Dhaumya became the priest of Pandavas! | Adi Parva - Section 185 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : தகுந்த புரோகிதரை அர்ஜுனன் கேட்க, கந்தர்வன் தௌமியரை நியமிக்கச் சொன்னது; பாண்டவர்கள் உத்கோசகம் சென்று தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்தது; பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்ல உத்தேசித்தது...
அர்ஜுனன், "ஓ கந்தர்வா, நீ அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறாய். எனவே, வேதமறிந்த எந்த பிராமணர் எங்களது புரோகிதராக நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்" என்று கேட்டான்.(1)
அதற்குக் கந்தர்வன், "இக்கானகத்தில் உத்கோசகம் எனும் புண்ணியத்தலம் இருக்கிறது. தேவலரின் தம்பியான தௌமியர் அங்கே தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் விருப்பப்பட்டால் அவரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்ளுங்கள்" என்றான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நடந்த காரியம் அனைத்திலும் மனநிறைவு கொண்ட அர்ஜுனன் பிறகு, தனது அக்னேய அஸ்திரத்தை முறையான சடங்குகளுடன் அந்தக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். அப்போது, அவனிடம் அந்தப் பாண்டவன்,(3) "ஓ கந்தர்வர்களில் சிறந்தவனே, நீ கொடுக்கும் புரவிகள் {குதிரைகள்} தற்சமயத்திற்கு உன்னிடமே இருக்கட்டும். நேரம் வரும்போது, நாங்கள் உன்னிடம் இருந்து அவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். நீ அருளப்பட்டிருப்பாயாக" என்றான்.(4) அந்தக் கந்தர்வனும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் மரியாதையைச் செலுத்தி வணங்கி, அந்தப் பாகீரதியின் {கங்கையின்} கரையை விட்டு அகன்று, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(5)
ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் உத்கோசகத்திற்குச் சென்று, அந்தப் புனிதமான ஆசிரமத்திலிருந்த தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்துக் கொண்டனர்.(6) வேதமறிந்தவர்களில் முதன்மையானவரான அந்தத் தௌமியர், அவர்களுக்குக் காட்டுப் பழங்களையும், கிழங்குகளையும் கொடுத்து வரவேற்று, அவர்களின் புரோகிதராவதற்கு ஏற்றுக் கொண்டார்.(7) பாண்டவர்கள், அந்த பிராமணரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, தங்கள் தாயுடன் சேர்ந்து அறுவராகச் சேர்ந்து, தங்கள் ஆட்சியுரிமையையும், தங்கள் நாட்டையும், பாஞ்சால மன்னனின் மகளையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாக நினைத்தனர். அந்தப் பாரதக் குலத்தின் காளைகள், குரு தௌமியரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, வலிமைமிக்க ஒரு காப்பாளரின் கீழ் தாங்கள் இருப்பதாகவே உணர்ந்தனர்.(8,9)
வேதங்களின் உண்மைப் பொருளையும், அறநெறிகளின் விதிகளையும் அறிந்தவரும், உயர்ந்த ஆன்மா கொண்டவருமான அந்தத் தௌமியர், அறம்சார்ந்த பாண்டவர்களுக்கு ஆன்ம குருவாகி, அவர்களைத் தனது ஆன்மச் சீடர்கள் {எஜமானர்கள்} ஆக்கினார்.(10) புத்திக்கூர்மையுள்ளவர்களும், பலம்பொருந்தியவர்களும், தேவர்களைப் போன்றவர்களும், விடாமுயற்சியுடன் கூடிய வீரர்களும், அறம் சார்ந்தோருமான அந்தப் பாண்டவர்களைக் கண்ட தௌமியர், அவர்கள் தங்கள் அறத் தகுதிகளினாலேயே, தங்கள் அரசுரிமையையும், நாட்டையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாகக் கருதினார்.(11) அந்த மனிதர்களின் மன்னர்கள், அந்தப் பிராமணரால் வாழ்த்தப்பட்டு, அவரையும் அழைத்துக் கொண்டு, பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(12)

ஆங்கிலத்தில் | In English |