Arjuna came to North Kuru! | Sabha Parva - Section 27 | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் வடதிசையில் சென்று வென்று வந்த போர்ப்பயண விவரிப்பு…
[1] கும்பகோணம் பதிப்பில், "அப்போது அந்தக் கந்தர்வ நகரத்தில் தித்திரிப்பக்ஷிகள் போலச் சித்திரவர்ணமுள்ளவையும், மண்டூகங்களென்று பெயருள்ளவையுமான உத்தமமான குதிரைகளையெல்லாம் கப்பமாகப் பெற்றான்" என்றிருக்கிறது.
அங்கே பெரும் பலம் பொருந்தியவர்களும், குறிப்பிடும் அளவிற்குப் பெரும் உடல்படைத்தவர்களும், ஆற்றல் நிறைந்தவர்களுமான வாயில் காப்போர்கள், பெருந்தன்மை நிறைந்த இதயத்துடன் அவனிடம் {அர்ஜுனனிடம்} வந்து,(8) "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இந்த நாடு {வட ஹரிவர்ஷ நாடு} உன்னால் வெல்லப்பட முடியாதது. உனது நன்மையை நீ விரும்பினால், விரைவாகத் திரும்பிச் செல்வாயாக. ஓ அச்யுதா, உன் படையெடுப்புகள் ஏற்கனவே போதுமானவையாக இருக்கின்றன.(9) இந்தப் பகுதியில் நுழையும் எந்த மனிதனும் அழிந்து போவான். நாங்கள் உன்னிடம் நிறைவடைந்தோம். நீ இதுவரைச் செய்த படையெடுப்பே மிக அதிகம்.(10) இங்கே, ஓ அர்ஜுனா, வெல்லத்தக்க எதையும் நீ காணமுடியாது. வட குருக்கள் இங்கே வாழ்கிறார்கள். இங்கே போரிடலாகாது.(11) உள்ளே நுழைந்தாலும், உன்னால் எதையும் காணமுடியாது. மனித கண்களைக் கொண்டு இங்கே எதையும் காண முடியாது.(12) இருப்பினும், நீ வேறு ஏதாவது எதிர்பார்த்தால், ஓ பாரதா {அர்ஜுனா} எங்களிடம் சொல்வாயாக. ஓ மனிதர்களில் புலியே நீ சொல்வதை நாங்கள் செய்கிறோம்" என்று சொன்னார்கள்.(13)
இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் சிரித்துக் கொண்டே, "பெரும் புத்திகூர்மை கொண்டவரும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணியமிக்க ஏகாதிபத்ய நிலையை அடைய {பேரரசனாக} நான் விரும்புகிறேன்.(14) உங்கள் நிலம் மனிதர்களுக்கு எதிராக அடைக்கப்பட்டிருகிறது என்றால், நிச்சயம் நான் அதற்குள் நுழைய மாட்டேன். ஆனால் யுதிஷ்டிரருக்கு கப்பத்தைக் கட்டிவிடுங்கள்" என்றான். (15)
அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள், தெய்வீக ஆடை ஆபரணங்கள் பலவற்றையும், தெய்வீக வடிவமைப்புகளிலான பட்டையும், தெய்வீகத் தன்மை கொண்ட தோலையும் கொடுத்தனர்.(16) இவ்வாறு அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்}, க்ஷத்திரியர்களுடனும், கள்வர்க் கூட்டங்களுடனும் எண்ணிலடங்கா போர்களைச் செய்து, வடக்கில் இருக்கும் நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(17) தலைவர்களை வீழ்த்தி, அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவர்களிடம் இருந்து பெரும் செல்வத்தையும், பல்வேறு ரத்தினங்களையும் பொன்னையும், கிளியின் நிறத்திலும், கிளியின் இறக்கையின், மயில் நிறத்திலும் உள்ளவையும், வேகமாகச் செல்லக்கூடியவையுமான தித்திரி, கல்மாஷ வகை குதிரை வகைகளையும் அடைந்தான். (18,19)
அர்ஜுனன் வடதிசைப் போர்ப்பயணத்தைக் குறித்த ஓர் ஆய்வைப் படிக்க
http://ancientvoice.wikidot.com/travel:arjuna-s-military-campaign-for-rajasua
என்ற லிங்குக்குச் செல்லவும்.
http://ancientvoice.wikidot.com/travel:arjuna-s-military-campaign-for-rajasua
என்ற லிங்குக்குச் செல்லவும்.
ஆங்கிலத்தில் | In English |