The Curse of the Brahmini! | Adi Parva - Section 184 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : கல்மாஷபாதனின் மனைவியிடம் வசிஷ்டர் ஏன் சேர்ந்தார் என்று அர்ஜுனன் கேட்டது; பிராமணத்தியின் சாபம் குறித்து கந்தர்வன் உரைத்தது...
அர்ஜுனன், "ஓ கந்தர்வா, மன்னன் கல்மாஷபாதன், வேதங்கள் அறிந்த மனிதர்களில் முதன்மையானவரான குரு வசிஷ்டரிடம் செல்லுமாறு, தனது ராணிக்கு {மனைவிக்கு}, எதற்காகக் கட்டளையிட்டான்?(1) அறநெறிகள் அனைத்தும் அறிந்த அந்தச் சிறப்புமிகுந்த பெரும் முனிவர் வசிஷ்டரும், தான் சேரத்தகாத ஒரு பெண்ணை ஏன் சேர்ந்தார்?(2) ஓ நண்பா, வசிஷ்டரின் இச்செயல் பாவச்செயல் ஆகாதா? உன்னிடம் தீர்வைப் பெற நான் கொள்ளும் ஐயங்களைக் களைவதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(3)
அதற்கு அந்தக் கந்தர்வன், "ஓ ஒடுக்கப்படமுடியாத தனஞ்செயா {அர்ஜுனா}, வசிஷ்டர் மற்றும் நண்பர்களைப் பேணி வளர்ப்பவனான கல்மாஷபாதன் ஆகியோரைக் குறித்து நீ கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலுரைக்க்கிறேன் கேட்பாயாக.(4) ஓ பாரதர்களில் சிறந்தவனே, மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிஷ்டரின் சிறப்புமிக்க மைந்தரான சக்திரி இட்ட சாபம் குறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.(5) அச்சாபத்தின் வசப்பட்டதால், அந்த எதிரிகளை அழிக்கும் மன்னன் கல்மாஷபாதன், கோபத்தில் கண்கள் சுழலத் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தலைநகரை விட்டு வெளியே சென்றுவிட்டான்.(6) தனது மனைவியுடன் வெளியே சென்ற அவன், தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள், சாபத்தின் ஆளுகையில் இருந்த அம்மன்னன் பலவகைப்பட்ட மான்களும், பல விலங்குகளும், பெரும் மரங்களும், செடிகளும், கொடிகளும், நிறைந்த அக்கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, அவன் மிகவும் பசித்துப் போனான். அந்த ஏகாதிபதி உணவைத் தேடத் தொடங்கினான். பசி வயிற்றைக் கிள்ளக் இறுதியாக, அக்கானகத்தின் ஒரு தனிமையான இடத்தில்,(7-9) ஒரு பிராமணனும் அவனது மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டான். அந்த ஏகாதிபதியைக் கண்ட அந்த ஜோடி அச்சத்தால் தங்கள் ஆசை நிறைவேறாமலேயே ஓடிச் சென்றனர்.(10)
ஓடும் அந்த ஜோடியைக் கண்ட அம்மன்னன், அந்த பிராமணனைப் பலவந்தமாகப் பற்றினான். அப்போது அந்த பிராமணத்தி {பிராமணப் பெண்} அகப்பட்ட தனது கணவனைக் கண்டு அந்த ஏகாதிபதியிடம் {கல்மாஷபாதனிடம்},(11) "சிறந்த நோன்புகளைக் கொண்ட ஓ ஏகாதிபதி, நான் சொல்வதைக் கேட்பாயாக! நீ சூரிய குலத்தில் பிறந்தவன் என்பதும், அறநெறிகளைக் காப்பவன் என்பதும், பெரியோரின் தொண்டுக்கு உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதும் உலகம் அறிந்தவையாகும். நீ பாவம் இழைப்பது உனக்குத் தகாது. ஓ ஒடுக்கப்பட முடியாதவனே, {முனிவர்களின்} சாபத்தால் நீ உனது உணர்வுகளை இழந்திருக்கிறாய். (12,13) இப்போது எனது காலம் கனிந்திருக்கிறது, எனவே, நான் எனது கணவரோடு இணைந்திருந்தேன். எங்கள் உறவில் நான் இன்னும் நிறைவடையவில்லை.(14) எங்களிடம் கருணை கொள்வாயாக. ஓ மன்னர்களில் சிறந்தவனே, எனது கணவரை விடுவிப்பாயாக" என்று கேட்டாள்.(15)
இருப்பினும் அந்த ஏகாதிபதி {கல்மாஷபாதன்} அவ்வார்த்தைகளைக் கேளாமல், விருப்பப்பட்ட உணவை உண்ணும் புலியொன்றைப் போல அந்த பிராமணனை விழுங்கினான்.(16) இக்காட்சியால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கண்ணீர் தரையில் விழுந்து நெருப்பெனத் தகித்து அந்த இடத்தையே எரித்தது.(17) தனது கணவனுக்கு நேர்ந்த பேரிடரால் பெரும் துன்பமடைந்த அந்த பிராமணத்தி கல்மாஷபாதனிடம் கோபத்துடன்,(18) "கொடும் பாவியே, எனது ஆசை நிறைவேறாத சூழ்நிலையில், எனது மூக்கின் அருகிலேயே {முன்னிலையிலேயே} எனக்கு அன்பானவரும், சிறப்புமிக்கவருமான கணவரை நீ விழுங்கியதால், ஓ தீயவனே, உனது மனைவிக்கான காலத்தில் நீ அவளுடன் இணைந்தால், எனது சாபத்தின் சக்தியால் உடனே மரணிப்பாய். ஓ பாவியே, மேலும், நீ யாருடைய பிள்ளைகளைத் தின்றாயோ, அந்த முனிவர் வசிஷ்டருடன் கூடி உனது மனைவி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். ஓ மன்னர்களில் இழிந்தவனே, அவனே உனது குலத்தைத் தழைக்கச் செய்வான்" என்று சபித்தாள்.(19-21)
அனைத்து நற்குறிகளையும் கொண்டவளும், அங்கீரஸக் குடும்பத்தைச் சேர்ந்தவளுமான அந்தப் பெண், இவ்வாறு அந்த ஏகாதபதியைச் சபித்துவிட்டு, அந்த ஏகாதபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தாள்.(22) ஓ எதிரிகளனைவரையும் தண்டிப்பவனே {அர்ஜுனா}, சிறப்புமிகுந்தவரும், மேன்மையானவருமான அந்த வசிஷ்டர், தனது ஆன்ம சக்தியாலும், தெய்வீகப் பார்வையாலும் இவையாவையும் அறிந்தார்.(23) வெகு காலம் கழித்து, சாபத்திலிருந்து மன்னன் {கல்மாஷபாதன்} விடுபட்டதும், தனது மனைவி மதயந்தியிடம் அவளது காலத்தில் அணுகினான். ஆனால், அந்த மதயந்தி மென்மையாகப் பேசி அவனை அனுப்பிவிட்டாள்.(24) ஆசையின் ஆதிக்கத்தில் இருந்த மன்னன், பழைய சாபத்தை நினைத்துப் பார்த்தான். இருப்பினும், தனது மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவன், கடும் அச்சத்துக்குள்ளானான்.(25) பழைய சாபத்தை நினைத்துப் பார்த்து, நடந்த காரியத்திற்காக மிகவும் வருந்தினான். இந்தக் காரணத்திற்காகவே, ஓ மனிதர்களில் சிறந்தவனே, அந்த பிராமணத்தியின் சாபத்தால் பாதிப்படைந்த அந்த ஏகாதிபதி, தனது ராணியிடம் ஒரு மகனைப் பெற வசிஷ்டரை நியமித்தான்" {என்றான் கந்தர்வன்}.(26)

ஆங்கிலத்தில் | In English |