"Build a Palace" said Krishna! | Sabha Parva - Section 1 | Mahabharata In Tamil
(சபா கிரியா பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் :மயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாதேர் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் [ஜயா] என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், அர்ஜுனனை வழிபட்ட மய தானவன் {Maya Danava}, கரங்கள் கூப்பி இனிமையான வார்தைகளால் தொடர்ந்து அவனிடம் {அர்ஜுனனிடம்},(1) "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நான், கிருஷ்ணன் எனும் பிரவாகத்திலிருந்தும் {ஆற்று வெள்ளம்}, என்னை உட்கொள்ள விரும்பிய பாவகனிடமிருந்தும் (நெருப்பிடமிருந்தும்) உன்னால் காக்கப்பட்டேன். நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்" என்று கேட்டான் {மயன்}.(2)
அர்ஜுனன், "ஓ பெரும் அசுரனே {மயனே}, ஏற்கனவே உன்னால் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன (இந்த உனது சலுகையுடன் சேர்த்து). நீ அருளப்பட்டிரு. நீ விரும்பிய இடத்திற்கு செல். நாங்கள் உன்னிடம் எப்படி அன்பாகவும், திருப்தியுடனும் இருக்கிறோமோ, அதே போல நீ என்னிடம் அன்பாகவும் திருப்தியுடனும் இரு!" என்றான் {அர்ஜுனன்}.(3)
மயன், "ஓ மனிதர்களில் காளையே {அர்ஜுனனே}, ஓ மேன்மையானவனே, நீ என்ன சொன்னாயோ அதற்கு நீ தகுதி உடையவனே, ஆனால் ஓ பாரதா {அர்ஜுனா}, உனது மகிழ்ச்சிக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.(4) நான் அசுரர்களில் விஸ்வகர்மாவான ஒரு பெரும் கலைஞன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, எனது நிலைக்கேற்ப, நான் உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்" என்றான் {மயன்}.(5)
அர்ஜுனன், "ஓ பாவமற்றவனே {மயனே}, "உடனடி மரணத்திலிருந்து நீ (என்னால்) காக்கப்பட்டதாக கருதுகிறாய். அது அப்படியே இருந்தாலும், நான் எனக்காக உன்னை எதையும் செய்ய வைக்க முடியாது.(6) அதே வேளையில், ஓ தானவா, நான் உனது நோக்கங்களை சலிப்பூட்ட {நிராகரிக்க} விரும்பவில்லை. நீ கிருஷ்ணனுக்கு ஏதாவது செய். அதுவே நான் உனக்கு செய்த சேவைகளுக்கு போதுமான பதிலுதவியாக இருக்கும்" என்றான் {அர்ஜுனன்}.(7)
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மயனால் உந்தப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, மயனிடம் என்ன சாதனையைச் செய்யச் சொல்வது என்று சிறிது நேரம் சிந்தித்தான்.(8) பிரபஞ்சத்தின் தலைவனும், அனைத்து பொருட்களின் படைப்பாளியுமான கிருஷ்ணன், தனது மனத்தில் ஒரு முடிவுக்கு வந்து மயனிடம்,(9) "ஓ திதியின் மகனே {மயனே}, கலைஞர்களில் முதன்மையானவனே, நீதிமானான யுதிஷ்டிரனுக்கு நீ நன்மை செய்ய விரும்பினால், நீ தேர்ந்தெடுக்கும்படி, ஒரு சிறப்பு வாய்ந்த {அரண்மனை போன்ற} சபை (கூட்டமன்றம்-Meeting hall) (உன்னால்) கட்டப்படட்டும்.(10) உண்மையில், இந்த மனித உலகில் உள்ள மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கும் போது, கவனத்துடன் பரீட்சித்துப் பார்க்கப்பட்டாலும் போலி செய்ய முடியாதவாறு அந்த அரண்மனையை நீ கட்ட வேண்டும்.(11) மேலும், ஓ மயனே, அந்த மாளிகை தேவ, அசுர, மனித வடிவமைப்புகளின் கலவையாக இருக்குமாறு நீ அதைக் கட்ட வேண்டும்" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.(12)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட மயன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, தேவர்களின் அரண்மனையைப் போன்ற ஒரு உன்னதமான அரண்மனையை உடனடியாக {மனத்தில்} கட்டினான்.(13) பிறகு, இந்த அனைத்து காரியங்களையும் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும், பார்த்தனும் (அர்ஜுனனும்) தெரிவித்து, அவனுக்கு மயனை அறிமுகப்படுத்தி வைத்தனர்.(14) யுதிஷ்டிரன் மயனை உரிய மதிப்புடன் வரவேற்று, அவனுக்குத் {மயனுக்குத்} தகுந்த மரியாதையைச் செய்தான். மேலும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயன் அந்த வரவேற்பை உயர்வாகக் கருதி அதை ஏற்றுக் கொண்டான்.(15) ஓ பாரத குலத்தின் ஏகாதிபதியே {ஜனமேஜயா}, திதியின் பெருமைக்குரிய மகனான அவன் {மயன்}, பாண்டுவின் மகன்களுக்கு, தானவ விருஷபர்வனின் கதையை உரைத்தான்.(16) பிறகு அந்த கலைஞர்களில் முதன்மையானவன் {மயன்}, சிறிது நேரம் ஓய்வு கொண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களுக்கு அரண்மனையைக் கட்ட திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.(17) கிருஷ்ணன் மற்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் அனுமதி பெற்ற பெரும் வீரம் கொண்ட சிறப்பு வாய்ந்த தானவன் {மயன்}, ஒரு அதிர்ஷ்டமான நாளில் அடித்தளத்திற்கான {அஸ்திவாரத்திற்கான} ஆரம்பக்கட்ட சடங்குகளைச் செய்து,(18) நன்கு கற்ற ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு இனிமையான பாலும் அரிசியும் {பாயாசமும்}, பல வகையான ஆடம்பரப் பரிசுகளையும் கொடுத்து நிறைவை ஏற்படுத்தினான்.(19) பிறகு, பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில், அனைத்து பருவ காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ஐயாயிரம் சதுர முழத்தைக் கட்டடத்திற்காக அளந்து எடுத்தான் {மயன்}" {என்றார் வைசம்பாயனர்}.(20)

ஆங்கிலத்தில் | In English |