Samvarana and Tapati | Adi Parva - Section 173 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : சூரியனின் மகளான தபதியின் வரலாறு; சூரியன் தன் பக்தனான சம்வர்ணனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பியது; தபதியை மலையில் கண்டு காமுற்ற சம்வர்ணன்; பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்த தபதி...
அர்ஜுனன், "நீ என்னைத் தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். எனவே, அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன்.(1) ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாகக் கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்?'' என்று கேட்டான்".(2)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட கந்தர்வன், குந்தியின் மைந்தனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} மூவுலகங்களும் அறிந்த பின்வரும் கதையைச் சொன்னான். கந்தர்வன்,(3) "ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தா, புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனே, அந்த அழகான கதையை நான் உங்களுக்கு முழுமையாக உரைப்பேன்.(4) தபதேயா என்று நான் உன்னை அழைத்ததற்கான காரணத்தை விரிவாகச் சொல்லப்போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(5) எவன் மொத்த ஆகாயத்தையும் தன்னொளியால் படர்ந்து ஊடுருவி இருக்கிறானோ அந்த விவஸ்வானுக்கு {சூரியனுக்கு}, தனக்கு இணையான பிரகாசம் கொண்டவளாக தபதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள்.(6) தேவன் விவஸ்வானின் மகளான தபதி, சாவித்ரிக்கு இளைய தங்கையாவாள். அவள் தனது தவத்துறவுக்காக மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்டாள்.(7) தேவர்களிலும், அசுரர்களிலும், யக்ஷர்களிலும், அப்சரஸ்களிலும், கந்தர்வர்களிலும் கூட அவளுக்கு இணையான அழகு கொண்ட பெண் யாரும் இல்லை.(8) அளந்து வைத்த அளவு போலச் சரியான மற்றும் சமச்சீரான வனப்புகளுடைய உடலமைப்புடன், களங்கமற்ற குணம் கொண்டு, கரிய அகலமான கண்களுடன், அழகான ஆடை அணிந்த அந்தப் பெண், கற்புக்கரசியாகவும், சரியான நடத்தையுள்ளவளாகவும் இருந்தாள்.(9) ஓ பாரதா {அர்ஜுனா}, அவளைக் கண்ட சூரியன், அவளுக்கு இணையான அழகுடனும், நடத்தையுடனும், கல்வியுடனும் அவளுக்குக் கணவனாகும் தகுதியுடன் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று நினைத்தான்.(10)
அவள் வயதுக்கு வந்ததும், அவளுக்குச் சரியான கணவனைக் காண முடியாமால் அவளது தந்தை மன நிம்மதி இழந்து, சரியான மனிதரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்.(11) அந்த நேரத்தில், ஓ குந்தியின் மகனே, ரிக்ஷனின் மகனும், குரு குலத்தின் காளையுமான, பெரும் பலம் வாய்ந்த மன்னன் சம்வர்ணன், அர்க்கியம், பூமாலை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை, உறுதிகளுடனும் விரதங்களுடனும், பல்வேறு துறவு நோன்புகளுடனும் சூரியனை வணங்கி வந்தான்.(12,13) உண்மையில் அந்த மகிமைவாய்ந்த சம்வர்ணன், அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் பக்தியுடன் சூரியனை வழிபட்டான்.(14) அறவிதிகளைக் கடைப்பிடித்து வந்த சம்வர்ணன், பூமியில் இணையில்லாத அழகுடன் திகழ்வதைக் கண்ட சூரியன், அவனே தனது மகள் தபதிக்குச் சரியான இணை என்று நினைத்தான்.(15)
ஓ குரு குலத்தவனே {அர்ஜுனா}, தனது மகள் தபதியை அந்த மன்னர்களில் சிறந்தனும், உலகப்புகழ் கொண்ட குலத்தின் கொழுந்துமான சம்வர்ணனுக்கு அளிக்க விவஸ்வான் முடிவு செய்தான்.(16) சூரியன் எப்படி ஆகாயத்தில் தனது பிரகாசத்தைப் பரப்பினானோ, அப்படியே மன்னன் சம்வர்ணனும், அனைத்துப் பகுதிகளையும் தனது நற்சாதனைகளின் பிரகாசத்தால் பிரகாசிக்க வைத்தான்.(17) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பிராமணர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களும் சம்வரணனை வழிபட்டார்கள்.(18) நற்பேறு அருளப்பட்டவனான மன்னன் சம்வர்ணன், நண்பர்களின் இதயங்களை வெல்வதில் சோமனை {நிலவை} விஞ்சினான். எதிரிகளின் இதயங்களை எரிப்பதில் சூரியனை விஞ்சினான்.(19) ஓ கௌரவா {அர்ஜுனா}, தபனா (சூரியன்} தனது மகள் தபதியை, அனைத்து அறங்களும் சாதனைகளும் கொண்ட மன்னன் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்தான்.(20)
ஒரு சமயத்தில், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகும், அளவிலா ஆற்றலும் கொண்ட அந்த மன்னன் சம்வர்ணன், மலையின் சாரலில் இருக்கும் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டைக்காகச் சென்றான்.(21) அவன் மான்களைத் தேடி உலவிக் கொண்டிருக்கும்போது, ஓ பார்த்தா, அம்மன்னனின் அருமையான குதிரை, சோர்வலும், களைப்பாலும், தாகத்தாலும் அந்த மலையிலேயே இறந்தது.(22) அந்தக் குதிரையைக் கைவிட்ட அம்மன்னன், ஓ அர்ஜுனா, அந்த மலையின் சாரலில் நடந்து உலாவினான். அப்படி உலாவும் போது, அந்த ஏகாதிபதி! பெரிய கண்களுடைய ஓர் அழகான மங்கையைக் கண்டான்.(23) அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சிறப்புமிக்க மன்னன், தனியனாகத் தனியாக இருக்கும் அந்த கன்னிகையைப் பார்த்துக் கொண்டே அசைவில்லாமல் நின்றான்.(24) அந்த இடத்தில் அவ்வளவு அழகோடிருந்தவளைக் கண்ட மன்னன், அவளை ஸ்ரீ {லட்சுமி} என்றே நினைத்தான். அடுத்து அவளைச் சூரியனின் கதிரில் உருவான வடிவம் என்று நினைத்தான்.(25)
நெருப்புக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்ட அவள், அருளுடைமையாலும், இனிமையாலும் நிலவைப் போலவும் இருந்தாள்.(26) அந்த மலையின் சாரலில் நின்று கொண்டிருந்த அந்தக் கரிய கண் படைத்தவள், பொற்சிலையெனப் பிரகாசமாக நின்றாள்.(27) கொடிகளுடனும் செடிகளுடனும் கூடிய அந்தமலையே, இந்த மங்கையின் அழகாலும், அவள் அணிந்து வந்த ஆடையாலும், பொன்மயமாக மாறியதாகத் தோன்றிற்று.(28) அவன், முன்பு கண்டிருந்த பெண்கள் அனைவரையும் அழகில் குறைவானவர்களாக அறிந்து, தான் அவளைக் கண்டது, தனது கண்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தான்.(29) அம்மன்னன், தான் பிறந்ததிலிருந்தே இப்படியொரு அழகைக் கண்டதில்லை என்றே நினைத்தான். அந்த மங்கையால், அம்மன்னனின் இதயமும் கண்களும் வெல்லப்பட்டன. கயிற்றால் கட்டப்பட்டவன் போல அவன் அந்த இடத்திலேயே உணர்வுகளற்று வேர் முளைத்து நின்றான்.
இவ்வழகைப் படைத்த படைப்பாளியானவன், நிச்சயம் அசுரர்கள் மற்றும் மனிதர்களின் உலகை நன்றாகக் கடைந்த பிறகே செய்திருக்க வேண்டும் என்று அந்த மன்னன் நினைத்துக் கொண்டான்.(30,31) இப்படிப் பல்வேறு சிந்தனைகளுடன் இருந்த மன்னன் சம்வர்ணன், அந்த மங்கையின் அழகு என்ற செல்வம், மூவுலகங்களிலும் இல்லாதது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(32) புனிதமான வழியில் வந்த அந்த ஏகாதிபதி! அந்த அழகான மங்கையைக் கண்டு, காமனின் (மன்மதனின்) கணைகளால் துளைக்கப்பட்டுத் தனது மன அமைதியைத் தொலைத்தான்.(33)
ஆசையெனும் கடுந்தீயால் உந்தப்பட்டுத் தனது இளமையின் ஆரம்பத்திலிருந்த அந்த அப்பாவிப் பெண்ணிடம்,(34) "ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, நீ யார், யாருடையவள்? நீ ஏன் இங்கு இருக்கிறாய்? ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் திரிகிறாய்?(35) களங்கமற்ற சரியான அனைத்துக் குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை.(36,37) ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும், கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது!(38) ஓ அழகான முகம் கொண்டவளே, மதியை {நிலவை} விட இனிமையான முகமும், தாமரை இதழ்களைப் போன்ற அருள் நிறைந்த கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டதால், காமதேவன் என்னைத் துளைத்தெடுக்கிறான்" என்றான்.(39)
மன்னன் சம்வர்ணன் கானகத்திலிருந்த அந்த மங்கையிடம் இப்படிச் சொன்னதும், அம்மங்கை ஆசைத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ஏகாதிபதியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(40) அதற்குப் பதிலாக, மேகத்தினூடே இருக்கும் மின்னலைப் போல அந்த அகன்ற கண்களுடைய மங்கை, அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனாள்.(41) அம்மன்னன் அனிவை இழந்த ஒருவனைப் போல அந்தத் தாமரை இதழ் கண்களைக் கொண்ட பெண்ணை கானகம் முழுவதும் தேடினான்.(42) ஆனால், அவளைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் தனக்குள்ளேயே பெரும்புலம்பல் புலம்பித் துயரத்துடன் அங்கேயே அசைவற்று நின்றான்" {என்றான் சித்திரரதன்}.(43)

ஆங்கிலத்தில் | In English |