Karna desisted the fight from Arjuna! | Adi Parva - Section 192 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : கர்ணனைப் பின்வாங்கச் செய்த அர்ஜுனன்; பீமன் சல்லியனை வென்றத பீமன்; துரியோதனாதிகள் தோற்றதும்; மீண்டும் யுத்தத்துக்குத் தயாரான ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு அவரவர் இருப்பிடம் திரும்பியது; திரௌபதியுடன் பீமனும், அர்ஜுனனும் தாங்கள் தங்கியிருந்த குயவனின் வீட்டுக்குச் சென்றது...
வைசம்பாயனர் சொன்னார், "பிராமணக் காளையரில் சிலர் தங்கள் மான் தோலையும், தேங்காய் ஓட்டினாலான நீர்க் கமண்டலங்களையும் ஆட்டிக் கொண்டு, "அஞ்சாதீர், எதிரிகளிடம் நாங்கள் போரிடுவோம்" என்றனர்.(1) இதைக் கேட்ட அர்ஜுனன், அப்படிச் சொன்ன அந்த பிராமணர்களைப் பார்த்துப் புன்னகைத்து, "சற்று ஓரமாக நின்று (இப்போரைப்) பார்வையாளர்களாக இருந்து பாருங்கள்.(2) கூர்முனை கொண்டவையும், நேரானவையுமான எனது நூற்றுக்கணக்கான கணைகளை மழையெனப் பொழிந்து, சீறும் பாம்புகளை அடக்கும் மந்திரத்தைப் போல அந்தக் கோபக்கார ஏகாதிபதிகளைத் தடுப்பேன்" என்றான்.(3)
பெரும் பலம்வாய்ந்த அர்ஜுனன், இப்படிச் சொல்லிவிட்டு, தான் மணக்கொடையாகப் {சீதனமாகப்} பெற்ற வில்லைத் தனது கரத்தில் ஏந்தி, தனது அண்ணன் பீமன் அருகினில் நிற்க, மலையென அசையாது இருந்தான்.(4) போரில் எப்போதும் மூர்க்கமாக இருப்பவர்களான அந்த க்ஷத்திரியர்கள், கர்ணனைத் தங்கள் முன்னணியில் கொண்டிருப்பதைக் கண்ட அந்த வீரச் சகோதரர்கள், பகை யானையை எதிர்த்து விரையும் இரு யானைகளைப் போல அச்சமில்லாமல் அவர்களை எதிர்த்து விரைந்தனர்.(5) போரிட விரும்பிய ஏகாதிபதிகள், "போரிட விரும்புபவனைக் கொல்வது அனுமதிக்கப்பட்டதே" என்று கடுமையாகக் கூவினார்கள்.(6) இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகள் திடீரென பிராமணர்களை எதிர்த்து விரைந்தார்கள். பெரும் சக்தி வாய்ந்தவனான கர்ணன், ஜிஷ்ணுவிடம் {அர்ஜுனனிடம்} போரிட விரைந்தான்.(7) பெரும் பலம் வாய்ந்த மத்ர மன்னன் சல்லியன், வெப்பத்தில் இருக்கும் பெண்யானைக்காக ஒன்றையொன்று எதிர்த்து விரையும் யானையைப் போல பீமனை எதிர்த்து விரைந்தான்;(8) அதே வேளையில், துரியோதனனும், பிறரும், மெதுவாகவும் அசட்டையாகவும் பிராமணர்களுடன் போரிட்டனர்.(9)
சிறப்புமிக்க அர்ஜுனன், விகர்த்தனனின் {சூரியனின்} மகனான கர்ணன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, வில்லை எடுத்துத் தனது கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான்.(10) கூராக்கப்பட்டவையும், பெரும் சக்தியுடன் கூடியவையுமான அந்தக் கணைகளின் மூர்க்கம் ராதேயனை (கர்ணனை) மயக்கமடையச் செய்தது. பிறகு சுயநினைவு மீண்ட கர்ணன், முன்பைவிடப் பெருங்கவனத்துடன் அர்ஜுனனைத் தாக்கினான்.(11) அப்போது, வெற்றிகரமான வீரர்களில் முதன்மையான கர்ணனும், அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள நினைத்து, வெறித்தனமாகச் சண்டையிட்டார்கள். அவர்கள் இருவரும் (ஒவ்வொருவரும் அடுத்தவரின் கணைகளில் மூழ்கி, அம்மோதலைக் கண்டுவந்த பார்வைகயாளர்களின்) கண்களுக்குத் தெரியாமல் மறைந்து போகுமளவுக்கு அவர்கள் இருவரும் தங்கள் கரநளினத்தை வெளிப்படுத்தினர்.(12) "எனது கரங்களின் பலத்தைப் பார்", "உனது சாதனைக்கு எதிரான எனது எதிர்வினையைக் குறித்துக் கொள்வாயாக", என வீரர்களுக்கு மட்டும் தெரிந்தவையும், அவர்கள் பரிமாறிக் கொண்டவையுமான வார்த்தைகள் இவைதான்.(13) சூரியனின் மகனான கர்ணன், அர்ஜுனனுடைய கரங்களின் பலம், சக்தி ஆகியவை உலகத்தில் இணையில்லாதவையாக இருப்பதைக் கண்டு கோபமடைந்து, பெரும் வீரத்துடன் போரிட்டான்.(14) அந்தக் கர்ணன், அர்ஜுனனால் தன் மீது ஏவப்பட்ட மூர்க்கமான கணைகள் அனைத்தையும் தடுத்து உரக்க முழங்கினான். போர்வீரர்கள் அனைவரும் அவனது இந்தச் சாதனையைப் பாராட்டினார்கள்.(15)
அப்போது தன் எதிராளியிடம் பேசிய கர்ணன், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, போரில் ஓய்வறியாத உமது கரங்களின் சக்தியையும், வெற்றியை அடையத் தகுந்த உமது ஆயுதங்களையும் கண்டு நான் நிறைவு கொள்கிறேன்.(16) நீர், உடல் கொண்டு வந்த ஆயுத அறிவியலா? பிராமணர்களில் சிறந்தவரான ராமரா {பரசுராமரா}? இந்திரனா? இந்திரனின் தம்பியும், அச்யுதன் என்றும் அழைக்கப்படுபவனுமான விஷ்ணுவா?(17) உம்மை {உமது உண்மையான வடிவை} மறைத்துக் கொள்வதற்காக இந்தப் பிராமண வடிவத்தை ஏற்றுக் கொண்டு, இவ்வளவு ஆயுத சக்தியையும் திரட்டிக் கொண்டு என்னிடம் நீர் போரிடுகிறீரா?(18) சச்சியின் கணவனான இந்திரனையோ, பாண்டுவின் மகனான கிரீடியையோ தவிர, போர்க்களத்தில் கோபமாக இருக்கும் என்னிடம் வேறு எவனும் போரிடவல்லவனல்ல" என்றான்.(19)
இந்த வார்த்தைகளைக் கேட்ட பல்குனன், "ஓ கர்ணா, நான் உடல் கொண்டு வந்த ஆயுத அறிவியலோ, மனிதகர்களுக்கு மீறிய சக்திகளைக் கொண்ட ராமரோ அல்ல.(20) நான், ஆயுததாரிகள் அனைவரிலும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனான ஒரு பிராமணன் மட்டுமே. என் ஆசானின் அருளால் பிரம்ம மற்றும் பொண்டர ஆயுதங்களை நான் அடைந்திருக்கிறேன். போரில் உன்னை வெல்வதற்காகவே நான் இங்கிருக்கிறேன். எனவே, ஓ வீரா, சற்றுப் பொறுப்பாயாக" என்றான்".(21) வைசம்பாயனர் தொடர்ந்தார், "(அர்ஜுனனால்) இப்படிச்சொல்லப்பட்டதைக் கேட்ட ராதையின் தத்து {சுவீகரிக்கப்பட்ட} மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கர்ணன், பிரம்ம சக்தி வெல்ல முடியாதது என்று எண்ணியதால், அந்தப் போரில் இருந்து விலகினான்[1].(22)
அதே நேரத்தில், களத்தின் வேறு பகுதியில், போரில் திறனும், பெரும் பலமும், திறமையும் பெற்ற பெரும் பலம் வாய்ந்த வீரர்களான சல்லியனும், விருகோதரனும் {பீமனும்} ஒருவரையொருவர் அறைகூவியழைத்தபடியே, மதம் பிடித்த இரு பெரும் யானைகள் போலத் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இறுகப் பற்றிய கை மற்றும் கால் முட்டிகளுடன் ஒருவரை ஒருவர் பலமாக அடித்துக் கொண்டனர்.(23,24) சில வேளைகளில் ஒருவரையொருவர் முன்னுக்குத் தள்ளியும், சில வேளைகளில் அருகே இழுத்தும், சில வேளைகளில் ஒருவரையொருவர் தலைகுப்புறத் தூக்கியெறிந்தும், சில வேளைகளில் பக்கங்களில் தூக்கி வீசியும், தங்கள் உள்ளங்கைகளால் உறுதியாகப் பற்றித் தாக்கிக் கொண்டும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(25) இரு பாறைத்திரள்கள் மோதிக் கொள்வதைப் போல கடும் அடிகளுடன் ஒருவரோடொருவர் மோதிக்கண்ட அவர்கள் பேரொலியை எழுப்பினர்.(26) இவ்வாறு சில நொடிகள் ஒருவரோடொருவர் போரிட்டு வந்த போது, குருவீரர்களில் முதன்மையானவனான பீமன், சல்லியனைத் தன் கரங்களில் தூக்கிச் சுழற்றி தொலைவாகத் தூக்கி எறிந்தான். மனிதர்களில் காளையான அந்தப் பீமசேனன், சல்லியனைத் தரையில் தூக்கி வீசினாலும், அவனுக்கு அதிக காயத்தை ஏற்படுத்தாததால் (தனது கரவேக சாதனையால்) அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.(27,28)
இவ்வாறு சல்லியன் தரையில் வீசப்பட்டபோது, கர்ணன் அச்சத்தால் பீடிக்கப்பட்டான், பிற ஏகாதிபதிகள் அனைவரும் பீதியடைந்தனர். அவர்கள் விரைவாகப் பீமனைச் சூழ்ந்து கொண்டு,(29) "உண்மையில் இந்தப் பிராமணர்கள் சிறந்தவர்கள் (போர்வீரர்கள்). இவர்கள் என்ன குலத்தவர் என்பதையும், எங்கு வசிக்கிறார்கள் என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.(30) ராமன் {பரசுராமன்}, துரோணர், பாண்டுவின் மகன் கிரீடி ஆகியோரைத் தவிர, வேறு யாரால் ராதையின் மகனான கர்ணனை எதிர்கொள்ள முடியும்?(31) தேவகியின் மகன் கிருஷ்ணன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோரைத் தவிர, போரில் யாரால் துரியோதனனை எதிர்கொள்ள முடியும்?(32) வீரர்களான பலதேவன் {பலராமன்}, பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, வீரத் துரியோதனன் ஆகியோரைத் தவிர யாரால் பெரும் பலம் கொண்ட சல்லியனைத் தூக்கியெறிய முடியும்? எனவே இந்த பிராமணர்களுடனான போரிலிருந்து நாம் விலகுவோம்.(33,34) உண்மையில், இந்தப் பிராமணர்கள் குற்றம் புரிந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எக்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும். முதலில் இவர்கள் யார் என்பதை அறிவோம்; அதைக் கண்டறிந்துவிட்டால் நாம் உற்சாகமாகப் போர் புரியலாம்" என்றனர்".(35)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமனின் இந்த அருஞ்செயலைக் கண்ட கிருஷ்ணன், இவர்கள் இருவரும் குந்தியின் மகன்களே என்று நம்பினான். அப்போது அவன், அங்கு கூடியிருந்த ஏகாதிபதிகளிடம், "இந்தக் கன்னிகை நியாயமான முறையிலேயே (இந்த பிராமணனால்) அடையப்பட்டிருக்கிறாள்" என்று சொல்லி, ஏகாதிபதிகளிடம் போரைக் கைவிடுமாறு வற்புறுத்தினான்.(36) அந்த ஏகாதிபதிகள் சண்டையிலிருந்து விலகியதால் போர் நிறைவு பெற்றது. பிறகு அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவர்கள், மிகவும் ஆச்சரியமடைந்தவர்களாகத் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.(37) அங்கே வந்திருந்தவர்கள், "பிராமணர்களின் வெற்றியோடு விழாக்காட்சிகள் முடிவடைகின்றன. பாஞ்சால இளவரசி ஒரு பிரமாணனுக்கு மணமகளானாள்" என்று சொல்லிச் சென்றனர்.(38) மான் மற்றும் மற்ற விலங்குகளின் தோலாடைகளை உடுத்தியிருந்த பிராமணர்களால் சூழப்பட்ட பீமனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்தக்கூட்டத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தனர்.(39) எதிரிகளால் சிதைக்கப்பட்டவர்களும், மனிதர்களில் வீரர்களுமான அவர்கள் கிருஷ்ணனால் பின்தொடரப்பட்டார்கள்.(40)
அதே வேளையில், பிச்சையெடுத்துத் திரும்ப வேண்டிய நேரம் கடந்தும் தனது பிள்ளைகள் வராததால் குந்தி மிகவும் மனக்கலக்கம் அடைந்து இருந்தாள். தனது மகன்களுக்கு ஏதும் தீமை நேர்ந்திருக்குமோ என எண்ணத் தொடங்கினாள்.(41) ஒரு நேரம், அவள் தனது பிள்ளைகளைத் திருதராஷ்டிரனின் மகன்கள் அடையாளம் கண்டு கொண்டு, அவர்களைக் கொன்றுவிட்டனரோ என்று நினைத்தாள்.(42) அடுத்து, ஏதேனும் தீய ராட்சசர்கள் தங்கள் மாய சக்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றி அவர்களைக் கொன்றுவிட்டனரோ என்று நினைத்தாள். தன் பிள்ளைகள் மீதிருந்த பாசத்தால், அவள் தனக்குத் தானே, "இப்படி வழிகாட்டிய (பாஞ்சாலத்திற்குத் தனது மகன்களை வழிநடத்திய) சிறப்பு மிகுந்த வியாசர் குறைந்த புத்தியுடையவரா?" என்றெல்லாம் நினைத்துப் பார்த்தாள்.(43) பின்னர் தாமதமாக, பிற்பகலின் அமைதியான வேளையில், பிராமணர்கள் சூழ வந்த ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மேகமூட்டமான நாளில், மேக மறைவில் இருந்து வெளிவரும் சூரியனைப் போல அந்தக் குயவனின் வசிப்பிடத்தில் நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(44,45)

[1] ஆதிபர்வம் பகுதி 140ல் துரோணரின் குருதட்சணையைக் கொடுக்கும்பொருட்டு பாஞ்சாலத்தின் துருபதனைக் கைப்பற்றச் செல்கையில் கர்ணன் இருந்த அணி தோற்றது. அர்ஜுனனின் அணி வென்றது. இப்போதோ, நேருக்கு நேரான முதல் மோதலில், கர்ணன் அர்ஜுனனிடம் இருந்து பின்வாங்கினான். இருப்பினும் கர்ணனுக்கு இவன் இன்னான் என்பது தெரியாது.

ஆங்கிலத்தில் | In English |