Did Draupadi choose Duryodhana for her husband? | Adi Parva - Section 202 | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் பற்றிய செய்தியைக் கேட்ட மற்ற மன்னர்கள் திருதராஷ்டிரனைப் பழிப்பது; துரியோதனனை கணவனாக திரௌபதி தேர்ந்தெடுத்தாள் என்று புரிந்து கொண்ட திருதராஷ்டிரன்; துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனுடன் ஆலோசிப்பது...
வைசம்பாயனர் சொன்னார், "(திரௌபதியின் சுயம்வரத்திற்கு வந்த) அனைத்து ஏகாதிபதிகளுக்கும், அவர்களின் திறமை வாய்ந்த ஒற்றர்களால் பாண்டுவின் மகன்களுக்கும் திரௌபதிக்கும் திருமணம் நடந்த செய்தி எட்டியது.(1) வில்லை வளைத்துக் குறி அடித்த வீரன், வெற்றிபெறும் வீரர்களில் முதன்மையான, விற்கணைகளைத் தாங்குபவர்களில் முதன்மையான அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும்;(2) மத்ர மன்னன் சல்லியனை தரையில் தூக்கி எவன் தூக்கி எறிந்தானோ, தீண்டல் ஒன்றாலேயே எதிரிகளின் உயிரை எடுக்கும் வல்லமைபெற்ற எவனோ, கோபம் கொண்டு மரத்தைப் பிடுங்கி அங்கே கூடியிருந்த மன்னர்களை அச்சுறுத்தியவன் எவனோ, அவன் எதிரிகளை வீழ்த்தும் பீமனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.(3,4)
பாண்டவர்கள் அமைதியான பிராமணர்கள் வடிவத்தோடு மாற்றுருவில் இருந்தார்கள் என்பதை அறிந்த ஏகாதிபதிகள் மிகவும் வியப்புற்றனர்.(5) குந்தியும், அவளது மகன்கள் அனைவரும் அரக்கு மாளிகை எரிந்ததால் கொல்லப்பட்டார்கள் என்பதையும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். எனவே, அவர்கள் பாண்டவர்களை மரணித்தவர்களின் உலகத்திலிருந்து மீண்டு வந்தவர்களாக மதித்தார்கள்.(6) புரோசனனின் தீய திட்டத்தை நினைத்துப் பார்த்த அவர்கள் அனைவரும், "ச்சீ, பீஷ்மன் இழிந்தவன், குரு குலத்தின் திருதராஷ்டிரன் இழிந்தவன்" என்று இகழ்ந்தனர்.(7) சுயம்வரம் முடிந்ததும் திரௌபதி பாண்டவர்களுடன் இணைக்கப்பட்டதை அறிந்த அனைத்து ஏகாதிபதிகளும், தங்கள் நாடுகளுக்குப் புறப்பட்டனர்.(8) அப்போது திரௌபதி, வெண்குதிரையைக் கொண்டவனைத் {அர்ஜுனனைத்} தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததைக் கேட்ட துரியோதனன் மிகவும் கவலை கொண்டான்.(9) தனது தம்பிகள், அசுவத்தாமன், தனது மாமன் (சகுனி), கர்ணன், கிருபர் ஆகியோருடன் அந்த இளவரசன் {துரியோதனன்} கனத்த இதயத்துடன் {காம்பில்யத்திலிருந்து} தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்துக்குப்} புறப்பட்டுச் சென்றான்.(10)
அப்போது, வெட்கத்தால் தலைகுனிந்த துச்சாசனன், தனது அண்ணனிடம் மெதுவாக, "அர்ஜுனன் மட்டும் தன்னை பிராமணனாக மறைத்துக் கொள்ளவில்லையெனில், அவனால் திரௌபதியை அடைவதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவன் இப்படி மாற்றுரு கொண்டதினாலேயே, ஓ மன்னா {துரியோதனா}, ஒருவராலும் அவனைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எனக் கண்டு கொள்ள முடியவில்லை.(11) விதியே வலியது என நான் கருதுகிறேன். முயற்சிகள் கனி கொடுக்கவில்லை; ஓ அண்ணா பாண்டவர்கள் உயிரோடிருப்பது நமது முயற்சிகளுக்கு இகழ்ச்சியே" என்றான்.(12)
ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக்கொண்டு, {அவனது பொறுப்பற்ற செயலுக்கு) புரோச்சனனைப் பழித்து, மகிழ்ச்சியற்ற துயர் நிறைந்த இதயங்களுடன் அவர்கள் ஹஸ்தினாபுரம் நகரத்திற்குள் புகுந்தனர்.(13) பிருதையின் {குந்தியின்} பலம் பொருந்திய மகன்கள் {பாண்டவர்கள்}, அரக்கு மாளிகையின் நெருப்பிலிருந்து தப்பித்து, துருபதனுடன் கூட்டணி அமைத்ததைக் கண்டு, திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகிய துருபதனின் மற்ற மகன்களையும் நினைத்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மனத்தளர்ச்சியை அடைந்தனர்.(14,15) திரௌபதி பாண்டவர்களால் வெல்லப்பட்டாள் என்பதையும், செருக்கழிந்த திருதராஷ்டிரனின் மகன்கள் அவமானத்துடன் (ஹஸ்தினாபுரத்திற்குத்) திரும்பி வந்தனர் என்பதையும் அறிந்த விதுரன் மகிழ்ச்சியில் திளைத்தான்.(16)
பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனை அணுகிய க்ஷத்திரி {விதுரன்}, "குரு குலத்தவர் நற்பேற்றால் வளமை அடைகின்றனர்!" என்றான்.(17)
விதுரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட, விசித்திரவீரியனின் மகன் {திருதராஷ்டிரன்} வியப்புற்று, பெரும் மகிழ்ச்சியுடன், "என்ன நற்பேறு! ஓ விதுரா, என்ன நற்பேறு வந்தது!" என்று கேட்டான்.(18)
இப்படி அறியாமையில் இருந்த அந்தப் பார்வையற்ற ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துருபதனின் மகள் {திரௌபதி} தனது மூத்த மகனான துரியோதனனைத் தனது தலைவனாகத் {கணவனாகத்} தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்பதாகப் புரிந்து கொண்டான்.(19) உடனே அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} திரௌபதிக்காகப் பல்வேறு ஆபரணங்களைச் செய்ய உத்தரவிட்டான். திரௌபதியும், தனது மகனான துரியோதனனும், ஹஸ்தினாபுரத்திற்கு மிகுந்த ஆடம்பரமான முறையில் அழைத்து வரப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டான்.(20)
அதன்பிறகு தான் விதுரன், அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்}, திரௌபதி பாண்டவர்களைத் தனது தலைவர்களாகத் {கணவர்களாகத்} தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்றும், அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்றும், அமைதியான முறையில் வாழ்ந்து மன்னன் துருபதனின் பெரு மதிப்பையும் பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவித்தான்.(21) மேலும், பாண்டவர்கள், துருபதனின் பல உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும், சுயம்வரத்திற்கு வந்த மற்ற பல மன்னர்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெரும் படைகள் இருக்கின்றன" என்றும் தெரிவித்தான்.(22)
விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "அந்தப் பிள்ளைகள் {பாண்டவர்கள்}, பாண்டுவுக்கு எப்படி அன்பானவர்களோ, அப்படியே எனக்கும் அன்பானவர்கள். அல்லாமலும், இப்போது அவர்கள் மீது எனது பாசம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்பாயாக.(23) பாண்டுவின் வீர மகன்கள் நன்றாகவும், அமைதியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பல நண்பர்களை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சேர்த்திருக்கும் உறவினர்களும், கூட்டணியில் சேர்க்கப்பட்டிருப்பவர்களும் பெரும் பலம் பொருந்தியவர்களாவர்.(24) செழிப்போ, கேடோ அடைந்திருக்கும் எந்த ஏகாதிபதிதான் துருபதனையும் அவனது உறவினர்களையும் கூட்டாளிகளாகக் கொள்ள விரும்ப மாட்டான்” என்றான் {திருதராஷ்டிரன்}".(25)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விதுரன், "ஓ மன்னா, உமது இந்தப் புரிதல் நூறு வருடங்களுக்கு மாற்றமில்லாமல் இருக்கட்டும்" என்று சொன்னான்.(26) இப்படிச் சொல்லிவிட்டுத் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான் விதுரன். அப்போது, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அங்கே திருதராஷ்டிரனிடம், துரியோதனனும், ராதையின் மகனான கர்ணனும் வந்தனர்[1].(27)
அவர்கள் அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ மன்னா, விதுரன் முன்னிலையில் வரம்பு மீறிய எந்தச் சொல்லையும் நாங்கள் பேச முடியாது. எனவே, நாங்கள் உம்மைத் தனிமையில் கண்டோம். எனவே, நாங்கள் விரும்பியதைச் சொல்கிறோம்.(28) ஓ ஏகாதிபதியே, நீர் என்ன செய்ய விரும்புகிறீர்? விதுரனின் முன்னிலையில் பாண்டவர்களைப் பெரிதும் புகழ்கிறீரே? உமது எதிரியின் வளமையை உமதாகக் கருதுகிறீரா?(29) ஓ பாவமற்றவரே, ஓ மன்னா, நீர் செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை. ஓ தந்தையே, நாம் பாண்டவர்களைப் பலவீனப்படுத்தத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.(30) ஓ ஐயா, பாண்டவர்கள் நம்மையும், நமது பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் விழுங்காதிருக்க, நாம் சேர்ந்து ஆலோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றனர்.(31)

[1] கும்பகோணம் பதிப்பில், துரியோதனாதிகள் திருதராஷ்டிரனிடம் வருவதற்கு முன் தனியாக ஆலோசித்தது இரண்டு அத்தியாயங்களில் வருகிறது, அதன் சுருக்கம் பின்வருமாறு: "திருதராஷ்டிரனின் மகன்கள் பாண்டவர்களைக் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது, "அவர்களைக் கொல்ல வேண்டும்" என்று சகுனி சொல்வதும், "அவர்களைக் கொல்ல முடியாது. சமாதானமே செய்து கொள்ள வேண்டும் என்று சோமதத்தன் மகனான பூரிஸ்ரவஸ் பல தகவல்களுடன் விளக்கிச் சொல்வதும், கர்ணன், "பூரிஸ்ரவசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும், "எதிர்த்து செல்வதனாலோ, சேனையுடன் இங்கேயே நிற்பதாலோ, இந்தத் துருபத நகரத்தைப் பிடிப்பது முடியாது. பெரிய யுத்தமும் நல்லதன்று. நினைத்துப் பார்க்கையில் இங்கே யுத்தத்தில் விருப்பமுள்ள யாதவர்கள் நமது பின் இடத்தைப் பிடிப்பதற்கு முன் நாம் அவர்களை அழிப்பதற்கு இது காலமென்று எனக்குத் தோன்றுகிறது. எனவே போரிடுவதே சிறந்தது" என்று சொன்னதும், துரியோதனாதியர் பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பாஞ்சால நகரம் செல்வது; அர்ஜுனனிடம் போரில் கர்ணன் தோற்பது; துரியோதனாதிகள் பாண்டவர்களால் தோல்வியடைந்து திரும்பி ஹஸ்தினாபுரம் சேர்ந்தது; கிருஷ்ணனும், பலராமனும் பாஞ்சாலத்திற்கு வந்திருந்து பாண்டவர்களுடன் மகிழ்ந்திருந்தது" ஆகியன அந்த இரண்டு அத்தியாயங்களில் விவரிக்கப்படுகின்றன. கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகிய பதிப்புகளில் இச்சம்பவங்கள் சொல்லப்படவில்லை.
அவர்கள் அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ மன்னா, விதுரன் முன்னிலையில் வரம்பு மீறிய எந்தச் சொல்லையும் நாங்கள் பேச முடியாது. எனவே, நாங்கள் உம்மைத் தனிமையில் கண்டோம். எனவே, நாங்கள் விரும்பியதைச் சொல்கிறோம்.(28) ஓ ஏகாதிபதியே, நீர் என்ன செய்ய விரும்புகிறீர்? விதுரனின் முன்னிலையில் பாண்டவர்களைப் பெரிதும் புகழ்கிறீரே? உமது எதிரியின் வளமையை உமதாகக் கருதுகிறீரா?(29) ஓ பாவமற்றவரே, ஓ மன்னா, நீர் செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை. ஓ தந்தையே, நாம் பாண்டவர்களைப் பலவீனப்படுத்தத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.(30) ஓ ஐயா, பாண்டவர்கள் நம்மையும், நமது பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் விழுங்காதிருக்க, நாம் சேர்ந்து ஆலோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றனர்.(31)
ஆங்கிலத்தில் | In English |