"Arjuna! Save me," said Maya! | Adi Parva - Section 230 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் பல உயிரினங்களைக் கொன்றது; தேவர்கள் பின்வாங்கியது; இந்திரனுக்கு ஒரு அரூபக் குரல் எச்சரித்தது; மயன் தப்புவதை கிருஷ்ணன் கண்டது; மயனை அர்ஜுனன் காத்தது; அர்ஜுனன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அக்னியும் அவனை விட்டுவைத்தது...
வைசம்பாயனர் சொன்னார், "அந்தக் காண்டவ வன வாசிகளான, தானவர்கள், ராட்சசர்கள், நாகர்கள், ஓநாய்கள், கரடிகள் மற்றும் மற்ற காட்டு விலங்குகள், மதம் கொண்ட யானைகள், புலிகள், பிடரி மயிர் கொண்ட சிங்கங்கள், மான்கள், நூற்றுக்கணக்கான எருமைகள், பறவைகள், பல்வேறு மற்ற உயிரினங்கள் அனைத்தும் விழுந்து கொண்டிருக்கும் கற்களால் பயந்து, மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி திசைகள் அனைத்திலும் தப்பி ஓடத் தொடங்கின.(1,2) அவை (திசையெங்கும் பற்றி எரியும்} கானகத்தையும், ஆயுதத்துடன் ஆயத்தமாக நிற்கும் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்டன. தெளிவாகக் கேட்கும் பயங்கரமான சத்தங்களால் பயம் கொண்ட அந்த உயிரினங்கள் தங்கள் நகரும் சக்தியை இழந்தன.(3) பல இடங்களில் கானகம் பற்றி எரிவதையும், தனது ஆயுதங்களுடன் தங்களைத் தாக்கத் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும் கண்ட அவை, அச்சத்துடன் கதறின.(4) அந்தப் பயங்கர ஆரவாரத்தாலும், நெருப்பின் சீற்றத்தாலும், மொத்தச் சுற்றுப்புறமே எச்சரிக்கும் மேகங்களைப் போலப் பேரொலி நிறைந்ததாக இருந்தது.(5)
கரிய நிறம் கொண்ட, பலம் நிறைந்த கேசவன் {கிருஷ்ணன்} அவற்றை அழிக்க, தீ கக்குவதும், தன் சக்தியாலேயே பிரகாசிப்பதுமான தனது பெரிய சக்கரத்தைச் சுழற்றி வீசினான்.(6) தானவர்களும் ராட்சசர்களும் அடங்கிய அந்தக் கானகவாசிகள், அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டு, நூறு துண்டுகளாக வெட்டப்பட்டு, அக்னியின் வாயில் விழுந்தனர்.(7) கிருஷ்ணனின் சக்கரத்தால் சிதைக்கப்பட்ட அந்த அசுரர்கள், அவர்களது கொழுப்பிலும் ரத்தத்தில் நனைந்து மாலை நேர மேகங்கள் போல இருந்தனர்.(8) ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, காலனே நேராக வந்து அங்கு நடப்பது போல, பிசாசங்களையும், பறவைகளையும், நாகர்களையும் மற்ற விலங்குகளையும் ஆயிரக்கணக்கில் கொன்று நகர்ந்து கொண்டிருந்தான்.(9) எதிரிகளைக் கொல்பவனான கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தொடர்ந்து வீசப்பட்ட அந்தச் சக்கரம், எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொன்று மீண்டும் மீண்டும் அவன் கரங்களுக்கே திரும்பிக் கொண்டிருந்தது.(10)
படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் ஆன்மாவான கிருஷ்ணனின் உருவமும் முகமும், அவன் பிசாசங்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று கொண்டிருக்கும்போது பார்ப்பதற்கு மிகக்கடுமையாக இருந்தது.(11) அங்கே கூடியிருந்த தேவர்களில் யாரும் கிருஷ்ணனையோ அர்ஜுனனையோ வீழ்த்த முடியவில்லை.(12) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தால் எரிந்து கொண்டிருந்த கானகத்தை இனி காக்க முடியாது என்று கண்ட தேவர்கள், காட்சியில் இருந்து மறைந்தார்கள்.(13) பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), தேவர்கள் பின்வாங்கியதைக் கண்டு, மிகுந்த மகிழ்ச்சியடைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பாராட்டினான்.(14)
தேவர்கள் போரிடுவதைக் கைவிட்டதும், வடிவமற்ற ஒலியானது {அசரீரி}, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் {இந்திரனிடம்} ஆழமான பேரொலியுடன்,(15) "உனது நண்பனான பாம்புகளின் தலைவன் தக்ஷகன் கொல்லப்படவில்லை! காண்டவ வனம் எரியூட்டப்படும் முன்பே அவன் குருக்ஷேத்திரத்திற்குச் சென்று விட்டான்.(16) ஓ வாசவா {இந்திரா}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்], அர்ஜுனனும் போர்க்களத்தில் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்பதை எனது வார்த்தைகளால் அறிந்து கொள்வாயாக.(17) அவர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சொர்க்கவாசிகளால் கேள்விப்படப்படும் பழங்கால தேவர்களான நரனும் நாராயணனும் ஆவர்.(18) அவர்களது சக்தியையும், ஆற்றலையும் குறித்து நீ அறிவாய். போர்க்களத்தில் வெல்லப்பட முடியாத இந்தப் பழங்காலத்துச் சிறந்த முனிவர்கள், உலகத்தில் யாராலும் வெல்லப்பட முடியாதவர்களாவர்.(19) அவர்கள் தேவர்களாலும் அசுரர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும், மனிதர்களாலும், கின்னரர்களாலும், நாகர்களாலும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.(20) எனவே, ஓ வாசவா {இந்திரா}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து நீயும் இந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் உனக்குத் தகுந்ததாகும். காண்டவத்தின் அழிவு விதியால் நிர்ணயிக்கப்பட்டது!" என்றது {அந்த அசரீரி}.(21)
இறவாதவர்களின் தலைவன் {இந்திரன்} அந்த வார்த்தைகளை உண்மை என்று ஏற்றுத் தனது கோபத்தையும், பொறாமையையும் கைவிட்டுச் சொர்க்கத்திற்குத் திரும்பினான்.(22) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, சொர்க்கவாசிகள், சிறப்புமிகுந்த இந்திரன் போரைக் கைவிட்டதைக் கண்டு, தங்கள் படைவீரர்கள் அனைவருடன் அவனைப் பின்தொடர்ந்தனர்.(23) பிறகு, வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தேவர்கள் பின்வாங்குவதைக் கண்டு சிங்கமுழக்கம் செய்தனர்.(24) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, இந்திரன் காட்சியை விட்டு அகன்றதும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அந்த வீரர்கள், கானகம் எரிவதற்கு அக்னிக்கு அச்சமற்றுத் துணை புரிந்தார்கள்.(25) காற்று மேகங்களைச் சிதற வைப்பது போல, அர்ஜுனன் தேவர்களைச் சிதற வைத்தான். அந்தக் கானகத்தில் வசித்த எண்ணற்ற உயிர்களைத் தனது கணை மழையால் கொன்றான்.(26)
அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்ட கணக்கற்ற உயிர்களில் ஒன்று கூட, அந்த எரியும் கானகத்திலிருந்து தப்ப முடிய வில்லை.(27) போரிடுவதைத் தவிர்த்து, அங்கிருந்த பலம்வாய்ந்த உயிரினங்கள் அர்ஜுனனின் கணை பொய்த்துப் போவதைக் காண முடியவில்லை.(28) சில நேரங்களில் ஒரு கணையால் நூற்றுக்கணக்கான உயிர்களையும், சில நேரங்களில் ஓர் உயிரை நூற்றுக்கணக்கான கணைகளாலும் துளைத்துக் கொண்டே அர்ஜுனன் தனது தேரில் நகர்ந்தான். உயிரற்ற அந்த விலங்குகள், காலனால் தாக்கப்பட்டவை போலத் தாமாகவே அக்னியின் (நெருப்பு தேவன்) வாயில் விழுந்தன.(29)
ஆற்றங்கரைக்குச் சென்றாலும், சமமற்ற தரைக்குச் சென்றாலும், சுடுகாட்டுக்குச் சென்றாலும், எங்குச் சென்றாலும் அந்த உயிரினங்கள் வெப்பத்தால் பீடிக்கப்பட்டன.(30) பல விலங்குகள் வலியால் கதறின. யானைகளும், மான்களும், ஓநாய்களும் துன்பத்தால் கதறின.(31) அவ்வொலிகளைக் கேட்டு கங்கையிலும் கடலிலும் இருந்த மீன்களும், அந்தக் கானகத்தில் வசித்த வித்யாதரர்கள் என்ற பல்வேறு இனங்களும் பேரச்சத்துக்கு உள்ளாகின.(32) ஓ பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அவர்களுடன் தனியாகச் சண்டைக்கு நின்ற எந்த உயிரினத்தாலேயும் கரிய நிறம் கொண்ட அர்ஜுனனையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} காணக்கூட முடியவில்லை.(33) ஹரி {கிருஷ்ணன்} தன்னை நோக்கி விரைந்து வந்த ராட்சசர்களையும், தானவர்களையும், நாகர்களையும் தனது சக்கரத்தால் {சக்கராயுத்தால்} கொன்றான்.(34) சக்கரத்தின் வேகமான நகர்வால் பெரும் உடல்களில் இருந்த தலைகள் கொய்யப்பட்டு, உயிர் மாய்க்கப்பட்ட அவர்களது உடல்கள் எரியும் நெருப்புக்குள் விழுந்தன.(35)
பெரும் அளவிலான சதை, குருதி, கொழுப்பு ஆகியவற்றால் பெரும் மனநிறைவுக் கொண்ட சுடர்கள், சுருள்புகை இல்லாமல் பெரும் உயரத்திற்கு எழுந்தன.(36) பிரகாசமான தாமிரக் கண்களையுடைய ஹுதாசனன் (அக்னிதேவன்), எரியும் நாவுடனும், பெரிய வாயுடனும், நெருப்புப் போன்ற கூந்தலுடனும் இருந்தான். கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் உதவியால், தேன் ஊற்றைக் குடிப்பது போல விலங்குகளின் கொழுப்பைக் குடித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். நிறைவடைந்த அக்னி பெரும் இன்பம் அடைந்தான்.(37,38) மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, தக்ஷகனின் வசிப்பிடத்திலிருந்து {வீட்டிலிருந்து} மயன் எனும் அசுரன் தப்புவதை திடீரெனக் காண நேர்ந்தது.(39) வாயுவை தேரோட்டியாகக் கொண்டவனும், தலையில் சடமுடி தரித்தவனும், நெருப்பே உடலாகக் கொண்டவனுமான அக்னி, அந்த அசுரனைக் கண்டு, மேகங்களைப் போல முழங்கிக் கொண்டு அவனை {மயனை} உட்கொள்ள விரும்பி அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(40)
அசுரனைக் {மயாசுரனைக்} கண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, தனது சக்கரத்தை உயர்த்திப் பிடித்தபடி அவனைத் தாக்க ஆயத்தமாக நின்றான். அவனை {மாயாசுரனை} எரித்துவிட எண்ணிய அக்னி, அவனைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.(41) அப்போது மயன், "ஓ அர்ஜுனா, என்னிடம் வேகமாக வா, என்னைக் காப்பாற்றுவாயாக" என்றான். இந்த அச்சம் கலந்த குரலைக் கேட்ட அர்ஜுனன், "அஞ்சாதே" என்றான்.(42) அர்ஜுனனின் அந்தக் குரல், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயனுக்கு உயிரைக் கொடுத்தது போல இருந்தது. பிருதையின் {குந்தியின்} கருணை கொண்ட மகன் {அர்ஜுனன்} மயனிடம் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதால், அதற்கு மேலும் தசார்ண குலத்தைச் சேர்ந்தவன் {கிருஷ்ணன்}, நமுசியின் சகோதரனான மயனைக் கொல்ல விரும்பவில்லை. அக்னியும் அவனை எரிக்கவில்லை".(43,44)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனான அக்னி, இந்திரனால் பாதுகாக்கப்பட்டக் கானகத்தைக் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனின் {அர்ஜுனனின்} தயவால் பதினைந்து நாட்களுக்கு எரித்தான்.(45) அந்தக் கானகம் எரிந்த போது அக்னி அந்தக் கானகவாசிகளில் ஆறு பேரை மட்டுமே விட்டு வைத்தான். அவர்கள் அஸ்வசேனன் {தக்ஷகனின் மகன்}, மயன், மற்றும் நான்கு சாரங்கப் பறவைகள் ஆகிய அறுவர் ஆவர்" {என்றார் வைசம்பாயனர்}.(46)

ஆங்கிலத்தில் | In English |