Vidura asked Drupada for permission! | Adi Parva - Section 208 | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : விதுரன், துருபதனிடம் சென்று, பல பரிசுப் பொருட்களையும், நலம் விசாரிப்புகளையும் செய்து, பாண்டவர்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்ல அனுமதி கேட்பது...
வைசம்பாயனர் சொன்னார், "இந்தப் பல்வேறு பேச்சுகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "சந்தனுவின் மகனும் கல்விமானுமான பீஷ்மரும், சிறப்பு மிகுந்த முனிவர் துரோணரும், நீயும் (ஓ விதுரா) உண்மையையும், எனக்கு எது நன்மையைத் தருமோ அதையுமே சொல்லியிருக்கிறீர்கள்.(1) நிச்சயமாக, அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் வீர மகன்கள், பாண்டுவின் மகன்களே. எனவே, விதிப்படி அவர்கள் எனது மகன்களே என்பதில் ஐயமில்லை.(2) எனது மகன்களுக்கு எப்படி இந்த நாட்டின் மீது உரிமை இருக்கிறதோ, அதே போல, பாண்டுவின் மகன்களுக்கும் நிச்சயமாக உரிமை உண்டு.(3) எனவே, முறையான அன்புமிக்க வழியில் விரைவாகப் பாண்டவர்களை அவர்களின் தாயுடன் {குந்தியுடன்} இங்கு அழைத்து வருவாயாக. ஓ பாரதக் குலத்தோனே {விதுரனே}, கூடவே தெய்வீக அழகுடைய கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அழைத்து வருவாயாக.(4) நற்பேறால் மட்டுமே பிருதையின் {குந்தியின்} மகன்கள் உயிருடன் இருக்கிறார்கள்; நற்பேறால் மட்டுமே பிருதையும் உயிரோடிருக்கிறாள். நற்பேறால் மட்டுமே அந்தப் பெரும் தேர் வீரர்கள் துருபதனின் மகளை {திரௌபதியை} அடைந்தார்கள்.(5) நற்பேறால் மட்டுமே நமது பலம் அதிகரித்திருக்கிறது; நற்பேறால் மட்டுமே புரோசனன் அழிந்தான். ஓ பெரும் பிரகாசமுள்ளவனே, நற்பேறால் மட்டுமே எனது பெரும் துயர் நீக்கப்பட்டது" என்றான் {திருதராஷ்டிரன்}".(6)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "விதுரன், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனுடைய கட்டளையின் பேரில், யக்ஞசேனனிடமும் {துருபதனிடமும்}, பாண்டவர்களிடமும் சென்றான்.(7) அவனுடன் கணக்கிலடங்கா நகைகளையும், பல தரப்பட்ட செல்வங்களையும், திரௌபதிக்காகவும், பாண்டவர்களுக்காகவும், யக்ஞசேனனுக்காகவும் கூட எடுத்துச் சென்றான்.(8) அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவனும், அனைத்து அறிவியல்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவனுமான விதுரன், துருபதனின் வசிப்பிடத்திற்கு வந்து, அந்த ஏகாதிபதியைச் சரியான முறையில் அழைத்து, அவனுக்காகக் காத்திருந்தான்.(9) துருபதன் விதுரனைச் சரியான முறையில் வரவேற்று அழைத்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.(10)
விதுரன் அங்கே பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} கண்டான். அவன் அவர்களைக் கண்டதுமே அன்புடன் அவர்களை அணைத்துக் கொண்டு அவர்களின் நலம் விசாரித்தான்.(11) வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள் அளவிடமுடியா புத்திக்கூர்மைகொண்ட விதுரனைத் தகுந்த முறையில் வழிபட்டனர். ஆனால் விதுரன், ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் பெயரால் அவர்களது நலனைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பாசத்துடன் விசாரித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அவன், பாண்டவர்களுக்கும், குந்திக்கும், திரௌபதிக்கும், துருபதனுக்கும், துருபதனின் மகன்களுக்கும், கௌரவர்களால் அவன் {விதுரன்} வழியாகக் கொடுத்தனுப்பப்பட்ட ரத்தினங்களையும், பல்வேறு வகைகளிலான செல்வங்களையும் கொடுத்தான்.(12-14) அளவற்ற புத்திக்கூர்மை கொண்ட அடக்கமுடைய விதுரன், பாண்டவர்கள் மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் துருபதனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(15)
அவன் {விதுரன்}, "ஓ ஏகாதிபதி {துருபதரே}, உமது அமைச்சர்களுடனும் மகன்களுடனும் சேர்ந்து, நான் சொல்லப்போவதைக் கேட்பீராக. மன்னன் திருதராஷ்டிரன், தனது அமைச்சர்கள், மகன்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், ஓ மன்னா {துருபதா}, திரும்பத் திரும்ப உமது நலனைப் பற்றி விசாரித்தார். ஓ ஏகாதிபதி {துருபதா}, உம்முடன் ஏற்பட்ட சம்பந்தம் குறித்து அவர் {திருதராஷ்டிரர்} பெரும் மனநிறைவுகொண்டுள்ளார்.(16,17) ஓ மன்னா {துருபதரே}, அதே போல, சந்தனுவின் மகனான பெரும் ஞானம் கொண்ட பீஷ்மரும், குரு குலத்தவர் அனைவருடன் சேர்ந்து அனைத்து விதத்திலும் உமது நலனைக் குறித்து விசாரித்தார்.(18) பரத்வாஜரின் மகனும், பெரும் ஞானம் கொண்டவரும், உமது நண்பருமான துரோணர் உளப்பூர்வமாக உம்மைக் கட்டி அணைத்து, உமது மகிழ்ச்சி குறித்து விசாரித்தார்.(19) ஓ பாஞ்சாலர்களின் மன்னா {துருபதரே}, திருதராஷ்டிரனும், அனைத்துக் குரு குலத்தவரும் சேர்ந்து, உமது சம்பந்தம் கிடைத்ததால், பெரும் அருள் கிடைத்ததாகக் கருதுகிறார்கள்.(20)
ஓ யக்ஞசேனரே {துருபரே), நீர் நிறுவிய இந்தக் கூட்டணியால், ஒரு புதிய நாடு கிடைத்ததைப் போல அவர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.(21) ஓ ஏகாதிபதி {துருபதரே}, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, பாண்டவர்களை அவர்களது மூதாதையர் நாட்டுக்கு {குருஜாங்கலத்திற்கு} மீண்டும் செல்ல அனுமதி அளிப்பீராக. பாண்டு மகன்களைக் காண குருக்கள் பேராவல் கொண்டிருக்கின்றனர்.(22) இந்த மனிதர்களில் காளைகளை (அவர்களது நாட்டில் {ஹஸ்தினாபுரத்தில்}) நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர்களும், பிருதையும் கூட தங்கள் நகரத்தைக் காண மிகுந்த ஆவலுடனேயே இருக்கக்கூடும்.(23) குரு மகளிர் அனைவரும், எங்கள் குடிமக்கள் அனைவரும், பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையைக் காண பேராவலுடன் காத்திருக்கிறார்கள்.(24) எனவே, ஓ ஏகாதிபதி {துருபரே}, காலந்தாழ்த்தாமல், பாண்டவர்கள் தங்கள் மனைவியுடன் {திரௌபதியுடன்} அங்கே செல்ல நீர் அனுமதிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.(25) ஓ மன்னா, சிறப்புமிகுந்த பாண்டவர்களுக்கு அங்கே செல்வதற்கு உமது அனுமதி கிடைத்ததும், நான் திருதராஷ்டிரருக்கு விரைவான தூதர்கள் மூலம் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன். ஓ மன்னா {துருபதரே}, பாண்டவர்கள், குந்தியுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடன்} புறப்படட்டும்" என்றான் {விதுரன்}”[1].(26)

[1] மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் விதுராகமனபர்வம் என்ற இந்த உபபர்வம் இத்துடன் நிறைவடைந்து, அடுத்த பகுதியிலிருந்து அடுத்த உபபர்வமான ராஜ்லாப பர்வம் தொடங்குகிறது. ஆனால் கும்பகோணம் பதிப்பிலும், கங்குலியின் பதிப்பிலும் அடுத்த பகுதியிலேயே நிறைவடைகிறது. கும்பகோணம் பதிப்பிலும் அடுத்த பகுதியின் பதியிலே ஒரு அத்தியாம் நிறைவு பெற்று, உடனே ராஜ்யலாப பர்வம் தொடங்குகிறது. உபபர்வ பிரிப்பில் மேற்கண்ட பதிப்புகளே முறையாக இருந்தாலும்,, நாம் கங்குலியைப் பின்பற்றுவதால் இந்த உப பர்வம் அடுத்த பகுதியிலேயே நிறைவடையும்.
ஆங்கிலத்தில் | In English |