The Births of Dhrishtadyumna and Draupadi! | Adi Parva - Section 169 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : துரோணரைக் கொல்லும் மகனை அடைய விரும்பிய துருபதன்; யாஜர் உபயாஜர் ஆகியோரைச் சந்தித்த துருபதன்; வேள்வித்தீயில் இருந்து பிறந்த திருஷ்டத்யும்னனும், திரௌபதியும்; திருஷ்டத்யும்னனுக்கும் குருவான துரோணர்...
பிராமணர் தொடர்ந்தார், "அதன்பிறகு மன்னன் துருபதன், இதயத்தில் துயர் கொண்டு, பிராமணர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று, வேள்விச் சடங்குகளை நடத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த பிராமணர்களைத் தேடினான்.(1) "சாதனைகளைச் செய்யக்கூடிய வாரிசு ஒருவனும் எனக்கில்லையே" என்று நினைத்து எப்போதும் துயரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பிள்ளைகள் பெறுவதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தான்.(2) அந்த ஏகாதிபதி பெரும் ஏக்கத்துடன் எப்போதும், "ம்…ம்… ச்சீ… ச்சீ…என்ன பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறேன். என்ன உறவினர்களைக் கொண்டிருக்கிறேன்" என்று நினைத்துக் கொள்வான். எப்போதும் அந்த ஏகாதிபதி துரோணரைப் பழிவாங்குவதை நினைத்தே நிறுத்தாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.(3) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்களில் சிறந்தவன், கடினமாக முயற்சித்தும், க்ஷத்திரிய பலத்தாலோ, ஆற்றலாலோ, ஒழுக்கத்தாலோ, பயிற்சியாலோ, சாதனைகளாலோ, துரோணரை விஞ்ச ஒரு வழியையும் அடையவில்லை. யமுனை மற்றும் கங்கைக் கரைகளில் திரிந்த அந்த ஏகாதிபதி {துருபதன்}, {கங்கையின் கரையில்} ஒரு பிராமணரின் ஆசிரமத்தை வந்தடைந்தான். அந்த ஆசிரமத்தில் ஸ்நாதகர்[1] அல்லாத எந்த பிராமணரும் இல்லை, கடும் நோன்புகள் நோற்காத எவரும் இல்லை, அறத்தகுதிகளில் உயர்ந்த இடத்தைப் பெறாமல் யாரும் இல்லை.(4-6)
மன்னன் அங்கே யாஜர் மற்றும் உபயாஜர்[2] என்ற கடும் நோன்புகள் நோற்ற பிராமண முனிவர்கள் இருவரைக் கண்டான். அவர்கள் தங்கள் உயிரை முழுக் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்திய உயர்ந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.(7) கசியப குலத்தில் உதித்துப் பழம்பெரும் கல்விகளைக் கற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள் அந்த மன்னனுக்கு {துருபதனுக்கு} உதவும் தகுதியுடன் இருந்தார்கள்.(8) அந்த மன்னன் {துருபதன்} பெரும் சிரத்தையுடனும், காரியத்தில் கண்ணாகவும், அந்த அருமையான பிரமாணர்களிடம் பேசத் துவங்கினான். அந்த இருவரில் இளையவர் {உபயாஜர்} சாதனைகளில் முதன்மையுடனும் மேன்மையுடனும் இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த மன்னன் {துருபதன்}, கடும் நோன்புகள் நோற்ற உபயாஜரைத் தனிமையில் சந்தித்து, அனைத்து வகையிலும் விரும்பக்கூடிய பொருட்களைக் கொடுப்பதாகக் கூறினான்.(9,10)
ஒரு நாள் மன்னன் {துருபதன்}, உபயாஜரின் பாதங்களில் பணிந்து அவரிடம் {உபயாஜரிடம்} மனிதர் விரும்பும் அனைத்துப் பொருளையும் கொடுப்பதாக வாக்குக் கொடுத்து, இனிமையான வார்த்தைகளில் அந்த பிராமணரை வழிபட்டு, "ஓ உபயாஜரே, ஓ பிராமணரே! நீர் ஒரு (அறம் சார்ந்த) வேள்விச் சடங்கு நடத்தி, துரோணரைக் கொல்லும் பிள்ளை எனக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.(11) அதற்கு நான் பத்தாயிரம் {10000} பசுகளையும்,(12) உமக்கு எவையெல்லாம் ஏற்புடையனவோ அவையெல்லாவற்றையும் தருகிறேன். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உண்மையில் நான் உமக்குப் பரிசளிக்கத் தயாராக இருக்கிறேன்" என்றான்.(13)
இவ்வாறு அம்மன்னனால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர் {உபயாஜர்}, "என்னால் (இது போன்ற சடங்குகளைச் செய்ய) முடியாது" என்றார். ஆனால், துருபதன் அந்த மறுமொழியை முடிவாக எடுத்துக் கொள்ளாமல், மறுபடியும் அந்த பிராமணரைச் {உபயாஜரைச்} சேவித்தான்.(14) ஒரு வருடம் முடிந்ததும், பிராமணர்களின் முதன்மையான அந்த உபயாஜர், அந்த ஏகாதிபதி துருபதனை அழைத்து இனிய ஒலியுடன்,(15) "எனது அண்ணன் (யாஜர்), ஒரு நாள் அடர்ந்த கானகத்தின் ஆழத்தில் உலவிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து கிடந்த ஒரு கனியை எடுத்தார். அதன் சுத்தத்தைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.(16) (அவ்வேளையில்) நான் அவரைத் {யாஜரைத்} தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவரது இந்தத் தகுதியற்ற செயலைக் கண்டேன். நிச்சயமாக அவர் சுத்தமற்ற பொருட்களை ஏற்றுக் கொள்வதில் மனவுறுத்தல் அடைவதில்லை.(17) அப்படி அந்தக் (குறிப்பிட்ட) கனியில் பாவத்தைக் காணாத அவரது இயல்பு, மற்ற காரியங்களில் இவர் {யாஜர்} எப்படிப் பாவங்களைப் பகுத்தறிவார் என்பதில் என்னை யங்கொள்ள வைத்தது.(18) அவர் {யாஜர்} தமது ஆசானின் இல்லத்தில் வாழ்ந்து, கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது, அவர் {யாஜர்} எப்போதும் மனிதர்களின் விருந்தில் (சுத்தமற்ற உணவில்) மீந்தவற்றை {பிச்சை} உண்பார்.(19) அவர் எப்போதும் உணவைப் பற்றியே {உயர்வாகப்} பேசிக் கொண்டிருப்பார். அவர் எதையும் விரும்பாமலில்லை. இதையெல்லாம் சொல்வதன் மூலம், நான் எனது தமையன் உலகப் பொருட்களை அடைவதில் நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்ல வருகிறேன் என்பதை அறிந்து கொள்வாயாக.(20) எனவே, ஓ மன்னா, அவரிடம் செல்வாயாக. அவர் உனக்கு ஆன்மிகக் காரியங்களைச் செய்து கொடுப்பார்" என்றார்.
உபயாஜரின் இந்த வார்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன், யாஜர் மீது உயர்ந்த கருத்து இல்லையெனினும், அவரது இல்லத்திற்குச் சென்றான். அங்கே (இன்னும்) மரியாதைக்குரியவராக இருந்த யாஜரை வழிபட்ட துருபதன், "ஓ ஆசானே, எனக்கு ஆன்மக் காரியங்களைச் செய்து கொடுப்பீராக. உமக்கு நான் எண்பதாயிரம் பசுக்களை[3] அளிக்கிறேன்! துரோணரிடம் நான் கொண்டுள்ள பகை எனது இதயத்தை எரிக்கிறது; நீர் என் இதயத்தில் எரியும் நெருப்பை அணைக்க வேண்டும்.(21,22) வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவராக இருக்கும் துரோணர், பிரம்ம ஆயுதத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். (வலிமை இழந்த) நட்பினால் உண்டான ஒரு போட்டியில் துரோணர் என்னை வென்றார்.(23) பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மப் பரத்வாஜர் மகன் {துருபதன்}, குரு குலத்தவரின் குருவாவார். இவ்வுலகத்தில் அவரை {துரோணரை} விஞ்ச ஒரு க்ஷத்திரியன் கிடையாது.(24) ஆறு முழு முழம் நீளமுள்ள அவரது {துரோணரது} வில் வல்லமை மிக்கதாக இருக்கிறது. அவரது {துரோணரது} கணைகள் அனைத்து உயிரையும் கொல்லத்தக்கவையாக இருக்கின்றன.(25)
இந்தப் பெரும் வில்லாளி, உயரான்மப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பிராமணராகப் பழக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் க்ஷத்திரிய சக்தியை அழிக்கிறார்.(26) உண்மையில், அவரே {துரோணரே} க்ஷத்திரிய குலத்தை அழிக்கப்போகும் இரண்டாவது ஜமதக்னியைப் போன்றவர். அவரது பயங்கர ஆயுதங்களின் முன்னிலையில் எந்த மனிதனும் அவரை விஞ்சமுடியாது.(27) சுடர் விட்டெரியும் தெளிந்த நெய்யை விடுவது போல, அவர் பிரம்ம பலத்துடன் க்ஷத்திரிய பலத்தையும் இணைத்துப் போர்க்களத்தில் நிற்கும் அனைத்து எதிரிகளையும் எரிக்கிறார்.(28) ஆனால் (உமது) பிரம்ம சக்தி, க்ஷத்திரிய பலத்துடன் கூடிய (துரோணரின்) பிரம்ம சக்தியைவிடப் பெரியது. எனவே, நான் வெறும் க்ஷத்திரிய சக்தியை மட்டும் வைத்திருக்கும் குறைந்தவனாக இருக்கிறேன். பிரம்மஞானத்தில் துரோணரைவிட மேன்மையான உம்மை நான் அடைந்து விட்டதால் எனக்குப் பிரம்ம சக்தியும் சேர்ந்து கிடைக்கும்.(29) ஓ யாஜரே, போரில் வெல்லப்படமுடியாதவனும், துரோணரைக் கொல்லக்கூடியவனுமான ஒரு மகனை நீர் வேள்வியின் மூலம் எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். நான் உமக்குப் பத்தாயிரம் {10000} பசுக்களைக்[4] கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்" என்று சொன்னான் {துருபதன்}.
துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யாஜர், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். யாஜர் ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்வதற்காகப் பல சடங்குகளை மனத்தில் நினைத்துப் பார்த்தார்.(30,31) காரியத்தின் ஆபத்தையும் உணர்ந்த யாஜர், துணைக்காக எதையும் எதிர்பார்க்காத உபயாஜரையும் கேட்டார். பிறகு துரோணரின் அழிவுக்காக ஒரு வேள்வியை நடத்த யாஜர் உறுதியளித்தார்.(32) அப்போது, அந்தப் பெரும் துறவி உபயாஜர், எதன் மூலம் துருபதன் வாரிசை அடைய முடியுமோ, அந்த வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் துருபதனிடம் கேட்டார்.(33) பிறகு அவர் {உபயாஜர்}, "ஓ மன்னா {துருபதா}, நீ விருப்பப்படுவது போல, பெரும் வீரத்துடனும், பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் உமக்கு ஒரு பிள்ளை பிறப்பான்" என்றார்.(34)
பிராமணர் தொடர்ந்தார், "மன்னன் துருபதன், துரோணரைக் கொல்லும் மகனை அடையும் ஆசையால் உந்தப்பட்டுத் தனது வெற்றிக்கான அனைத்துப் பொருட்களையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.(35) (அனைத்தும் முடிந்ததும்) யாஜர், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டதும், துருபதனின் ராணியிடம்,(36) "ஓ ராணி, ஓ பிருஷதனின் மருமகளே! இங்கே வா, ஒரு மகனும் ஒரு மகளும் உனக்காக வந்திருக்கின்றனர்" என்று கட்டளையிட்டார்.(36)
இதைக்கேட்ட ராணி, "ஓ பிராமணரே! எனது வாய், குங்குமப்பூவாலும், மற்ற வாசனைப் பொருட்களாலும் நிறைந்திருக்கிறது. எனது உடலும் நறுமணத்தைத் தாங்கி இருக்கிறது. (நீர் தரும் புனித நெய் எனக்கு வாரிசைத் தரும். ஆனால்) நான் ஏற்றுக் கொள்வதற்குத் தகுந்தவளாக இல்லை. எனக்காகச் சிறிது நேரம் காத்திரும். ஓ யாஜரே! அந்த மகிழ்ச்சியான நுகர்வுக்காகக் காத்திருப்பீராக" என்றாள்.(37)
இருப்பினும் யாஜர், "ஓ மங்கையே, நீ வந்தாலும், அல்லது காத்திருந்தாலும், ஏற்கனவே என்னால் படையல் தயாராகிவிட்ட பிறகு, உபயாஜரால் மந்திரங்கள் சொல்லி புனிதமாக்கப்பட்ட பிறகு ஏன் இந்தக் காரியம் நிறைவேறாது? " என்றார்.(38)
பிராமணர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன யாஜர், வேள்வி நெருப்பில் புனிதமான நெய்யை ஊற்றினார். அப்போது அந்த நெருப்பின் தழல்களிலிருந்து நெருப்பின் பிரகாசத்தோடும், பார்க்கப் பயங்கரமாகவும் ஒரு தெய்வீகப் பிள்ளை எழுந்தான். தலையில் கிரீடத்துடனும், மார்புக் கவசத்துடனும், கையில் வாளுடனும், வில்லும் அம்பும் தாங்கி, அடிக்கடி பெருமுழக்கம் செய்தபடியே அவன் எழுந்தான்.(39,40) பிறந்த உடனேயே அந்தப் பிள்ளையானவன், ஓர் அற்புதமான தேரில் ஏறிச் சிறிது நேரம் பயணம் செய்து வந்தான். இதைக் கண்ட பாஞ்சாலர்கள், "அற்புதம்! அற்புதம்!" என்று கூச்சலிட்டனர்.(41)
மகிழ்ச்சியால் குதித்துக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்களின் பாரத்தைப் பூமியானது, பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது போலத் தெரிந்தது. அப்போது வானத்திலிருந்து ஒரு குரல், "இந்த இளவரசன் துரோணரின் அழிவுக்காகப் பிறந்திருக்கிறான். இவன் பாஞ்சாலர்களின் அச்சங்களைப் போக்கி, அவர்களின் புகழைப் பரப்புவான். இவன் மன்னனின் துயரத்தையும் போக்குவான்" என்றது.(42,43)
அதன் பிறகு, வேள்வி மேடையின் மத்தியில், பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மகள், பெரும் நற்பேறுடனும், மிகுந்த அழகுடனும் தோன்றினாள். அவளது கண்கள் கறுமையாகவும் தாமரை இதழ்களைப் போன்றும் இருந்தன.(44)
அவளது நிறம் கரியதாக இருந்தது, கூந்தல் நீல நிறத்துடன் சுருள் சுருளாக இருந்தது. நகங்கள் அழகாக மெருகிட்ட தாமிரம் போல மேடாக இருந்தது. அவளது புருவங்கள் அழகாக இருந்தன. மார்பு பருத்திருந்தது. அவளது தொடைகள் {வாழை போல} வழுவழுப்பாக இருந்தன.(45) உண்மையில், அவள் தேவர்களின் மகளைப் போல இருந்தாள். நீலத் தாமரையை {கருநெய்தலைப்} போல இரண்டு மைல்களின் தொலைவுக்கு அவளது உடல் மணம் வீசியது.(46) அவளது அழகு, பூமியில் ஈடு சொல்லாத அளவுக்கு இருந்தது. அவள் தேவலோக மங்கை போல இருப்பதால், தேவனாலோ, தானவனாலோ, யக்ஷனாலோ (திருமணத்திற்காக) விரும்பப்படுவாள்.(47)
அந்த அழகான இடைகொண்ட அந்தப் பெண் பிறந்த போது, ஓர் அரூப ஒலி, "கரிய நிறம் கொண்ட இந்த மங்கை, பெண்களில் முதன்மையானவளாக இருப்பாள். க்ஷத்திரியர்களின் அழிவுக்கு இவள் காரணமாக இருப்பாள்.(48) இந்தக் கொடியிடையாள், ஒரே நேரத்தில் தேவர்களின் காரியத்தையும் சாதிப்பாள், குருக்களின் {கௌரவர்களின்} அச்சங்களையும் அதிகரிப்பாள்" என்றது.(49)
இந்த வார்த்தைகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் சிங்க முழக்கம் செய்தனர். பூமியானது, மகிழ்ச்சியால் பித்துப்பிடித்திருந்த அவர்களின் பாரத்தைத் தாங்க முடியாததாக இருந்தது.(50)
அந்தப் பிள்ளையையும், பெண்ணையும் கண்ட பிருஷதனின் மருமகள் {துருபதனின் மனைவி}, அவர்களைப் பெற விரும்பி, யாஜரை அணுகி, "என்னைத் தவிர வேறு யாரையும் இவர்கள் தங்கள் தாயாக அறியாதிருக்கட்டும்" என்றாள்.(51) யாஜர், மன்னனுக்கு நன்மை செய்ய விரும்பி, "அப்படியே ஆகட்டும்" என்றார். பின்னர் அங்கிருந்த பிராமணர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைந்து, புதிதாய்ப் பிறந்த இரட்டையர்களுக்குப் பெயர்ச் சூட்டினர்.(52) "மன்னன் துருபதனின் இந்த மகன் அதிகத் தைரியத்துடனும், இயற்கை கவசத்துடனும், ஆயுதங்களுடன் தியம்னனைப் போலப் பிறந்ததால், திருஷ்டத்யும்னன்[5] என்று அழைக்கப்படட்டும் என்றனர்.(53) பிறகு அவர்கள், "இந்தப் பெண் கரிய நிறத்தில் இருப்பதால், கிருஷ்ணை {கருப்பி} என்று அழைக்கப்படட்டும்" என்றனர்.
பிராமணர் தொடர்ந்தார், "இப்படியே துருபதனுக்கு வேள்வியில் அந்த இரட்டையர்கள் பிறந்தனர்.(54) பெரும் துரோணர், துருபதனிடம் இருந்து பாதி நாட்டைத் தான் அடைந்ததற்கு ஈடாக, அந்தப் பாஞ்சால இளவளரசனைத் தனது வசிப்பிடத்திற்கு அழைத்து, அவனுக்கு அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி கொடுத்தார். அந்த உயர் ஆன்ம பரத்வாஜரின் மகன் {துரோணர்}, விதி தவிர்க்க முடியாதது என்று எண்ணி, தனது புகழ் நிலைக்க, இந்தப் பெரும் காரியத்தைச் செய்தார்" {என்றார் அந்தப் பிராமணர்}.(55,56)
[1] பிரம்மச்சரிய விரதத்தை ஒழுங்காக முடித்தவர்.

[2] இந்த யாஜரும், உபயாஜரும் கன்னிக்குப் பிறந்தவர்கள் என்றும், சூரிய பக்தர்கள் என்றும் பழைய உரை கூறுவதாக கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது.

[3], [4] இந்த இரண்டு இடங்களும் முரண்படுகின்றன. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இவ்விடத்தில் {43]ம் அடிக்குறிப்பு} "பத்து கோடி பசுக்களையும் தர சித்தமாயிருக்கிறேன்" என்றிருக்கிறது. இங்கே கங்குலியின் பதிப்பில் பிழையேற்பட்டிருக்க வேண்டும். இது பத்து கோடியாகவே இருக்க வேண்டும்.
துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யாஜர், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். யாஜர் ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்வதற்காகப் பல சடங்குகளை மனத்தில் நினைத்துப் பார்த்தார்.(30,31) காரியத்தின் ஆபத்தையும் உணர்ந்த யாஜர், துணைக்காக எதையும் எதிர்பார்க்காத உபயாஜரையும் கேட்டார். பிறகு துரோணரின் அழிவுக்காக ஒரு வேள்வியை நடத்த யாஜர் உறுதியளித்தார்.(32) அப்போது, அந்தப் பெரும் துறவி உபயாஜர், எதன் மூலம் துருபதன் வாரிசை அடைய முடியுமோ, அந்த வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் துருபதனிடம் கேட்டார்.(33) பிறகு அவர் {உபயாஜர்}, "ஓ மன்னா {துருபதா}, நீ விருப்பப்படுவது போல, பெரும் வீரத்துடனும், பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் உமக்கு ஒரு பிள்ளை பிறப்பான்" என்றார்.(34)
பிராமணர் தொடர்ந்தார், "மன்னன் துருபதன், துரோணரைக் கொல்லும் மகனை அடையும் ஆசையால் உந்தப்பட்டுத் தனது வெற்றிக்கான அனைத்துப் பொருட்களையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.(35) (அனைத்தும் முடிந்ததும்) யாஜர், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டதும், துருபதனின் ராணியிடம்,(36) "ஓ ராணி, ஓ பிருஷதனின் மருமகளே! இங்கே வா, ஒரு மகனும் ஒரு மகளும் உனக்காக வந்திருக்கின்றனர்" என்று கட்டளையிட்டார்.(36)
இதைக்கேட்ட ராணி, "ஓ பிராமணரே! எனது வாய், குங்குமப்பூவாலும், மற்ற வாசனைப் பொருட்களாலும் நிறைந்திருக்கிறது. எனது உடலும் நறுமணத்தைத் தாங்கி இருக்கிறது. (நீர் தரும் புனித நெய் எனக்கு வாரிசைத் தரும். ஆனால்) நான் ஏற்றுக் கொள்வதற்குத் தகுந்தவளாக இல்லை. எனக்காகச் சிறிது நேரம் காத்திரும். ஓ யாஜரே! அந்த மகிழ்ச்சியான நுகர்வுக்காகக் காத்திருப்பீராக" என்றாள்.(37)
இருப்பினும் யாஜர், "ஓ மங்கையே, நீ வந்தாலும், அல்லது காத்திருந்தாலும், ஏற்கனவே என்னால் படையல் தயாராகிவிட்ட பிறகு, உபயாஜரால் மந்திரங்கள் சொல்லி புனிதமாக்கப்பட்ட பிறகு ஏன் இந்தக் காரியம் நிறைவேறாது? " என்றார்.(38)
பிராமணர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன யாஜர், வேள்வி நெருப்பில் புனிதமான நெய்யை ஊற்றினார். அப்போது அந்த நெருப்பின் தழல்களிலிருந்து நெருப்பின் பிரகாசத்தோடும், பார்க்கப் பயங்கரமாகவும் ஒரு தெய்வீகப் பிள்ளை எழுந்தான். தலையில் கிரீடத்துடனும், மார்புக் கவசத்துடனும், கையில் வாளுடனும், வில்லும் அம்பும் தாங்கி, அடிக்கடி பெருமுழக்கம் செய்தபடியே அவன் எழுந்தான்.(39,40) பிறந்த உடனேயே அந்தப் பிள்ளையானவன், ஓர் அற்புதமான தேரில் ஏறிச் சிறிது நேரம் பயணம் செய்து வந்தான். இதைக் கண்ட பாஞ்சாலர்கள், "அற்புதம்! அற்புதம்!" என்று கூச்சலிட்டனர்.(41)
மகிழ்ச்சியால் குதித்துக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்களின் பாரத்தைப் பூமியானது, பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது போலத் தெரிந்தது. அப்போது வானத்திலிருந்து ஒரு குரல், "இந்த இளவரசன் துரோணரின் அழிவுக்காகப் பிறந்திருக்கிறான். இவன் பாஞ்சாலர்களின் அச்சங்களைப் போக்கி, அவர்களின் புகழைப் பரப்புவான். இவன் மன்னனின் துயரத்தையும் போக்குவான்" என்றது.(42,43)
அதன் பிறகு, வேள்வி மேடையின் மத்தியில், பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மகள், பெரும் நற்பேறுடனும், மிகுந்த அழகுடனும் தோன்றினாள். அவளது கண்கள் கறுமையாகவும் தாமரை இதழ்களைப் போன்றும் இருந்தன.(44)
அவளது நிறம் கரியதாக இருந்தது, கூந்தல் நீல நிறத்துடன் சுருள் சுருளாக இருந்தது. நகங்கள் அழகாக மெருகிட்ட தாமிரம் போல மேடாக இருந்தது. அவளது புருவங்கள் அழகாக இருந்தன. மார்பு பருத்திருந்தது. அவளது தொடைகள் {வாழை போல} வழுவழுப்பாக இருந்தன.(45) உண்மையில், அவள் தேவர்களின் மகளைப் போல இருந்தாள். நீலத் தாமரையை {கருநெய்தலைப்} போல இரண்டு மைல்களின் தொலைவுக்கு அவளது உடல் மணம் வீசியது.(46) அவளது அழகு, பூமியில் ஈடு சொல்லாத அளவுக்கு இருந்தது. அவள் தேவலோக மங்கை போல இருப்பதால், தேவனாலோ, தானவனாலோ, யக்ஷனாலோ (திருமணத்திற்காக) விரும்பப்படுவாள்.(47)
அந்த அழகான இடைகொண்ட அந்தப் பெண் பிறந்த போது, ஓர் அரூப ஒலி, "கரிய நிறம் கொண்ட இந்த மங்கை, பெண்களில் முதன்மையானவளாக இருப்பாள். க்ஷத்திரியர்களின் அழிவுக்கு இவள் காரணமாக இருப்பாள்.(48) இந்தக் கொடியிடையாள், ஒரே நேரத்தில் தேவர்களின் காரியத்தையும் சாதிப்பாள், குருக்களின் {கௌரவர்களின்} அச்சங்களையும் அதிகரிப்பாள்" என்றது.(49)
இந்த வார்த்தைகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் சிங்க முழக்கம் செய்தனர். பூமியானது, மகிழ்ச்சியால் பித்துப்பிடித்திருந்த அவர்களின் பாரத்தைத் தாங்க முடியாததாக இருந்தது.(50)
அந்தப் பிள்ளையையும், பெண்ணையும் கண்ட பிருஷதனின் மருமகள் {துருபதனின் மனைவி}, அவர்களைப் பெற விரும்பி, யாஜரை அணுகி, "என்னைத் தவிர வேறு யாரையும் இவர்கள் தங்கள் தாயாக அறியாதிருக்கட்டும்" என்றாள்.(51) யாஜர், மன்னனுக்கு நன்மை செய்ய விரும்பி, "அப்படியே ஆகட்டும்" என்றார். பின்னர் அங்கிருந்த பிராமணர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைந்து, புதிதாய்ப் பிறந்த இரட்டையர்களுக்குப் பெயர்ச் சூட்டினர்.(52) "மன்னன் துருபதனின் இந்த மகன் அதிகத் தைரியத்துடனும், இயற்கை கவசத்துடனும், ஆயுதங்களுடன் தியம்னனைப் போலப் பிறந்ததால், திருஷ்டத்யும்னன்[5] என்று அழைக்கப்படட்டும் என்றனர்.(53) பிறகு அவர்கள், "இந்தப் பெண் கரிய நிறத்தில் இருப்பதால், கிருஷ்ணை {கருப்பி} என்று அழைக்கப்படட்டும்" என்றனர்.
[5] கும்பகோணம் பதிப்பில், "ஸந்தோஷம் நிறைந்த மனத்தோடு கர்வமுள்ளவனாகவும், அதிக கோபமுள்ளவனாகவும் இருப்பதனால் த்ருஷ்டன் என்றும், பராக்கிரமமென்னும் தனமிருப்பதனாலும், கிரீடகுண்டலங்கள் முதலிய தனங்களுடன் பிறந்திருப்பதனாலும் த்யும்னன் என்றும், இந்தத் துருப குமாரன் த்ருஷ்டத்யும்னனென்று பெயருள்ளவனாக இருக்கட்டும்" என்று சொன்னதாக இருக்கிறது.
பிராமணர் தொடர்ந்தார், "இப்படியே துருபதனுக்கு வேள்வியில் அந்த இரட்டையர்கள் பிறந்தனர்.(54) பெரும் துரோணர், துருபதனிடம் இருந்து பாதி நாட்டைத் தான் அடைந்ததற்கு ஈடாக, அந்தப் பாஞ்சால இளவளரசனைத் தனது வசிப்பிடத்திற்கு அழைத்து, அவனுக்கு அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி கொடுத்தார். அந்த உயர் ஆன்ம பரத்வாஜரின் மகன் {துரோணர்}, விதி தவிர்க்க முடியாதது என்று எண்ணி, தனது புகழ் நிலைக்க, இந்தப் பெரும் காரியத்தைச் செய்தார்" {என்றார் அந்தப் பிராமணர்}.(55,56)
ஆங்கிலத்தில் | In English |