Who were the Kings that attended the Swayamvara! | Adi Parva - Section 188 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்கு வந்த மன்னர்களின் பெயர்களை திரௌபதிக்கு சொன்ன திருஷ்டத்யும்னன்
திருஷ்டத்யும்னன் {திரௌபதியிடம்} சொன்னான், "துரியோதனன், துர்விஷகன், துர்முகன், துஷ்பிரதர்ஷனன், விவிம்சதி, விகர்ணன், ஸஹன், துச்சாசனன்,(1) யுயுத்சு, வாயுவேகன், பீமவேகரவன், உக்கிராயுதன், பலாகி, கனகாயு, விரோசனன்,(2) சுகுந்தலன், சித்ரசேனன், சுவர்ச்சஸ், கனகத்வஜன், நந்தகன், பாஹுசலி, துகுண்டன், விகடன் ஆகிய இவர்களும்,(3) ஓ! தங்கையே {திரௌபதியே}, மேலும் கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்கள் பலரும் உனது கரங்களுக்காக இங்கே வந்திருக்கின்றனர்.(4)
க்ஷத்திரியர்களில் காளையான கணக்கிலடங்கா மற்றச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதிகளும் உனக்காக வந்திருக்கின்றனர். சகுனி, சௌபலன், விருஷகன், பிருஹத்பலன்(5) ஆகிய காந்தார மன்னரின் மகன்களும் வந்திருக்கிறார்கள். ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவர்களான சிறப்பு மிகுந்த அஸ்வத்தாமன் மற்றும் போஜன் ஆகியோர்(6) தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு இங்கு வந்திருக்கின்றனர்.
பிருஹந்தன், மணிமான், தண்டதாரன்,(7) சகதேவன், ஜயத்சேனன், மேகசந்தி ஆகியோரும், சங்கன் மற்றும் உத்தரன் ஆகிய தனது இரு மகன்களுடன் விராடனும்,(8) வர்த்தக்ஷேமி {விருத்தக்ஷேமன்}, சுசர்மன்[1], சேனாபிந்து ஆகியோரும், சுநாமன் மற்றும் சுவர்ச்சஸ் ஆகிய தனது இரு மகன்களுடன் கூடிய சுகேதுவும்,(9) சுசித்ரன், சுகுமாரன், விருகன், சத்யத்ருதி, சூர்யத்வஜன், ரோசமானன், நீலன், சித்ராயுதன்,(10) அம்சுமான், சேகிதானன், பெரும் பலம் வாய்ந்த ஸ்ரேணிமான், சமுத்ரசேனனின் பெரும் பலம் பொருந்திய மகன் சந்திரசேனன்,(11) ஜராசந்தன் {ஜலசந்தன்}[2], தந்தையும் மகனுமான விதண்டனும் தண்டனும், பௌண்டரகவாசுதேவன், பெரும் சக்தி வாய்ந்த பகதத்தன் ஆகியோரும்,(12)
கலிங்கன், தாம்ரலிப்தன், பத்தனையின் மன்னன் {பத்தனாதிபதி} ஆகியோரும், வீரனான ருக்மாங்கதன் என்ற தனது மகனுடன் வந்திருப்பவனும், பெரும் தேர்வீரனுமான மத்ர மன்னன் சல்லியன், ருக்மரதன் ஆகியோரும், பெரும் தேர் வீரர்களான பூரி, பூரிஸ்ரவஸ் மற்றும் சலன் என்ற தனது மகன்களுடன் குரு குலத்தோனான சோமதத்தனும், சுதக்ஷேனன், பூரு குலத்தைச் சேர்ந்த காம்போஜன், பிருஹத்பலன், {திருடதன்வா},(12-15) சுஷேணன், உசீநரனின் மகனான சிபி, காரூஷ மன்னன் பட்சரணிஹந்தன்[3] ஆகியோரும்,(16) சங்கர்ஷணன் (பலதேவன்{பலராமன்}), வாசுதேவன் (கிருஷ்ணன்), ருக்மிணியின் பலம் பொருந்திய மகன் சாம்பன், கதனோடு கூடிய பிரத்யும்னனின் மகன் சாருதேஷ்ணன்,(17) அக்ரூரன், சாத்யகி, உயர் ஆன்ம உத்தவர், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், பிருது, விப்ருது,(18) விதூரதன், கங்கன், சங்குவுடன் கூடிய கவேஷணன், ஆசாவஹன், அனிருத்தன், சமீகன், சாரிமேஜயன் ஆகியோரும்,(19) வீரர்களான வாதாபி {வாதபதி}, ஜில்லி, பிண்டாரகன், பலம்வாய்ந்த உசீநரன் ஆகிய விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தோரும்,(20)
பகீரதன், பிருஹத்க்ஷத்ரன், சிந்துவின் மகனான ஜெயத்ரதன், பிருஹத்ரதன், பாஹ்லீகன், பலம்பொருந்திய தேர் வீரனான ஸ்ரூதாயு,(21) உலூகன்[4], கைதவன், சித்ராங்கதன், சுபாங்கதன், மிகப் புத்திசாலியான வத்ஸராஜன், கோசல மன்னன்,(22) சிசுபாலன் மற்றும் பலம்பொருந்திய ஜராசந்தன்[5] ஆகியோரும், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் மன்னர்கள் பலரும்,(23) உலகம் முழுவதும் கொண்டாடப்படும் க்ஷத்திரியர்களும், ஓ அருளப்பட்டவளே, உனக்காக வந்திருக்கிறார்கள். ஆற்றலைக் கொண்டவர்களான இவர்கள் அந்தக் குறியை அடிக்கப் போகிறார்கள். அந்தக் குறியை இவர்களில் எவர் அடிக்கிறாரோ {அடிக்கிறார்களோ} அவரை {அவர்களில் ஒருவரை} நீ உனது கணவராகத் தேர்ந்தெடுக்கலாம்" என்று சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.(24)

[1] திரிகர்த்த நாட்டரசன். சம்சப்தகர்களின் தலைவன். குருக்ஷேத்திரப்போரில் அர்ஜுனன் தனது பெரும்பங்கு நேரத்தை சம்சப்தகர்களை அழிப்பதிலேயே செலவிட்டான். கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் இவன், "விருத்தக்ஷேமன் புத்ரனான சுசர்மன்" என்று குறிப்பிடப்படுகிறான்.
[2) இது ஜலசந்தன்; மகதமன்னன் ஜராசந்தன் அல்ல. ஜராசந்தன் இதே பகுதியில் பின்னர் குறிப்பிடப்படுகிறான். கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும் இங்கே ஜலசந்தன் என்றே இருக்கிறது.
கலிங்கன், தாம்ரலிப்தன், பத்தனையின் மன்னன் {பத்தனாதிபதி} ஆகியோரும், வீரனான ருக்மாங்கதன் என்ற தனது மகனுடன் வந்திருப்பவனும், பெரும் தேர்வீரனுமான மத்ர மன்னன் சல்லியன், ருக்மரதன் ஆகியோரும், பெரும் தேர் வீரர்களான பூரி, பூரிஸ்ரவஸ் மற்றும் சலன் என்ற தனது மகன்களுடன் குரு குலத்தோனான சோமதத்தனும், சுதக்ஷேனன், பூரு குலத்தைச் சேர்ந்த காம்போஜன், பிருஹத்பலன், {திருடதன்வா},(12-15) சுஷேணன், உசீநரனின் மகனான சிபி, காரூஷ மன்னன் பட்சரணிஹந்தன்[3] ஆகியோரும்,(16) சங்கர்ஷணன் (பலதேவன்{பலராமன்}), வாசுதேவன் (கிருஷ்ணன்), ருக்மிணியின் பலம் பொருந்திய மகன் சாம்பன், கதனோடு கூடிய பிரத்யும்னனின் மகன் சாருதேஷ்ணன்,(17) அக்ரூரன், சாத்யகி, உயர் ஆன்ம உத்தவர், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், பிருது, விப்ருது,(18) விதூரதன், கங்கன், சங்குவுடன் கூடிய கவேஷணன், ஆசாவஹன், அனிருத்தன், சமீகன், சாரிமேஜயன் ஆகியோரும்,(19) வீரர்களான வாதாபி {வாதபதி}, ஜில்லி, பிண்டாரகன், பலம்வாய்ந்த உசீநரன் ஆகிய விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தோரும்,(20)
[3] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், "காம்போஜ தேசத்தரசனாகிய ஸுதக்ஷிணன், பூருவம்சத்தவனான த்ருடதன்வா, ப்ருஹத்பலன், ஸுஷேணன், உசீநர புத்திரனான சிபி, திருடர்களை ஒழிப்பவனாகிய காருஷ தேசத்தரசன்" என்றிருக்கிறது.
பகீரதன், பிருஹத்க்ஷத்ரன், சிந்துவின் மகனான ஜெயத்ரதன், பிருஹத்ரதன், பாஹ்லீகன், பலம்பொருந்திய தேர் வீரனான ஸ்ரூதாயு,(21) உலூகன்[4], கைதவன், சித்ராங்கதன், சுபாங்கதன், மிகப் புத்திசாலியான வத்ஸராஜன், கோசல மன்னன்,(22) சிசுபாலன் மற்றும் பலம்பொருந்திய ஜராசந்தன்[5] ஆகியோரும், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் மன்னர்கள் பலரும்,(23) உலகம் முழுவதும் கொண்டாடப்படும் க்ஷத்திரியர்களும், ஓ அருளப்பட்டவளே, உனக்காக வந்திருக்கிறார்கள். ஆற்றலைக் கொண்டவர்களான இவர்கள் அந்தக் குறியை அடிக்கப் போகிறார்கள். அந்தக் குறியை இவர்களில் எவர் அடிக்கிறாரோ {அடிக்கிறார்களோ} அவரை {அவர்களில் ஒருவரை} நீ உனது கணவராகத் தேர்ந்தெடுக்கலாம்" என்று சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.(24)
[4] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.
[5] மகத மன்னன் ஜராசந்தன்
ஆங்கிலத்தில் | In English |