Not even a drop of dew fell from the sky! | Adi Parva - Section 175 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : மீண்டும் மறைந்த தபதி; மன்னனிடம் வந்த வசிஷ்டர்; சூரியனிடம் பெண் கேட்ட வசிஷ்டர்; சம்வர்ணனும், தபதியும் திருமணம் செய்து கொண்டது; நாட்டில் பஞ்சமேற்பட்டது; பஞ்சத்தை நீக்கிய வசிஷ்டர்...
கந்தர்வன் தொடர்ந்தான், "இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.(1) அவனது அமைச்சர்களும், தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடிக் கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர்.(2) அந்தத் தனிமையான இடத்தில் வானிருந்து விழுந்த வானவில்லைப் போலக் கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது முதல் அமைச்சர் நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனைத் தூக்கினார்.(3-5) வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, மன்னனிடம், "ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!" என்று சொல்லி இனிமையாகப் பேசத் தொடங்கினார்.(6,7)
பசியாலும், தாகத்தாலும், களைப்பாலேயுமே அவன் அப்படித் தரையில் விழுந்து கிடைந்ததாக அந்த அமைச்சர் நினைத்தார்.(8) அப்போது அந்த வயது முதிர்ந்தவர், ஏகாதிபதியின் முடிதரித்த தலையில் குளிர்ந்த நீரைத்தெளித்துத் தாமரை இதழ்களைக் கொண்டு அவனை மூர்ச்சை தெளிவித்தார்.(9) மெதுவாகச் சுயநினைவை அடைந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, தனது அமைச்சர் ஒருவரைத் தவிர மற்ற பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டான்.(10) அப்படிப் பணியாட்கள் சென்றதும், மன்னன் மலையின் சாரலில் அமர்ந்தான். தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட அம்மன்னன், மலைகளில் முதன்மையான அம்மலையில் அமர்ந்து,(11) தூய்மையடைந்து தனது கரங்களைக் குவித்து, முகத்தை உயர்த்திச் சூரியனை வழிபட்டான்.(12)
எதிரிகளைத் தாக்கும் அந்த மன்னன் சம்வர்ணன், முனிவர்களில் சிறந்த தனது தலைமைப் புரோகிதர் வசிஷ்டரையும் நினைத்தான்.(13) அந்த மன்னன் இரவும் பகலுமாகத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் அங்கேயே அமர்ந்து தியானித்தான். பனிரெண்டாவது நாளில் பிராமண முனிவர் வசிஷ்டர் அங்கே வந்தார்.(14) தபதியினால் உணர்விழந்த ஏகாதிபதியின் நிலையைத் தனது ஞானப்பார்வையால் உணர்ந்தார் பெரும் முனிவர்.(15) எப்போதும் நோன்பு நோற்கும் ஏகாதிபதிக்கு நன்மை செய்ய விரும்பிய முனிவர்களில் சிறந்த அறம்சார்ந்தவர் அவனிடம் அனைத்து உறுதிகளையும் அளித்துப் பேசினார்.(16) அச்சிறப்புமிகுந்த முனிவர், ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேலே எழும்பி வானத்தில் பிரகாசத்துடன் இருந்த சூரியனிடம் பேசினார்.(17) ஆயிரம் கதிர்கள் கொண்ட சூரியனை, அந்த பிராமணர் அணுகி, மகிழ்ச்சிகரமாக, "நான் தான் வசிஷ்டன்" என்றார்.(18)
அப்போது, பெரும் சக்தி கொண்ட அந்த விவஸ்வான் {சூரியன்}, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம், "ஓ பெரு முனியே, நீர் வரவேற்கப்படுகிறீர் {உமது வரவு நல்வரவாகட்டும்}, உமது மனத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குச் சொல்வீராக.(19) ஓ பெரும் நற்பேறுபெற்றவரே, நீர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர், நாநலமிக்கவர்களில் முதன்மையானவரே, நீர் எவ்வளவு கடுமையான ஒன்றைக் கேட்டாலும் நான் அதை உமக்கு அளிக்கிறேன்!" என்றான்.(20) இப்படிச் சூரியனால் சொல்லப்பட்ட பெரும் ஆன்மத்தகுதி கொண்ட பெரும் முனிவர், அந்த ஒளிக்கடவுளை வணங்கி,(21) "ஓ விபாவசு, இஃது உனது மகளான தபதி, இவள் சாவித்ரியின் இளைய சகோதரி, நான் இவளை சம்வர்ணனுக்காக உன்னிடம் கேட்கிறேன்! அந்த ஏகாதிபதி பெரும் சாதனைகள் செய்தவன், அறம் தவறாத உயர்ந்த ஆன்மா கொண்டவன். ஓ விண்ணதிகாரியே, சம்வர்ணன் உனது மகளுக்குத் தகுதியுடைய கணவனாக இருப்பான்" என்றார்.(22,23)
முனிவரால் இப்படிச் சொல்லப்பட்ட விபாகரன் {சூரியன்}, தனது மகளைச் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்து, முனிவரை வணங்கி,(24) "சம்வர்ணன் ஏகாதிபதிகளில் சிறந்தவனாவான், நீர் முனிவர்களில் சிறந்தவராவீர், தபதி பெண்களில் சிறந்தவளாவாள். சம்வர்ணனுக்கு அவளை அளிப்பதைத் தவிர, இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது?"(25) என்று சொன்ன தேவன் தபனன் {சூரியன்}, களங்கமற்ற தனது மகள் தபதியை சம்வர்ணனுக்கு அளிப்பதற்காகச் சிறப்புமிகுந்த வசிஷ்டரிடம் கொடுத்தான்.(26)
பெரும் முனிவர், மங்கை தபதியை ஏற்றுக் கொண்டு, சூரியனிடம் விடைபெற்றுக் கொண்டு, குருகுலத்தின் காளை {சம்வர்ணன்} அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினார்.(27) காதலால் கட்டுண்டு, தபதியிடம் இதயத்தை நிலைக்கச் செய்து இருந்த அம்மன்னன் சம்வர்ணன், வசிஷ்டருடன் வந்து கொண்டிருந்த அந்தத் தேவமங்கையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான்.(28) அழகான புருவங்களைக் கொண்ட அந்தத் தபதி, மேகத்திலிருந்து மின்னல் இறங்குவது போல வானத்திலிருந்து சொர்க்கத்தின் பத்துப் புள்ளிகளையும் கிறங்கடித்தபடி இறங்கி வந்தாள்.(29,30) ஏகாதிபதியின் பனிரெண்டு இரவு நோன்பு முடிந்ததும், புனிதமான ஆன்மா கொண்ட சிறப்பு மிகுந்த முனிவர் வசிஷ்டர் அவனை அணுகினார்.(31) இப்படியே மன்னன் சம்வர்ணன், நல்லதைச் செய்யும் தலைவனான விவஸ்வானை, வசிஷ்டரின் (ஆன்ம சக்தியின்) மூலம் வழிபட்டு ஒரு மனைவியை அடைந்தான்.(32)
மனிதர்களில் காளையான சம்வர்ணன், தேவர்களும், கந்தர்வர்களும் வந்து செல்லும் அந்த மலையின் சாரலில் தபதியின் கரங்களை உரிய சடங்குகளுடன் ஏற்றான்.(33) பிறகு அந்த அரச முனி {சம்வர்ணன்}, வசிஷ்டரின் அனுமதியுடன், தன் மனைவியுடன் அம்மலையில் விளையாட விரும்பினான்.(34) அவன் தன் வசிஷ்டரையே தன் தலைநகரையும், நாட்டையும், காடுகளையும் ஆளச் செய்தான்.(35) பிறகு அந்த மன்னனிடம் விடைபெற்றுக் கொண்ட வசிஷ்டர் அவனை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பேரில் அம்மன்னன் ஒரு தேவனைப் போல அம்மலையில் விளையாடத் தொடங்கினான்.(36) அம்மன்னன் தன் மனைவியுடன் அம்மலையிலிருந்த காடுகளிலும், தோப்புகளிலும் பனிரெண்டு (நீண்ட) வருடங்கள் விளையாடிக் கொண்டிருந்தான்.(37)
ஓ பாரதக் குலத்தவனே, அந்தப் பனிரெண்டு வருடகாலத்திற்கும், ஆயிரங்கண்களைக் கொண்டவன் அம்மன்னனின் நாட்டிலும், தலைநகரிலும் மழையைப் பொழியவில்லை.(38) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, பஞ்சகாலம் வந்தபோது, செடிகள், தானியங்கள், விலங்குகளுடன் சேர்ந்து மக்களும் மடியத் தொடங்கினர்.(39) அந்தப் பயங்கர (பஞ்ச) காலத்தில், வானிலிருந்து ஒரு துளி பனியும் விழவில்லை. அதன் விளைவாக எந்தத் தானியங்களும் அங்கே விளையவில்லை.(40) அதன்பேரில், பசி அச்சத்தால் பீடிக்கப்பட்ட மக்கள், துயரத்துடன் தங்கள் வீடுகளைவிட்டுவிட்டு அனைத்தத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட அந்நாட்டின் மக்கள் தங்கள் மனைவியரையும், பிள்ளைகளையும் கைவிட்டு, ஒருவரைக் குறித்து ஒருவர் கவலைகொள்ளாதிருந்தனர்.(42) பசியிலும், பிணியிலும் பீடிக்கப்பட்ட மக்கள் இறந்து போல எலும்புக்கூடுகளைப் போல ஆகினர். அந்நகரமே பிசாசுகள் நிறைந்த யமலோகம் போல இருந்தது.(43) நாடு அந்நிலையில் இருப்பதைக் கண்டவரும், சிறப்புமிக்க முனிவரும், தவசிகளில் சிறந்தவரும், அறமனம் கொண்டவருமான வசிஷ்டர், அத்தீமைக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார்.(44) ஓ மன்னா, அவர் பல வருடங்களைத் தன் மனைவியோடு கழித்திருந்த சம்வர்ணனையும், அவனது மனைவியான தபதியையும் அந்நாட்டிற்கும் திரும்ப அழைத்து வந்தார்.(45)
அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் தன் தலை நகரை அடைந்தபோது, பழைய நிலைமைகளை மீண்டன, ஆயிரங்கண் கொண்டவனும், அசுரர்களைக் கொல்பவனுமான தேவன் {இந்திரன்}, அபரிமிதமாக மழையைப் பொழிந்து தானியங்களை வளரச் செய்தான்.(46) இவ்வாறு நல்ல மனம் கொண்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் நிறுவப்பட்டதும் அந்நாடும் நகரமும் மீண்டும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தது.(47) அதன்பிறகு அம்மன்னன் தன் மனைவியான தபதியுடன் சேர்ந்து இந்திரனும் சச்சியையும் பல பனிரெண்டு வருட வேள்வியைச் செய்தான்".(48)
கந்தர்வன் தொடர்ந்தான், "ஓ பார்த்தா, இதுவே பழங்காலத்தில் விவஸ்வானின் மகளான தபதியின் அருளப்பட்ட வரலாறாகும். அவளைக் காரணமாகக் கொண்டே நீ தபதேயன் ஆனாய்.(49) ஓ அர்ஜுனா, மன்னன் சம்வர்ணன், அந்தத் தபதியிடம், குரு என்ற பெயருடைய மகனைப் பெற்றெடுத்தான். தபதியின் குலத்தில் பிறந்ததாலேயே நீ தபதேயேன் என்று அழைக்கப்படுகிறாய்" {என்றான் கந்தர்வன்}".(50)

ஆங்கிலத்தில் | In English |