Arjuna hit the mark! | Adi Parva - Section 190 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : வில்லில் நாண் பொருத்த அர்ஜுனன் எழுந்தது பற்றி பிராமணர்கள் விவாதித்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்றி குறியை அடித்ததும்; திரௌபதி அர்ஜுனனுக்கு மாலையிட்டதும்...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஏகாதிபதிகள் அனைவரும் நாணேற்றுவதைக் கைவிட்டதும், அந்தச் சபையில் பிராமணர்கள் கூட்டமாக அமர்ந்திருந்த இடத்திலிருந்து உயர் ஆன்ம ஜிஷ்ணு {அர்ஜுனன்} எழுந்தான்.(1) இந்திரனின் கொடி போன்ற நிறத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} வில்லை நோக்கி முன்னேறுவதைக் கண்ட முக்கியமான பிராமணர்கள், தங்கள் மான் தோல்களை உயர்த்தி ஆட்டியபடி, சத்தமாக ஆர்ப்பரித்தனர்.(2) சிலர் இதை விரும்பவில்லை எனினும், வேறு சிலர் இதை மிகவும் விரும்பினார்கள்.
புத்திசாலித்தனமும், முன்யோசனையும் கொண்ட இன்னும் சிலர், ஒருவருக்கொருவர்,(3) "பிராமணர்களே, வலிமைகொண்டவர்களும், ஆயுத அறிவியலிலும், பயிற்சியிலும் சாதித்தவர்களுமான சல்லியன் மற்றும் பிறரைப் போன்ற கொண்டாடப்படும் க்ஷத்திரியர்களாலேயே அந்த வில்லில் நாணேற்ற முடியவில்லையென்றால், ஆயுதப் பயிற்சியில்லாதவனும், பலவீனனும், சிறுவனுமான ஒரு பிராமணனால் எவ்வாறு முடியும்?(4,5) உறுதியற்ற குழந்தைத்தனமான ஊக்கத்தால் இன்னும் முயற்சிக்கப்படாத இப்பணியில் ஈடுபடும் இவன் வெற்றியடையவில்லையென்றால், இங்கே கூடியிருக்கும் ஏகாதிபதிகளின் கண்களுக்கு மொத்த பிராமணர்களும் ஏளனமாகக் காட்சியளிப்போம்.(6) எனவே, குழந்தைத்தனமான துணிவினாலோ, உறுதியற்ற நிலையாலோ, வெற்றுச் செருக்காலோ வில்லில் நாணேற்ற இந்தப் பிராமணன் செல்லாதவாறு இவனை நாம் தடுப்போமாக" என்றனர்.(7)
அதற்கு மற்றவர்கள், "நாம் கேலிப் பொருளாக்கப்படவும் மாட்டோம், எவரிடமும் அவமதிப்பையும் அடையமாட்டோம், அரசுகளின் வெறுப்புக்கும் ஆளாகமாட்டோம்" என்றனர்.(8)
வேறு சிலர், "ஒரு வலிமைமிக்க யானையின் துதிக்கையைப் போலத் தெரிபவனும், நன்றாகக் கட்டமைக்கப்பட்ட தோள்கள், கரங்கள், தொடைகள் ஆகியவற்றுடன் கூடியவனும், பொறுமையில் இமயத்தைப் போலத் தெரிபவனும், சிங்கத்தைப் போன்ற நடையைக் கொண்டவனும், மதங்கொண்ட யானையின் ஆற்றலுடன் காணப்படுபவனும், தீர்மானத்துடன் கூடியவனுமான இந்த அழகிய இளைஞன், இந்த அருஞ்செயலை நிறைவேற்றக் கூடும்.(9,10) அவனிடம் பலமும் உறுதியும் காணப்படுகின்றன. அவனுக்கு இவையில்லையென்றால், தானாக இக்காரியத்திற்குச் செல்லமாட்டான். மேலும், அழிவை அடையக்கூடிய மனிதர்களால் முடியாததைப் பிராமணர்களால் சாதிக்க முடியாது எனச் சொல்ல மூவுலகங்களிலும் எதுவும் இல்லை.(11)
உணவைத் துறந்து, வெறும் காற்றையோ அல்லது வெறும் பழங்களையோ உண்டு, தங்கள் தவத்தைச் செய்து, இளைத்துப் போய்ப் பலவீனமாக இருக்கும் பிராமணர்கள், தங்கள் சக்தியைப் பொருத்தமட்டில் மிகப் பலவான்களே ஆவர். ஒரு பிராமணன் செய்யும் செயலை இது சரி, இது தவறு என்றும், இந்தப் பெரும் காரியத்தை இவனால் செய்ய முடியாது என்றும், இஃது அருளுடையது, இஃது அருளற்றது என்றும் ஒருபோதும் குறைத்து மதிக்கக் கூடாது. ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, போரில் அனைத்து க்ஷத்திரியர்களையும் தோல்வியுறச் செய்திருக்கிறார்.(12-14) அகத்தியர் தனது பிரம்மசக்தியின் மூலம் அடியற்ற கடலை முழுவதுமாகக் குடித்திருக்கிறார். எனவே, 'இந்த இளைஞன் அந்த வில்லை வளைத்து, எளிதாக நாண் ஏற்றட்டும்' என்று சொல்வீராக" என்றனர். (அதற்குப் பலர்), "அப்படியே ஆகட்டும்" என்றனர். பிறகும் அந்த பிராமணர்கள் இதையும், இன்னும் பிற வார்த்தைகளையும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்தனர்.(15,16)
பிறகு, அர்ஜுனன் அந்த வில்லை அணுகி, அந்த இடத்தில் ஒரு மலையைப் போல நின்றான். அந்த வில்லை வலம் வந்து, வரங்களைக் கொடுப்பவனான ஈசானனை வணங்கி, மனத்தில் கிருஷ்ணனையும் நினைத்துக் கொண்டு வில்லைக் கையிலெடுத்தான்.(17,18) ஆயுதங்களின் அறிவியலிலும், பயிற்சியிலும் சாதித்தவர்களான, ருக்மன், சுநீதன், வக்ரன், ராதையின் மகன் {கர்ணன்},[1] துரியோதனன், சல்லியன் மற்றும் இன்னும் பிற மன்னர்கள், பெருமுயற்சி செய்தும் நாணேற்ற முடியாத அந்த வில்லில், இந்திரனின் மகனும், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையில் இந்திரனின் தம்பியை {விஷ்ணுவைப்} போன்றவனுமான அந்த அர்ஜுனன், கண் இமைப்பதற்குள் நாணேற்றினான்.(19,20) அங்கே இருந்த ஐந்து கணைகளையும் எடுத்துக் குறியை அடித்து, மேலே பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் துளை வழியாக அக்குறியைத் தரையில் விழச் செய்தான்.(21)
அப்போது ஆகாயத்தில் பேரராவராம் எழுந்தது, அந்த அரங்கமும் பெருங்கூச்சலை எதிரொலித்தது.(22) தேவர்கள், எதிரிகளை அழிப்பவனான அந்தப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தலையில் தெய்வீக மலர்களைப் பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் மேலாடையை எடுத்து மகிழ்ச்சியுடன் அசைக்கத் தொடங்கினர்.(23) சுற்றிலும் இருந்தவர்களும், வெற்றியடையாதவர்களுமான ஏகாதிபதிகள் துன்பத்துடனும், தளர்ச்சியுடனும் சோகமாகப் பேசினர். வானிலிருந்து அந்த அரங்கமெங்கிலும் மலர்மாரி பொழிந்தது.(24)
இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை ஒலிக்கத் தொடங்கினர். (சாதனை செய்தவனான அந்த வீரனை) சூதர்களும், மாகதர்களும் இனிய குரலில் வாழ்த்தினார்கள்.(25) எதிரிகளைக் கொல்பவனான துருபதன், அர்ஜுனனைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். அந்த ஏகாதிபதி, சந்தர்ப்பம் நேர்ந்தால், அந்த வீரனுக்குத் தன் படைகளின் உதவியைக் கொடுக்க விரும்பினான்.(26)
ஆரவாரம் அதன் உச்சத்தில் இருந்தபோது, அறவோர் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன், மனிதர்களில் முதன்மையான இரட்டையர்கள் துணையுடன் தன் தற்காலிக இலத்திற்குத் திரும்ப அந்த அரங்கத்தை விட்டகன்றான்.(27) கிருஷ்ணை {திரௌபதி}, குறி அடிக்கப்பட்டதையும், அக்குறியை அடித்தவனான, இந்திரனைப் போன்ற பார்த்தனையும் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வெள்ளுடையுடனும், மலர்மாலையுடனும் அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} அணுகினாள்.(28) அரங்கத்தில் அடைந்த வெற்றியால், திரௌபதியை வென்று, செயற்கரிய அருஞ்செயலைச் செய்த அர்ஜுனன், பிராமணர்கள் அனைவராலும் மரியாதையுடன் வணங்கப்பட்டான். அந்த அரங்கத்தை விட்டு அகன்ற அவன், இவ்வாறு தனக்கு மனைவியானவளால் பின்தொடரப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}[2].(29)

[1] வில்லில் நாணேற்ற முயன்று தோல்வியுற்றோர் பட்டியலில் கர்ணனும் இருப்பது கவனத்திற்குரியது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் 19ம் ஸ்லோகத்தில் கர்ணன் நாணேற்ற முடியாமல் தோல்வியுற்றோர் பட்டியலில் இருக்கிறான். முந்தைய பதிவின் [1]ம் அடிக்குறிப்பைக் காண்க.
அப்போது ஆகாயத்தில் பேரராவராம் எழுந்தது, அந்த அரங்கமும் பெருங்கூச்சலை எதிரொலித்தது.(22) தேவர்கள், எதிரிகளை அழிப்பவனான அந்தப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தலையில் தெய்வீக மலர்களைப் பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் மேலாடையை எடுத்து மகிழ்ச்சியுடன் அசைக்கத் தொடங்கினர்.(23) சுற்றிலும் இருந்தவர்களும், வெற்றியடையாதவர்களுமான ஏகாதிபதிகள் துன்பத்துடனும், தளர்ச்சியுடனும் சோகமாகப் பேசினர். வானிலிருந்து அந்த அரங்கமெங்கிலும் மலர்மாரி பொழிந்தது.(24)
இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை ஒலிக்கத் தொடங்கினர். (சாதனை செய்தவனான அந்த வீரனை) சூதர்களும், மாகதர்களும் இனிய குரலில் வாழ்த்தினார்கள்.(25) எதிரிகளைக் கொல்பவனான துருபதன், அர்ஜுனனைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். அந்த ஏகாதிபதி, சந்தர்ப்பம் நேர்ந்தால், அந்த வீரனுக்குத் தன் படைகளின் உதவியைக் கொடுக்க விரும்பினான்.(26)
ஆரவாரம் அதன் உச்சத்தில் இருந்தபோது, அறவோர் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன், மனிதர்களில் முதன்மையான இரட்டையர்கள் துணையுடன் தன் தற்காலிக இலத்திற்குத் திரும்ப அந்த அரங்கத்தை விட்டகன்றான்.(27) கிருஷ்ணை {திரௌபதி}, குறி அடிக்கப்பட்டதையும், அக்குறியை அடித்தவனான, இந்திரனைப் போன்ற பார்த்தனையும் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வெள்ளுடையுடனும், மலர்மாலையுடனும் அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} அணுகினாள்.(28) அரங்கத்தில் அடைந்த வெற்றியால், திரௌபதியை வென்று, செயற்கரிய அருஞ்செயலைச் செய்த அர்ஜுனன், பிராமணர்கள் அனைவராலும் மரியாதையுடன் வணங்கப்பட்டான். அந்த அரங்கத்தை விட்டு அகன்ற அவன், இவ்வாறு தனக்கு மனைவியானவளால் பின்தொடரப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}[2].(29)
[2] கும்பகோணம் பதிப்பில், "அடிக்கப்பட்ட லக்ஷியத்தையும், இந்திரனுக்கொப்பான பார்த்தனையும் பார்த்த கன்னிகையாகிய கிருஷ்ணை, எப்போதும் வழக்கமாகப் பார்ப்பவர்களுக்குப் புதியவள் போலிருந்தாள். நகைக்காமலிருக்கும்போதே நகைப்பவள் போலவும், மதுமதமிலாமலே ஸ்ருங்கார விலாஸங்களினால் மயங்கினவள் போலவும் வாக்கினாலல்லாமல் பார்வையினாலேயே பேசுகிறவள் போலவும் வெண்மையான உயர்ந்த புஷ்ப மாலையையெடுத்துக் கொண்டு புன்னகையுடன் அர்ஜுனனிடம் சென்றாள். க்ஷத்திரிய வீரர்களின் மத்தியிலிருந்த கிருஷ்ணை, அச்சமின்ற அவர்களுக்குப் பின்னே சென்று பிராம்மணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும் அர்ஜுனனது மார்பில் மாலையை அணிந்து, தேவேந்திரனை இந்திராணி போலவும், அக்கினியை ஸ்வாகாதேவி போலவும், விஷ்ணுவை லக்ஷ்மி போலவும், ஸூர்யனை உஷையென்னும் காலைஸந்தி போலவும், மன்மதனை ரதிதேவி போலவும், மஹேஸ்வரனைப் பார்வதி போலவும் வரனாக வரித்தாள். நினைத்தற்கரிய செய்கையுள்ள அந்த அர்ஜுனன் ஸபாமண்டபத்தில் ஜயித்து அந்தப் பிராம்மணர்களால் கொண்டாடப் பெற்று அந்தத் தன் மனைவியை அழைத்துக் கொண்டு, அவளால் பின்தொடரப்பெற்று ஸ்வயம்வர மண்டபத்தினின்றும் புறப்பட்டான்" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |