Drupada insulted Drona | Adi Parva - Section 132 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 68)
பதிவின் சுருக்கம் : துருபதனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட துரோணர்; துரோணரை அவமதித்த துருபதன்...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா, பிறகு, பரத்வாஜரின் பலம் வாய்ந்த மகன் {துரோணர்}, துருபதனின் முன்பு சென்று, அந்த ஏகாதிபதியிடம், "என்னை உனது நண்பனாக அறிந்துகொள்வாயாக" என்றார்.(1) மகிழ்ச்சியான இதயத்துடன் கூடிய தனது நண்பனான அந்தப் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} பேச்சைப் பாஞ்சாலர்களின் தலைவனால் {துருபதன்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(2) அந்த மன்னன், செல்வச் செருக்கு கொடுத்த போதையால் கோபம் கொண்டு, புருவங்களைச் சுருக்கி, கண்கள் சிவக்க துரோணரிடம்,(3) "ஓ பிராமணரே! திடீரென உம்மை எனது நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் உமது இந்தப் பேச்சு சற்றும் புத்திக்குப் பொருத்தமானதாக, உயர்ந்த வகையில் இல்லையே.(4) ஓ உணர்வு மங்கியவரே, பெரும் மன்னர்களுக்கு, நற்பேறும், பொருளும் அற்ற உம்மைப்போன்ற நண்பர்கள் இருக்க முடியாது.(5) முன்பு ஒரு சமயம் உமக்கும், எனக்கும் நட்பிருந்தது உண்மைதான், ஆனால் அப்போது நாம் சமமாக இருந்தோம். ஆனால் காலத்தின் மாற்றம் நட்பையும் பலவீனமாக்கும்.(6)
இவ்வுலகத்தில் எந்த இதயத்திலும் நட்பென்பது எப்போதும் நிலைத்திருப்பதில்லை. காலம் அஃதை அரித்து விடுகிறது. கோபம் அஃதை அழித்துவிடுகிறது.(7) எனவே, அந்தத் தேய்ந்து போன நட்பைச் சொல்லித் திரும்ப என்னிடம் ஒட்டாதீர். அதைப்பற்றி இனி நினைக்காதீர். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, நான் உம்மிடம் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே நட்பு கொண்டிருந்தேன்.(8) ஏழ்மையானவனுக்கும் செல்வந்தனுக்கும் இடையிலும், கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் இடையிலும், வீரனுக்கும் கோழைக்கும் இடையிலும் நட்பு இருக்கவே முடியாது.(9)
நமது முந்தைய நட்பை நீர் ஏன் தொடர நினைக்கிறீர்? நட்பும், பகைமையும் செல்வத்தாலும், பலத்தாலும் சமமான இருவருக்குள்ளேயே இருக்க முடியும். வறுமையானவனும், செழுமையானவனும் நண்பர்களாக இருக்கவும் முடியாது, சண்டையிட்டுக் கொள்ளவும் முடியாது.(10) அசுத்த பிறவியும், சுத்தமான பிறவியும் நண்பர்களாக இருக்கவே முடியாது. தேர்வீரனாக இல்லாத ஒருவன், அப்படியிருப்பவனிடம் நட்புடன் இருக்க முடியாது. அப்படியே மன்னனாக இல்லாத ஒருவன், மன்னனுக்கு நண்பனாக இருக்க முடியாது. எனவே, நீர் ஏன் இன்னும் நமது பழைய நட்பு தொடர வேண்டும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான் {துருபதன்}.(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துருபதனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், பெரும் பலம் வாய்ந்தவருமான பரத்வாஜரின் மகன் {துரோணர்} கோபத்தால் நிறைந்தார். இருப்பினும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, மனத்தில் அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.(12) பாஞ்சால மன்னனின் {துருபதனின்} ஆணவத்தைக் கண்டு, அதற்குச் சரியான பதிலடி கொடுக்க விரும்பினார். பாஞ்சாலத் தலைநகரைவிட்டு அவசரமாக அகன்ற துரோணர், தனது பாத அடிகளை யானையின் பெயர் கொண்ட குருக்களின் தலைநகரை {ஹஸ்தினாபுரம்} நோக்கி வைத்தார்" {என்றார் வைசம்பாயனர்}.(13)

ஆதிபர்வம் பகுதி 132ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |