Who is that Vasishta? | Adi Parva - Section 176 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் மகிமையைச் சொன்ன கந்தர்வன்...
வைசம்பாயனர் சொன்னார், கந்தர்வனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும் பாரதக் குலத்தில் சிறந்தவனுமான அர்ஜுனன், முழு மதியைப் போல அர்ப்பணிப்பால் நிறைந்து நின்றான்.(1) குருக்களில் சிறந்தவனா அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்}, வசிஷ்டரின் ஆன்ம பலத்தைக் கேட்டு ஆவலால் தூண்டப்பட்டு அந்தக் கந்தர்வனிடம் இவ்வாறு பேசினான்,(2) "வசிஷ்டர் என்று நீர் சொன்ன முனிவரைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். அவரைக் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வாயாக.(3) ஓ கந்தர்வர் தலைவனே, எங்கள் மூதாதையர்களுக்குப் புரோகிதராக இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர் யார் என்பதையும் சொல்" என்று கேட்டான்.(4)
அதற்கு அந்தக் கந்தர்வன், "வசிஷ்டர், பிரம்மனின் ஆன்ம மகனும் (மனத்தால் பிறந்தவர்) அருந்ததியின் கணவரும் ஆவார். தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தைத் தனது ஆன்ம நோன்புகளால் வெற்றிக் கொண்டு, அவை {ஆசையும் கோபமும்} அவரது கால்களைப் பிடித்துவிடும்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர். விஷ்வாமித்திரர் செய்த குற்றத்தினால் அவரது கோபம் தூண்டப்பட்டாலும், அந்த உயர் ஆன்ம முனிவர் கௌசிகர்களைக் (மன்னன் விஷ்வாமித்திரரின் இனக்குழுவை {குலத்தை}) கொல்லாதிருந்தார்.(5,6) தனது மகன்களை இழந்து துயருற்ற போதும், தன்னைச் சக்தியற்றவராகக் கருதிக் கொண்டு, தான் அப்படியில்லையென்றாலும், விஷ்வாமித்திரருக்கு அழிவு உண்டாகும்படி எக்காரியத்தையும் செய்யாமல், சமுத்திரம் கலங்கினாலும் கண்டங்கள் கலங்காததுபோல இருந்தார். வசிஷ்டர் தனது பிள்ளைகளை மரணதேவன் பகுதியில் இருந்து மீட்டு யமனை (யம {தர்ம} நீதியை) மீறிச் செயல்படவில்லை. தன்னையே வெற்றிக் கொண்ட சிறப்பு மிகுந்தவரை அடைந்ததால்தான், இக்ஷவாகுவாலும் மற்ற பெரும் ஏகாதிபதிகளாலும் முழு உலகத்தையும் அடைய முடிந்தது. ஓ குருகுல இளவரசனே {அர்ஜுனா}, முனிவர்களில் சிறந்த வசிஷ்டரைப் புரோகிதராக அடைந்ததால்தான், அந்த ஏகாதிபதிகளால் பெரும் வேள்விகளைச் செய்ய முடிந்தது. ஓ பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, மறுபிறப்பாளரான அந்த முனிவர், தேவர்களுக்குப் பிருஹஸ்பதி உதவுவது போல, அந்த ஏகாதிபதிகள் வேள்வி செய்யத் துணை புரிந்தார்.(7-11)
எனவே, இதயத்தில் அறம் நிலைத்த, வேதமறிந்த நல்ல பிராமணனைப் புரோகிதனாக உங்களுக்கு நியமித்துக் கொள்வாயாக.(12) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பூமியை வெற்றிக் கொண்டு, தனது எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் நல்ல குலத்தில் பிறந்த க்ஷத்திரியன், முதலில் நல்ல புரோகிதரை நியமித்துக் கொள்ள வேண்டும். உலகத்தை வெற்றிகொள்ள நினைப்பவன் எவனோ, அவன் ஒரு பிராமணனைத் தன் முன் கொண்டிருக்க வேண்டும்.(13) எனவே, ஓ அர்ஜுனா, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அறிந்து, புலன்களைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கல்விமானான ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்வாயாக" {என்றான் கந்தர்வன்}".(14)

ஆங்கிலத்தில் | In English |