Bharadwaja's burning desire for Ghritachi | Adi Parva - Section 131 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 67)
பதிவின் சுருக்கம் : கிரிடச்சியைக் கண்டு மயங்கிய பரத்வாஜர்; துரோணரின் பெயர்க்காரணம்; துரோணருக்கு ஆயுத கல்வி அளித்த அக்னிவேசர்; துரோணரும் துருபதனும் நண்பர்களானது; துரோணர் கிருபியை மணந்து அஸ்வத்தாமனைப் பெற்றது; பரசுராமரிடம் ஆயுத ஞானத்தைப் பெற்ற துரோணர்; துருபதனைக் காணச் சென்ற துரோணர்...
வைசம்பாயனர் சொன்னார், "மேன்மையான கல்வியைத் தனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுக்க நினைத்த பீஷ்மர், பெரும் சக்தியும், போர் அறிவியலில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான ஓர் ஆசிரியரைத் தேடிக் கொண்டிருந்தார்.(1) ஓ பாரதர்களின் தலைவா, பெரும் புத்திசாலித்தனம் இல்லாத எவரும், ஆயுத அறிவியலின் நுட்பம் அறியாத எவரும், தேவர்களைப் போன்ற பலம் இல்லாத எவரும், குரு குலத்தவருக்குக் குருவாக இருக்கக்கூடாது என்றெண்ணிய கங்கையின் மைந்தன் {பீஷ்மர்}, ஓ மனிதர்களில் புலியே, பரத்வாஜரின் மகனும், வேதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான துரோணரின் கீழ் கல்வி பயில பாண்டவர்களையும், கௌரவர்களையும் அனுப்பினார். பீஷ்மரால் கொடுக்கப்பட்ட வரவேற்பினால் பெரிதும் மகிழ்ந்தவரும், உலகப்புகழ்பெற்றவரும், சிறப்புவாய்ந்தவருமான துரோணர் அந்த இளவரசர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(2-5) துரோணர் அவர்களுக்கு ஆயுத அறிவியலையும் அதன் கிளைகள் அனைத்தையும் பயிற்றுவித்தார். ஓ ஏகாதிபதி! பெரும் பலம் வாய்ந்த கௌரவர்களும், பாண்டவர்களும் குறுகிய காலத்திற்குள் அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(6)
ஜனமேஜயன், "ஓ பிராமணரே! துரோணர் எப்படிப் பிறந்தார்? அவர் ஆயுதங்களை எங்கே, எப்படி அடைந்தார்? அவர் குரு குலத்தவரிடம் எப்படி வந்தார்? ஏன் வந்தார்? பெரும் சக்தியுடைய அவர் யாருடைய மகனாவார்?(7) ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முதன்மையான அவரது மைந்தன் அஸ்வத்தாமன் எப்படிப் பிறந்தான்? இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்! அவற்றை விவரமாகச் சொல்லும்" என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர் சொன்னார், "பரத்வாஜர் என்ற பெயர் கொண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான ஒரு பெரும் முனிவர், கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கருகே கடும் தவம் செய்து கொண்டு இருந்தார்.(9) அவர், பழங்காலத்தில் ஒரு நாள், பல பெருமுனிகளுடன் சேர்ந்து, அக்னி ஹோத்ர வேள்வி செய்வதற்காகத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக் கங்கையில் நீராடச் சென்றார்.(10) அந்த நதிக்கரைக்கு வந்ததும், சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்திருந்த, அழகும், இளமையும் கொண்ட கிரிடச்சி {கிருதாசி} எனும் அப்சரஸைக் கண்டார்.(11) அவள், தனது முகபாவத்தில் பெருமையும், கவர்ச்சிகரமான சோர்வும் கொண்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு நீரிலிருந்து எழுந்தாள். அவள் கரையில் நடந்து வந்த போது, அவளது ஆடை மெல்ல நழுவியது. அவளது ஆடை கலைந்ததைக் கண்ட அந்த முனிவர், எரியும் காமத்தீயால் தாக்குண்டார்.(12)
அடுத்த நொடியே உணர்வுகளின் வேகத்தால் அவரது உயிர் நீர் வெளியேறியது. அந்த முனிவர் அதை உடனடியாகத் துரோணம் (குடம்) என்ற ஒரு பாத்திரத்தில் பிடித்தார்.(13) ஓ மன்னா, பரத்வாஜரால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பாத்திரத்திலிருந்த உயிர்நீர் மூலம் துரோணர் பிறந்தார். இப்படிப் பிறந்த அந்தப் பிள்ளை வேதங்களை அதன் அதன் கிளைகளுடன் படித்தார்.(14) அதற்குச் சில காலத்திற்கு முன்பு, ஆயுத ஞானம் கொண்டவர்களில் முதன்மையான பெரும் சக்தி கொண்ட பரத்வாஜர், சிறப்பு வாய்ந்த அக்னிவேசருக்கு ஆயுத அறிவியலான ஆக்னேயத்தைப் போதித்தார்.(15) ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நெருப்பில் இருந்து பிறந்த அந்த முனிவர் (அக்னிவேசர்), தனது குருவின் பிள்ளையான துரோணருக்கு அந்தப் பெரும் ஆயுத ஞானத்தைக் கொடுத்தார்.(16)
பரத்வாஜருக்கு {துரோணரின் தந்தைக்கு} நல்ல நண்பராக, பிருஷதன் {துருபதனின் தந்தை} என்றொரு மன்னன் இருந்தான். அந்த நேரத்தில் பிருஷதனுக்குத் துருபதன் என்றொரு மகன் பிறந்தான்.(17) பிருஷதனின் மகனும், க்ஷத்திரியர்களில் காளையுமான அந்தத் துருபதன், துரோணருடன் விளையாடுவதற்காகவும், அவருடன் கல்வி பயில்வதற்காகவும் தினசரி பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(18) ஓ ஏகாதிபதி! பிருஷதன் இறந்த போது, பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட துருபதன் வடக்குப் பாஞ்சாலத்திற்கு மன்னனானான்.(19) அந்த நேரத்தில் சிறப்புமிக்க பரத்வாஜரும் சொர்க்கத்திற்கு உயர்ந்தார். அதைத் தொடர்ந்து, துரோணர் தனது தந்தையின் ஆசிரமத்திலேயே தங்கிக் கடும் நோன்புகளை மேற்கொண்டிருந்தார்.(20)
வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்து, தனது துறவின் மூலம் தனது பாவங்களை எரித்தவரும், கொண்டாடப்படுபவருமான துரோணர், பிள்ளை பெறும் விருப்பத்தாலும், தனது தந்தையின் விருப்பத்திற்கு அடிபணிந்தும், சரத்வானின் மகள் கிருபியை மணந்து கொண்டார். அந்தப் பெண்மணி, எப்போதும் அறம் சார்ந்த செயல்களும், அக்னி ஹோத்ரம் செய்வதிலும் ஈடுபட்டுக் கடும் தவங்களை மேற்கொண்டு, அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றாள். அஸ்வத்தாமன் பிறந்ததும், (தெய்வீக) குதிரை உச்சைஸ்ரவசைப் போல் கனைத்தான்.(21-23) அந்தக் கனைப்பைக் கேட்டு, வானத்திலிருந்து ஓர் அசரீரி, "இந்தக் குழந்தையின் குரல், கனைக்கும் குதிரையைப் போல எங்கும் எதிரொலிக்கிறது.(24) எனவே, இக்குழந்தை அஸ்வத்தாமன் (குதிரைக் குரலோன்) என்ற பெயரால் அழைக்கப்படட்டும்" என்றது. குழந்தையைப் பெற்றதால் பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்} பெரும் மகிழ்வு கொண்டார்.(25) அவர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்துத் தன்னை ஆயுத அறிவியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்தார்.
ஓ மன்னா, இந்த நேரத்தில்தான், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிக்கும் சிறப்பு மிகுந்தவருமான பிராமணர் ஜமதக்னேயர் {பரசுராமர்} தன்னிடம் உள்ள எல்லாச் செல்வங்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட விரும்புகிறார் என்று கேள்விப்பட்டார் துரோணர்.(26,27)
ராமரின் {பரசுராமரின்} ஆயுத ஞானத்தையும், அவரது தெய்வீக ஆயுதங்களைப் பற்றியும் கேள்விப்பட்ட துரோணர் தனது இதயத்தில் அவற்றையும், ராமரிடம் இருந்த நீதிகள் சார்ந்த ஞானத்தையும் பெற நினைத்தார்.(28) பெரும் அறத்தகுதிகளைக் கொண்டவரும், பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவருமான துரோணர், கடும் நோன்புகள் நோற்கும் தனது சீடர்களுடன் மகேந்திர மலைக்குப் பயணப்பட்டார்.(29) மகேந்திர மலையை அடைந்த உயர்ந்த அறத்தகுதிகள் கொண்ட பரத்வாஜரின் மைந்தன், எதிரிகளைத் துடைத்தெறிந்தவரான, பிருகுவின் மைந்தன் {பரசுராமர்} தனது மனத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் பெரும் அமைதியுடன் இருப்பதைக் கண்டார்.(30) பிருகுவின் குலக்கொழுந்தைத் {பரசுராமரைத்} தமது சீடர்களுடன் அணுகித் தனது பெயரையும், அங்கீரசு முனிவர் வழியில் வந்த தன் கோத்திரத்தையும் சொன்னார்.(31) தனது தலையால் தரையைத் தொட்டு, ராமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். செல்வங்களைக் கொடுத்துவிட்டு, ஆழ்ந்த கானகத்திற்குள் செல்லத் திட்டமிட்டுள்ள ஜமதக்னியின் சிறப்புவாய்ந்த மகனைக் {பரசுராமரைக்} கண்ட துரோணர், "பெண்ணின் கருவிலில்லாமல், பரத்வாஜர் மூலம் உதித்தவன் நான் என்பதை அறிந்து கொள்வீராக!(32,33) என்னைச் சிறந்த பிராமணனாக அறிந்து கொள்வீராக. எனது பெயர் துரோணன் என்பதாகும். நான் உம்மிடம் இருந்து செல்வத்தைப் பெற விரும்பி வந்திருக்கிறேன்" என்றார்.(34)
இதைக்கேட்ட, அந்த க்ஷத்திரிய குலத்தை அழித்தவர், "நீ வரவேற்கப்படுகிறாய், ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே! நீ என்ன விரும்புகிறாய் என்பதைச் சொல்" என்று கேட்டார். பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்}, எல்லாச் செல்வங்களையும் கொடுத்துவிட எண்ணியிருந்த அழிப்பவர்களில் முதன்மையானவரிடம் {பரசுராமரிடம்}, "ஓ பல்வேறு வகைப்பட்ட நோன்புகள் நோற்றவரே, நான் நித்தியமான {அழிவற்ற, அளவற்ற} செல்வத்தை விரும்புகிறேன்" என்றார்.(35,36)
அதற்கு ராமர், "ஓ துறவை செல்வமாகக் கொண்டவனே, என்னிடம் இருந்த தங்கத்தையும், மற்றும் நான் என்ன செல்வமெல்லாம் வைத்திருந்தேனோ அவை அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.(37) நகரங்கள் பல கொண்ட இந்த ஆழிசூழ் {கடல் சூழ்ந்த} உலகையும் கசியபருக்குக் கொடுத்துவிட்டேன்.(38) இப்போது என்னிடம் எனது இந்த உடலும், பல மதிப்புமிக்க ஆயுதங்களும் மட்டுமே மீந்திருக்கின்றன.(39) இரண்டில் எதை வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேள். அதை உனக்கு நிச்சயம் தருவேன். விரைவாகச் சொல்!" என்றார்.(40)
துரோணர், "ஓ பிருகு மைந்தரே, உமது ஆயுதங்கள் அனைத்தையும் அவற்றை ஏவும், முற்றும் திரும்ப அழைக்கும் உகந்த புதிர்களுடன் {மந்திரங்கள்} எனக்குத் தாரும்" என்று கேட்டார்.(41)
"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பிருகுவின் மைந்தர் {பரசுராமர்} தனது அனைத்து ஆயுதங்களையும் துரோணரிடம் கொடுத்தார். அவர் மொத்த ஆயுதங்களின் அறிவியலையும் அதன் விதிகளுடனும், புதிர்களுடனும் சேர்த்துப் போதித்துக் கொடுத்தார்.(42) அவை அனைத்தையும் ஏற்றுப் போதுமான அளவு அடைந்ததாக மனநிறைவு கொண்ட அந்த பிராமணர்களில் சிறந்தவர், இதயத்தால் மகிழ்ந்து, தனது நண்பன் துருபதனின் நகரத்திற்குப் பயணப்பட்டார்" {என்றார் வைசம்பாயனர்}.(43)
ஆதிபர்வம் பகுதி 131ல் உள்ள சுலோகங்கள் : 43
ஜனமேஜயன், "ஓ பிராமணரே! துரோணர் எப்படிப் பிறந்தார்? அவர் ஆயுதங்களை எங்கே, எப்படி அடைந்தார்? அவர் குரு குலத்தவரிடம் எப்படி வந்தார்? ஏன் வந்தார்? பெரும் சக்தியுடைய அவர் யாருடைய மகனாவார்?(7) ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முதன்மையான அவரது மைந்தன் அஸ்வத்தாமன் எப்படிப் பிறந்தான்? இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்! அவற்றை விவரமாகச் சொல்லும்" என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர் சொன்னார், "பரத்வாஜர் என்ற பெயர் கொண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான ஒரு பெரும் முனிவர், கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கருகே கடும் தவம் செய்து கொண்டு இருந்தார்.(9) அவர், பழங்காலத்தில் ஒரு நாள், பல பெருமுனிகளுடன் சேர்ந்து, அக்னி ஹோத்ர வேள்வி செய்வதற்காகத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக் கங்கையில் நீராடச் சென்றார்.(10) அந்த நதிக்கரைக்கு வந்ததும், சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்திருந்த, அழகும், இளமையும் கொண்ட கிரிடச்சி {கிருதாசி} எனும் அப்சரஸைக் கண்டார்.(11) அவள், தனது முகபாவத்தில் பெருமையும், கவர்ச்சிகரமான சோர்வும் கொண்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு நீரிலிருந்து எழுந்தாள். அவள் கரையில் நடந்து வந்த போது, அவளது ஆடை மெல்ல நழுவியது. அவளது ஆடை கலைந்ததைக் கண்ட அந்த முனிவர், எரியும் காமத்தீயால் தாக்குண்டார்.(12)
அடுத்த நொடியே உணர்வுகளின் வேகத்தால் அவரது உயிர் நீர் வெளியேறியது. அந்த முனிவர் அதை உடனடியாகத் துரோணம் (குடம்) என்ற ஒரு பாத்திரத்தில் பிடித்தார்.(13) ஓ மன்னா, பரத்வாஜரால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பாத்திரத்திலிருந்த உயிர்நீர் மூலம் துரோணர் பிறந்தார். இப்படிப் பிறந்த அந்தப் பிள்ளை வேதங்களை அதன் அதன் கிளைகளுடன் படித்தார்.(14) அதற்குச் சில காலத்திற்கு முன்பு, ஆயுத ஞானம் கொண்டவர்களில் முதன்மையான பெரும் சக்தி கொண்ட பரத்வாஜர், சிறப்பு வாய்ந்த அக்னிவேசருக்கு ஆயுத அறிவியலான ஆக்னேயத்தைப் போதித்தார்.(15) ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நெருப்பில் இருந்து பிறந்த அந்த முனிவர் (அக்னிவேசர்), தனது குருவின் பிள்ளையான துரோணருக்கு அந்தப் பெரும் ஆயுத ஞானத்தைக் கொடுத்தார்.(16)
பரத்வாஜருக்கு {துரோணரின் தந்தைக்கு} நல்ல நண்பராக, பிருஷதன் {துருபதனின் தந்தை} என்றொரு மன்னன் இருந்தான். அந்த நேரத்தில் பிருஷதனுக்குத் துருபதன் என்றொரு மகன் பிறந்தான்.(17) பிருஷதனின் மகனும், க்ஷத்திரியர்களில் காளையுமான அந்தத் துருபதன், துரோணருடன் விளையாடுவதற்காகவும், அவருடன் கல்வி பயில்வதற்காகவும் தினசரி பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(18) ஓ ஏகாதிபதி! பிருஷதன் இறந்த போது, பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட துருபதன் வடக்குப் பாஞ்சாலத்திற்கு மன்னனானான்.(19) அந்த நேரத்தில் சிறப்புமிக்க பரத்வாஜரும் சொர்க்கத்திற்கு உயர்ந்தார். அதைத் தொடர்ந்து, துரோணர் தனது தந்தையின் ஆசிரமத்திலேயே தங்கிக் கடும் நோன்புகளை மேற்கொண்டிருந்தார்.(20)
வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்து, தனது துறவின் மூலம் தனது பாவங்களை எரித்தவரும், கொண்டாடப்படுபவருமான துரோணர், பிள்ளை பெறும் விருப்பத்தாலும், தனது தந்தையின் விருப்பத்திற்கு அடிபணிந்தும், சரத்வானின் மகள் கிருபியை மணந்து கொண்டார். அந்தப் பெண்மணி, எப்போதும் அறம் சார்ந்த செயல்களும், அக்னி ஹோத்ரம் செய்வதிலும் ஈடுபட்டுக் கடும் தவங்களை மேற்கொண்டு, அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றாள். அஸ்வத்தாமன் பிறந்ததும், (தெய்வீக) குதிரை உச்சைஸ்ரவசைப் போல் கனைத்தான்.(21-23) அந்தக் கனைப்பைக் கேட்டு, வானத்திலிருந்து ஓர் அசரீரி, "இந்தக் குழந்தையின் குரல், கனைக்கும் குதிரையைப் போல எங்கும் எதிரொலிக்கிறது.(24) எனவே, இக்குழந்தை அஸ்வத்தாமன் (குதிரைக் குரலோன்) என்ற பெயரால் அழைக்கப்படட்டும்" என்றது. குழந்தையைப் பெற்றதால் பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்} பெரும் மகிழ்வு கொண்டார்.(25) அவர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்துத் தன்னை ஆயுத அறிவியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்தார்.
ஓ மன்னா, இந்த நேரத்தில்தான், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிக்கும் சிறப்பு மிகுந்தவருமான பிராமணர் ஜமதக்னேயர் {பரசுராமர்} தன்னிடம் உள்ள எல்லாச் செல்வங்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட விரும்புகிறார் என்று கேள்விப்பட்டார் துரோணர்.(26,27)
பரசுராமர் |
இதைக்கேட்ட, அந்த க்ஷத்திரிய குலத்தை அழித்தவர், "நீ வரவேற்கப்படுகிறாய், ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே! நீ என்ன விரும்புகிறாய் என்பதைச் சொல்" என்று கேட்டார். பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்}, எல்லாச் செல்வங்களையும் கொடுத்துவிட எண்ணியிருந்த அழிப்பவர்களில் முதன்மையானவரிடம் {பரசுராமரிடம்}, "ஓ பல்வேறு வகைப்பட்ட நோன்புகள் நோற்றவரே, நான் நித்தியமான {அழிவற்ற, அளவற்ற} செல்வத்தை விரும்புகிறேன்" என்றார்.(35,36)
அதற்கு ராமர், "ஓ துறவை செல்வமாகக் கொண்டவனே, என்னிடம் இருந்த தங்கத்தையும், மற்றும் நான் என்ன செல்வமெல்லாம் வைத்திருந்தேனோ அவை அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.(37) நகரங்கள் பல கொண்ட இந்த ஆழிசூழ் {கடல் சூழ்ந்த} உலகையும் கசியபருக்குக் கொடுத்துவிட்டேன்.(38) இப்போது என்னிடம் எனது இந்த உடலும், பல மதிப்புமிக்க ஆயுதங்களும் மட்டுமே மீந்திருக்கின்றன.(39) இரண்டில் எதை வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேள். அதை உனக்கு நிச்சயம் தருவேன். விரைவாகச் சொல்!" என்றார்.(40)
பரசுராமர் கொடுத்த ஆயுத அறிவியல் குறியீடு |
"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பிருகுவின் மைந்தர் {பரசுராமர்} தனது அனைத்து ஆயுதங்களையும் துரோணரிடம் கொடுத்தார். அவர் மொத்த ஆயுதங்களின் அறிவியலையும் அதன் விதிகளுடனும், புதிர்களுடனும் சேர்த்துப் போதித்துக் கொடுத்தார்.(42) அவை அனைத்தையும் ஏற்றுப் போதுமான அளவு அடைந்ததாக மனநிறைவு கொண்ட அந்த பிராமணர்களில் சிறந்தவர், இதயத்தால் மகிழ்ந்து, தனது நண்பன் துருபதனின் நகரத்திற்குப் பயணப்பட்டார்" {என்றார் வைசம்பாயனர்}.(43)
ஆதிபர்வம் பகுதி 131ல் உள்ள சுலோகங்கள் : 43
ஆங்கிலத்தில் | In English |