Karna sewed Duryodhana! | Adi Parva - Section 204 | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்ன திட்டங்களைக் கேட்டு கர்ணன் அவனை ஏசியது; சூழ்ச்சியைக் கையாளாதே ஆற்றலை வெளிப்படுத்து என்று சொன்னது; செல்வம், இன்பம், நாடு என்று எதையும் பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தியாகம் செய்வான் என்று சொன்னது; வீரமே க்ஷத்திரியனுக்கு அழகு என்று சொன்னது...
வைசம்பாயனர் சொன்னார், "துரியோதனனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், "ஓ துரியோதனா, உன் பகுத்தறிவு நன்கு நிறுவப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பாண்டவர்களுக்கு எதிரான எந்த வழிவகையும் வெற்றிபெறாது.(1) ஓ வீரமான இளவரசனே, இதற்கு முன்பே நீ பல்வேறு நுட்பமான வழிவகைகள் மூலம் உனது விருப்பத்தைச் செய்யப் போராடியிருக்கிறாய். ஆனால், உனது எதிரிகளைக் கொல்வதில் தோல்வியே கண்டிருக்கிறாய்.(2) அப்போது அவர்கள் உனது அருகிலே வாழ்ந்து வந்தார்கள். ஓ மன்னா, அப்போது அவர்கள் சிறுவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அப்போதும் உன்னால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடிய வில்லை.(3) இப்போது அவர்கள் தொலைவில் இருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பெரும் ஆட்சிப்பரப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ உறுதியான முடிவு கொண்டவனே, குந்தியின் மகன்கள் உனது எந்த நுட்பமான {தந்திரமான} திட்டமிடல் மூலமும் காயப்பட மாட்டார்கள். இஃது எனது கருத்து.(4) அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அவர்களது விதி உதவி செய்கிறது. அவர்கள் தங்கள் மூதாதையர் நாட்டை அடைய விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது, நமது சக்தியைக் கொண்டு, எந்த வகையிலும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில் நாம் வெற்றிகொள்ள முடியாது.(5)
அவர்களுக்குள் ஒற்றுமையின்மையை உருவாக்குவது என்பது முடியாத காரியம். பொது மனைவியைக் கொண்ட அவர்கள் அனைவரையும் பிரிக்க முடியாது.(6) அதே போல நமது ஒற்றர்களைக் கொண்டு கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்தவும் முடியாது. அவர்கள் {பாண்டவர்கள்} கேடு காலத்தில் {துரதிர்ஷ்டத்தில்} இருந்த போதே, அவள் அவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தாள். இப்போது வளமையில் இருக்கும் அவர்களை அவள் கைவிடுவாளா?(7) அல்லாமலும், பெண்கள் எப்போதும் பல கணவர்களை அடையவே விரும்புவார்கள். கிருஷ்ணை {திரௌபதி} அவள் விருப்பத்தை அடைந்துவிட்டாள். அவளைப் பாண்டவர்களிடம் பேதம் கொள்ள வைக்க முடியாது.(8) பாஞ்சால மன்னன் {துருபதன்} நேர்மையானவனும் அறம் சார்ந்தவனும் ஆவான்; அவன் பேராசையுடையவன் அல்லன். நாம் நமது முழு நாட்டை அவனுக்குக் கொடுப்பதாய் இருந்தாலும் அவன் பாண்டவர்களைக் கைவிட மாட்டான்.(9) துருபதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, அனைத்துத் தகுதிகளும் கொண்டு பாண்டவர்களிடம் பிணைப்புடன் இருக்கிறான். எனவே, உனது சக்தியைக் கொண்டு எந்த நுட்பமான திட்டத்தைச் செய்தாலும் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது, என்று நான் நினைக்கிறேன்.(10)
ஆனால், ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, நான் இனி சொல்லப் போவதுதான் நமக்கு உகந்ததும், நன்மையானதும் ஆகும். ஆதாவது, அவர்கள் {பாண்டவர்கள்} அழியும் வரை அவர்களைத் தாக்கி அடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இந்தப் போக்கே உனக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியது.(11) நமது தரப்பு பலமாக இருக்கும் வரையும், பாண்டவ மன்னனின் தரப்பு பலவீனமாய் இருக்கும் வரையும், அவர்களை எந்த மன உறுத்தலும் இன்றித் தாக்க வேண்டும்.(12) ஓ காந்தாரியின் மகனே {துரியோதனனே}, அவர்களது கணக்கிலடங்கா வாகனங்களும், விலங்குகளும், நண்பர்களும், நட்புக் குழுக்களும் ஒன்றாகத் திரளாத வரை, ஓ மன்னா, உனது ஆற்றலை வெளிப்படுத்துவதைத் தொடர்ந்து கொண்டிருப்பாயாக.(13) பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அவனது மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} சேர்ந்து, நம் மீது போர் தொடுக்க எண்ணாத வரை, ஓ மன்னா, உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.(14) ஓ மன்னா, அனைத்தையும் எடுத்துக் கொண்டு பாண்டவர்களுக்கு அவர்கள் தந்தை வழிச் சொத்தை மீட்டுக் கொடுக்க விருஷ்ணி குலத்தோன் (கிருஷ்ணன்), யாதவப் படைகளுடன் துருபதன் நகரத்திற்குள் நுழையாத வரை உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.(15)
செல்வம், இன்பத்துக்கான அனைத்து நுகர்ச்சிப் பொருட்கள், நாடு என அந்தக் கிருஷ்ணன், பாண்டவர்களுக்காக எதையும் தியாகம் செய்வான்.(16) அந்தச் சிறப்புமிக்கப் பாரதன் {கிருஷ்ணன்} தனி ஒருவனாக வீரத்தைக் காட்டி இந்த முழு உலகத்தையே அடைந்திருக்கிறான். இந்திரன் தன் ஆற்றலை மட்டுமே கொண்டு மூன்று உலகத்தின் ஆட்சியை அடைந்தான்.(17) ஓ மன்னா, ஆற்றல் மட்டுமே க்ஷத்திரியர்களால் எப்போதும் மெச்சப் படுகிறது. ஓ க்ஷத்திரியக் காளையே, துணிவுள்ளவனுக்கு ஆற்றலே முக்கியமான அறமாகும்.(18) எனவே, ஓ ஏகாதிபதி, நேரத்தைக் கடத்தாமல், நான்கு வகைச் சேனைகளைக் கொண்ட நமது பெரும் படையைக் கொண்டு துருபதனைத் தாக்கி, பாண்டவர்களை இங்கே கொண்டு வருவோம்.(19) உண்மையில், சமாதானக் கொள்கை கொண்டோ, பரிசையும் செல்வத்தையும் லஞ்சமாகக் கொடுத்தோ அல்லது ஒற்றுமையின்மையை உண்டாக்கியோ பாண்டவர்களை வீழ்த்த முடியாது. எனவே, உனது ஆற்றலைக் கொண்டே அவர்களை வெற்றி கொள்வாயாக.(20) உனது ஆற்றலைக் கொண்டு அவர்களை வெற்றிகொண்டு இந்தப் பரந்த உலகத்தை ஆட்சி செய்வாயாக. ஓ ஏகாதிபதி, நமது இலக்கை அடைய நான் வேறு வழி எதையும் காணவில்லை" என்றான் {கர்ணன்}".(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ராதேயனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பெரும் பலம் வாய்ந்த திருதராஷ்டிரன், அவனைப் பெரிதும் மெச்சினான். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம்,(22) "ஓ சூதனின் மகனே {கர்ணனே}, நீ ஆயுதங்களில் தேர்ச்சி பெற்ற பெரும் ஞானம் கொண்டவன். எனவே ஆற்றலை வெளிக்காட்டச் சொன்ன உனது பேச்சு, உனக்கு மிகவும் பொருந்துகிறது.(23) ஆனாலும், பீஷ்மர், துரோணர், விதுரன் மற்றும் நீங்கள் இருவரும் {கர்ணனும், துரியோதனனும்) ஆலோசனை செய்து, நமது நலனுக்கு வழிவகுக்கும் திட்டத்தை ஏற்படுத்தி, அதையே ஏற்றுக் கொள்வீராக" என்றான் {திருதராஷ்டிரன்}”.(24)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு மன்னன் திருதராஷ்டிரன், கொண்டாடப்பட்டவர்களான தனது அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் ஆலோசித்தான்".(25)

ஆங்கிலத்தில் | In English |