Hero Enter! | Adi Parva - Section 189 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள், பிராமணர்களுக்கு மத்தியில் இருப்பதை அறிந்த கிருஷ்ணன், பலராமருக்கு அதைச் சுட்டிக் காட்டியது; வில்லைப் பார்த்து சில அரசர்களின் ஆசை ஒழிந்தது; பல அரசர்கள் வில்லில் நாணேற்ற முடியாமல் பங்கமடைந்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்ற எழுந்தது...
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களான அந்த இளமையான இளவரசர்கள், ஒருவயொருவர் விஞ்சும் வகையில் தங்களை, ஆயுதச் சாதனைச் செய்தவர்களாகவும், பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருப்பவர்களாகவும் நினைத்துக் கொண்டு, தங்கள் ஆயுதங்கள் பளபளக்க எழுந்தனர்.(1) அவர்கள் தங்கள் அழகிலும், ஆற்றலிலும், குலவழியிலும் {பிறப்பிலும்}, அறிவிலும், செல்வத்திலும், இளமையிலும் செருக்கு கொண்டவர்களாக, இமயத்தின் மதம் பிடித்த யானைகளைப் போல இருந்தனர். ஒருவரையொருவர் பொறாமையுடன் பார்த்துக்கொண்டு, காமதேவனின் வசப்பட்டு, "கிருஷ்ணை {திரௌபதி} எனதே" என்று சொல்லிக்கொண்டு தங்கள் அரச ஆசனங்களில் இருந்து திடீரென எழுந்தனர்.(2,3) க்ஷத்திரியர்கள் ஒவ்வொருவரும் துருபதனின் மகளை {திரௌபதியை} வெல்லும் விருப்பத்தோடு, மலையரசனின் {இமவானின்} மகளான உமையைச் சூழ்ந்து நிற்கும் தேவர்கள் போல அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர்.(4) மலர்களால் ஆன வில்லைக் கொண்டிருக்கும் தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்கப்பட்டு, கிருஷ்ணையின் {திரௌபதியின்} நினைவால் இதயத்தைத் தொலைத்த அந்த அரங்கத்திலிருந்த இளவரசர்கள், அந்தப் பாஞ்சால மங்கையை {திரௌபதியை} வெல்வதற்காகத் தங்கள் சிறந்த நண்பர்களைக் கூடப் பொறாமையுடன் கண்டனர்.(5)
ருத்ரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள், ஸ்வாதாக்கள் {சத்தியஸ்கள்}, மருத்துக்கள் கூடி வர; குபேரனும், யமனும் முன்னணியில் நடக்க, தேவர்கள் தங்கள் தேர்களில் அந்த இடத்திற்கு வந்தனர்.(6) தைத்தியர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், தெய்வீக முனிவர்கள், குஹ்யர்கள், சாரணர்கள், விஸ்வாவசு, நாரதர், பர்வதர், அப்சரஸ்களுடன் கூடிய முக்கியக் கந்தர்வர்களும் அங்கே வந்தனர்.(7)
ஹலாயுதன் (பலதேவன் {பலராமன்}), ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மற்றும் பிற விருஷ்ணி குலத் {யாதவக் குலத்} தலைவர்கள், அந்தகர்கள் மற்றும் கிருஷ்ணனின் தலைமையை ஏற்ற மற்ற யாதவக் குடிகளும் அந்தக் காட்சியைக் கண்டு அங்கே நின்றிருந்தனர்.(8) யதுகுல வீரர்களில் முதன்மையானவனான கிருஷ்ணன், தாமரைகள் நிறைந்த தடாகங்களை நோக்கும் வலிமைமிக்க யானைகளைப் போலவோ, சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போலவோ திரௌபதியை நோக்கி ஈர்க்கப்பட்ட மதங்கொண்ட யானைகளான அந்த (பாண்டவர்கள்) ஐவரையும் கண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(9) பிறகு அவன், ராமனிடம் {பலராமனிடம்}, "அது யுதிஷ்டிரர், அது பீமர், அது ஜிஷ்ணு (அர்ஜுனன்); அஃது அந்த இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}" என்று சொன்னான். ராமன் {பலராமன்} மெதுவாக அவர்கள் ஒவ்வொவரையும் ஆய்ந்து, மனநிறைவான கண்ணோட்டத்துடன் கிருஷ்ணனைக் கண்டான்.(10)
பிற மன்னர்களின் மகன்களும், பேரன்களும், கோபத்தில் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு, கண்களும், இதயங்களும், நினைவுகளும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மேல் நிலைத்திருக்க, தங்கள் கண்களை அகல விரித்துத் திரௌபதியை மட்டுமே பார்த்துக் கொண்டு, அங்கிருந்த பாண்டவர்களைக் கவனியாதிருந்தனர்.(11) வலிய கரங்களைக் கொண்டவர்களான பிருதையின் மகன்களும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்}, அந்தச் சிறப்பு மிகுந்த வீர இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} திரௌபதியைக் கண்டு, காமனின் கணையால் தைக்கப்பட்டிருந்தனர்.(12) தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள் கூடியிருக்கத் தெய்வீக மலர்கள் தூவி, தெய்வீக நறுமணம் வீச, துந்துபிகளின் ஓலியும், கணக்கற்ற மனிதக் குரல்களும் ஒலிக்கப் புல்லாங்குழலின் அமைதியான இசை எதிரொலிக்க, வீணை மற்றும் சிறு முரசின் இசை அந்தச் சுற்றுவட்டாரத்தையே நிரப்ப அங்கே தேவர்களின் தேர்கள் உள்ளே நுழைவதற்கு இடமில்லாமல் இருந்தது.(13,14)
கர்ணன், துரியோதனன், சால்வன், சல்லியன், அஸ்வத்தாமன், கிராதன், சுனிதன், வக்ரன், கலிங்க மன்னன், பங்கன், பாண்டியன் {பாண்டிய மன்னன்}, பௌண்டரன், விதேக ஆட்சியாளன், யவனர்கள் தலைவன், மற்றும் பிற மன்னர்களின் மகன்களும், பேரன்களும், தாமரைக் கண்களைக் கொண்டவர்களும், அரசுரிமை பெற்றவர்களுமான அந்த இளவரசர்கள், ஒருவர் பின் ஒருவராக, அந்த ஒப்பற்ற அழகுடைய கன்னிகையை அடையத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தத்தொடங்கினர்.(15,16) மகுடங்களாலும், மாலைகளாலும், கை வளைகளாலும், பிற ஆபரணங்களாலும், அலங்கரிக்கப்பட்டுப் பெரும் பலத்துடனும், பெரும் ஆற்றலுடனும் இருந்த அந்த இளவரசர்கள், தங்கள் பலமும், சக்தியும் வெடித்துச் சிதற முயற்சித்தாலும், அந்த இயல்புக்குமீறிய உறுதியுன் கூடிய வில்லுக்கு கற்பனையாலும் நாணேற்ற முடியவில்லை.(17) அந்த மன்னர்களில் சிலர், தங்கள் பலம், கல்வி, திறன், சக்தி ஆகியவற்றை பயன்ப்படுத்தித் தங்கள் உதடுகள் வீங்க அந்த வில்லுக்கு நாணேற்ற முயன்றனர். ஆனால், அப்படிச் செய்த அவர்கள் தரையில் தூக்கி வீசப்பட்டுச் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தனர்.(18) தங்கள் சக்தி வீணானதால், தங்கள் மகுடங்களும், மாலைகளும் நழுவப் பெரு மூச்சு வாங்கியபடியே, இனியும் தங்களால் அந்த அழகான கன்னிகையை வெல்ல முடியாது என்று அமைதியடைந்தனர்.(19) அந்தக் கடினமான வில்லால் தூக்கி வீசப்பட்டு, மாலைகளும், கை வளையங்களும் கலைந்து அவர்கள் பெரும் துயர் கொண்டனர். அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணையை {திரௌபதியை} அடையும் நம்பிக்கை இல்லாமல், துக்கத்துடன் இருந்தனர்.(20)
வில் தரிக்கும் அனைவரிலும் முதன்மையானவனான கர்ணன், அந்த ஏகாதிபதிகளின் துயரைக் கண்டு, அந்த வில்லிருக்கும் இடத்திற்குச் சென்றான். அவ்வில்லை விரைவாகத் தூக்கி உயர்த்தி, அதற்கு நாணேற்றி, அந்த நாண் கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்.(21) சூத இனத்தைச் சேர்ந்தவனும், சூரியனின் மகனுமான கர்ணன், நெருப்பையோ, சோமனையோ, சூரியனையோ போல, இலக்கை {குறியை} அடிக்கத் தீர்மானித்ததைக் கண்ட வில்லாளிகளில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள், அந்தக் குறி ஏற்கனவே அடிக்கப்பட்டு, தரையில் வீழ்த்தப்பட்டுவிட்டதாக் கருதினர்.(22) ஆனால், கர்ணனைக் கண்ட திரௌபதி, "ஒரு சூதனை என் தலைவனாக நான் கொள்ள மாட்டேன்" என்று உரக்கச் சொன்னாள். அப்போது, கர்ணன், எரிச்சலுடன் சிரித்து, சூரியன் மீது தன் பார்வையைச் செலுத்தி, ஏற்கனவே வட்டமாக வளைக்கப்பட்டிருந்த அந்த வில்லை வீசியெறிந்தான்[1].(23)
பிறகு பல க்ஷத்திரியர்களும் அந்தச் சாதனையைக் கைவிட்ட பிறகு, யமனைப் போன்று வலிமைமிக்கவனும், சிறப்புமிக்கவனும், தீர்மானத்துடன் கூடியவனும், தமகோஷனின் மகனுமான சிசுபாலன், அந்த வில்லுக்கு நாணேற்ற முயற்சித்து, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்.(24,25) பெரும் பலமும், சக்தியும் கொண்ட மன்னன் ஜராசந்தன், அந்த வில்லை அணுகி அசைவற்ற மலையைப் போன்ற உறுதியுடன் அங்கே சிறிது நேரம் நின்றான்.(26) அவனும் அந்த வில்லால் தூக்கியெறியப்பட்டு, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான். அப்படி விழுந்த அவன், விரைவாக எழுந்து அந்த அரங்கத்தை விட்டு வெளியேறித் தனது நாட்டுக்குப் புறப்பட்டான்[2].(27) பிறகு, பெரும் வீரனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான மத்ர மன்னன் சல்லியன், அந்த வில்லுக்கு நாண்பூட்டும் முயற்சியில் முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்[3].(28)
இறுதியாக, உயர்ந்த மதிப்பிற்குரிய மக்கள் கூடியிருந்த அந்த சபையில், ஏகாதிபதிகள் அனைவரும் ஏளனப் பேச்சுக்கு உட்பட்ட போது, வீரர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, அந்த வில்லுக்கு நாணேற்ற விரும்பி, நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(29)

[1] கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கர்ணனின் நாணேற்றும் முயற்சியும், திரௌபதி அவனை மறுத்த குறிப்பும் மேற்கண்டவாறே இருக்கின்றன. ஆனால் கும்பகோணம் பதிப்பிலோ, மிக வித்தியாசமாக {நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை}, வில்லில் நாணேற்றுவதில் கர்ணனின் முயற்சி குறித்து பின்வருமாறு இருக்கிறது: "ஸூர்யபுத்திரனும், ஸூதபுத்திரனும், ஸ்ரேஷ்டனுமான கர்ணன், வில்லினிடம் வந்து அதைத் தூக்கினான். அவனாலும் ஏறிடப்பட்ட அந்த வில் மயிரிழையளவில் திரும்பியடித்தது {கர்ணனை அந்த வில் தூக்கியெறிகிறது}. மூன்று லோகங்களையும் ஜயிக்கத்தக்கவனும், பலத்தினால் மூன்று லோகங்களிலும் பெயர் பெற்றவனுமான அந்தக் கர்ணனும் அந்த வில்லினால் தோல்வியடைந்தானென்றதனால், எல்லோரும் அந்த வில்லினிடம் பயமுற்றனர். கர்ணனும் அந்த வில்லினால் இவ்வாறு தோற்கச் செய்யப்பட்டுப் போகவே, ராஜஸ்ரேஷ்டர்கள் தாமரை மலர் போன்ற முகங்கள் கவிழ்ந்து கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. கர்ணன் தோல்வியுற்றதைப் பார்த்து, உலகத்தில் வீரர்களான ராஜஸ்ரேஷ்டர்கள் வில்லெடுப்பதிலும், திரௌபதியை அடைவதிலும் ஆசையற்றவராயினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இன்னும் ஆச்சரியமாக, கர்ணன் நாண்பூட்ட முயற்சிப்பதோ, திரௌபதி அவனை நிராகரிப்பதோ சொல்லப்படவே இல்லை. இதற்குப் பிறகு, சிசுபாலன், ஜராசந்தன், சல்லியன் ஆகியோர் நாண்பூட்ட முயற்சி செய்து தோல்வியுறுவதும் சொல்லப்படவில்லை. பொதுவாக மன்னர்கள் அனைவரும் தோல்வியுற்றனர் என்றே சொல்லப்பட்டுள்ளது. Sacred texts வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சம்ஸ்க்ருத மஹாபாரத மூலத்தைக் கண்டால், http://sacred-texts.com/hin/mbs/mbs01178.htm என்ற சுட்டியில் வில்லில் நாணேற்றி இலக்கை அடிக்கும் போட்டி விவரிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கர்ணனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றே அனுமானிக்கிறேன். ஆனால், அடுத்த பகுதியில் (http://sacred-texts.com/hin/mbs/mbs01179.htm) yat karṇa śalya pramukhaiḥ pārthivair lokaviśrutaiḥ nānṛtaṃ balavadbhir hi dhanurvedā parāyaṇaiḥ tat kathaṃ tv akṛtāstreṇa prāṇato durbalīyasā baṭu mātreṇa śakyaṃ hi sajyaṃ kartuṃ dhanur dvijāḥ avahāsyā bhaviṣyanti brāhmaṇāḥ sarvarājasu karmaṇy asminn asaṃsiddhe cāpalād aparīkṣiteஎன்ற இந்த வரிகளை பிபேக்திப்ராயின் மொழிபெயர்ப்பில் கண்டால் "உலகப்புகழ் பெற்றவர்களும், பெரும் பலம் கொண்டவர்களும், தனுர்வேதத்தை நன்கறிந்த க்ஷத்திரியர்களான கர்ணன் மற்றும் சல்லியனைப் போன்றோராலேயே இந்த வில்லுக்கு நாணேற்ற முடியவில்லையென்றால் ஆயுதங்களில் ஞானமில்லாத பலவீனனான இந்தப் பிராமணனால் எவ்வாறு வெல்ல முடியும்?" என்று சொல்லப்படுவதாகத் தெரிகிறது.
பிறகு பல க்ஷத்திரியர்களும் அந்தச் சாதனையைக் கைவிட்ட பிறகு, யமனைப் போன்று வலிமைமிக்கவனும், சிறப்புமிக்கவனும், தீர்மானத்துடன் கூடியவனும், தமகோஷனின் மகனுமான சிசுபாலன், அந்த வில்லுக்கு நாணேற்ற முயற்சித்து, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்.(24,25) பெரும் பலமும், சக்தியும் கொண்ட மன்னன் ஜராசந்தன், அந்த வில்லை அணுகி அசைவற்ற மலையைப் போன்ற உறுதியுடன் அங்கே சிறிது நேரம் நின்றான்.(26) அவனும் அந்த வில்லால் தூக்கியெறியப்பட்டு, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான். அப்படி விழுந்த அவன், விரைவாக எழுந்து அந்த அரங்கத்தை விட்டு வெளியேறித் தனது நாட்டுக்குப் புறப்பட்டான்[2].(27) பிறகு, பெரும் வீரனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான மத்ர மன்னன் சல்லியன், அந்த வில்லுக்கு நாண்பூட்டும் முயற்சியில் முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்[3].(28)
[2] கங்குலியில் ஜராசந்தன் புறப்பட்டான் என்று முடிந்தாலும், கும்பகோணம் பதிப்பில், "பிறகு, "இந்த உயர்ந்த வில்லை இப்போது எந்த அரசன்தான் நாணேறிடுவான்" என்று மனத்தில் நிச்சயஞ்செய்து கொண்டு மறுபடியும் நின்றான். அவனுக்குப் பிறகு துரியோதனராஜன் எழுந்தான்" என்றிருக்கிறது.
[3] கும்பகோணம் பதிப்பில், இங்கே சிசுபாலன் வில்லை வளைக்க முற்பட்டு, அதற்கு நாண்பூட்ட உளுந்தளவு மிச்சமிருக்கையில் முழங்கால் மடிந்து கீழே விழுந்தது, மலைபோன்ற அரசன் ஜராசந்தன் நாண்பொருத்தக் கடுகளவு இருந்தபோது, அந்த வில் திருப்பியடித்தது, சல்லியனும் திரும்பியடிக்கப்பட்டது, துரியோதனன் அந்த வில்லை எடுத்தது; ஏறிடப்பட்ட அந்த வில் இன்னும் எள்ளளவிருக்கையில் திருப்பியடித்து அவன் அண்ணாந்து விழுந்தது ஆகியவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக துரியோதனனின் முயற்சியைச் சொல்லுமிடத்தில், "அகங்காரமுள்ளவனும், அஸ்திரங்களில் நிச்சயமான ஞானமுள்ளவனும், ராஜலக்ஷணங்களெல்லாம் பொருந்தினவனும், மஹாபலசாலியும், சூரனும், திருதராஷ்டிர புத்திரனுமான துரியோதனராஜன் அங்கே ஸஹோதரர்களின் நடுவில் விரைவாக எழுந்தான்; திரௌபதியைக் கண்டு களிப்புற்று வில்லினருகில் வந்தான். அவன் வில்லை எடுத்துக் கொண்ட பிறகு, வில்லைத் தரித்த இந்திரனைப் போல் விளங்கினான். அவன் தனுஸை நாணேறிடத் தொடங்கினான். ஏறிடப்பட்ட அந்தவில் இன்னும் எள்ளளவிருக்கையில் திரும்பியடித்தது. அப்போது, துரியோதனராஜன் கைவிற்பிடியை விட்டதனால் வன்முயுள்ள அந்த வில்லினால் அடிக்கப்பட்டு அண்ணாந்து விழுந்தான். வில்லினால் அடிக்கப்பட்ட அந்த அரசன் வெட்கத்துடன் சென்றான்" என்றிருக்கிறது.
இறுதியாக, உயர்ந்த மதிப்பிற்குரிய மக்கள் கூடியிருந்த அந்த சபையில், ஏகாதிபதிகள் அனைவரும் ஏளனப் பேச்சுக்கு உட்பட்ட போது, வீரர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, அந்த வில்லுக்கு நாணேற்ற விரும்பி, நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(29)
ஆங்கிலத்தில் | In English |