Drona and Drupada story said by the Brahmana! | Adi Parva - Section 168 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்...
பிராமணர், "கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை விலக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)
பரத்வாஜருக்குப் பிருஷதன் என்ற பாஞ்சால மன்னன் நண்பனாக இருந்தான். துரோணர் பிறந்த நேரத்தில், பிருஷதன் துருபதன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றான்.(6) பிருஷதனின் மகனான அந்த க்ஷத்திரியக்காளை {துருபதன்}, தினமும் பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று, துரோணருடன் விளையாடவும், கல்வி கற்கவும் செய்தான்.(7) பிருஷதன் இறந்த பிறகு, துருபதன் அரியணை ஏறினான். அவ்வேளையில் (பெரும் பிராமண வீரரான) ராமன் {பரசுராமன்} (தனது ஓய்வை அறிவித்துக் கானகம் புறப்படும் மாலை வேளையில்) தனது செல்வங்களையெல்லாம் கொடுத்துவிடத் தீர்மானித்திருக்கிறார் என்பதைத் துரோணர் கேள்விப்பட்டார்.(8) இதைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கானகத்திற்குள் ஓய்வுக்காகப் புகப் போகும் ராமனிடம் {பரசுராமனிடம்} சென்று, "ஓ பிராமணர்களில் சிறந்தவரே, என்னைத் துரோணன் என்று அறிந்து கொள்ளும். நான் உம்மிடம் செல்வத்தை அடைய வந்திருக்கிறேன்" என்றார்.(9) அதற்கு ராமன், "நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் இருப்பதெல்லாம், எனது இந்த உடலும், எனது ஆயுதங்களும் மட்டும்தான். ஓ அந்தணா, எனது உடலோ, எனது ஆயுதங்களோ, இந்த இரண்டில் ஒன்றை நீ என்னிடம் கேட்கலாம்" என்றார்.(10)
அதற்குத் துரோணர், "ஐயா, உமது ஆயுதங்களை (அதன் மர்மங்களுடன்), அதைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய வழிகளுடன் எனக்குத் தருவீராக" என்று கேட்டார்.(11)
பிராமணர் தொடர்ந்தார், "பிருகு குலத்தில் வந்த ராமன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தனது ஆயுதங்களையெல்லாம் துரோணருக்குக் கொடுத்தார். இதனால், துரோணர் வெற்றிமகுடம் சூடியவராகத் தன்னை நினைத்துக் கொண்டார்.(12) பெரும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் ராமனிடம் இருந்து பெற்ற துரோணர், பிரம்மாயுதத்தை அழைத்து மிகவும் மகிழ்ந்து, அதைப் பெற்றதால், அனைத்து மனிதர்களிலும் மேன்மையை அடைந்தார்.(13) அந்தப் பெரும் சக்திவாய்ந்த பரத்வாஜரின் மகன், மன்னன் துருபதனிடம் சென்றார். மனிதர்களில் புலியான அந்த ஏகாதிபதியை அணுகிய அவர், "என்னை உனது நண்பனாக அறிந்து கொள்" என்றார்.(14)
இதைக் கேட்ட துருபதன், "தாழ்ந்த பிறப்பு பிறந்தவன், சுத்தமான உயர்ந்த பிறப்பில் வந்தவனிடம் நண்பனாக இருக்க முடியாது, ரதவீரனல்லாதவன், ரதவீரனின் நண்பனாக முடியாது. அப்படியே மன்னனல்லாதவன், ஒரு மன்னனுக்கு நண்பனாக முடியாது. எனவே, (நமது) முந்தைய நட்பை ஏன் (மீட்க) விரும்புகிறீர்?" என்று சொன்னான்.(15)
பிராமணர் தொடர்ந்தார், "பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட துரோணர், இதனால் பெரும் துன்பத்துக்குள்ளாகி, பாஞ்சால மன்னனை அவமதிக்கச் சரியான சந்தர்ப்பத்தை மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் குருக்களின் (கௌரவர்களின்) தலைநகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றார்.(16) அங்கே பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளை, பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்} கல்வி கற்க சீடர்களாக அனுப்பிவைத்தார்.(17) துரோணருக்கு அனைத்து விதமான செல்வங்களையும் பரிசளித்தார். மன்னன் துருபதனை அவமதிக்க விரும்பிய துரோணர், தனது சீடர்கள் அனைவரையும் கூட்டி, "பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதக்கல்வி கற்ற பிறகு, நான் மனத்தில் நினைத்திருப்பதை எனக்குக் குருதட்சணையாகத் தர வேண்டும்" என்று கேட்டார். அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் குருவிடம், "அப்படியே ஆகட்டும்" என்றனர்.(18,19)
அப்போது, நினைத்த குறியை அடித்து, ஆயுதங்களில் திறமையடைந்த பாண்டவர்களிடம், தனது குருதட்சணையைக் கேட்கும் வகையில்,(20) "பிருஷதனின் மகன் துருபதன், சத்திரவதிக்கு {அஹிசத்திரம்} மன்னனாவான். அவனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்து, என்னிடம் கொடுங்கள்" என்று கேட்டார்.(21)
பாண்டவர்கள் போரில் துருபதனை வீழ்த்தி, அவனை அவனது அமைச்சர்களுடன் கைதியாக்கித் துரோணரிடம் கொடுத்தனர்.(22) வீழ்ந்த அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, துரோணர், "ஓ மன்னா, நான் உனது நட்பைக் கோருகிறேன்; மன்னனல்லாதவன் மன்னனின் நட்பை நாடத் தகுதியில்லாதவனாகையால்,(23) ஓ யக்ஞசேனா {துருபதா}, நான் உனது நாட்டை நமக்குள் இரண்டாகப் பிரித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறேன். நீ பாகீரதிக்கு (கங்கைக்கு) தெற்கே உள்ள நாட்டை ஆண்டுக் கொள்வாயாக. அதே வேளை வடக்கை நான் ஆண்டுக் கொள்கிறேன்" என்றார்".(24)
பிராமணர் தொடர்ந்தார், "ஞானமுள்ள பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பாஞ்சால மன்னன், பிராமணர்களில் சிறந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவரிடம் {துரோணரிடம்},(25) "ஓ பரத்வாஜரின் உயர் ஆன்ம மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் நமக்குள் நிலைத்த தெய்வீகமான நட்பை விரும்புகிறேன்" என்றான்.(26)
இப்படி ஒருவருக்கொருவர் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர். பிறகு துரோணரும் பாஞ்சால மன்னனும், அவரவர் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(27) ஆனால் இந்த அவமதிப்பு மன்னனின் மனத்திலிருந்து ஒரு நொடிப்பொழுதும் அகலவில்லை. இதயத்தில் துன்பம் கொண்ட அந்த மன்னன் தனது நாட்களை அப்படியே போக்கினான்" {என்றார் ஏகச்சக்கர நகரத்தில் பாண்டவர்கள் வசித்திருந்த பிராமணனின் வீட்டிற்கு விருந்தினராக வந்த அந்தப் பிராமணர்}.(28)

ஆங்கிலத்தில் | In English |