Tapati spoke to Samvarna! | Adi Parva - Section 174 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : பூமியில் விழுந்த சம்வர்ணனைக் கண்டு அங்கே வந்த தபதி; தபதிக்கும், சம்வர்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
கந்தர்வன் தொடர்ந்தான், "அந்த மங்கை மறைந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {சம்வர்ணன்} காமனால் தாக்குண்டு, உணர்வுகள் இழந்து தரையில் விழுந்தான்.(1) அப்படி அந்த ஏகாதிபதி மயங்கி விழும்போதே, அந்த மங்கை இனிமையான புன்னகையுடனும், அழகான உருண்டு திரண்ட இடுப்புடனும் அவன் முன்பு மறுபடியும் தோன்றி,(2) அந்தக் குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனிடம் இனிமையான குரலில் பேசினாள்.(3) அவள் "எழுவீராக, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, அருளப்பட்டிருப்பீராக; ஓ மன்னர்களில் புலியே, உலகத்தால் கொண்டாடப்படும் உம்மைப் போன்றவர் உணர்வை இழக்கலாகாது" என்றாள்.
அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன்,(4,5) தனது கண்களைத் திறந்து, உருண்டு திரண்ட இடுப்பைக் கொண்ட அந்தப் பெண்ணைக் கண்டான். விரகத் தாபத்தால் எரிந்த அந்த ஏகாதிபதி அந்தக் கருங்கண் மங்கையிடம், தனது பலவீன உணர்ச்சியை வெளிக்கொணரும் வார்த்தைகளில்,(6) "ஓ கருங்கண் கொண்ட அற்புத மாதே! நீ அருளப்பட்டிருப்பாயாக. உன்னைக் கண்டு ஆசைத் தீயில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக. எனது வாழ்க்கை மறைந்து கொண்டிருக்கிறது. ஓ அகன்ற கண்களைக் கொண்டவளே, தாமரையைப் போன்ற மென்மை கொண்ட உன்னைக் கண்டதும், நான் ஒரு நிமிடமும் நிறுத்தப்படாமல், தொடர்ந்து காமனின் கணைகளால் துளைக்கப்பட்டு வருகிறேன். ஓ இனிமையானவளே, மகிழ்ச்சி ததும்பிய மாதே, நான் காமன் எனும் கொடிய விஷப் பாம்பால் கடிக்கப்பட்டிருக்கிறேன்.(7-9)
ஓ சதைப்பற்றுள்ள பெரும் இடையாளே! என்னிடம் கருணை கொள்வாயாக களங்கமற்ற குணம் கொண்ட அழகானவளே, ஓ தாமரை இதழை அல்லது நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, பாடும் கின்னரர்களின் குரல் போன்று இனிமையான குரல் கொண்டவளே, இப்போது எனது வாழ்வு உன்னை நம்பியே இருக்கின்றது! ஓ மருட்சியுடையவளே, நீ இல்லாமல், என்னால் வாழ முடியாது!(10,11) ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடையவளே, காமன் தொடர்ச்சியாக என்னைத் துளைக்கிறான்!(12)
ஓ அகன்ற கண்ணுடையாளே, என்னிடம் கருணை கொள்வாயாக. ஓ கருங்கண் மாதே, என்னைக் கைவிட்டுவிடாதே; ஓ அழகானவளே, உனது அன்பைக் கொடுத்து, என்னை இந்தத் துயரத்திலிருந்து மீட்டெடுப்பாயாக.(13) முதல் பார்வையிலேயே நீ எனது இதயத்தைக் கவர்ந்தாய். எனது மனம் ஒரு நிலையில்லாமல் தவிக்கிறது! உன்னைக் கண்ட பிறகு, நான் இன்னொரு பெண்ணின் மீது பார்வையைச் செலுத்த மாட்டேன்.(14) கருணை கொள்வாயாக. நான் உனது சொல்கேட்டுப் பணிந்து நடக்கும் ஓர் அடிமையாவேன்! உனது துதிபாடியுமாவேன்! என்னை ஏற்றுக் கொள்வாயாக!
ஓ அழகிய பெண்ணே, ஓ அகன்ற கண்களைக் கொண்ட கன்னிகையே, நான் உன்னைக் கண்டதும்,(15) காமதேவன் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். அவன் தன் கணைகளால் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறான். ஓ தாமரைக் கண்ணாளே, ஆசைத்தீ என்னுள் எரிந்து கொண்டிருக்கிறது.(16) அந்த நெருப்பை உனது அன்பெனும் நீரால் {காதலால்} அணைத்துவிடுவாயாக. ஓ அழகான மங்கையே, நீ எனதாகி, கொடும் கணைகளுடன் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கும் அடக்க முடியாத காமதேவனை அடக்க வழி ஏற்படுத்துவாயாக.(17,18) ஓ அழகான நிறம் கொண்டவளே, கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ மெல்லிடையாளே, அனைத்து வகைத் திருமணங்களிலும் கந்தர்வ முறையே சிறந்ததெனச் சொல்லப்படுகிறது" என்றான்".(19)
அந்தக் கந்தர்வன் தொடர்ந்தான், "அந்த ஏகாதிபதியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தபதி, "ஓ மன்னா, நான் எனக்கு தலைவியில்லை. நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மங்கையாவேன். நீர் என்னிடம் அன்பு கொண்டிருந்தால், எனது தந்தையிடம் கேட்பீராக.(20) ஓ மன்னா, என்னால் உமது இதயம் களவு போனதாகச் சொல்கிறீர். ஆனால், நீரும், முதல் பார்வையிலேயே எனது இதயத்தைக் களவாடிவிட்டீர்.(21) நான் எனக்கு தலைவியில்லை. பெண்கள் சுதந்திரமற்றவர்கள்; எனவே, ஓ மன்னர்களில் சிறந்தவரே, நான் உம்மை அணுகவில்லை.(22) நீர் உம்மை நம்பி இருக்கும் அனைவரிடமும் அன்பாக இருக்கிறீர். புனிதமான குலத்திலும் பிறந்திருக்கிறீர். உம்மைக் கணவராக அடைய இந்த உலகத்தில் உள்ள எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்?(23) எனவே, சமயம் வாய்க்கும் போது, எனது தந்தையான ஆதித்தியரிடம் {சூரியனிடம்} வழிபாட்டுடனும், நோன்புடனும், உறுதியுடனும் சேர்த்து எனது கரத்தைக் கேட்பீராக.(24) எனது தந்தை என்னை உமக்கு அளித்தால், பிறகு, ஓ மன்னா, நான் உமக்கு எப்போதும் கட்டுப்பட்ட {அடங்கி நடக்கும்} மனைவியாக இருப்பேன்.(25) எனது பெயர் தபதி, நான் சாவித்ரிக்கு இளைய தங்கை, ஓ க்ஷத்திரியர்களில் காளையே, நான் உலகிற்கு ஒளியூட்டும் சூரியனின் மகளாவேன்" என்றாள் {தபதி}.(26)

ஆங்கிலத்தில் | In English |