The counsel of Drona! | Adi Parva - Section 206A | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுக்குமாறு துரோணர் சொன்னது; பீஷ்மரும், துரோணரும் கௌரவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் என்று கர்ணன் சாடியது;
வைசம்பாயனர் சொன்னார், "பீஷ்மர் முடித்ததும் துரோணர் பேசினார், "ஓ திருதராஷ்டிர மன்னா, ஆலோசனைக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் எப்போதும் சரியானதை, உண்மையானதை, புகழைக் கொடுப்பதையே சொல்ல வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(1) ஓ ஐயா, இக்காரியத்தில் சிறப்பு மிகுந்த பீஷ்மர் சொன்னதைப் போலவே நானும் கருதுகிறேன். இந்த நாட்டின் ஒரு பங்கு பாண்டவர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அதுவே அழிவில்லாத அறமாகும்.(2) ஓ பாரதா {திருதராஷ்டிரா}, காலந்தாழ்த்தாமல், அனைவரும் ஏற்கும் பேச்சுக் கொண்ட ஒரு தூதுவனைத் துருபதனிடம் அனுப்புவாயாக. அவனிடம் பாண்டவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்தனுப்புவாயாக.(3) மணமகனுக்கும், மணமகளுக்குமான விலையுயர்ந்த பரிசுகளைத் துருபதனிடம் அந்தத் தூதன் கொண்டு செல்லட்டும். அவன் அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்} உனது சக்தியின் பெருக்கத்தைச் சொல்லிப் புதிய கூட்டணி ஏற்பட வழிவகுக்கட்டும்.(4) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, நடந்தது அத்தனையும் அறிந்த நீயும், துரியோதனனும் இது விஷயத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டதாக அந்த மனிதன் {தூதுவன்} அறியட்டும்.(5)
அவன் துருபதனிடமும், திருஷ்டத்யும்னனிடமும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லட்டும். அவனுடன் {துருபதனுடன்} கூட்டணி அமைப்பதை நீ பெரிதும் விரும்புவதாகவும், அதற்கு நீ தகுதியுடையவன் என்பதையும் தெரியப்படுத்தச் சொல்வாயாக. அந்த மனிதன் {தூதுவன்} குந்தியின் மகன்களையும், மாத்ரியின் மகன்களையும் தொடர்ந்து வாழ்த்தட்டும்.(6) உனது உத்தரவின் பேரில், ஓ மன்னா, பசும்பொன்னால் ஆன ஆபரணங்கள் திரௌபதிக்குக் கொடுக்கப்படட்டும்.(7) ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரனே}, துருபதனின் மகன்களுக்கும் உகந்த பரிசுகளைக் கொடுத்து அனுப்புவாயாக.(8) பிறகு அந்தத் தூதுவன் பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பச் சொல்லி அழைக்கட்டும்.(9) அந்த வீரர்கள் இங்கு வர {துருபதனால்} அனுமதிக்கப்பட்டதும், துச்சாசனனும், விகர்ணனும் அழகான தேர்களுடன் அவர்களை எதிர்கொண்டு அழைத்து வரட்டும்.(10) அவர்கள் ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் உன்னால் அன்புடன் வரவேற்கப்பட வேண்டும். அதன்பிறகு மக்களின் விருப்பப்படி அவர்களது தந்தைவழி வந்த அரியணையில் அவர்கள் அமரட்டும்.(11) ஓ பாரதக் குலத்தில் வந்த ஏகாதிபதியே, இதுதான் பாண்டவர்களிடம் நீ நடந்து கொள்ள வேண்டிய முறை. அவர்கள் உனது சொந்த மகன்களைப் போன்றவர்கள் ஆவர்" என்றார் {துரோணர்}.(12)

ஆங்கிலத்தில் | In English |