Dhrishtadyumna Concealed! | Adi Parva - Section 194 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வசிக்கும் குயவன் வீட்டில் ஒளிந்திருந்த திருஷ்டத்யும்னன்; பாண்டவர்கள் கொண்டு வந்த பிச்சையை குந்தியின் வழிகாட்டுதல்படி பிரித்துக் கொடுத்துப் பரிமாறிய திரௌபதி; காரியத்தை அறிந்து கொண்டு துருபதனிடம் திரும்பிய திருஷ்டத்யும்னன்; துயரத்துடன் பிதற்றிய துருபதன்...
வைசம்பாயனர் சொன்னார், "குருகுல இளவரசர்கள் (பீமனும், அர்ஜுனனும்) குயவனின் வசிப்பிடத்தை நோக்கி நடந்து செல்கையில், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.(1) தனது பணியாட்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, அந்தக் குயவனின் இல்லத்திற்கு அருகில் ஏதோ ஒரு பகுதியில் பாண்டவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டான்.(2) பிறகு, எதிரிகளை அழிப்பவர்களான பீமனும், அர்ஜுனனும், சிறப்புமிகுந்த இரட்டையர்களும், மாலை நேர பிச்சையை முடித்துக் கொண்டு திரும்பி, அனைத்தையும் மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தனர்.(3) அப்போது, அன்பான இதயம் கொண்ட குந்தி, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்}, "ஓ இனிமையானவளே, நீ ஒரு பகுதியை முதலில் இதிலிருந்து எடுத்து, தேவர்களுக்கு அர்ப்பணித்து, பிராமணர்களுக்குக் கொடுத்துவிடுவாயாக.(4) உண்ண விரும்புபவர்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக, நமது விருந்தினர்களாக வருபவர்களுக்குக் கொடுப்பாயாக. மீதத்தை இரு பங்காகப் பிரித்து, ஒரு பங்கை பீமனுக்குக் கொடுப்பாயாக. ஓ இனிமையானவளே, இந்த அழகான நிறம் கொண்ட இளைஞன் {பீமன்} யானைகளின் மன்னனுக்கு நிகராக பெரும் தீனி தின்பவனாவான். மறு பாதியை ஆறு பங்குகளாக இட்டு, இந்த நான்கு இளைஞர்களுக்கும், ஒன்றை எனக்கும் கொடுத்துவிட்டு, ஒன்றை உனக்கும் எடுத்துக் கொள்வாயாக" என்றாள்.(5,6)
அப்போது, தனது மாமியாரின் இந்த அறிவுரைகளைக் கேட்டுக் கொண்ட அந்த இளவரசி, அவள் வழிகாட்டியபடி அனைத்தையும் மகிழ்ச்சியுடன் செய்தாள். அந்த வீரர்கள் அனைவரும் கிருஷ்ணையால் {திரௌபதியால்} தயாரிக்கப்பட்ட {சமைக்கப்பட்ட} உணவை உண்டனர்.(7) பெரும் செயல்புரிபவனான மாத்ரியின் மகன் சகாதேவன், தரையில் குசப் புல்லினால் {தர்ப்பைப் புல்லினால்} படுக்கை அமைத்து, அதில் படுத்துக் கொண்டான். மற்றவீரர்கள் அங்கிருந்த மான் தோலில் தங்களைக் கிடத்திக் கொண்டு உறங்கினர்.(8) குரு இளவரசர்களில் முதன்மையானவர்கள் தங்கள் தலைகளைத் தெற்கே வைத்து படுத்திருந்தனர்.குந்தி அவர்களின் தலைமாட்டில் படுத்துக் கொண்டாள். கிருஷ்ணை {திரௌபதி} அவர்களது கால்மாட்டில் படுத்துக் கொண்டாள்.(9) கிருஷ்ணை, பாண்டுவின் மகன்களுடன் குசப் புல்லில் {தர்ப்பைப் புல்லில்} அவர்களின் கால் மாட்டில் தலையணையில்லாமல் படுத்துக் கிடந்தாலும் அவளது இதயத்தில் துயர் கொள்ளவில்லை. அந்தக் குருகுலக் காளைகளைக் குறித்து மரியாதைக் குறைவாக எண்ணவுமில்லை. (10)
அப்போது, அந்த வீரர்கள் தங்களுக்குள் பேசத் தொடங்கினர். ஒரு படையைத் தலைமை தாங்கும் தகுதியுடன் இருந்த ஒவ்வொருவரும், தேவலோக தேர்களைக் குறித்தும், ஆயுதங்களைக் குறித்தும், யானைகள், வாட்கள், கணைகள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் குறித்தும் மிகவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டனர்.(11) பாஞ்சால மன்னனின் மகன் (தனது மறைவிடத்திலிருந்து) அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டான். அவனுடன் இருந்த அனைவரும், கிருஷ்ணையை {திரௌபதியை} அந்த நிலையிலேயே கண்டனர்.(12) காலை வந்ததும், இளவரசன் திருஷ்டத்யும்னன் தனது மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டுக் குயவனின் வசிப்பிடத்தில் நடந்தது குறித்தும், இரவில் அந்த வீரர்கள் பேசிக் கொண்டதைக் குறித்தும் துருபதனிடம் விரிவாகத் தெரிவிக்க மிக விரைவாகச் சென்றான்.(13) பாண்டவர்கள்தான் தனது மகளை அடைந்தனர் என்பதை அறியாத பாஞ்சால மன்னன் மிகவும் துயருற்று இருந்தான்.
திருஷ்டத்யும்னன் திரும்பியதும் அந்தச் சிறப்புமிகுந்த ஏகாதிபதி {துருபதன்}, "எனது கிருஷ்ணை எங்கே சென்றாள்? யார் அவளைத் தூக்கிச் சென்றது?(14) ஒரு சூத்திரனோ, இழிந்த பிறவியோ, கப்பம் கட்டும் வைசியனோ எனது மகளைத் தூக்கிச் சென்று, தனது அழுக்கான பாதத்தை எனது தலையில் வைத்துவிட்டனரா? ஓ மகனே, சுடுகாட்டில் பூக்குவியல் இறைக்கப்பட்டதா?(15) உயர்ந்த குல க்ஷத்திரியனோ அல்லது அதனினும் உயர்ந்த குலத்தானோ {பிராமணனோ} எனது மகளை அடைந்தானா? இழிந்த குலத்தைச் சேர்ந்த எவனும் கிருஷ்ணையை {திரௌபதியை} வென்று அவனது இடது காலை எனது தலையில் வைத்துவிட்டானா?(16) ஓ மகனே, மனிதர்களில் முதன்மையான பார்த்தனிடம் என் மகள் சேர்ந்திருந்தாள் என்றால் நான் நிச்சயம் மகிழ்வேன், துயருற மாட்டேன். ஓ உயர்ந்தவனே, உண்மையைச் சொல், இன்று எனது மகளை வென்றவன் எவன்?(17) குருக்களில் முதன்மையான விசித்திரவீரியனின் மகனின் {பாண்டுவின்} மகன்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா? வில்லை எடுத்துக் குறியை அடித்தவன் பார்த்தனா {அர்ஜுனனா?}" என்று கேட்டான் {துருபதன்}”.(18)

ஆங்கிலத்தில் | In English |