Wine and women - Draupadi and Subhadra! | Adi Parva - Section 224 | Mahabharata In Tamil
(காண்டவ தாஹ பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : இந்திரப்பிரஸ்தத்தை யுதிஷ்டிரன் முறையாக ஆண்டது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனிடம் விடைபெற்று, கேளிக்கைக்காக கானகத்திற்குச் சென்றது; அங்கே மங்கையரிடம் இன்பமாக இருந்தது; மதுவின் மயக்கத்தில் இருந்த திரௌபதியும் சுபத்திரையும், போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு ஆடைகளையும் ஆபரணங்களையும் பரிசாகத் தந்தது; அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு இடத்திற்கு அர்ஜுனனும் கிருஷ்ணனும் சென்றது; அங்கே ஒரு பிராமணனைக் கண்டது...
வைசம்பாயனர் சொன்னார், "திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் உத்தரவின் பேரில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்ட பிறகு, மற்ற மன்னர்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.(1) நற்குறிகளும், மேன்மையான சாதனைகளையும் செய்யும் உடலுக்குள் இருக்கும் ஆன்மா மகிழ்ச்சியாக வாழ்வது போல அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும், நீதிமானான யுதிஷ்டிரனின் ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், அறம், இன்பம், பொருள் ஆகியவற்றுக்குத் தகுந்த அளவுகளில் ஏதோ அவை அனைத்தும் தனக்கு விருப்பமானவை போல மரியாதை செய்தான்.(3) அறம், இன்பம், பொருள் ஆகிய மூன்று நிலைகளுடன், நான்காவது நிலையாகத் தானும் இருந்து பிரகாசித்தான்.(4) யுதிஷ்டிரனைத் தங்கள் மன்னனாகக் கொண்ட குடிமக்கள், தங்கள் மன்னனிடம், வேதங்களைக் கற்பதில் ஆர்வம் கொண்ட ஏகாதிபதியையும், பெரும் வேள்விகள் செய்பவனையும், நன்மக்களைக் காப்பாற்றுபவனையும் கண்டனர்.(5)
யுதிஷ்டிரனின் செல்வாக்கால், பூமியின் அனைத்து ஏகாதிபதிகளின் நற்பேறும் அவனிடம் நிலைத்ததால், மக்களின் இதயம் பரமாத்மாவுடன் தியானத்தில் நிலைத்திருந்தது. எனவே, சுற்றி சுற்றி எங்கிலும் அறம் வளரத் தொடங்கியது.(6) தனது தம்பிகளின் துணையுடனும் அவர்களுக்கு மத்தியிலும், மன்னன் {யுதிஷ்டிரன்}, நான்கு வேதங்களால் தாங்கப்பட்ட வேள்வி போலப் பிரகாசித்தான்.(7) பிருஹஸ்பதியைப் போன்று இருந்த கற்ற பிராமணர்கள், படைப்புத் தலைவனுக்காகக் {பிரம்மனுக்காக} காத்திருக்கும் தேவர்களைப் போலத் தனஞ்சயனின் {அர்ஜுனன்} தலைமையில் அந்த ஏகாதிபதிக்காக {யுதிஷ்டிரனுக்காக}, காத்திருந்தனர்.(8) களங்கமற்ற முழு நிலவைப் போல இருந்த யுதிஷ்டிரனைக் கண்டு அன்பின் மிகுதியால் அனைத்து மக்களின் கண்களும் இதயங்களும் சமமானப் பெரு மகிழ்வு கொண்டன.(9) அவன் தங்கள் மன்னன் என்பதற்காக மட்டுமல்லாமல் அவனிடம் கொண்ட பெரும் அன்பினாலும் மக்கள் அவனிடம் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த மன்னனும் {யுதிஷ்டிரன்} எப்போதும் தனது குடிகளுக்கு ஏற்புடையதையே செய்தான்.(10)
இன்சொல்லும் பெரும் புத்திசாலித்தனமும் கொண்ட யுதிஷ்டிரன், முறையற்றதையோ, உண்மையற்றதையோ, தாங்கமுடியாததையோ, ஏற்கத்தகாததையோ ஒரு போதும் செய்வில்லை.(11) பெரும் சக்தியுடன் கூடிய அந்தப் பாரதக் குலத்தின் ஏகாதிபதிகளில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, மற்றவர்களின் நலனைத் தனது நலன் போலக் கருதி மகிழ்ச்சியுடன் தனது நாட்களைக் கடத்தினான்.(12) அவனது {யுதிஷ்டிரனது} தம்பிகளும் தங்களது சக்தியால் மற்ற மன்னர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து, அமைதியைக் கெடுக்க எந்த எதிரியும் இல்லாது இருந்தார்கள்.(13)
சில நாள் கழித்து, கிருஷ்ணனிடம் பேசிய பீபத்சு {அர்ஜுனன்}, "கோடை நாட்கள் வந்துவிட்டன. எனவே, ஓ கிருஷ்ணா, நாம் யமுனைக் கரைக்கு செல்வோம்.(14) ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நண்பர்களுடன் அங்கு விளையாடிவிட்டு, மாலையில் இங்குத் திரும்பி வருவோம்" என்றான்.(15)
அதன் பேரில் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, அதுதான் எனது விருப்பமும்கூட. ஓ பார்த்தா, நண்பர்கள் சூழ மனத்திற்கு நிறைவாக நாம் நீர்விளையாடித் திரும்புவோம்" என்றான் {கிருஷ்ணன்}".(16)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்த பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்}, யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, நண்பர்களுடன் சேர்ந்து {யமுனையை நோக்கிப்} புறப்பட்டுச் சென்றனர்.(17) {யமுனையின் கரையில்} உயர்ந்த மரங்களுடன் கூடிய ஓர் அற்புதமான இடத்தை அடைந்தனர். பல உயர்ந்த மாளிகைகளுடன் கூடிய அந்த இடம் தேவர்களின் நகரைப் போல விளங்கியது.(18) அந்த இடத்தில் கிருஷ்ணனும் பார்த்தனும் {அர்ஜுனனும்}, எண்ணற்ற விலை உயர்ந்த உணவு வகைகளையும், மது வகைகளையும், மற்றும் இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும், மலர்வளையங்களையும், நறுமணப் பொருட்களையும் குவித்தனர். தூயக் கதிர்கள் கொண்ட ரத்தினங்களால் அந்தப்புரங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த அறைகளுக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் இன்பமாக விளையாடினர்.(19,20)
அந்த விருந்தில் கலந்து கொண்ட பெண்கள் பருத்து, உருண்டிருந்த இடைகளுடனும், பருத்த கனமான முலைகளுடனும், அழகான கண்களுடனும், மதுவுண்டதால் தடுமாற்றம் கொண்ட தளர்ந்த நடையுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.(21) சில பெண்கள் தங்கள் விருப்பப்படிக் கானகத்திலும், சிலர் நீரிலும், சிலர் அறைகளிலும் பார்த்தன் {அர்ஜுனன்}, கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகியோர் வழிகாட்டுதல் மற்றும் ஆணையின்படி விளையாடிக் கொண்டிருந்தனர்.(22) மதுவின் மிகையான மயக்கத்தில் இருந்த திரௌபதியும், சுபத்திரையும் அங்கே விளையாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும், ஆபரணங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.(23) அப்படி வாங்கிய மங்கையரில் சிலர் ஆனந்தக் கூத்தாடினர், சிலர் பாட ஆரம்பித்தனர், சிலர் சிரித்துக் கொண்டு கேலி பேசத் தொடங்கினர். சிலர் இன்னும் அருமையான மதுவகைகளைக் குடிக்கத் தொடங்கினர்.(24) சிலர் ஒருவர் முன்னேற்றத்தை ஒருவர் தடுத்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் தொடங்கினர். சிலர் ஒருவரோடு ஒருவர் கமுக்கம் பேசினர்.(25)
அந்த மாளிகைகளும், கானகமும், புல்லாங்குழலின் இசையாலும், வீணை மற்றும் மிருதங்கங்களின் இசையாலும் நிறைந்து வளமையாகக் காட்சியளித்தன.(26) இப்படிப்பட்ட சூழ்நிலையில் அர்ஜுனனும் வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அனைவரும் இருக்கும் அந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர்.(27) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, எதிரி நகரங்களை அடக்குபவனான அர்ஜுனனும் அந்த உயர் ஆன்மக் கிருஷ்ணனும் இரு விலை உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.(28) அப்படி அமர்ந்த வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மகிழ்ச்சியுடன் கடந்த காலச் சாதனைகளைக் குறித்தும் தங்கள் வீரத்தைக் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தனர்.(29)
அப்படி மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வாசுதேவனையும், தனஞ்சயனையும் நோக்கி வானுலகில் இருந்து வந்த அசுவினிகளைப் போல ஒரு குறிப்பிட்ட பிராமணன் வந்தான். அப்படி வந்த பிராமணன் ஆச்சா மரத்தைப் போல உயரமாக வளர்ந்தவனாக இருந்தான். அவனது நிறம் உருக்கிய தங்கத்தைப் போல இருந்தது. அவனுடைய தாடி வெளிர் மஞ்சள் நிறத்துடன் முனைகளில் பச்சை நிறத்துடன் இருந்தது. அவன் தனது உயரத்திற்கேற்ற அகலம் கொண்ட உடலைப் பெற்றிருந்தான்.(31) சடா முடியும், மரவுரியும் தரித்துக் காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிவந்த நிறத்தையும் கொண்டிருந்த அவன் காண்பதற்கு எரியும் நெருப்பைப் போலத் தோன்றினான்.(32) பிரகாசத்துடன் இருக்கும் அந்த பிராமணர்களில் முதன்மையானவனைக் கண்ட அர்ஜுனனும் வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து, அவனை அணுகி, அவனது உத்தரவுக்காகக் காத்திருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(33)

ஆங்கிலத்தில் | In English |