Agni suffering from surfeit! | Adi Parva - Section 225 | Mahabharata In Tamil
(காண்டவ தாஹ பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : ஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…
வைசம்பாயனர் சொன்னார், "அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, "இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர்.(1) அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.(2)
இப்படி அந்த பிராமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} அவனிடம், "எந்த வகையான உணவு உம்மை மனநிறைவுகொள்ளச் செய்யும் என்று சொன்னால் நாங்கள் அஃதை உமக்குக் கொடுக்க முயல்வோம்" என்றனர்.(3)
இவ்வாறு பதில் உரைக்கப்பட்ட அந்தச் சிறப்பு மிகுந்த பிராமணன், ’எந்த வகையான உணவு உமக்குத் தேவை’ என்று அந்த வீரர்கள் கேட்டதால், அவர்களிடம்,(4) "நான் சாதாரண உணவை உண்ண விரும்புவதில்லை. நான் அக்னி என்பதை அறிவீராக! உகந்த உணவை எனக்குக் கொடுப்பீராக.(5) இந்தக் காண்டவக் காடு {காண்டவவனம்} இந்திரனால் எப்போதும் காக்கப்படுகிறது. இஃது அந்தச் சிறப்பு வாய்ந்தவனால் காக்கப்படுவதால், நான் இஃதை எப்போதும் உண்ணத் தவறுகிறேன்.(6) இந்தக் கானகத்தில் இந்திரனின் நண்பனும், நாகனுமான தக்ஷகன் தன்னைத் தொடர்பவர்களுடனும், தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறான்.(7) அவனுக்காகவே {தஷகனுக்காகவே} அந்த வஜ்ரதாரி {இந்திரன்} இந்தக் கானகத்தைக் காக்கிறான். பல உயிரினங்களும் தக்ஷகனின் பொருட்டு இங்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் கானகத்தை உண்ண நினைத்தாலும், இந்திரனின் ஆற்றலின் காரணமாக எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை.(8) நான் நெருப்புச் சுடர்களை வீசியதும் அவன் மேகத்திலிருந்து நீரைப் பொழிகிறான். எனவே, நான் காண்டவ வனத்தை உட்கொள்வதைப் பெரிதும் விரும்பினாலும் அதில் வெற்றியடைய முடியவில்லை.(9) இப்போது நான் ஆயுதத்திறன்மிக்க உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் நிச்சயம் இந்த வனத்தை உட்கொள்வேன் {எரித்துவிடுவேன்}. இதுவே நான் விரும்பும் உணவாகும்.(10) சிறந்த ஆயுதங்களில் திறன்மிக்க நீங்கள், மழைத் துளிகள் கீழே பொழியப்படுவதையும், உயிரினங்கள் தப்புவதையும் தடுத்தால், நான் இந்த வனத்தை உட்கொள்ள {எரிக்கத்} தொடங்குவேன்" என்றான் {அக்னி}".(11)
ஜனமேஜயன், "தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} காக்கப்பட்டுப் பல உயிரினங்களுடன் இருந்த அந்தக் காண்டவ வனத்தை உட்கொள்ள அந்தச் சிறப்பு மிகுந்த அக்னி ஏன் விரும்பினான்?(12) அக்னி கோபத்துடன் காண்டவ வனத்தை உட்கொள்ளப் பெரிய காரணம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, இதை விவரமாக அறிய நான் விரும்புகிறேன். ஓ முனிவரே {வைசம்பாயனரே}, பழங்காலத்தில் காண்டவ வனம் எப்படி எரிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்லும்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(13,14)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் புராணங்களில் சொல்லியபடிக் காண்டவனத்தில் மூண்ட பெருந்தீயைப் பற்றிச் சொல்கிறேன்.(15) ஓ மன்னா {ஜனமேஜயா}, புராணங்களில் பலமும் ஆற்றலும் பொருந்தியவனும், இந்திரனுக்கு நிகரானவனும், ஸ்வேதகி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(16) வேள்விகளிலும், தானங்களிலும், புத்திசாலித்தனத்திலும் அவனுக்கு நிகராக யாரும் உலகத்தில் இல்லை. ஸ்வேதகி ஐந்து பெரும் வேள்விகளையும் மற்ற பல வேள்விகளையும் செய்து, பிராமணர்களுக்குப் பரிசுகள் பலவும் கொடுத்தான்.(17) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இதயம் எப்போதும் வேள்விகளிலும், அறச் சடங்குகளிலும், பரிசு பொருட்களைக் கொடுப்பதிலுமே நிலைத்திருந்தது.(18) பெரும் நுண்ணறிவைக் கொண்ட ஸ்வேதகி, பல வருடங்கள் நீடிக்கும் வேள்விகளைச் செய்தான். தனக்கு வேள்வி செய்ய உதவி செய்த ரித்விக்குகள், தொடர்ந்து புகைபட்டுக் கண்கள் பாதிப்படைந்து, பலவீனமாகி தன்னைவிட்டுப் போகும்வரை அம்மன்னன் தொடர்ந்து வேள்விகளைச் செய்து வந்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் தங்களால் வேள்விகளில் உதவ முடியாது என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும், அம்மன்னன் {ஸ்வேதகி}, தொடர்ந்து அந்த ரித்விக்குகளைத் தன்னிடம் வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், கண்கள் வலி கொண்ட அவர்கள் {ரித்விக்குகள்} அவனது வேள்விக்கு வரவில்லை.(19,20)
எனவே, அந்த மன்னன் {ஸ்வேதகி}, தன் ரித்விக்குகளின் சிபாரிசில் அந்த ரித்விக்குகளைப் போன்றே உள்ள மற்ற ரித்விக்குகளைக் கொண்டு தான் தொடங்கிய அவ்வேள்வியை முடித்தான்.(21) சில நாட்கள் கடந்தது, மன்னன் ஸ்வேதகி நூறுவருடங்கள் செய்வதற்கான மற்றொரு வேள்வியைத் திட்டமிட்டான்.(22) ஆனால் அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதிக்கு ஒரு ரித்விக்கும் கிடைக்கவில்லை. அந்தக் கொண்டாடப்பட்ட மன்னன் {ஸ்வேதகி}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து, சோம்பலை விடுத்துத் தனது புரோகிதர்களை, சமாதானப் பேச்சுகள் மூலமும், பரிசுகள் மூலமும், வணங்கியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான்.(23,24)
ஆனால், அளவில்லாச் சக்தி கொண்ட அம்மன்னனின் {ஸ்வேதகியின்} நோக்கத்தைச் சாதிக்க அனைவரும் மறுத்து விட்டனர். கோபம் அடைந்த அந்த அரசமுனி {ஸ்வேதகி}, ஆசிரமங்களில் அமர்ந்திருந்த பிராமணர்களிடம்,(25) "பிராமணர்களே நான் வீழ்ந்த மனிதனாக இருந்தாலோ, உங்களுக்குத் தரும் மரியாதையையோ சேவையையோ குறைத்து வழங்குபவனாக இருந்தாலோ உங்களாலோ அல்லது மற்ற பிராமணர்களாலோ இப்படிக் கைவிடப்பட்ட கதியை அடையத் தகுதி வாய்ந்தவனாவேன்.(26) ஆனால் நான் உங்களை அவமதிக்கவும் இல்லை, தரம் தாழ்த்தவும் இல்லை. எனவே, பிராமணர்களில் முதன்மையானவர்களே, தகுந்த காரணமில்லாமல் நீங்கள் என்னைக் கைவிட்டு எனது வேள்விக்குத் தடை செய்யக் கூடாது. பிராமணர்களே, நான் உங்கள் பாதுகாப்பைக் கோருகிறேன்! நீங்கள் எனக்கு நன்மை செய்ய வேண்டுகிறேன். ஆனால் பிராமணர்களில் முதன்மையானவர்களே, பகையால் மட்டுமே அல்லது சரியற்ற நோக்கத்தால் மட்டுமே நீங்கள் என்னைக் கைவிடுவதாக இருந்தால், எனது வேள்விக்குத் துணைபுரிய மற்ற புரோகிதர்களை நாடி, அவர்களிடம் சமாதானமாகவும் இனிமையாகவும் பேசி அவர்களுக்குப் பரிசு கொடுத்து இந்த வேலையை அவர்கள் கையில் கொடுப்பேன்" என்று சொல்லி அந்த ஏகாதிபதி அமைதியடைந்தான்.(27-30)
ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, பிறகு, தங்களால் மன்னனின் வேள்விக்குத் துணை புரிய முடியாது என்பதை அறிந்த அந்தப் புரோகிதர்கள், தாங்கள் கோபம் கொண்டதாக நடித்து, அந்த மன்னனிடம் {ஸ்வேதகியிடம்},(31) "ஓ மன்னர்களில் சிறந்தவனே, உனது வேள்விகள் இடைவிடாது தொடர்ச்சியாக நடக்கின்றன. உனக்குத் தொடர்ந்து துணை புரிந்து வருவதால், நாங்கள் களைப்படைந்திருக்கிறோம்.(32) உழைப்பால் எங்களுக்கு நேர்ந்த களைப்பால், நீ எங்களுக்கு விடுப்பு அளிப்பதே தகும். ஓ பாவமற்றவனே, நீதியை இழந்ததால், உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை (தொடர்ந்து எங்களைத் துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறாய்).(33) நீ ருத்ரனிடம் {சிவனிடம்} செல்! அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான்!" என்றனர். கோபத்தால் வந்த அந்தக் கண்டிக்கும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஸ்வேதகி மிகுந்த கோபம் கொண்டான்.(34) அந்த ஏகாதிபதி கைலாச மலைக்குச் சென்று, துறவுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதி நிலைத்த கவனத்துடன் மகாதேவனை {சிவனை} வழிபடத் தொடங்கினான்.(35)
அவன் மிகுந்த கடுமையான தவத்தில் ஈடுபட்டான். உணவு உட்கொள்வதைத் தவிர்த்துப் பல காலங்களைக் கடத்தினான். அந்த ஏகாதிபதி {ஸ்வேதகி}, நாள் முழுவதும், சில வேளைகளில் பனிரெண்டாவது மணி நேரத்திலும், சில வேளைகளில் பதினாறாவது மணி நேரத்திலும் பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்டான். மன்னன் ஸ்வேதகி தொடர்ந்து ஒரு காலை உயர்த்தியபடி ஆறுமாதங்களுக்கு நிலைத்த கண்களுடனும், நிலைத்த கவனத்துடனும் ஒரு தூண் தரையில் ஊன்றப்பட்டது போலவும், ஒரு நெடும் மரம் நிற்பது போலவும் நின்றான்.(36-38) ஓ பாரதா {ஜனமேஜயா}, இறுதியாக சங்கரன் {சிவன்} கடும் தவம் இருந்த அந்த மனிதர்களில் புலியானவனிடம் மனநிறைவை அடைந்து, அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அந்தத் தேவன் {சிவன்} ஏகாதிபதியிடம் {ஸ்வேதகியிடம்} அமைதியானதும் கடுமையானதுமான குரலில், "ஓ மன்னர்களில் புலியே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, உன் தவத்தால் நான் மனநிறைவடைந்தேன்.(39) நீ அருளப்பட்டிரு! ஓ மன்னா, இப்போது நீ விரும்பிய வரத்தைக் கேள்" என்று கேட்டான்.
அளவற்ற சக்தி கொண்ட ருத்திரனின் {சிவனின்} வார்த்தைகளைக் கேட்ட அரச முனி,(40) அந்தத் தேவனைப் பணிந்து அவனிடம் {சிவனிடம்}, "ஓ சிறப்பு மிகுந்தவனே, மூன்று உலகத்தாலும் வழிபடப்படுபவனே, நீ என்னிடம் மனநிறைவடைந்தாய் என்றால், ஓ தேவர்களுக்குத் தேவா, ஓ தேவர்களுக்குத் தலைவா, எனது வேள்விகளில் நீ எனக்குத் துணை புரிவாயாக" என்று கேட்டான்.(41,42) ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் {சிவன்} பெரும் மனநிறைவு கொண்டு, புன்னகைத்து, "{தேவர்களாகிய} நாங்கள் வேள்விகளுக்குத் துணை புரிவதில்லை;(43) ஆனால், ஓ மன்னா, கடுந்தவங்களை இயற்றிய நீ வரமாக இதை விரும்புவதால், இச்சூழ்நிலையில், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நான் உனது வேள்விக்குத் துணை புரிகிறேன்" என்றான்.(44) ருத்திரன் மேலும் தொடர்ந்து, "ஓ மன்னர் மன்னா! தொடர்ந்த பனிரெண்டு வருடங்களுக்கு நீ இடைவிடாமல் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு நிலைத்த கவனத்துடன் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால், நீ என்னிடம் கேட்பதை அடைவாய்" என்றான் {சிவன்}.
ருத்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் ஸ்வேதகி,(45,46) அந்தத் திரிசூலம் தாங்கியவன் {சிவன்} வழிகாட்டியபடியே நடந்து கொண்டான். பனிரெண்டு வருடங்கள் கடந்தன, அங்கே மகேஸ்வரன் {சிவன்} மீண்டும் வந்தான்.(47) உலகத்தை உண்டாக்கிய அந்தச் சங்கரன், அந்த அற்புதமான ஏகாதிபதியான ஸ்வேதகியைக் கண்டு பெரும் மனநிறைவு அடைந்து உடனடியாக அவனிடம்,(48) "நான் உனது செயல்களால் மனநிறைவடைந்தேன். ஆனால், ஓ மன்னர்களில் சிறந்தவனே, வேள்விகளில் துணைபுரிவது பிராமணர்களின் கடமையாகும்.(49) எனவே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நானே வந்து உனது வேள்வியில் இன்று துணை புரிய மாட்டேன். இந்தப் பூமியில் எனது சுயத்தின் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ஓர் உயர்ந்த பிராமணன் இருக்கிறான்.(50) அவன் துர்வாசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். பெரும் சக்தி கொண்ட அந்த பிராமணன் {துர்வாசன்} உனது வேள்வியில் உனக்குத் துணையாக இருப்பான். எனவே, வேள்விக்கான தயாரிப்புகள் தொடங்கட்டும்" என்றான் {சிவன்}.(51)
ருத்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தனது தலைநகருக்குத் திரும்பி, தேவையானவற்றைச் சேகரித்தான்.(52) அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, அந்த மன்னன் {ஸ்வேதகி} மறுபடியும் ருத்திரனிடம் சென்று, "அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாகிவிட்டது.(53) உனது கருணையால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. ஓ தேவர்களுக்குத் தேவா, நாளை வேள்வியில் நீ நிறுவப்பட்டிருப்பாயாக" என்றான். அந்தச் சிறப்புவாய்ந்த மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட ருத்திரன்,(54) துர்வாசரை அழைத்து, அவரிடம், "ஓ துர்வாசரே, இந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் ஸ்வேதகி என்று அழைக்கப்படுகிறான்.(55) ஓ பிராமணர்களில் சிறந்தவரே {துர்வாசரே}, எனது கட்டளையின் பேரில், நீர் இந்த மன்னனுக்கு அவனது வேள்வியில் துணை புரியும்" என்று சொன்னார். அதற்குத் துர்வாச முனிவர் ருத்திரனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்.(56)
மன்னன் சுவேதகியின் ஏற்பாடுகள் முடிந்து வேள்வி நடந்தது. அந்தச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதி தகுந்த காலத்தில் விதிப்படி வேள்வியைச் செய்தான். அந்த நேரத்தில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் அதிகமாக இருந்தன.(57) அந்த ஏகாதிபதியின் வேள்வி முடிவுக்கு வந்ததும் துணை புரிய வந்த புரோகிதர்கள் அனைவரும் துர்வாசருடன் சென்று விட்டார்கள். வேள்வியில் இருந்த அளவிடமுடியாத சக்தி கொண்ட மற்ற அனைத்து சத்யஸ்யர்களும் சென்று விட்டார்கள். அந்த உயர்ந்த ஏகாதிபதி! வேதங்களை அறிந்த உயர்ந்த பிராமணர்களாலும் வழிபடப்பட்டுக் குடிமக்களால் பாராட்டப்பட்டு, வாழ்த்துப்பா பாடப்பட்டு, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். இதுதான் ஏகாதிபதிகளில் சிறந்த அரசமுனி ஸ்வேதகியின் வரலாறு. பூமியில் பெரும் புகழ் கொண்ட அவனுக்கு நேரம் வந்ததும் தனக்கு வாழ்க்கையில் உதவிய ரித்விக்குகளுடனும், சத்யஸ்யர்களுடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்".(58,59)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஸ்வேதகியின் அந்த வேள்வியில் அக்னி தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்குச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைக் குடித்திருந்தான். நிச்சயமாக அந்தக் காலத்தில், தூய்மையாக்கப்பட்ட நெய் அக்னியின் வாயில் தொடர்ந்து உற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. அவ்வளவு அதிகமாகக் குடித்த அக்னிக்கு நெய் மிகவும் தெவிட்டி, இனி யார் கையிலும் எந்த வேள்வியிலும் நெய் உண்ணக்கூடாது என்று விரும்பினான். அக்னி தனது நிறத்தையும் பளபளப்பையும் இழந்து மங்கிப் போனான்.(60) அளவுக்கு அதிகமாக {நெய்யை} உண்டு தெவிட்டும் நிலையை அடைந்ததால் அவன் பசியற்ற {ஜீரணிக்காத} நிலையை உணர்ந்தான். அவனுக்கு சக்தி குறைந்து, நோயால் பாதிக்கப்பட்டான். வேள்வி நெய்யைக் குடிப்பவன் {அக்னி}, தனது சக்தி சிறுகச் சிறுக குறைவதைக் கண்டு, அனைவராலும் வழிபடப்படும் பிரம்மனின் புனிதமான வசிப்பிடம் சென்றான்.(61) தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அந்தத் தேவனை {பிரம்மனை} அணுகிய அக்னி அவனிடம் {பிரம்மனிடம்}, "ஓ உயர்ந்தவனே, ஸ்வேதகி {தனது வேள்வியில்} என்னை அளவுக்கதிகமாக மனநிறைவு கொள்ளச் செய்தான். தவிர்க்க முடியாத தெவிட்டும் நிலையால் இன்னும் நான் பாதிப்படைந்திருக்கிறேன். ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மா}, நான் பிரகாசத்தாலும் சக்தியாலும் குறைந்து வருகிறேன்.(62) உமது கருணையால் நான் எனது இயல்பான தன்மையை மறுபடி அடைய விரும்புகிறேன்" என்று கேட்டான். ஹூதவாஹனின் {அக்னியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சிறப்புமிகுந்த படைப்பாளி {பிரம்மன்},(63) அவனிடம் {அக்னியிடம்} புன்னகைத்து, "ஓ உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது.(64,65) ஆனால் ஓ அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையைப் போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய எதிரிகளின் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அஃது இப்போது எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு இல்லமாகி இருக்கிறது.(66,67) அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களை உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்" என்றான் {பிரம்மன்}.(68)
இந்த வார்த்தைகளை உயர்ந்த தேவனின் உதடுகளில் இருந்த அறிந்த அந்த ஹூதசானன் {அக்னி}, பெரும் வேகத்துடன் சென்றான்.(69) விரைவாகவும், பெரும் உற்சாகத்துடனுடம் அந்தக் காண்டவப் பிரஸ்தத்தை அடைந்து, காற்றின் {வாயுவின்} உதவியுடன் அதை முழு வீரியத்துடன் எரிக்கத் தொடங்கினான்.(70) அவன் காண்டவ வனம் பற்றி எரிவதைக் கண்ட அந்தக் கானக வாசிகள், பெரும் முயற்சி எடுத்து அந்தப் பெருந்தீயை அணைக்க முயன்றனர்.(71) நூறாயிரம் {ஒரு லட்சம்} யானைகள், கோபம் கொண்ட வேகத்துடன், தங்கள் துதிக்கைகளில் நீர் கொண்டு வந்து நெருப்பின் மீது இரைத்தன.(72) கோபத்தால் வெறியை அடைந்தவையும், ஆயிரக்கணக்கானவையும், பல தலைகளைக் கொண்டவையுமான நாகங்கள், தங்கள் பல தலைகளிலும் இருந்தும் நீரை இரைத்து அந்த நெருப்பை அணைக்க முயன்றன.(73) ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா} மற்ற கானகவாழ் உயிரினங்கள், பல்வேறு வழிகளிலும், பலவிதமான முயற்சிகளிலும் அந்த நெருப்பை அணைத்தன.(74) இதே போல அக்னி ஏழு முறை அந்தக் காண்டவ வனத்தை எரித்தான். இப்படியே கானகத்தில் சுடர்விட்டெரிந்த அந்த நெருப்பு, அக்கானக வாசிகளால் அணைக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(75)

ஆங்கிலத்தில் | In English |