King Kalmashapada! | Adi Parva - Section 178 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் மகன் சக்திரி; கல்மாஷபாதனுக்குச் சாபம் கொடுத்த சக்திரி; வசிஷ்டரின் மகன்களைக் கொன்று தின்ற கல்மாஷபாதன்; பிள்ளைசோகத்தால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற வசிஷ்டர்...
கந்தர்வன் தொடர்ந்தான், "ஓ பார்த்தா, இக்ஷவாகு குலத்தில் பிறந்த கல்மாஷபாதன்[1] என்றொரு மன்னன் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லாத ஆற்றலைக் கொண்டவனாக இருந்தான்.(1) ஒரு நாள் அம்மன்னன், வேட்டையாட விரும்பித் தனது தலைநகரைவிட்டுக் கானகத்திற்குச் சென்று பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும் (தனது கணைகளால்) துளைத்தான்.(2) அந்த அடர்ந்த கானகத்தில், மன்னன் பல காண்டாமிருகங்களையும் வீழ்த்தினான். இந்த விளையாட்டில் நெடுநேரம் ஈடுபட்டு மிகவும் களைப்படைந்த அவன், கடைசியாகத் தனது துரத்தலைக் கைவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினான்.(3) சக்தி கொண்ட பெரும் விஷ்வாமித்திரர், சிறிது காலத்திற்கு முன் இந்த ஏகாதிபதியைத் தனது சீடனாக ஏற்க விரும்பினார்.அப்படிப்பட்ட அந்த ஏகாதிபதி! பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து கானகத்தில் முன்னேறி வரும்போது, சிறப்பு மிகுந்த வசிஷ்டரின் மகனான, முனிவர்களில் சிறந்தவர் ஒருவர் அதே வழியில் அவனுக்கு எதிர்ப்பட்டார். போரில் எப்போதும் வெற்றிவாகையே சூடிவந்த அந்த மன்னன், வசிஷ்ட குலத்தை வளரச் செய்யும் சக்திரி என்ற பெயர் கொண்ட வசிஷ்டரின் நூறு மகன்களில் மூத்த மகனைக் கண்டான்.(4-6)
அம்மன்னன் அவரைக் கண்டு, "எங்கள் வழியில் இருந்து விலகி நில்லும்" என்றான். முனிவர் அந்த ஏகாதிபதியிடம் இணக்கமான சமாதானமான முறையில் இனிமையாக,(7) "ஓ மன்னா, இஃது எனது வழி. மன்னர்கள் எப்போதும் பிராமணர்களுக்கு வழி உண்டாக்க வேண்டும் என்பதே அற நெறியின் நிலைத்த விதியாகும். இதுவே தர்மம் மற்றும் கடமைக்கான அனைத்து நீதிகளிலும் சுட்டிக்காட்டப்படுகிறது" என்றார்.(8)
இப்படி அந்த இருவரும் மாறிமாறித் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் சொல்லி, "விலகி நில்லும், விலகி நில்லும்" என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.(9) தர்மத்தின் வழியைத் தனது வழியாகக் கொண்ட அந்த முனிவரும் வழிகொடுக்கவில்லை. செருக்கும், சினமும் கொண்ட அந்த அரசனும் வழி கொடுக்கவில்லை.(10) இதனால் அந்த முனிவரின் மீது கோபம் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், வழியும் கொடுக்காமல், அவரைக் கசையால் அடித்து ராட்சசன் போல நடந்து கொண்டான்.(11) இப்படி அந்த ஏகாதிபதியால் கசையால் அடிக்கப்பட்ட அந்த வசிஷ்டரின் மகனான {சக்திரி} முனிவர்களில் சிறந்தவர், கோபத்தால் தனது உணர்வை இழந்து, விரைவாக அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனை {கல்மாஷபாதனை},(12) "ஓ மன்னர்களில் இழிந்தவனே, நீ ஒரு துறவியிடம் ராட்சசனைப் போல நடந்து கொண்டதால், இந்நாள் முதல் நீ மனித சதையை உண்டு வாழும் ராட்சசனாக மாறுவாய்.(13) மன்னர்களில் இழிந்தவனே, நீ இந்த மனித உருவம் பாதிக்குமாறு உலகம் முழுவதும் சுற்றித் திரிவாய்" என்று சபித்தார். இப்படிச் சக்திரி என்ற அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்ட முனிவர், மன்னன் கல்மாஷபாதனிடம் பேசினார். (14)
இந்நேரத்தில், அந்த ஏகாதிபதியும், வசிஷ்டரின் மகனும் இருந்த அந்த இடத்திற்கு விஷ்வாமித்திரர் வந்தார். ஏற்கனவே கல்மாஷபாதனைச் சீடனாக ஏற்பதில் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் ஒரு பிணக்கு இருந்தது.(15) ஓ பார்த்தா {அர்ஜுனா}, கடும் விரதங்கள் இருந்த, பெரும் சக்தி கொண்ட விஷ்வாமித்திரர் அவ்விருவரையும் (அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைத் தனது ஆன்மப் பார்வையால் கண்டு) அணுகினார்.(16) ஓ பாரதா {அர்ஜுனா}, விஷ்வாமித்திரர் தனது நன்மையை விரும்பி, அந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அரூபமாக இருந்து நடக்கும் சம்பவங்களைக் கவனித்து வந்தார். அந்தச் சாபம் சொல்லப்பட்டவுடன், அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுக்கு இவர் வசிஷ்டரின் மகன் என்பதும், வசிஷ்டருக்கு இணையான சக்தி கொண்டவர் இவர் என்பதையும் அறிந்து கொண்டான்.(17,18) சக்திரியால் சபிக்கப்பட்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், அந்த முனிவரைச் சாந்தப்படுத்த எண்ணி அவரிடம் தாழ்மையாக வேண்டத் தொடங்கினான்.(19)
ஓ குருக்களின் தலைவா, விஷ்வாமித்திரர், மன்னனின் மனநிலையை அறிந்து கொண்டு (தான் நினைத்த காரியம் மாறிப் போகுமே என்றெண்ணி) அந்த மன்னனின் உடலில் புகும்படி, ஒரு ராட்சசனை ஏவினார்.(20) கிங்கரன் என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசன், சக்திரியின் சாபத்திற்குக் கட்டுப்பட்டும், விஷ்வாமித்திரரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் அந்த ஏகாதிபதியின் உடலில் இறங்கினான்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் ஏகாதிபதி வந்துவிட்டான் என்பதை அறிந்த முனிவர்களில் சிறந்தவரான விஷ்வாமித்திரர், இடத்தை விட்டு அகன்று அங்கிருந்து சென்று விட்டார்.(22) சிறிது நேரம் கழித்து, ஓ பார்த்தா, அந்த ஏகாதிபதி, அந்த ராட்சசனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, அவனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் சென்று, தனது உணர்வுகளை இழந்தான்.(23) அந்த நேரத்தில், ஒரு பிராமணர் அம்மன்னனைக் கானகத்தில் கண்டார். மிகுந்த பசியோடு இருந்த அந்த பிராமணர், அந்த மன்னனிடம் இறைச்சியுடன் கூடிய உணவை இரந்து கேட்டார்.(24) நண்பர்களை மகிழ்விக்கும் அரசமுனி கல்மாஷபாதன், பிராமணரிடம், "இங்கேயே இரும், ஓ பிராமணரே, சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்.(25) நான் அப்படி வரும்போது நீர் விரும்பும் உணவை கொடுக்கிறேன்" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு ஏகாதிபதி சென்றுவிட்டான்.
ஆனால் பிராமணர் அங்கேயே இருந்தார்.(26) உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னன் சில மணி நேரங்களுக்குத் தன் விருப்பப்படி மகிழ்ச்சியாக உலவிவிட்டுக் கடைசியாகத் தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்துவிட்டான்.(27) நடு இரவில் விழித்த அந்த மன்னன், தான் கொடுத்த உறுதிமொழி நினைவுக்கு வந்தவனாக, தனது சமையற்காரனை அழைத்து,(28) கானகத்தில் தங்கியிருக்கும் பிராமணரிடம் தான் கொடுத்த உறுதியைச் சொல்லி, "அங்கே சென்று அவருக்கு உணவும் இறைச்சியும் கொடுத்து உபசரிப்பாயாக" என்றான்".(29)
கந்தர்வன் தொடர்ந்தான், "இப்படிக் கட்டளையிடப்பட்ட அந்தச் சமையற்காரன் இறைச்சி தேடி வெளியே சென்றான். இறைச்சி கிடைக்காமல் வருத்தப்பட்டு, மன்னனிடம் திரும்பி வந்து, தனது தோல்வியைச் சொன்னான்.(30) ராட்சசனின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஏகாதிபதி! எந்த மனவுறுத்தலும் இல்லாமல் மறுபடியும் மறுபடியும், "மனித இறைச்சியை அவருக்கு உணவாகக் கொடுப்பாயாக" என்றான்.(31)
அதற்கு அந்தச் சமையற்காரனும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, (மன்னனுக்குக் கட்டுப்பட்ட) மரண தண்டனை கொடுப்பவர்களிடம் சென்று மனித இறைச்சியை வாங்கி,(32) அதைக் கழுவி, முறையாகச் சமைத்து, வேக வைத்த அரிசி சோற்றால் அதை மூடி, ஆன்ம நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த பிராமணருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்.(33) ஆனால், பிராமணர்களில் சிறந்தவர், தனது ஞானப்பார்வையால், அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டும், உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்தும், கோபத்தால் கண்கள் சிவக்க,(34) "மன்னர்களில் இழிந்த இவன் எனக்குப் புனிதமற்ற, உண்ணத் தகுதியற்ற உணவைக் கொடுத்ததால், அந்தப் பாவி, இதே போன்ற உணவை விரும்புபவனாக ஆகட்டும்.(35) சக்திரி சபித்தது போல இவன் மனித இறைச்சியில் விருப்பம் கொண்டு, பாவியாக இந்த உலகம் முழுவதும் சுற்றி, அனைத்து உயிர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பான்" என்று சொன்னார்.(36)
அதற்காரணமாக, அச்சாபம் இரண்டாவது முறையாக அந்த மன்னன் மீது விழுந்து, மிகவும் பலமிக்கச் சாபமாகியது. இதனால், உடனே அந்த மன்னன் ராட்சச மனநிலை கொண்டு, விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான்.(37) சிறிது காலம் கழித்து, ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், தனக்குள் இருக்கும் ராட்சசனால் தனது மொத்த உணர்வுகளையும் இழந்து, தனக்குச் சாபமிட்ட சக்திரியைக் கண்டு,(38) "இந்த இயல்புக்குமிக்கச் சாபத்தை நீர் எனக்கு அளித்தமையால், உம்மைக் கொன்றே நான் மனித இறைச்சியை உண்பதைத் தொடங்கப் போகிறேன்" என்று சொன்னான்.(39) இப்படிச் சொன்ன அந்த மன்னன், ஒரு புலி தனக்குப் பிடித்த இரையை அடித்துத் உண்பது போல உடனடியாக சக்திரியைக் கொன்று தின்றான்.(40)
சக்திரி இப்படிக் கொல்லப்பட்டு உண்ணப்பட்டதைக் கண்ட விசுவாமித்திரர், வசிஷ்டரின் மற்ற மகன்களுக்கு எதிராகவும் அந்த ராட்சசனைத் தொடர்ந்து ஏவிக் கொண்டிருந்தார்.(41) கோபம் கொண்ட சிங்கம், சிறு மிருகங்களை அடித்து உண்பது போல, அந்த ராட்சசன் சக்திரிக்கு இளையவர்களான, சிறப்புவாய்ந்த வசிஷ்டரின் மற்ற மகன்களையும் விழுங்கினான்.(42) தனது மகன்கள் தொடர்ச்சியாக இறந்ததற்குக் காரணம் விஷ்வாமித்திரர்தான் என்பதை அறிந்த வசிஷ்டர், ஒரு பெரும் மலை பூமியைத் தாங்குவது போல, பொறுமையாக அனைத்துத் துயரங்களையும் தாங்கிக் கொண்டார்.(43) புத்திசாலிகளில் மனிதர்களில் முதன்மையான அந்த முனிவர்களில் சிறந்தவர், (கோபம் கொண்டு) குசிக இனத்தை {விஷ்வாமித்திரரின் இனம்} அழிக்க எண்ணாமல், தனது உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்தார்.(44) அப்படித் தீர்மானித்த, அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், மேரு மலையின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் அந்தக் கற்பாறைகள் நிறைந்த தரையானது, பஞ்சுப் பொதி போல அவரைத் தாங்கியது.(45)
ஓ பாண்டுவின் மைந்தனே {அர்ஜுனா}, தான் கீழே விழுந்ததனால் இறக்க வில்லை என்பதை அறிந்த அந்தச் சிறப்புமிகுந்தவர், நெருப்பை வளர்த்து, அதற்குள் இறங்கினார்.(46) ஆனால், அந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததே தவிர, அவரைப் பொசுக்கவில்லை. ஓ எதிரிகளை அழிப்பவனே, அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு அவருக்குக் குளிர்ச்சியாக இருந்தது.(47) பிறகும் துன்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீளாத அந்தப் பெரும் முனிவர், கடலைக் கண்டு, தனது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு, அதன் நீரில் விழுந்தார்.(48) ஆனால், அலைகள் அவரை விரைவாகக் கரையில் சேர்த்தன. இறுதியாக, கடும் நோன்புகள் நோற்ற அந்த பிராமணர் {வசிஷ்டர்} தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் எவ்வகையிலும் வெற்றிபெறாமல், இதயத்தில் துயர் நிறைந்து, தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்" {என்றான் கந்தர்வன்}.(49)
[1] கல்மாஷபாதனுக்கு ஸௌதாசன் மற்றும் மித்ரஸஹன் என்ற பெயர்களும் இருந்ததாக கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.

ஆங்கிலத்தில் | In English |