த்ருதராஷ்டிர புத்ரர்களுடன் கூட மறுபடியும் ஐந்து வருஷம் வாஸஞ்செய்து, பிறகு இந்திரப்பிரஸ்தத்தில் இருபத்துமூன்று வருஷம் வஸித்தனர். பிறகு, சூதாட்டத்தில் தோல்வியடைந்து பதின்மூன்று வருஷம் இருந்தனர். ராஜாவே! கிருஷ்ணயை {திரௌபதியை} ஆதாரமாகவுடைய அம்மஹாத்மாக்களனைவரும் கடல்சூழ்ந்த பூமியை முப்பத்தாறு வருஷம் ஆண்டு, அதன்பின் ஆறு மாஸங்களுக்குப் பிறகு பரிக்ஷித்துக்கு ராஜ்யபட்டாபிஷேகஞ்செய்து, தெய்வகதியையடைந்தனர். இவ்வாறு யுதிஷ்டிரருக்கு நூற்றெட்டு வருஷம் ஆயுளிருந்தது. சிறந்த மஹிமையுள்ள கிருஷ்ணபகவான் அர்ச்சுனனுக்கு மூன்று மாதம் பெரியவர். மஹாபலசாலியான பலராமர், கிருஷ்ணனுக்கு மூன்று மாதம் பெரியவர். அப்போது மிகுந்த பராக்ரமசாலியான பாண்டு சதச்ருங்க மலையில் காசியபரென்னும் புரோஹிதரோடும், தன் தேவிமார்களோடுங்கூட அந்த ஐந்து புத்ரர்களையும் பார்த்துக் கொண்டு மிகவும் மகிழ்வுற்றிருந்தான். வனங்களில் புஷ்பங்கள் மிகுதியாகவுள்ள சித்திரை வைகாசி மாதங்களாகிய வஸந்தகாலத்தின் ஆரம்பத்தில், புத்திசாலியான அர்ஜுனனுக்குப் பதினான்காவது பிராயம் நிரம்பி அவன் பிறந்த உத்தர பல்குனி நக்ஷத்திரம் வந்த தினத்தினால் ஸ்வஸ்திவாசனம் நடத்துவதிலும், பிராமணபோஜனம் செய்விப்பதிலும் பிரவிர்த்திருந்த குந்தியானவள், பாண்டு மஹாராஜாவைக் காப்பாற்றுகிற விஷயத்தில் மறந்திருந்தாள்; புரோகிதருக்கும், மற்ற ப் பிராமணர்களுக்கும் போஜனம் பரிமாரிக் கொண்டிருந்தாள். பிறகு, தன் கைவன்மையைச் சகாயமாகவுடைய பாண்டு, வனங்கள் செவ்வையாகப் புஷ்பித்து எல்லாப் பிராணிகளையும் மயங்கச் செய்வதாகிய சித்திரை வைகாசி மாதங்களாகிய வஸந்த காலத்தில் பெருங்காடடர்ந்த அழகான சதச்ருங்க மலையில் பார்ப்பதற்கினிய தன் புத்ரர்களான அந்த ஐவரையும் பார்த்துக் கொண்டே பாரியையுடன் வனத்தில் திரிந்தான்" என்றிருக்கிறது.
ஒரு நாள், அனைத்து உயிர்களையும் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு வசந்த காலத்தில், ஒவ்வொரு மரமும் புதிய இலைகளால் மலர்ந்திருக்கும் அந்த வனத்தில், அந்த மன்னன் தனது மனைவியுடன் (மாத்ரியுடன்) உலவிக் கொண்டிருந்தான்.(2) அந்தக் கானகத்தில் பலாசம், திலகம், மா, சம்பகம், பரிஹத்திரகம், கர்ணிகரம், அசோகம், கேசரம், அதிமுகம், கருவாகம் ஆகிய மரங்களில் பித்தம்பிடித்த வண்டுகளின் கூட்டம் ரீங்காரமிட்டபடி இருந்தன. மலர்ந்திருந்த பாரிஜாதம், கோகிலம் ஆகிய மலர்களில் வண்டுகள் அமர்ந்து இனிமையாக ரீங்காரம் இசைத்தன. பல்வேறு மரங்கள், தங்கள் பூக்கள் மற்றும் கனிகளின் கனத்தால் தாழ்ந்து இருந்ததைக் கண்டான்.(3-5) அங்கே, நூற்றுக்கணக்கான தாமரைகளுடன் பல குளங்களும் இருந்தன. இதையெல்லாம் கண்ட பாண்டு, காமத்தின் சிறு ஆதிக்கத்தை அவனுள் உணர்ந்தான்.(6)
அந்த அற்புதக் காட்சிகளின் மத்தியில், தேவர்களில் ஒருவனைப் போலப் பாரமற்ற இதயத்துடன் உலவிக்கொண்டிருந்த பாண்டு, அரை வெளிப்படையான மெல்லிய ஆடையை அணிந்திருந்த தனது மனைவி மாத்ரியுடன் தனிமையில் இருந்தான்.(7) இளமையான மாத்ரியின் உடுப்பைக் கண்ட மன்னனின் ஆசை காட்டுத்தீயைப் போலப் பற்றிக் கொண்டது.(8) அந்தத் தனிமையான கானகத்தில் தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய தனது மனைவியைக் கண்டு ஆசையை அடக்க இயலாமல், அவன் காமத்தால் வெற்றிகொள்ளப்பட்டான்.(9) அந்த மன்னன் அவளது விருப்பத்திற்கு எதிராக அவளைப் பற்றி இழுத்தான். ஆனால், மாத்ரி பயத்தால் நடுங்கி, அவளால் முடிந்த வரை பலத்துடன் தடுத்துப் பார்த்தாள்.(10)
காமத்தால் உண்ணப்பட்ட பாண்டு, தனது துரதிர்ஷ்டத்தால் அனைத்தையும் மறந்தான். ஓ குரு பரம்பரையில் வந்தவனே, அந்த ஏகாதிபதி! விதிவசத்தால் முனிவரின் சாபத்தில் பயமற்று, ஆசையால் வெல்லப்பட்டுத் தானே தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தவன் போல, வலுக்கட்டாயமாக மாத்ரியின் அணைப்பைப் பெற முற்பட்டான். புலன்களின் உணர்வில் மயங்கி, உணர்வை இழந்து, மரண தேவனிடம் {காலனிடம்} தானே அகப்பட்டுக் கொண்டான்.(11-13)
அற ஆன்மா கொண்டவனான அந்தக் குருக்களின் மன்னன் பாண்டு, தனது மனைவியுடன் உறவு கொண்டவாறே, தவிர்க்க முடியாத காலத்தின் செல்வாக்கால் மாண்டு போனான்.(14) பிறகு மாத்ரி தனது தலைவனின் சடலத்தை அணைத்தவாறே ஓலமிட்டுக் கதறி அழுதாள்.(15) துயரமான அந்தக் கதறலைக் கேட்ட குந்தி, தனது மகன்களுடனும், மாத்ரியின் மகன்களுடனும், மன்னன் அப்படிக் கிடந்த பகுதிக்கு வந்தாள்.(16)
பிறகு ஓ மன்னா! மாத்ரி குந்தியிடம் பரிதாபகரமான குரலில், "ஓ குந்தி, இங்கே தனியாக வா, பிள்ளைகள் அங்கேயே இருக்கட்டும்" என்றாள்.(17) இதைக் கேட்ட குந்தி, பிள்ளைகளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு "எனக்குக் கேடு வந்தது" என்று சொல்லி, அழுதுகொண்ட வேகமாக ஓடினாள்.(18) பாண்டுவும் மாத்ரியும் தரையில் கிடந்த கோலத்தைக் கண்ட அவள், துயரத்தாலும் வருத்தத்தாலும்,(19) "ஓ மாத்ரி, ஆசையை முழுமையாக அடக்கி, இந்த வீரரைப் பாதுகாப்பாகக் காத்து வந்தேனே. முனிவரின் சாபத்தை மறந்து, காமத்துடன் உன்னை அவர் எப்படி அணுகினார்?(20) ஓ மாத்ரி, இந்த மனிதர்களின் முதன்மையானவர் உன்னால் காக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனிமையில் நீ ஏன் அவரை மயக்கினாய்?(21) முனிவரின் சாபத்தால் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு உன்னிடம் தனிமையில் மகிழ்வாக இருக்க எவ்வாறு முடிந்தது?(22) ஓ பாஹ்லீக இளவரசியே {மாத்ரியே}, நமது தலைவனின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்ததை நீ கண்டாய், நீ என்னைவிட நற்பேறு பெற்றவள். இதற்காகவே நீ என்னால் எதிரியாகக் கருதப்பட வேண்டியவள்" என்றாள்.(23)
மாத்ரி, "மரியாதைக்குரிய சகோதரி, எனது கண்கள் கண்ணீரால் நிரம்ப, நான் மன்னரைத் தடுத்துப் பார்த்தேன். ஆனால் அவரால் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. முனிவரின் சாபத்தை மெய்யாக்க முற்படுவது போலவே அவரது செயல்பாடு இருந்தது" என்றாள்.(24)
குந்தி, "அவர் மணந்த மனைவியருள் நானே மூத்தவள், தலைமைத் தகுதி என்னுடையதே. எனவே, ஓ மாத்ரி, நான் அடைய வேண்டியதை அடைய விடாமல் தடுக்காதே. நான் நமது தலைவரை மரணத் தேவன் வசிக்கும் பகுதிக்கும் தொடர்ந்து செல்ல வேண்டும். ஓ மாத்ரி, எழுந்து, அவரது உடலை எனக்குக் கொடுப்பாயாக. இந்தக் குழந்தைகளை நீயே வளர்ப்பாயாக" என்றாள்.(25,26)
அதற்கு மாத்ரி, "நான் இன்னும் நமது தலைவனின் கட்டுக்குள் இருந்தும், அவரிடம் இருந்தும் பிரியாமல் இணைந்திருக்கிறேன். எனவே, நானே அவரைத் தொடர்வேன். எனது பசி {ஆசை} இன்னும் தணிவடையவில்லை. நீ எனக்கு மூத்த சகோதரி, எனவே, உனது ஏற்பை எனக்குக் கொடுப்பாயாக.(27) இந்தப் பாரதக் குல இளவரசர்களின் முதன்மையானவர் உறவுக்காக என்னை அணுகினார். அவரது பசியும் தணிவையடையவில்லை. நான் யமனின் உலகத்திற்குச் சென்றாவது அவரது பசியைத் தீர்க்க வேண்டாமா?(28) ஓ மரியாதைக்குரியவளே, உனக்குப் பதில் நான் பிழைத்து இருந்தால், நிச்சயமாக உனது பிள்ளைகளை எனது பிள்ளைகள் போல் கருதி வளர்க்க முடியாது. அதனால் எனக்குப் பாவம் சம்பவிக்காதா?(29) ஆனால் நீயோ, ஓ குந்தி, எனது பிள்ளைகளையும் உனது பிள்ளைகள் போல் வளர்ப்பாய். மன்னர், என்னை விரும்பியே பிதிர்களின் உலகத்தை அடைந்தார்.(30) எனவே, எனது உடலும் அவருடன் எரிக்கப்பட வேண்டும். ஓ மரியாதைக்குரிய சகோதரி, எனக்கு ஏற்புடைய இந்த விஷயத்தை மறுக்காதே.(31) நீ இந்தப் பிள்ளைகளை நிச்சயமாகக் கவனத்துடன் வளர்ப்பாய். அதுவே நீ எனக்குச் செய்யும் பெரும் நன்மையாகும். உனக்கு வேறேதும் சொல்ல எனக்குத் தெரியவில்லை" என்றாள்.( 32)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மத்ர மன்னனின் மகளான அந்தப் பாண்டுவின் மனைவி இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மனிதர்களில் காளையான தனது தலைவனின் ஈமச்சிதையில் ஏறினாள்" {என்றார் வைசம்பாயனர்}[2].(33)
[2] கும்பகோணம் பதிப்பில், மாத்ரி ஈமச்சிதையேறிய நிகழ்வு விரிவாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதன்பிறகு, பாண்டு மாத்ரியின் உடல்கள் ஹஸ்தினாபுரத்திற்குக் கொண்டு செல்லும் செய்தியும் சொல்லப்படுகிறது. மாத்ரி ஈமச்சிதையேறியது இங்கே ஒரே ஸ்லோகத்தில் சொல்லப்படுகிறது. இந்த ஒரு ஸ்லோகம் ஐயத்திற்கிடமானதே.
ஆங்கிலத்தில் | In English |