On the way to Panchala! | Adi Parva - Section 186 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : பாஞ்சால நாட்டிற்குச் செல்லும் வழியில் பாண்டவர்கள் பிராமணர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் சேர்ந்து செல்ல உடன்படுவதும்...
வைசம்பாயனர் சொன்னார், "அந்த ஐந்து சகோதரர்கள், அந்த மனிதப் புலிகளான ஐந்து பாண்டவர்கள், பாஞ்சால நாட்டையும், திரௌபதியையும், (அவளது திருமணத்தை ஒட்டி) அங்கு நடக்கப் போகும் விழாக்களையும் காண அந்நாட்டுக்குப் புறப்பட்டனர்.(1) எதிரிகளை ஒடுக்குபவர்களான அந்த மனிதப் புலிகள், தங்கள் தாயுடன் செல்லும்போது, வழியில் எண்ணற்ற பிராமணர்கள் தங்கள் வழியில் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்டனர்.(2) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிரம்மச்சாரிகளான அந்த பிராமணர்கள் பாண்டவர்களைக் கண்டு, "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டனர்.(3)
அதற்கு யுதிஷ்டிரன், "பிராமணக் காளைகளே, நாங்கள் எங்கள் தாயுடன் செல்லும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதை அறிந்து கொள்வீராக. நாங்கள் ஏகச்சக்கர நகரத்தில் இருந்து வருகிறோம்" என்றான்.(4)
அதற்கு அந்த பிராமணர்கள், "பாஞ்சால நாட்டிலுள்ள துருபதனின் வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அங்கே ஒரு பெரும் சுயம்வரம் நடக்கிறது. அச்சுயம்வரத்திற்காகப் பெரும் செல்வம் செலவழிக்கப்படுகிறது.(5) நாங்கள் அங்கேதான் செல்கிறோம். நாமனைவரும் ஒன்றாகச் செல்லலாம். இயல்புக்குமிக்க விழாக்கள் அங்கு (துருபதனின் வசிப்பிடத்தில்) நடைபெறும்.(6) துருபதன் என்று அழைக்கப்படும் அந்தச் சிறப்புமிகுந்த யக்ஞசேனன், வேள்விப்பீடத்தின் மத்தியில் இருந்து ஒரு மகளை எழுப்பியிருக்கிறான்.(7) தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், களங்கமற்ற தன்மைகளையும், இளமையையும், நுண்ணறிவையும் கொண்ட அவள் பேரழகியாக இருக்கிறாள். முற்றிலும் களங்கமற்ற தன்மைகள் அனைத்தையும் கொண்டவளும், முழுமையாக இரண்டு மைல்கள் தொலைவிற்கு நீலத்தாமரையின் {கருநெய்தலின்} நறுமணத்தைப் பரப்புபவளுமான அந்தக் கொடியிடை திரௌபதியானவள், வலிமையான கரங்களைக் கொண்டவனும், பேராற்றலைக் கொடையாகக் கொண்டவனும், கவசம், வாள், வில் மற்றும் கணைகளுடன் சுடர்மிக்க நெருப்பில் இருந்து பிறந்தவனும், துரோணரைக் கொல்லப் போகிறவனும், இரண்டாம் நெருப்பையே போலிருப்பவனுமான திருஷ்டத்யும்னனின் தங்கையாவாள்.(8-10)
அந்த யக்ஞசேனனின் மகள், அங்கு அழைக்கப்பட்ட இளவரசர்களிலிருந்து தனது கணவனைத் தேர்ந்தெடுப்பாள். அவளைக் காணவும், வானுலகில் நடக்கும் திருவிழாவைப் போல அங்கு நடக்கி இருக்கும் விழாக்களைக் காணவும் நாங்கள் அங்குச் செல்கிறோம்.(11) அச்சுயம்வரத்திற்குப் பல நிலங்களிலிருந்து {நாடுகளிலிருந்து} மன்னர்களும், இளவரசர்களும் வருவார்கள். அவர்களனைவரும் பெரும் வேள்விகளை நடத்தி பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைப் பரிசாக அளித்தவர்களாக, கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, சிறப்பு வாய்ந்தவர்களாக, கடும் தவம் கொண்டவர்களாக, இளமையும் அழகும் கொண்டவர்களாக, பெரும் தேர் வீரர்களாக, கரங்களின் சாதனைக்குச் சொந்தக்காரர்களாகவும் இருப்பார்கள்.(12,13) அந்தக் கன்னிகையை (அவளது கரங்களை) வெல்ல விரும்பி வந்திருக்கும் ஏகாதிபதிகள், அங்கே பெரும் செல்வத்தையும், பசுக்களையும், உணவையும் இன்னும் மகிழ்ச்சியூட்டும் பல பொருட்களையும் தானமாகத் தருவார்கள். அவர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டும், சுயம்வரத்திற்குச் சாட்சியாக இருந்தும், விழாக்களைக் கண்டு மகிழ்ந்து, அதன்பிறகு நாம் எங்கு செல்ல நினைக்கிறோமோ அங்கு செல்லலாம்.(14,15)
அந்தச் சுயம்வரத்திற்குப் பல நாடுகளைச் சேர்ந்த நடிகர்களும், பாடகர்களும், ஆடற்கலைஞர்களும், புராணங்களையும் பழங்கதைகளையும் உரைப்பவர்களும், பெரும் விளையாட்டு வீரர்களும் வருவார்கள்.(16) இவை அனைத்தையும் கண்டு, அங்கு நமக்குத் தரப்படும் பொருட்களைப் பெற்று, எங்களுடனே நீங்களும் திரும்பி வாருங்கள்.(17) நீங்கள் அனைவரும் தேவர்களைப் போல அழகாக இருக்கிறீர்கள். ஒருவேளை, கிருஷ்ணை {திரௌபதி} உங்களைக் கண்டு, உங்களில் மேன்மையான ஒருவரை வரிக்கலாம்.(18) பல போர்களில் ஈடுபட்டு, பெரும்பலம் வாய்ந்த கரங்களுடன் அழகாக இருக்கும் இந்த உனது தம்பி {பீமன்}, (விளையாட்டுப்) போட்டிகளில் {மற்போரில்} ஈடுபட்டால், ஒருவேளை பெருஞ்செல்வம் கிடைக்கலாம்" என்றனர் {அந்தப் பிராமணர்கள்}.(19)
பிராமணர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "பிராமணர்களே, நாங்களும் உங்களுடன் வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அக்கன்னிகையின் சுயம்வரத்தையும், அந்த அற்புதமான விழாவையும் காணலாம்" என்றான்.(20)

ஆங்கிலத்தில் | In English |