Bhishma warned Duryodhana! | Adi Parva - Section 205 | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் அனைவரையும் சமமாக நினைப்பதாகச் சொல்வது; பாண்டவர்கள் நெருப்பில் அகப்பட்டது துரியோதனனின் சூழ்ச்சியே என்று உலகம் நினைப்பதைச் சொல்லி துரியோதனனை பீஷ்மர் எச்சரிப்பது; பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி பீஷ்மர் அறிவுறுத்தியது...
வைசம்பாயனர் சொன்னார், "தனது கருத்தைச் சொல்லுமாறு திருதராஷ்டிரன் கேட்டதால், பீஷ்மர், "ஓ திருதராஷ்டிரா, பாண்டவர்களுடன் சச்சரவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீ எனக்கு எப்படியோ, பாண்டுவும் எனக்கு அப்படியே என்பதில் ஐயமில்லை.(1) காந்தாரியின் மகன்களும் எனக்குக் குந்தியின் மகன்களைப் போலத்தான். ஓ திருதராஷ்டிரா, உனது மகன்களை நான் காப்பது போல, அவர்களையும் நான் காக்க வேண்டும்.(2) மேலும், ஓ மன்னா, துரியோதனனுக்கும் மற்ற குரு குலத்தவருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்} எவ்வளவு நெருக்கமோ, எனக்கும் அவ்வளவு நெருக்கமாகவே இருக்கிறார்கள்.(3) இத்தகையச் சூழ்நிலையில், அவர்களுடன் சச்சரவு என்பதை நான் {பீஷ்மன்} சற்றும் விரும்ப மாட்டேன். அந்த வீரர்களுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} பாதி நாட்டைக் கொடுப்பாயாக. இந்நாடு அந்தக் குரு குலத்தின் முதன்மையானவர்களுக்கும் தந்தையின் வழி வந்த நாடுதான் என்பதில் ஐயமில்லை.(4) மேலும், ஓ துரியோதனா, இந்த நாட்டை உனது தந்தையின் சொத்தாகப் பார்க்கும் நீ, பாண்டவர்களும் இந்த நாட்டை அவர்களது தந்தையின் சொத்தாக நோக்குகிறார்கள் என்பதை உணர வேண்டும்.(5)
பாண்டுவின் புகழ்பெற்ற மகன்கள் நாட்டை அடையவில்லை என்றால், அஃது எப்படி உனதாகும்? அல்லது அஃது எப்படி மற்ற பாரதக் குலத் தோன்றல்களுக்கு உரியதாகும்?(6) சட்டப்படி நீ மட்டுமே இதற்கு உரியவன் என நீ கருதினால், உனக்கு முன்னால் அவர்கள் நாட்டை அடைவதுதான் சட்டப்படியானது என அவர்கள் கருதுவார்கள், என்று நான் நினைக்கிறேன்.(7) அமைதியாக அவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுப்பாயாக. இதுவே, ஓ மனிதர்களில் புலியே, எல்லோருக்கும் நன்மையைத் தரும்.(8) நீ வேறுமாதிரியாகச் செயல்பட்டால், அனைவர் மேலும் தீமை வந்து விழும். நீயும் அவமரியாதையால் மறைக்கப்பட்டிருப்பாய்.(9) ஓ துரியோதனா, உனது நல்ல பெயரைக் காப்பாற்ற முயற்சி செய். ஒருவனின் நல்ல பெயர்தான் நிச்சயமாக அவனது பலத்தின் ஊற்றுக்கண்ணாகும். மதிப்பிழந்தவன் வாழ்வது வீண் என்று சொல்லப்படுகிறது.(10)
ஓ கௌரவா {துரியோதனா}, ஒருவனது புகழ் நிலைத்திருக்கும் வரை அவன் இறப்பதில்லை. ஒருவன் தனது புகழ் இருக்கும் வரை வாழ்ந்து, அது மறையும் போதே இறக்கிறான்.(11) ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, குரு குலத்தவருக்குத் தகுந்த {ஏற்ற} நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வாயாக. பெரும்பலம் கொண்ட கரமுடையவனே, உனது மூதாதையர்களின் செயல்களைப் பின்பற்றுவாயாக.(12) பாண்டவர்கள் அழியவில்லை என்பது நமக்குக் கிடைத்த நற்பேறாகும். குந்தி வாழ்வதும் நமக்குக் கிடைத்த நற்பேறாகும். தனது செயலை சாதிக்க முடியாத பாவி புரோசனன் அழிந்தான் என்பதும் நமக்குக் கிடைத்த பெரும் நற்பேறாகும்.(13) குந்திபோஜனின் மகள் {குந்தி} எரிந்து செத்தாள் என்பதை நான் கேட்ட நேரத்திலிருந்து, ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, எந்த உயிரினத்தையும் சந்திக்கும் சக்தி அற்று இருந்தேன்.(14) ஓ மனிதர்களில் புலியே, குந்திக்கு நேர்ந்த விதியை அறிந்த உலகம், உன்னை விடப் புரோசனனைப் பெரிய குற்றவாளியாகக் கருதவில்லை.(15)
ஓ மன்னா, பாண்டுவின் மகன்கள் நெருப்பில் இருந்து தப்பி, மீண்டும் காட்சி அளித்துவிட்டதால், உனது தீய நோக்கங்களை விட்டுவிடுவாயாக.(16) ஓ குரு குலத்தோனே, அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} வாழும் வரை, இடியை ஆயுதமாகக் கொண்டவன் {இந்திரன்} நினைத்தாலும், அவர்களது மூதாதையர் நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பங்கை அவர்களை இழக்கச் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்வாயாக.(17) பாண்டவர்கள் அறம்சார்ந்தவர்கள் {தர்மவான்கள்}, ஒற்றுமையானவர்கள். அவர்களுக்குச் சரிபாதி நாடான அவர்கள் பங்கைக் கொடுக்காமல் இருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.(18) நீ சரியாகச் செயல்பட வேண்டுமெனில், எனக்கு ஏற்புடையதை நீ செய்ய வேண்டுமெனில், அனைவரின் நன்மையை நீ கருதுவதாக இருந்திடில், பாதி நாட்டை அவர்களுக்குக் கொடுப்பாயாக" என்றார் {பீஷ்மர்}.(19)

ஆங்கிலத்தில் | In English |