Janapadi seduced Saratwat! | Adi Parva - Section 130 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 66)
பதிவின் சுருக்கம் : கௌதமருக்குப் பிறந்த சரத்வான்; சரத்வானின் ஆயுத அறிவியல் நாட்டம்; ஜாலவதியைச் சரத்வானிடம் அனுப்பிய இந்திரன்; நாணற்கற்றையில் பிறந்த கிருபர் மற்றும் கிருபி; அவர்களை வளர்த்த சந்தனு; சந்தனுவிடம் அறிமுகம் செய்து கொண்டு கிருபருக்கு ஆயுத அறிவியலை அளித்த சரத்வான்; பாரத இளவரசர்களுக்குக் குருவான கிருபர்...
ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, கிருபரின் பிறப்புக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. நாணல் கற்றையிலிருந்து அவர் எவ்வாறு உண்டானார்? ஆயுதங்களை எவ்வாறு அவர் அடைந்தார்?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா! பெரும் முனிவர் கௌதமருக்கு சரத்வான் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தார். அந்தச் சரத்வான் பிறக்கும்போதே (கைகளில்) கணைகளுடன் {அம்புகளுடன்} பிறந்தார்.(2) ஓ எதிரிகளை அழிப்பவனே, கௌதமரின் மகன் மற்ற அறிவியல்களில் {வேத கல்வியில்} நாட்டம் கொள்ளாமல் ஆயுதங்களின் அறிவியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.(3) மாணவப் பருவத்தில் வேத ஞானத்தை அடையும் பிராமணர்களைப் போல, கடும் தவத்தால் அந்தச் சரத்வான் ஆயுதங்களை அடைந்தார்.(4) கௌதமர் (கௌதமரின் மகனான {சரத்வான்}, ஆயுத அறிவியலில் நாட்டம் கொண்டதாலும், தமது கடும் தவங்களாலும் இந்திரனைப் பெரிதும் அச்சமடையச் செய்தார்.(5)
ஓ குரு குலத்தோனே {ஜனமேஜயா}, அப்போது தேவர்கள் தலைவன் {இந்திரன்}, ஜனபதி {ஜாலவதி} என்ற தேவலோக மங்கையை அழைத்து, "கௌதமரின் தவத்தைக் கலைக்க உன்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்" என்று சொல்லிக் கௌதமரிடம் அனுப்பினான்.(6) அவள் அந்தச் சரத்வானின் அழகான ஆசிரமத்திற்குச் சென்று, வில் மற்றும் அம்புகளுடன் இருந்த அந்தத் துறவியை மயக்கினாள்.(7) உலகில் ஈடு இணை சொல்லமுடியாத வடிவழகுடன் கானகத்தில் தனிமையில் ஒற்றையாடையுடன் இருந்த அந்த அப்சரஸைக் கண்ட சரத்வானின் கண்கள் பெரு மகிழ்ச்சியால் அகல விரிந்தன.(8) அந்த மங்கையைக் கண்டதால், அவரது கைகளில் இருந்த வில்லும், கணைகளும் நழுவின, அவரது உடல் முழுவதும் உணர்ச்சியால் ஆட்டம் கண்டது.(9) இருப்பினும், அவரது உயர்ந்த தவத் திறனாலும், ஆன்ம பலத்தாலும், அத்துறவி உணர்வுகளை எதிர்த்துப் பொறுமை காத்தார்.(10) இருப்பினும் விரைவாக அவர் அடைந்த மாற்றங்களால், அவரை அறியாமல் அவரது உயிர் நீர் வெளியேறியது.(11)
அவர் தனது வில்லையும் கணைகளையும், மான் தோலையும் அங்கேயே விட்டுவிட்டு, அந்த அப்சரசை விட்டு அகன்று ஓடினார். இருப்பினும், அவரது உயிர் நீர் நாணற்கற்றையில் வீழ்ந்து, இருகூறாகப் பிரிந்து, இரட்டைப் பிள்ளைகள் அதிலிருந்து உற்பத்தியாகினர்.(12,13) அப்போது, சந்தனுவின் படையில் பணியாற்றுபவர்களில் ஒருவன் தற்செயலாக அந்த இரட்டையர்களைக் கண்டான்.(14) தரையில் வில்லும், அம்புகளும், மான் தோலும் இருப்பதைக் கண்டு, அவர்கள் யாரோ போர்க்கலையில் திறன்வாய்ந்த பிராமணரின் பிள்ளைகள் என்று நினைத்தான்.(15) இப்படித் தீர்மானித்து, அந்தப் பிள்ளைகளை வில் அம்புடன் எடுத்துக் கொண்டு சென்று காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த மன்னனிடம் காட்டினான்.
இதைக் கண்ட மன்னன் இரக்கங்கொண்டு,(16) "இவர்கள் எனது பிள்ளைகளாகட்டும்" என்று சொல்லி, அரண்மனைக்குக் கொண்டுவந்தான். மனிதர்களில் முதன்மையானவனும், பிரதீபனின் மகனுமான சந்தனு, கௌதமரின் இரட்டையர்களைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கான அறச்சடங்குகளைச் செய்வித்தான். அவர்களை வளர்க்கத் தொடங்கிய அவன், அவர்களைக் கிருபன் என்றும், கிருபி என்றும் அழைத்தான். தனது இரக்கத்தினால் (கிருபை) அவர்களை வளர்த்ததால் அவர்களுக்கு அப்பெயர்களை வைத்தான்.(17-19) கௌதமரின் மகன் {சரத்வான்}, தமது ஆசிரமத்தை விட்டகன்று, தொடர்ந்து ஆயுத அறிவியலை உறுதியுடன் பயின்றார்.பிறகு தனது தெய்வீகப் பார்வையால் தமது மகனும், மகளும் சந்தனுவின் அரண்மனையில் வளர்வதைக் கண்டார். இதன்காரணமாக அவர் அந்த ஏகாதிபதியிடம் சென்று, தனது குலம் முதல் அனைத்தையும் சொன்னார்.(20) அதன்பிறகு அவர் {சரத்வான்}, கிருபருக்கு ஆயுத அறிவியலின் நான்கு கிளைகளையும்[1], ஞானத்தின் பல கிளைகளையும் அதன் புதிர்களையும் விவரமாக எடுத்துரைத்தார்.(21) குறுகிய காலத்திற்குள் கிருபர் அந்த அறிவியலில் நிபுணத்துவம் பெற்றார். திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், பாண்டவர்களும், யாதவர்களும், விருஷ்ணிகளும் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்த பல இளவரசர்களும் அவரிடம் இருந்து ஆயுத அறிவியலில் பாடங்கள் கற்க அங்கே வந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(22,23)

[1] நான்கு வகைப் போர் = 1. ப்ரயோகம் - பயன்படுத்துவது, 2. சம்ஹாரம் - அழிப்பது 3.கல்பம் - ஆயுதத்துக்கு மந்திர பலம் கொடுப்பது 4. ரஹஸ்யம் - மறைமுக வித்தை
ஆங்கிலத்தில் | In English |