Duryodhana, “incite Draupadi against her husbands” | Adi Parva - Section 203 | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : துரியோதனன், திரௌபதியை பாண்டவர்களுக்கு எதிராகத் தூண்டவும், பாண்டவர்களைக் கொல்லவும் சொன்னது; குறிப்பாக பீமனின் பெருமைகளைச் சொல்லி, அவனைக் கொன்றால் பாண்டவர்கள் நாடு கேட்க மாட்டார்கள் என்று சொன்னது; கர்ணனிடம் கருத்து கேட்ட துரியோதனன்...
வைசம்பாயனர் சொன்னார், "திருதராஷ்டிரன், " நீங்கள் பரிந்துரைப்பதைத்தான் நான் சரியாகச் செய்ய விரும்புகிறேன். ஆனால், எனது சிறு சதை {முக} மாற்றத்தினாலும் விதுரனுக்கு அதைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை.(1) எனவே, ஓ மகனே, எனது மனத்தின் சிறு குறிப்பையும் விதுரன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, நான் அவனது முன்னிலையில், பாண்டவர்களைப் புகழ்ந்தேன்.(2) இப்போது விதுரன் சென்றுவிட்டான். ஓ சுயோதனா (துரியோதனா) உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓ ராதேயா (கர்ணா) உனக்கு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்வதற்கு இதுவே தகுந்த நேரம்" என்றான்.(3)
அதற்குத் துரியோதனன், "ஓ தந்தையே, நம்பிக்கைக்குரிய, திறம்வாய்ந்த, கைதேர்ந்த பிராமணர்களைக் கொண்டு, குந்தியின் மகன்களுக்கும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோருக்கும்}, மாத்ரியின் மகன்களுக்கும் {நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையே {பேத முறையில்} வேற்றுமையை உருவாக்க வேண்டும்.(4) அல்லது துருபதனுக்கும், அவனது மகன்களுக்கும், அவனது நாட்டின் அமைச்சர்களுக்கும் {தான முறையில்} பெரும் செல்வங்களைப் பரிசாகக் கொடுத்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனைக் கைவிடச் செய்ய வேண்டும்.(5)
அல்லது நமது ஒற்றர்கள், பாண்டவர்களிடம் ஹஸ்தினாபுரத்தில் வசிப்பதால் உண்டாகும் தோதின்மைகளை {வசதியின்மைகளைத்} தனியாக விளக்கி, நம்மிடம் இருந்து பிரிந்து பாஞ்சாலத்திலேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கும் வகையில், அவர்களைத் துருபதனின் ஆட்சிப் பகுதியிலேயே வசிப்பதற்குத் தூண்ட வேண்டும்.(6,7) அல்லது பெரும் வழிவகைகளை அறிந்த சில புத்திசாலி ஒற்றர்களைக் கொண்டு வேற்றுமையின் விதைகளைப் பாண்டவர்களுக்குள் தூவி, அவர்களை ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளச் செய்ய வேண்டும்.(8) அல்லது அவர்களை {ஒற்றர்களைக்} கொண்டு கிருஷ்ணையை {திரௌபதியை} அவளது கணவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட வேண்டும். அவளுக்குப் பல தலைவர்கள் {கணவர்கள்} இருப்பதால், இந்தக் காரியம் கடினமானது அன்று. அல்லது சிலரைக்கொண்டு பாண்டவர்கள் கிருஷ்ணை {திரௌபதி} மீது வெறுப்பு கொள்ளச் செய்தால், பதிலுக்குக் கிருஷ்ணை {திரௌபதி} அவர்கள் மீது வெறுப்பைக் கொள்வாள்.(9) அல்லது, ஓ மன்னா, நுண்ணறிவு கொண்ட சில ஒற்றர்களை அங்கு செல்ல வைத்து, {தண்ட முறையில்} கமுக்கமாகப் பீமசேனனைக் கொல்ல வைக்க வேண்டும். அவர்கள் அனைவரிலும் பீமனே பலசாலியாவான்.(10)
முன்பொரு காலத்தில் பாண்டவர்கள், பீமனை மட்டுமே நம்பி, நம்மை அவமதித்திருக்கிறார்கள். பீமன் கடுமையானவன், வீரமானவன். அவனே பாண்டவர்களின் பாதுகாவலன்.(11) அவன் கொல்லப்பட்டால், மற்றவர்களின் பலமும் சக்தியும் குறைந்துவிடும். அவர்களது ஒரே பாதுகாவலான பீமனை இழந்துவிட்டால், மறுபடியும் நாட்டைப் பெற அவர்கள் முனைய மாட்டார்கள்.(12) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பின்னாலிருந்து பீமன் காத்தால்தான், அர்ஜுனன் போரில் தன்னிகர் இல்லாதவன். பீமனில்லாத அர்ஜுனன், ராதேயனின் {கர்ணனின்} கால்பங்கு பலத்துக்கும் ஈடாக மாட்டான்.(13) ஓ மன்னா, நிச்சயமாக, பீமனில்லாத பாண்டவர்கள், நமது பலத்திற்கு முன்னால் தங்களை அற்பமாக உணர்ந்து, நாட்டைப் பெற உண்மையிலேயே முனைய மாட்டார்கள்.(14) அல்லது, ஓ ஏகாதிபதியே இங்கே வந்து, நமக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் தங்கள் அமைதியை நிரூபித்தால், அதன் பிறகு நாம் (கணிகர் விளக்கியபடியே) அரசியல் அறிவியலின் ஆணைப்படி அவர்களை எப்படி ஒடுக்க வேண்டுமோ அப்படி ஒடுக்கலாம்.(15)
அல்லது, சில அழகான பெண்களைக் கொண்டு, பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அவர்கள் மீது {பாண்டவர்கள் மீது} வருத்தம் கொள்ள வைக்கச் செய்யலாம்.(16) அல்லது ஓ ராதேயா {கர்ணா}, நமது தூதர்களை அங்கு அனுப்பி, அவர்களை இங்குக் கொண்டுவந்து, நம்பிக்கைக்குரிய ஆட்களைக் கொண்டு, மேற்கண்ட எந்த முறையிலாவது அவர்களைக் கொல்லலாம்.(17) ஓ தந்தையே, இந்த (பல்வேறு முறைகளில் உமக்கு குறையில்லாததாகத் தெரியும் எதையாவது கைக்கொள்வீராக. காலம் கடக்கிறது. இதற்கு மேலும் நாம் தவறிழைக்காமல் முனைய வேண்டும்.(18) ஓ ஏகாதிபதி, மன்னர்களில் காளையான துருபதனிடம் அவர்களது நம்பிக்கை நிறுவப்படுவதற்கு முன் அவர்களைத் தாக்கி நாம் வெற்றி கொள்ள வேண்டும். (ஆனால் அவர்கள் துருபதனின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆகிவிட்டால், பின்பு நாம் நிச்சயம் தோல்வியைத் தான் சந்திப்போம்).(19). ஓ தந்தையே, இவையே பாண்டவர்களைத் தோல்வியடையச் செய்ய நான் கொண்டிருக்கும் கருத்துகள். இவை நன்மையா, தீமையா என்பதைத் தீர்மானித்துக் கொள்வீராக. ஓ கர்ணா, நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான் {துரியோதனன்}.(20)

ஆங்கிலத்தில் | In English |